சுசு ஏஞ்சல்

ஆதிக்கத்தையும், அநீதியையும் எதிர்த்துப் போராடும் போராளிகள் மட்டுமல்ல, அவர்-களின் குடும்பமும் அத்தனை இன்னல்-களுக்கும் ஆளாக நேரிடும். போராட்டக்-காரனின் இழப்பு தாயையோ, உறவுகளையோ, நண்பர்-களையோ போராட்டத்தினுள் நுழைத்து விடுகிறது. தன் பிள்ளை, தன் வீடு என்று இருந்த தாய், மகனது ஈடுபாட்டால் சோசலிசப் போராட்டத்தினுள் புகுந்ததை கார்க்கி விளக்குகிறார். தந்தை அண்ணன், கணவன் என்ற சொந்தங்-களை போரில் இழந்த பெண், நாட்டுக்குகாகத் தன் ஒரே மகனையும் போருக்கனுப்பிய கதையைப் பேசுகிறது புறநானூறு! அதையும் தாண்டி, போராளியாக விதைக்கப்பட்ட, மகனின் மறுவடிவமாக மாறுகிற தாய்மார்கள். இன்றைய தமிழீழத்தில் கண் கூடு. அப்படிப்-பட்ட ஒரு தாயின் கதைதான் சுசு ஏஞ்சல்.
பிரேசிலின் மிகச்சிறந்த ஆடை வடிவமைப்-பாளர்களில் இன்றுவரை சுலேய்கா ஏஞ்சல் ஜோன்ஸ் என்ற சுசு ஏஞ்சலுக்கு தனியிடம் உண்டு. 1921-ல் பிறந்து ஆடை வடிவப்பு கற்று 1970-களில் புகழ்பெற்ற வடிவமைப்-பாளராக உயர்கிறார். அவருடைய வடிவமைப்-பில் ஆடைகள் அமெரிக்க சந்தையின் கவனத்தையும் பெறுகின்றன. இளமைக் காலத்தில் தான் வாழ்ந்த பாசியன் கலாச்-சாரத்தின் பாணி இவரது சிறப்புமிக்கக் காரணம் ஆகிறது. பிரேசிலின் உயர் அதி-காரிகளின் மனைவிமார்கள் கூட சுசு ஏஞ்சலின் வடிவமைப்பில் உருவான உடைகளையே விரும்பி அணிகிறார்கள்.
இதே காலத்தில் பிரேசிலை ஆண்டு வருவது பிரிகேடியர் ஜெனரல் ஜாவோ பாப்-லோபெனிடோ என்ற ராணுவ சர்வாதிகாரி.
சுசு ஏஞ்சலுக்கும், அவரது காதல் கணவரும் அமெரிக்கருமான நார்மண் ஏஞ்சல் ஜோன்ஸ்-க்கும் 1946-ஜனவரி 11-ல் பிறந்த மகன் ஸ்டூவவர்ட் ஏஞ்சல். ரியோ டி ஜெனிரோ பல்கலைக்-கழகத்தின் பொருளாதார மாணவனாகிய ஸ்டூவர்ட் புரட்சி இயக்கங்களால் ஈர்க்கப்-படுகிறான். ஜாவோ பாப்லோவுக்கு எதிராக திரளும் சோனியா மரியா மோரைஸூடன் காதல் மணம் புரிந்து கொள்கிறான். இருவரும் அரசுக் கெதிரான போராட்டக் களத்தில் இருக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபடும் இவரையும் அவ்வப்போது ரகசியமாக சந்திக்-கிறான் சுசு ஏஞ்சல். முதலில் போராட்டத்தில் ஈடுபடுவது தாய்க்கு பிடிக்கவில்லை. பின்னர் மகன் போக்குக்கு விட்டுவிடுகிறாள்.
மறைந்திருந்து போராட வேண்டிய அவ-சியம் ஏற்படுகிறது. ஸ்டுவர்ட்-டைத் தேடுகின்ற ராணுவமும் உளவு அமைப்புகளும், ஜூன்-14.1971 அன்று சாலையில் சென்று கொண்டிருக்கும் ஸ்டுவர்டை சுற்றி வளைத்துக் கைது செய்கிறது ராணுவம். தொடர்ந்து ஸ்டுவர்ட் சித்திவை-தைக்குள்ளாகிறான்.
ஸ்டுவர்ட் கைது செய்யப்பட்டதை அறிந்த தாய் மகனைத்தேடுகிறான். ரகசிய அறைகளில் சித்திரவதை தொடர்கிறது.
போலீஸ் ராணுவ அதிகாரிகளிடம் முறை-யிடு-கிறார் சுசு ஏஞ்சல். அவர்கள் கைது செய்ய-வில்லை என ஒவ்வொரு துறையும் மறுக்-கின்றன. தான் ஆடை வடிவமைக்கும் ராணுவ அதிகாரியின் மனைவி மூலம் அதிகாரியைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். சிறைக் கதவு-கள் ஒவ்வொன்றையும் திறந்து காட்டும் உயர்-அதிகாரி. கைது செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் சிறையில் தான் அடைக்கப்-பட்டிருப்-பான். இங்கே இல்லையெனில் வெளிநாடு-களுக்கு தப்பிச் சென்றிருக்கக்கூடும். நாங்கள் சட்டப்படி தான் செயல்படுகிறோம் என்று சொல்லிவிட்டு, எங்கள் துறை இல்லா-விட்டால், தரைப்படையிடம் கேளுங்கள் என்று அனுப்பிவிடுகிறார்.
