நாட்டு நடப்பு
சனிப்பெயர்ச்சியில் இஸ்லாமிய பெண்கள்
சமீபத்தில் தமிழகத்தின் அனைத்து பெரும்பாலான நாளிதழ்களிலும் தொலைக்-காட்சிகளிலும் இடம் பெற்ற செய்தி சனிப்-பெயர்ச்சியாகும். இதை முன்னிட்டு கோயில்-களில் சிறப்பு வழிபாடு பூசைகள் நடந்தது. பெரிய அளவில் நாளேடுகளும் செய்திகளை வெளியிட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் அதே தினத்-தில் இந்துப் பெண்களுடன் இஸ்லாமிய பெண்-களும் வந்து சனீஸ்வர பகவான் உள்ளிட்ட நவகிரகங்களையும் சுற்றி வந்து கோயில் பார்ப்பனிடம் சாம்பல் வாங்கிப் பூசிக்-கொண்டு திரும்பினர்.
இது குறித்து நாம் எழுப்பும் கேள்விகள்.
நாத்திகவாதிகளான எங்களுக்கு இதன்மூலம் நிறைய சந்தேகங்கள் கிளம்புகின்றன. அதாவது இந்துவாக இருந்தாலும் கூட கைலிகட்டிக்-கொண்டு கோயிலுக்குள் வரக்கூடாது என்று தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இஸ்லாமிய பெண்கள் மட்டும் வர எப்படி விதிமுறைகள் அனுமதியளிக்கின்றன. இந்துக் கடவுளை நம்பும் பெண்களுக்குத்-தான் இந்தக் கடவுள்கள். அருள்பாலிப்பதாகச் சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் மதப்பிரகாரம் இஸ்லாமிய விதிமுறைகளின் படி முக்காட்டை நீக்காமல் எப்படி இந்துக் கடவுள்களை வணங்குகிறீர்கள்? திருமணம் ஆகாவிட்டாலும், ஆகி விட்டாலும் குங்குமம் உள்ளிட்ட நெற்றிக்-குறிகளை இட்டுக் கொள்ளாத நீங்கள் எப்படி விபூதியை பூசிக்கொள்கிறீர்கள்.
இப்படிச் செய்து கொள்ளலாம் என்று உங்கள் ஜமாத்தார்கள் சொல்லிவிட்டார்களா? சனிப்பெயர்ச்சிக்கு நீங்கள் சென்று சனிபக-வானையும், ராகுவையும் வணங்கி உங்களுக்-கான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்-கள் என்று உங்கள் மதத்தில் கூறியுள்ளர்களா?
அல்லா மீது இதுவரை நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை என்னவாயிற்று? இஸ்லாமிய ஜமாத்துகளில் இருந்து வேறுபட்டு நிற்கும் தவ்ஹீத் கமிட்டி எவ்வள-வோ புரட்சிக் கருத்துக்களை கூறினாலும் வரதட்சனையை எதிர்த்தாலும் பெண்கள் படித்து முன்னேற வேண்டும் என்று கூறி-னாலும் ஆண்கள் கூடுமிடத்தில் பெண்களும் கூட வேண்டும் என்று பேசினாலும் உருவ வழி-பாட்டையும் இந்துக் கோயில்களின் வழி-பாட்டையும் எதிர்க்கிறதே?
அப்படியிருக்க இஸ்லாமியப் பெண்-களாகிய நீங்கள் உங்கள் மதக்கடவுள் மீது நம்பிக்கையிழந்து இந்துக்கடவுளை நம்பு-கிறீர்களே, அந்தக் கடவுள்கள் இந்துப் பெண்-களைக் காப்பாற்றுகின்றனவா? அவர்களை-யேகாப்பாற்றாமல் உங்களை வந்து காப்-பாற்றவும் உங்களுக்கு பரிகாரம் செய்யவும் அந்தக் கடவுள்களுக்கு ஏது நேரம்?
