நூல்
திருக்குறள் அறிவியல் அகலவுரை
திருக்குறள்-நூலுக்குக் காலந்தோறும் உரைநூல்கள்
வெளிவந்தவண்ணம் உள்ளன.
அவற்றுள் பல முற்றிலும் பழைமையான சமயக் கண்ணோட்டத்தில் அமைந்தவை; சில, புதுமையான பகுத்தறிவுப் பார்வையில் அமைந்தவை.
அறிவியல் பார்வையின் அடிப்படையில்
ஓர் உரை நூல் இப்போது வெளி-வந்துள்ளது. திருக்குறள் அறிவியல் அகல-வுரை - என்கிற பெயரால் அறிஞர். மாத்தளை சோமு அவர்களால் எழுதப்பட்ட நூல் அது.
உரையாசிரியர்.சோமு அவர்களின் நோக்கமும் போக்கும் புதுமையானது, பாராட்-டத்தக்கது.
யாப்பனமதியோடு புணர்ச்சி வகையுடன் கூடிய
குறட்பாவினை முதலில் தொகுத்து, அடுத்து பொருள் விளங்கும்படி சந்தி பிரிக்கப்-பட்ட சொல்லமைதியோடு குறட்பாவினை கொடுத்-திருப்பது சிறப்புடையது.
பொருட்சிக்கலான குறள்களுக்கு உரைரைய அவர் மேற்கொண்ட நெறி அறிவியல் மனப்பாங்கின் பாற்பட்டதாகும்.
பொதுவாக, சிறிய அளவில் பொழிப்-புரையும் சில பாக்களுக்கு நெடிய அளவில் விளக்கமும் எழுதப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக :
எழுபிறப்பும், தீயவை தீண்டா.... என்று தொடங்கும் (எண் 62) குறள்பாவில் வரும். எழுபிறப்பு என்னும் தொடருக்கு பொருளும், விளக்கமும் புதுமையாகவும் வியப்புக்குரி-யதாகவும் உள்ளது.
எழுபிறப்பு - என்பது ஏழுபிறப்பு (ஜென்மம்) என்று கூறாது ஏழு தலைமுறை என்பதாகும் என்று எழுதி அதற்கு விளக்கம் தந்திருப்பது. புதுமையாக இருக்கிறது; பொருத்-தமாயும் இருக்கிறது.
ஏழுதலைமுறை என்பது,
ஆண் வழியில் : தந்தை, மகன், பெயரன், எள் பெயரன், கொள் பெயரன், தன் பெயரன், தாள் பெயரன்.
பெண் வழியில் : தாய், மகள், பெயர்த்தி, எள் பெயர்த்தி, கொள் பெயர்த்தி, தள் பெயர்த்தி, தாள் பெயர்த்தி என்பனவாகும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இது உலக வழக்கா? செய்யுள் வழக்கா? அப்படியாயின் அதற்கான சான்றுகளை எடுத்துக் காட்டியிருப்பின் கூடுதல் சிறப்பு தருவதாக இருக்கும்.
அடுத்து, அய்யத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வானம், நாணிய(து) உடைத்து வையத்தின் (353) என்பதற்கு, ஏனையோர் உரையினின்றும் வேறுபட்டு, சந்தேகங்களின் நீங்கிய மெய்யான அறிவால், மண்ணிலிருந்து கொண்டே விண்-வெளியைப் பற்றிச் சொல்ல முடியும், சந்திரனு-க்குச் செல்லாமலேயே அங்குச் செல்லக்கூடிய விண்கலத்தைக் கண்டு பிடித்ததே அதற்குச் சான்று என உலகியல் பார்வையில் - அறிவியல் வழி உரை வரைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் (குறள் : 121) என்னும் தொடருக்கு அடக்கம் தேவருல-கில் செலுத்தும் என கூறப்படுவதை மாற்றி அடக்கம், அமர, அருள் ஒளி (உயர்) நிலையில் கொண்டு சேர்க்கும் என்று உரை கண்டிருப்-பதும் புதுமையானதாகும்.