இதற்கிடையில் ஸ்டுவர்ட் சித்திரவதையின் உச்சத்தில் மிகையான வாகப் புகை, (கார்பன் மோனாக்சைடு) செலுத்தி கொல்லப்படுகிறான். அவனுடல் மறைக்கப்படுகிறது. தாயின் தேடல் தொடர்கிறது. ராணுவம் இது ஒரு பிரச்சனை-யாவதை கவனிக்கிறது. இப்போது புலனாய்வுக் கண்கள் சுசு ஏஞ்சலை மொய்க்கத் தொடங்-கின்றன. ஸ்டுவர்ட் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தன் சாட்சியான மற்றொரு அரசியல் கைதி அலெக்ஸ் பொலாரி (ஹடநஒ ஞடிடயச உந ஹடஎநசபய) சுசு ஏஞ்சலுக்கு, ஸ்டூவர்ட் கொல்லப்-பட்ட செய்தியை அனுப்புகிறான். அது தொடர்பான ஆவணங்களை அவ்வப்-போது அனுப்புகிறான். அதைக் கொண்டு பிரேசில் வரும் அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி-யிடம் முறையிடுகிறாள் சுசு ஏஞ்சல்.
ஸ்டூவர்ட்-ன் தந்தை அமெரிக்கர் என்பதால் இதைக் கையில் எடுத்துக் கொள்ளும் அவர் அமெரிக்க காங்கிரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்கிறார். தொடர்ந்து அமெரிக்கா உள்துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிர்-களுக்கும் கடிதம் அனுப்புகிறார் ஏஞ்சல். பிரச்சினையின் தீவிரம் ராணுவ அரசை கவனம் கொள்ளச் செய்கிறது.
கடைசிக் கட்ட ஆவணங்களைத் தரும் அலெக்ஸ் கொலை செய்யப்படுகிறார். அலெக்ஸ் தந்த சாட்சிகளை எப்படியாவது அமெரிக்கக் கவனத்திற்கு அனுப்பிவிட முயல்கிறார் சுசு ஏஞ்சல்! அவரது ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் உரிமையாளருடன் வெளியூர் சென்று தங்கும் திட்டம் திடீரென மாற்றப்-பட, அதேநேரம் தனியாகச் சென்ற உரிமை-யாளர் விபத்தில் இறந்துவிடுகிறார். அரசு தனக்குக் குறிவைத்து விட்டதை உணரும் ஏஞ்சல், தனது மகளும் பத்திரிகையாளருமான ஹில்டிகார்ட் ஏஞ்சலிடம் தகவலைத் தந்து-விட்டுக் கிளம்புகிறார்.
ஏப்ரல்-14,1976. சுசு ஏஞ்சல் சென்ற வாகனம் கடும் போராட்டத்தின் நடுவில் திட்ட-மிடப்பட்டவாறு விபத்துக்குள்ளாக்கப்-படுகிறது. சுசு ஏஞ்சுல் படுகொலை செய்யப்-பட்டு, அதுவும் விபத்து என்று மூடி மறைக்கப்-படுகிறது. அதிகாரத்துக்கெதிரான போராட்-டத்-தில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு இதுதான் கதி என்பதை இன்னொரு முறை நினைவூட்டுகிறது சர்வாதிகாரம். தொடர்ந்து போராட்டங்களும், ஜனநாயக சக்திகளாலும் சர்வாதிகாரியின் முடிவு எடுக்கப்படுகிறது. அதன்பிறகு நடந்த விசாணைகளில் ஸ்டூவர்ட் கொல்லப்பட்டதும், அதை வெளிப்படுத்திய சுசு ஏஞ்சல் கொல்லப்பட்டதும், உறுதி செய்யப்பட்டு நீதி வழங்கப்பட்டாதாகச் சொல்கிறது. தொடர்ந்து வரும் தலைப்பு.
1976-ல் கொல்லப்பட்ட சுசு ஏஞ்சலின் வரலாற்றை 2006-ல் படமாக்கியவர் பிரேசில் இயக்குநா செர்ஜியோ ரெஜென்டே. சுசு ஏஞ்சலாக நடித்த பாட்ரிசியா பிள்ளார், ஸ்டுவர்ட்-ஆக வடித்த டேனியல் டே ஒலி வெய்ரா ஆகியோர் உருவத்தில் மட்டுமல்ல உளப்பூர்வமாக அந்த கதாப்பாத்திரமாகவே இருக்கிறார்கள். 108 நிமிடங்கள் ஓடக்கூடிய போர்த்துகீஸ் மொழியில் வெளியான இப்படம், கெய்ரோ பன்னாட்டுத் திரைப்பட விழா-வில் போட்டிப் பிரிவிலும், 2006 கோவா திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவிலும் இடம் பெற்றது.

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra