உங்கள் குழந்தைகள் மீது முழுக்கவனம் செலுத்துகிறீர்களா?

பள்ளிகள் தொடங்கிவிட்டன. இரண்டு மாதமாக பாடப் புத்தகங்களை தொடாமல் ஓடியாடி விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் (நகர்ப்புற குழந்தைகளுக்கு இந்த வாய்ப்புகள் கிட்டியிருக்குமா?) புத்தக சுமையுடன் பள்ளி செல்லத் துவங்கிவிட்டனர். இனி இந்தக் கல்விஆண்டு முழுவதும் பெரும்பாலான குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களும் மன இறுக்கத்திற்கு ஆட்படும் நிலைக்கு தள்ளப் படுவோம். இதற்கு முதல் காரணம் நமது கல்வி முறை. 40-லிருந்து 50 வரை எண்ணிக்கையில் குழந்தைகள் அமர்ந்திருக்க ஒரு ஆசிரியர் வந்து கடமைக்காக பாடத்தினை படித்துக் காட்டி, பிறகு அதற்கான கேள்வி-பதில்களை எழுதிப்போட என்னவென்றே புரியாமல் அதனை குறிப்பேடுகளில் எழுதி திருத்தம் செய்ய வேண்டிய நேரத்திற்குள்ளாக அதனை ஒப்படைக்க வேண்டிய நிர்பந்தத்தில் அந்த வேலையை செய்து முடிக்கிறார்களே தவிர நடத்தப்பட்ட பாடத்தினை முழுமையாகப் புரிந்து கொண்டு அதனை லெ நயசவ செய்யாமல் டில உடிவவ செய்ய நினைக்கிறார்கள்.

 

3700 ஆண்டுகளுக்கு முன்

தமிழின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது என்கிறார் தொல்லியல் ஆய்வாளரும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான டி.கே.வி.ராஜன். அதற்கான ஆதாரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பண்டைப் பொருட்கள் பற்றிய கண்காட்சி ஒன்றினை நடத்தியிருக்கிறது. அவரால் நிறுவப்பட்டிருக்கும் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் என்ற அமைப்பு.

 

தலையங்கம்

சிங்கள வெறித்தனத்தின் மறு உருவாகக் காட்சி அளிக்கும் அதிபர் ராஜபக்சே, எத்தகைய கோரத் தாண்டவத்தை (Reign of Terror) கட்டவிழ்த்து விடுகிறார் என்பதற்கு அண்மைக் காலத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்த தமிழர்களை - (அவர்களில் பலரும் அங்கேயே பிறந்து அங்கேயே வாழ்ந்து வரும் குடியுரிமை உள்ள குடிமக்கள்) இராணுவத்தை ஏவிவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றிடும் வெறித்தன நடவடிக்கையில் வெட்கம் சிறிதுமின்றி ஈடுபட்டதே சரியான சாட்சியமாகும்.

 

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : திராவிடர் கழகக் கொடியில் உள்ள கருப்பு நிறமும், சிவப்பு நிறமும் உணர்த்தும் பொருள் என்ன?
- ஆர்.ஜீவிதா, சே.பேட்டை
பதில் : கறுப்பு - நம்முடைய இழிவு - சூத்திர பஞ்சம இழிவு, அறியாமை இருள் - இதனைக் குறிக்கிறது. நடுவில் உள்ள சிவப்பு - விழிப்புணர்வு, புரட்சி இவை களைக் குறிக்கிறது!

 

 

தந்தைபெரியார்

என்னைப் பொறுத்தவரை நான் கூறு-வேனாகில், மனிதப் பிறவியானது ஒரு இலட்சிய மற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான்; பற்பல எண்ணங்களை எண்ணு-கிறான்; பல வகைகளை இச்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்களில் விருப்பம்கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான். ஒரு சிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவை-களில் ஏமாற்றம் அடைகிறான்; இறுதியில் செத்துப் போகிறான். மனிதன் பிறந்தது முதல் செத்துப் போகும்வரை இடையில் நடை-பெறுகிறவைகள் எல்லாம் அவனின் சுற்றுச் சார்பு, பழக்க வழக்கம் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு இலட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து. இதை அநேக அறிஞர்களும் ஒப்புக் கொண்டி-ருப்பதைப் பார்க்கிறேன், மேலும், இக்கருத்து யாராலும் மறுக்க முடியாததும் ஆகும்.

 

நேர்காணல்

இசுலாமியப் பெண்களின் வாழ்வுரிமைக்கு 1991-இல் தொடங்கப்பட்டது ஸ்டெப்ஸ் பெண்கள் மேம்பாட்டு மையம். இந்த அமைப்பின் புரட்சி தான் தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் என்பது! இசுலாம் மார்க்கத்தில் ஜமாத்கள் ஏராளம் உண்டு. அவையெல்லாம் பெண்கள் நுழையவே முடியாத ஆண்களின் அதிகாரக் குவியல், இவை தவிர்த்து, பெண்களுக்கே ஆன உரிமைத் தளம் வேண்டுமெனப் போராடி, இந்த அமைப்பை வென்றெடுத்தவர் ஷெரிபா கானம்.
1989-களில் சமூகத்திற்குள் நுழைந்த ஷெரிபா கானத்தின் பொது வாழ்க்கை வயது பதினெட்டு. இன்றைக்கு அவர் பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிகளுக்குப் பின்னால், மறக்கவே முடியாத பல அவமானங்களும், துயரங்களும் மறைந்திருக் கின்றன. பொதுவாகவே பேட்டியைத் தவிர்த்திடும் ஷெரிபா அவர்கள், இது பெரியாரின் உண்மை என்றதும் பெருமிதத்தோடு பேச வருகிறார்.