சிறப்பான உரைவிளக்கம் கொண்டநூலில் கொஞ்சம் நெருடல் தரும் உரையையும் சுட்டிக்காட்டுவதும் கடமையாகும்.
முதற்குறளில் வரும் ஆதிபகவன் என்பதை உரையாசிரியர் விளக்கும் போது, உலக, உயிர்கள் இயங்க, வாழ ஆதி (முந்தை)யாய் இருப்பவன் சூரியன்- என்ற கூறி சூரியனையும், முதல்வனாகச் சொல்ல முடியாத-சூரியனுக்கும் மேலானதாகவும், உலக இயக்கத்தை நடத்துகிற ஒன்று இருக்க வேண்டும்; அது தான் ஆதிபகவன் என்கிறார். அறிஞர் சோமு.
அணுவுக்குள் அணுவாக இருக்கின்ற ஒரு சக்திக்கு ஆதிபகவன் என வள்ளுவர் பெயரிட்டி-ருக்-கிறார் என்கிறார் அவர்.
ஆன்மீகப் பார்வையில் இது ஆதிபகவன் இறை என்றும் எழுதுகிறார்.
இவ்விளக்கம், சற்றுக் குழப்பாமாயும், முரண்பாடு உடையதாகவும் தெளிவற்றதாகவும் காணப்படுகிறது.
அணுவுக்குள் அணுவாக இருக்கிற சக்திக்கு அறிவியவில் பெயர் உண்டே!
அதுதான் அணுசக்தி (Alex Polarice Alverga) அது உயிரற்றது; அறிவற்றது; உளம் கற்றது, அஃறிணையாவது.
அது எப்படி உலகை நடத்தும் அறிவு, உயிருள்ள மனம் உள்ள உயர்திணை ஆதிபக-வன் ஆக முடியுமா?
அறிவியல் அவ்வாறு கூறவில்லையே?
அணுசக்தி தான் ஆதிபகவன் என்பது திருவள்ளுவரின் கருத்தா?
அறிவியல் வழியிலான உரையில், மெய்(தத்துவ)ப் பார்வையோ சமயம் சார்ந்த ஆன்மீகப் பார்வையோ தேவைதானா? என்று உரையாசிரியரின் ஆய்வுக்கு முன் வைக்கிறோம்.
நூலுக்கு முனைவர். தமிழண்ணல் ஆளுமை-யான அணிந்துரை வரைந்திருப்பது பெருமை சேர்ப்பதாகும்.
இந்நூலின் மற்றொரு சிறப்பு, நூலின் இடையிடையே திருக்குறள் - திருவள்ளுவர் தொடர்-பான பல அரிய தகவல்கள் பெட்டிச் செய்திகளாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகும்.
திருக்குறள் நூலுக்கு அறிவியல் அணுகு-முறையோடு சிறப்பான உரையாக அமைந்த இந்நூல் திருக்குறள் உரையுலகில் பேரொளி வீசும் புதியவரவு ஆகும்.
அனைவரும் படித்துப்பயன் பெற வேண்டிய அரிய உரைக்கருவூலம் இந்நூல் உரை-யாசிரியர் தோழர் மாத்தளை சோமு அவர்கள் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.
இதுபோலும் அவர்தம் பணி மேலும் தொடரட்டும்!
அருமையான கட்டமைப்பு, அழகான அட்டைப்படத்தோடு நூல் கவர்ச்சியாகத் திருவள்ளுவரின் திருவுருவத்தோடு காணப்-படுகிறது.
நூல் 496 பக்கங்களைக் கொண்டுள்ளது.
நூலின் விலை : (புரவலர் நன்கொடையில்) ரூபாய் : 180
(கெட்டி அட்டைக் கட்டில்) ரூபாய் : 220
நூல் வெளியீடு : தமிழ்க்குரல் பதிப்பகம், பழைய எண் : பி.15, புதிய எண்-5, முதன்மைச் சாலை, இராமலிங்க நகர், உறையூர், திருச்சி-620 003.
