ஆசிரியர் பதில்கள்
சின்னத்திரை-பெரியதிரையால் சீரழிவு
கேள்வி 1 : தான் சங்கராச்சாரியாரின் பக்தன் என்பதால் அவரின் வழக்கை விசாரிக்க மாட்டேன் என உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறியிருக்கிறரே... (தினத்தந்தி 7.8.2007 பக்-2)
-கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்
பதில் : அவர் மட்டுமா... நீதிபதிகளால் இன்னும் எத்தனையோ பேர் உண்டு. அவர் அவ்வளவு விளம்பரப் படுத்தியிருப்பது பற்றி ஆகா அவரது நேர்மை என்னே! என்றுக் கூடக் கூறக்கூடும். அந்த வழக்கின் தடை ஆணையை மேலும் நீட்டிக்க வைக்கவே இப்படி ஒரு அறிவிப்பு.
பொதுவாக நீதிபதி தலைமை நீதிபதிக்கே கூறி வேறு ஒருவரிடம் இதைப்போட வைத்திருக்கலாமே!
கேள்வி 2 : பெரியார் திரைப்படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?
-கு.மோகன், கீழ்பெண்ணாத்தூர்.
பதில் : இளைஞர்கள் முதல் மாணவர்கள், பெரியவர்கள், தாய் மார்கள் வரை ஒரு மனமாற்றத்தையே கொள்கைத் தெளிவை, அவர்களிடம் உருவாக்கும் என்பது உறுதி.
கேள்வி 3 : ஆடி மாதத்தில் காற்றுக்குப் பதிலாக மழை பொழிகிறது என்றால் சுற்றுச் சூழல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்?
-மு.தமிழ்ப்பாண்டியன், சென்னை-49.
பதில் : அதில் என்ன சந்தேகம். ஓசோன் ஓட்டையின் காரணமாக இந்த பருவக் கோளாறுகள் மாறுபட்ட தட்பவெட்ப நிலை.
கேள்வி 4 : சமீப காலமாக சிறுவர்கள் கொலைக் குற்றங்களிலும் கற்பழிப்புச் சம்பவங்களிலும் ஈடுபடுவது எதைக் காட்டுகிறது?.
-மு.தமிழ்ப்பாண்டியன், சென்னை-49.
பதில் : நம் நாட்டின் சீரழிவைக் காட்டுகிறது! சின்னத்திரை, பெரிய திரையால் தாக்கம் அதனை உருவாக்குகிறது.
கேள்வி 5: பாபர் மசூதி இடிப்புக்குக் காரணம் நரசிம்மராவ் கல்யாண்சிங் அரசை டிஸ்மிஸ் செய்யாதது தான் என்று முன்னாள் உளவு பிரிவு அதிகாரி ராமன் கூறியிருக்கிறாரே?
-ஆர்.ஜீவிதா, சே.பேட்டை
பதில் : நூற்றுக்கு நூறு சரியான கருத்து
கேள்வி 6 : இயற்கையிலேயே ஆணாகவும், பிறக்காமல் பெண்ணாகவும் பிறக்காமல் திரிசங்கு சொர்க்கமாய் இடைப்பட்டுப்பிறந்ததால் இறைவனை சபிக்கின்ற அரவாணிகளை பிச்சை எடுப்போராகவும், பாலியல் தொழில் செய்வோராகவும் இந்திய அரசாங்கமே குறிப்பிடுவது ஈட்டியாய்ப் பாய்ந்து இதயத்தை எத்துணை ரணப்படுத்தும் அவர்களை?.
-புலவர்.ஞானசேகரன், திருலோக்கி.
பதில் : இது ஆழமான பாலியல் ஷீட்ற்வு சா சந்தை சமூகப் பிரச்னை - இதுபற்றி சரியான அணுகு முறையை அரசுகளும் மக்கள் நல அமைப்புகளும் இணைந்து ஒரு சரியான திட்டத்தை உருவாக்-கினால்தான் தீரும்!
கேள்வி 7 : அன்றாடம் தீவிரவாத செயல்களும், பொதுப் பிரச்சினைகளுக்கு போராட்டமும், மூடக்கொள்கைகளும் வளர்ந்து கொண்டே இருக்கிறதே?
-சி.சுவாமிநாதன், ஊற்றங்கரை.
பதில் : மதவெறி, பதவி வெறி, பண வெறி இவை மூன்றுதான் நீங்கள் குறிப் பிட்ட நோய்களுக்கான மூல காரணங்கள்!
கேள்வி 8 : அறிவார்ந்த தோழமை கட்சிகள் கூட கலைஞர் அரசுக்கு தர்மசங்கடத்தையே ஏற்படுத்து கின்றனரே!
-வீர.செல்வம், பூம்புகார்.
பதில் : அதுதான் கொடுமைதுஙூன் கொடுமை! அவர்கள் கட்சி வளர்க்கும் அரசியல் செய்ய நினைப்பது வேத னைக்குரியது! எதற்கும் எல்லை உண்டே - கலைஞர் குறிப்பிட்டது போல!
கேள்வி 9 : ஆரியர்களின் வேதங்களும், இதிகாசங்களும் புராண மற்றும் இலக்கியங் களாகட்டும் அனைத்தும் ஆபாசமும், மூடத்தனமும், வன்முறையுமே பிரதானமாயுள்ளன. நீங்கள் அறிந்து (அவர்களிடத்தே) ஒழுக்க நூல் ஒன்றாவது உண்டா?.
-இராமமூர்த்தி, மேட்டூர் அணை.
பதில் : ஒழுக்கமே இல்லாத கூட்டத்திடம் எப்படி ஒழுக்க நூல் இருக்கும்? ஒழுக்கம் பேசிடுபவர்களை அழித்து வரம் கேட்பதுதான் வேதங்கள் முதல் இதிகாச புராண சாஸ்திரங்கள் வரை. யாராவது மறுக்க முடியும்?
|