 

கவிதை

மாண்புறு மனித நேயம் தன்னை
மதிக்க மறந்து விட்டோம்.
மாணிக்கக் கற்கள் நிகர் மனிதர்களை
கவனிக்கத் தவறி விட்டோம்.

ஆசைகள் அதிகம் கொண்டிங்கு
அனைத்தையும்
அடையத் துடித்து விட்டோம்.
ஓசோன் கூரையில் ஓசைகள் இன்றியே
ஓட்டையைப் போட்டு விட்டோம்.

 

சிறுகதை

ஒருவரை ஒருவர் ஒருமையில் விளிக்கும் உரிமையுடன் கூடிய நட்பு. நானும் நண்பன் நல்லதம்பியும் தொடக்கக்கல்வி முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை இணைந்து படித்த காலந்தொட்டு தொடர்கிறது.
இருவருக்கும் திருமணம், மனைவி, மக்கள் என்றாகி வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் தான் என்றாலும், ஒருவரை ஒருவர் சந்தித்து கலந்துரையாடுவதில் யாருக்கு அதிக ஆர்வம் என்று எளிதில் சொல்லமுடியாத இறுகிய நட்பு.

 

பதிவுகள்

ஜூலை-1: குடியரசுத் தலைவர் வேட்பாளராக முதல்முறையாக ஒரு பெண் அறிவிக்கப்பட்டதை ஆதரித்து சென்னையில் மாபெரும் மகளிர் பேரணி நடந்தது.
ஜூலை-2: சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியின் 65 சதவீத இடங்களை அரசே நிரப்பலாம்-சென்னை உயர்நீதி மன்றம் ஆணை.
- தமிழ்நாடு மின்சார வாரியம் பொன்விழா கொண்டாடியது.
- நீதிபதிகளுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர்.
ஜூலை-3: கடும் கண்டங்களுக்கு இடையே அமெரிக்காவின் நிமிட்ஸ் போர் கப்பல் சென்னை வந்தது.
- ஆப்கானிஸ்தானில் அமெரிக்க குண்டு வீச்சு 62 தாலிபான்கள் பலி.
- குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத மழைக்கு ரூ. 90 கோடிக்கு மேல் இழப்பு.
- அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக ஈரானுடன் உறவை ஏற்படுத்த வெனிசுலா அதிபர் சாவேஸ் ஈரான் பயணம்.

 

நாட்டு நடப்பு

நீங்க இப்படி ஏதாவது கேட்பீங்கன்னு-தான் அந்த பைபிள் வாசகத்தைச் சொன்னேன். இந்த வாசகத்தை நினைவுபடுத்துன இன்-னொரு வாசகத்தைப் படிச்சேன். சென்னைல மட்டுமில்ல எல்லா ஊர்கள்லயும் வாகனங்-கள்ல பின்பக்கமா அவங்க அவங்க பிடிச்ச வாசகத்தை எழுதுறாங்க. அதுல பலதும் பயனில்லாத வெற்று வார்த்தையாகத்தான் இருக்கு, இப்ப நான் சொன்ன மாதிரி.

 

நூல்

நாம் உள்ள பால்வெளித் தொகுப்பு 81.8 கோடி கி.மீ. பரப்புடையது. இதில் உள்ள நமது சூரிய மண்டலம் சூரியன் தற்சுழற்சியாக துருவப் பகுதியில் 25 நாட்களிலும் மையப் பகுதியில் 34 நாட்களிலும் சுற்றுகின்றது. பால் வெளித் தொகுப்பு மையத்தை மட்டும் சூரியன் சுற்றிவர 200 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது.

 

குரல்

சகலமும் தெரிந்த சாமிக்கு தமிழ் தெரியாதா?
-தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். (கும்பாபிஷேகம், யாகங்களில் தேவார திருவாசகத்தை பயன்படுத்த தடை வாங்கியதைக் கண்டித்து ஆற்றிய உரையில்)

எதிரிகளே இல்லாமல் வாழ திருக்குறளும், அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவர் தம்மமும் படியுங்கள். உறவுகளுக்குள்ளேயே சண்டையிட்டு சாகடிப்பது மகாபாரதம். எல்லோரையும் உடன் பிறப்புகளாய் கருதச் செய்வதும் திருவள்ளுவர், புத்தர், பெரியாரின் சிந்தனைகள்

 

பெட்டிச் செய்திகள்

இந்தியாவில் முதியோர்..........

ஒரு தொண்டுள்ளத்தின் சோகம்..........

என்னைக் கொல்ல ஷார்ஜ் புஷ் ஆணையிட்டார்..........

அவா சரியாத்தான் இருப்பா..........