சோம யாகம் என்பதென்ன?
இப்போது மகா பெரிய சடங்கை உங்கள் முன் உரித்துக்காட்டப் போகிறேன். இதில் உரித்துக்காட்டப் போகிறேன் என்ற பதத்தை கொஞ்சம் அழுத்தமாகவே ஞாபகப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
அதென்ன மகாபெரிய சடங்கு?
சோமயாகம். ஆமாம் யாகங்களுக்கெல்லாம் அடிப்படையானது இது. இன்று எந்த விசேஷமானாலும் கோயில் கும்பாபி-ஷேகங்-களில் எல்லாம் யாகசாலை ஒன்று உருவாக்கு-கிறார்கள் அல்லவா? இதற்கெல்லாம் மூலாதார-மான யாகம் சோமயாகம்.
வேதம் வலியுறுத்திச் சொல்கிற இந்த யாகத்தின் அடிப்படையிலேதான் மற்ற யாகங்கள் முளைத்தன. கல்யாணத்தில் கூட... நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாம-லேயே பல வாத்தியார்கள் சோமயாகம் செய்து வைத்தபடி இருக்கிறார்கள்.
சென்னையின் மேற்கு மாம்பலத்தில் கல்யாணம் செய்து வைத்தே வீடு கட்டிவிட்ட சில வாத்தியார்களுக்கும் கூட சோமயாகம் பற்றிய விஷய அறிவு இல்லை. இந்த யாகத்-தைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால் இன்று நடக்கும் வெவ்வேறு யாகங்களைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ளலாம்.
சோமே தேனும்
மோமே ஷர்வந்த மாசம்
சோமோவீரம் கர்மன்யந் ததாது
சாதன்யம் விதத்யம் சயேயம்
பிது ஸ்வரணம் மேவததா தஸ்மஹே
-இது தான் சோமயாக கருத்துக்களின் உள்ளடக்கம்.
இப்படியென்றால் என்ன?
இது Prayer தேவதைகளிடம் மக்கள் சார்பாக பிராமணன் வைக்கும் கோரிக்கைகள்.
எந்தக் காரியத்தையும் தடைகள் பல வந்தாலும் கூட அவற்றைத் தகர்த்து நிறை-வேற்றத்தக்க வீரமுள்ள மகன்களை எங்களு-க்குக் கொடு.
அவன் அறிவாளிகள் சபையில் ஏறி வாதம் செய்யும் அறிவு பெற்றவனாக இருக்க வேண்டும். அரசியல் பேச வேண்டும். அப்பா சொல்வதைக் கேட்கும் பிள்ளையாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளோடு நல்ல திடகாத்திரமான பசுக்களை எங்களுக்கு கொடு அத்தோடு வேகமாக ஓடக்கூடிய வலிமையான குதிரை-களையும் கொடு.
இதையெல்லாம் நாங்கள் சும்மா கேட்க-வில்லை. உனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டுத்தான் கேட்கிறோம்...
இது தான் Soman Prayer
சோம யாகத்துக்கு ஏன் இந்த பெயர் ஏற்பட்டது? இதன் கதை கொஞ்சம் சுவாரஸ்ய-மானது. இதற்காக நீங்கள் இமயமலை வரவேண்டும். இமயமலைக் காடுகளில் நிறைய மரங்கள், செடிகள், கொடிகள் அடர்ந்து கிடக்கும். இப்போதே இப்படியென்றால்.. பழங்-காலத்தில் எப்படி இருந்திருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள்.
இந்தச் செடி கொடிகளுக்கிடைய அபூர்வ-மான அதி சக்தியுள்ள ஒரு கொடிதான் சோமக் கொடி. அதன் இலைகள் பிரகாசிக்கும். வெள்-ளைப்-பூக்கள் மின்னும், அதை ஒரு பறவைக் கொத்திக்கொண்டு இமய மலையிலிருந்து புறப்படுகிறது. அதை மலையின் அடிவாரத்தில் மக்கள் வசிக்கும் இடத்தில் கொண்டு வந்த போடுகிறது.
இதை ரிஷிகள் பார்க்கிறார்கள். இந்தச் செடியில் ஏதோ விசேஷம் உள்ளது என அவர்கள் அறிகிறார்கள். அந்தக் கொடியின் சாறு பறவை கடித்த இடத்திலிருந்து சில துளிகள் வழிய... அதை நக்கிப் பார்த்தால் அமிர்தம்.
இந்த நேரம் தேவதைகள் அந்தக் கொடி-யைச் சுற்றி நிற்கின்றனர். நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? என அந்த ரிஷி கேட்க.
இது சாதாரண கொடியல்ல. சோமக் கொடி. இந்த சோமக் கொடியை பிழிந்தால் வரும் ரஸம் இருக்கிறதே.. அது அமிர்தத்துக்கு சமமானது. இந்த சோமக் கொடியைப் பிழிந்து.. அதிலிருந்து சோம ரஸத்தை எடுத்து எங்-களுக்கு யாகம் பண்ணுங்கள். அது சோம-யாகமாகட்டும். யாம் உங்களுக்கு மற்றதை அருள்கிறோம்...
என சொன்னார்களாம் தேவதைகள்.
அக்னி என்றால் நெருப்பு, உஷஸ் என்றால் சூர்யோதயத்துக்கு முன் வைகறைப் பொழுது என்கிறோமே அதுதான். சூர்யன் என்றால் கதிரவன். இவர்கள் தான் தேவதைகள்.
இந்தக் கதை ஒரு முட்டாள்தனமாக இருக்கலாம். புனைவாக இருக்கலாம். இக்க-தையை நான் ஏன் சொன்னேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
சரி, சோமயாகத்துக்கு வருவோம். இது மிகப்பெரிய யாகம் என்று சொன்னேன். அதாவது 5 நாட்கள் தொடர்ந்து நடக்கும். மொத்தம் குறைந்த பட்சம் 16 பேர் இதை பண்ணி வைக்க வேண்டும்.
முதல்நாள் தீட்சை.. யாகத்துக்கு தயார் செய்தல், 2-வது நாள் ப்ராயணீயம். அதாவது ஆரம்பித்து, விருந்தினர்களையெல்லாம் உட்காரவைத்தல்.
இதன் பின் சோமரஸம் தயாரிக்க வேண்டும். இதற்கான சோமக் கொடியை சும்மா வாங்கக்-கூடாது. பத்து விதமான பொருள்களை விலையாகக் கொடுத்துதான் சோமக் கொடியை வாங்கணும்.
என்னென்ன?... அஜதேனு சவத்ஸா.. போய்க்கொண்டே இருக்கிறது.
ஆடு, காளை மாடு, பசுமாடு, துணி, வாசனை திரவியங்கள், குதிரை... இப்படியாக பத்து பொருட்களை விலையாகக் கொடுத்து-தான் சோமக் கொடியை வாங்க வேண்டும். இந்த சோமக் கொடியை தண்ணீர் விட்டு மண்ணில் ஊன்றி ஒரு நாள் வரை வைக்க வேண்டும். ஆயாச்சா?.... 3 நாள் ஆகிவிட்டது இதற்கே...
தண்ணீர் ஊற்றினால் சோமக்கொடி மேலும் வளரும், ரஸம் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்.
நான்காம் நாள் யாகத்தின் முக்கியமான நாள். சோமரஸம் தயாரித்து முடித்தாயிற்று.
சோமரஸம் எப்படி இருக்குமென்று சின்ன உதாரணம் சொல்கிறேன். நம்மூர்களில் காபிக்கு டிக்காஷன் போடுவார்கள் அல்லவா....? அந்த டிக்காஷன் போலத்தான் இருக்குமாம் சோமரஸம். தனதனவென வளர்ந்திருக்கும் சோமக்கொடியைச் சுத்தமான ஜலத்தில் நன்றாகக் கழுவி... ஒரு பெரிய கல்லின் மீது வைப்பார்கள். சிறுசிறு கற்களை எடுத்து அக்கொடியை நசுக்கி நசுக்கிக் கொண்டே இருந்தால்.. சோமக் கொடி தன்னை அழித்துக் கொண்டு சோமரஸத்தைக் கொடுக்கும். மிகக் குறைந்த அளவில் தான் இருக்கும் இந்த சாறு.
இதை அப்படியே யாகசாலையில் இதற்-காகவே காத்திருக்கும் சம சம வில் வைப்-பார்கள். அதென்ன சம சம...? வேறொன்றும் இல்லை... நம்ம அகல் தான். விளக்கேற்றுவோம் இல்லையா?...
அது போன்ற அகலில் சோமரஸத்தை ஊற்றி வைப்பார்கள். அகலில் ஊற்றி வைப்-பதாக இருந்தால் அதன் அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
காபிக்கு நாம் டிக்காஷன் போடுவோம் இல்லையா...?
அதே போல அடர்த்தியான திரவமான சோமரஸத்தை தேவ டிகாஷன் என்று நமது லௌகீக பாஷையிலே சொல்லலாம்.
சரி.. அகலில் ஊற்றப்பட்டு சோமரஸம் வைக்-கப்பட்டிருக்கிறது. யாக சாலை தீப்பற்றி எரிகிறது.
அக்னித்தேவன் தன் வெப்பக் கைகளால் சுற்றுப்புறத்தை வெளிச்சமாகவும், சூடாகவும் பரிபாலிக்கிறான். சோமயாகத்தில் 4-வது நாளில் முக்கியமான விஷயம் இப்போது தான். சோமயாகத்தை உரித்துக் காட்டப் போகிறேன் என்று சொன்னேன். அதை இப்போது ஞாப-கத்துக்குக் கொண்டு வாருங்கள்.
சோமயாகம் ஜோராக நடந்து கொண்டி-ருக்கிறது. யாகம் நடத்தும் பிராமணர் இந்தப் பக்கம் திரும்பி... தம்பி... எங்கேப்பா போனான் ஸமிதா? அவனை வரச் சொல்... காரியம் முடிந்து விட்டதா பார்... என சத்தம் போடுகிறார்.
யார் இந்த ஸமிதா?...
யாகம் நடத்தும் இடத்துக்கு மிக பக்கத்தில் ஆண்மாடு, அதாவது காளை மாட்டைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறான். ஒன்றல்ல.. ரெண்டல்ல நிறைய காளைமாடுகள்.
ஸமிதா கூரிய கத்தியைத் தீட்டிக் கொண்டி-ருக்கிறான்.
என்ன ஸமிதா தயாரா? என யாக சாலையிலிருந்து கேள்வி வர.. தலையாட்டிக் கொண்டே மாட்டை ஒரே வெட்டு. கழுத்து துண்டாகி ரத்தம் கொட்டுகிறது. உயிர்க் கூக்குரல் போட்டு கதறியடங்குகிறது மாடு.
அதன் கழுத்திலிருந்து தோலை அப்படியே ஸமிதா உரிக்க.. மேல் தோல் முழுவதம் உரிக்கப்பட்டு... மொழு மொழுவென இறைச்-சிப் பிரதேசமாய் கிடக்கிறது மாடு.
மறுபடியும் அந்தக் கூரிய ஆயுதத்தால் வெட்டி, மேல்தோல் தாண்டி உள்ளே இருந்த தோலையும் ஸமிதா உரிக்கிறான்.
மறுபடி... மறுபடி,... தோல் அடுக்குகள் சிலவற்றை உரித்தபின் உள்ளே இருக்கிறது வபா..... வபா.... என்றால்?
வபா என்றால் உள்சவ்வு. மெல்லிய சவ்வு. அது தான் மாட்டின் உறுப்புகளில் சோம-யாகத்துக்குப் பிடித்தது. இதுபற்றி விஞ்ஞான விளக்கமே சொல்கிறேன். காத்திருங்கள். மற்ற உடல் உறுப்புகள் சமையலுக்குப் போக இந்த உள்சவ்வை மட்டும் அழகாக சுருட்டி யாகம் நடக்கும் இடத்துக்குக் கொண்டு போய் வைக்கிறார்கள்.
மாட்டின் உள்சவ்வை எடுத்து அக்னியில் போட்டு பண்ணப்படுவதுதான் சோம-யாகத்தின் 4-வது நாள்.
பசுக்களைக் கொண்டு குவித்து அதன் வபாவை மட்டும் எடுத்து யாகம் முடித்த அன்று 4-வது நாள் இரவு யாரும் தூங்கக் கூடாது. ஏனென்றால் இன்றுதான் சோமரஸம் தயார் பண்ணியிருக்கிறோம். அது யாக குண்டத்தின் பக்கத்திலேயே வைக்கப்-பட்டிருக்கிறது. பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் அல்லவா?...... அதனால் யாரும் தூங்கக் கூடாது.
அதற்காக....?
வீணா தோனவேணு யேதாமிராது
ஜாக நேந்தி...
ராத்திரியில் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
வீணை எடுத்து மீட்டு.. வேணு அதாவது புல்லாங்குழலை எடுத்து வாசி. ஆடு.. பாடு... சந்தோஷமாக இரு. வீணை என்றால் இப்போதுள்ள வீணையின் முழு வடிவமாக இருந்திருக்க முடியாது. ஆரம்பக்கட்ட வடிவமாக இருந்திருக்கலாம்.
வீணை, புல்லாங்குழல் இந்த வாத்யங்க-ளோடு டமாரங்கள் அடித்து இரவு முழுவதும் ஆடி..தூங்காது விழித்து சோமரஸத்தைக் காப்பாற்ற வேண்டும். இரவு முழுவதும் சங்கீத இரவு. இதில் ஒரு முக்கியமான விஷயம்... கணவனும்-மனைவியும் சேர்ந்துதானே சோம-யாகம் பண்ண வேண்டும் என்று சொன்னேன். இந்த ஆடல், பாடல் கச்சேரியில் தம்பதியர் இருவரும் சேர்ந்து பங்கேற்க கூடாது. ஒருவரை ஒருவர் தீண்டக்கூடாது.
இப்படியாக 4-வது இரவுமுடிந்து 5-வது நாளின் விடியல் வானத்தை முத்தமிடுகிறது. கண் விழித்துக் காப்பாற்றிய சோமரஸம் அகலிலிருந்து மெல்ல... மேல்ல... அக்கினியில் அல்ல அக்னியின் பக்கத்தில் சொட்டு சொட்-டாய் உத்ருணி உத்ருணியாய் (உத்ருணி என்-றால் ஸ்பூன் என்று சொல்கிறோமே... அது போல குழி போன்ற தலை கொண்ட சிறு கரண்டி) சோமரஸத்தைச் சேர்க்க வேண்டும்.
இது தான் தேவதைகளின் தேவை.
தேஷிமே ததாமிதே...
இது தான் யாகத்தின் முதுகெலும்பு மந்த்ரம். முதுகெலும்பையும் ஒடித்து யாகத்தில் போடுவார்களா எனக் கேட்காதீர்கள். முக்கிய-மான என்பதற்காகச் சொன்னேன்.
அந்த ஒருவரியின் அர்த்தம்.
ஹே தேவதைகளே.. உங்களுக்கு தேவை-யான சோமரஸத்தை நான் கொடுக்கிறேன். எங்களுக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் கொடுங்கள் இது தான் யாக தத்துவம்.
அதாவது தேவதைகளுக்கும் மனிதர்-களுக்கும் நடப்பது கொடுக்கல்-வாங்கல். இங்கே பக்தி என்பத Mutual Exchange Market ஆயசமநவ அதாவது பக்திச் சந்தையாகி விட்டது.
(-நக்கீரன் வெளியிட்ட சடங்குகளின் கதை நூலிலிருந்து...) |