மேலும், உங்களை எல்லாம் படம் எடுத்து தினமலர் போன்ற நாளிதழ்கள் செய்திகளை போட்டு விளம்பரம் தேடிக்கொள்வது உங்களு-க்கும், உங்கள் மதத்திற்கும் இழுக்கில்லையா? இதே புதுக்கோட்டையில் உள்ள பெருங்களூர் சிவன் கோயில் அர்ச்சகர் ஞானகந்தன் என்பவர் இஸ்லாமிய பெண்களிடம் நடந்து கொண்-டவை நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் விரிவாகச் செய்தி வந்திருக்கிறதே! அதைப் பார்த்துமா பார்ப்பனர்களிடம் இன்னும் விபூதி வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்த வினாக்களுக்கு விடைகள் உண்டா?
-ம.மு.கண்ணன், புதுக்கோட்டை.
கலகலக்கும் கர்த்தரின் ஆலயங்கள்
பெருமளவில் வெளியேறுகிறார்களா? எகிப்திலிருந்து மோசே தலைமையில் இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) வெளியேறி-னார்களே (பத்துக் கட்டளைகள் இங்கிலீஷ் படத்தின் காட்சி) அது போலவே கிறித்த-வர்களே கேரளாவில் வெளியேறு-கிறார்களாம். எங்கே போகிறார்கள்? மேய்ப்பனை விட்டுப் போகவில்லை. வேறொரு மந்தைக்குப் போகிறார்கள். பெந்தகோஸ்ட் பிரிவுக்குப் போகிறார்கள்.
எல்லா மதங்களைப் போலவும், இதிலும் ஏகப்பட்ட பிரிவுகள். ஏ முதல் இசட் வரை என்று சொல்லலாம். இப்போதைய போப் பெனடிக்ட் லத்தீன் மொழியில் கும்பிடலாம் என்று கூறி விட்டதால், ஆல்பா முதல் ஒமேகா வரை பிரிவுகள்.
மதங்கள், மக்களை நல்வழிப்படுத்து-வதற்கும் ஒற்றுமைப் படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டன என கூறினார்கள். கூறுகிறார்கள். ஆனால், மதங்களே ஒற்று-மையாக இல்லை. ஒரு மதத்திற்குள்ளேயே பிரிவினைகள்.
விசுவாசிகள் ஏன் விசுவாசத்தை இழந்-தார்கள்? ஆடுகளை யாராவது திருடி விட்டார்களா? அல்ல. ஆடுகளே செல்கின்றன. வேறு இடம் நோக்கி! மேய்ச்சலுக்கு நல்ல புல்வெளி இருக்கிறது என்றா? இருக்கலாம்.
பிரிந்த ஆடுகள் சொல்கின்றன. மேய்ப்பன் புகழ் பேசும் பைபிளை எங்கள் கண்ணில் காட்டுகிறார்கள், கையில் தருவதில்லை. ஆனால் இவர்கள் தருகிறார்கள். எங்கள் சுகதுக்கங்களில் பங்கு பெற்று வழிபாடு நடத்துகிறார்கள். கன்னிமரி, பரிசுத்த ஆவியால் குழந்தை பெற்றாள் என்பதை நாளெல்லாம் நம்பிய கத்தோலிக்கர்கள் மாற்றுப்பாதை காட்டும் பெந்தகோஸ்ட் பிரிவுக்குச் செல்லத் தயக்கம் காட்டவில்லை.
ஜெபம், வழிபாடு, ஸ்தோத்திரங்கள் அச்சகடிக்கட்பட்டுத் தரும் ஜெப வாசகங்கள் இவை எவையும் கத்தோலிக்கர்களைத் திருப்திப்படுத்த வில்லையாம். பால் பரத்தாழம் எனும் சமூகவியல் பேராசிரயர் பேய்பின் மதக்கல்லூரியில் புனே நகரில் பணிபுரிகிறவர் கூறுகிறார். கிறித்தவர்களிடையே சகோதரத்-துவம் கிடையாது. கடவுளை உணர முடியவில்லை. வேதாகம நூல்களைக் கண்ணு-க்குக் காட்டமாட்டேன் எனும் நிலை ஆகிய இவை மூன்றுமே ஆடுகள் பிரிந்து போவதற்கான காரணிகள் என்கிறார்.
பரத்தாழம் கூறுகிறார், குடும்பச் சிக்கல் ஏற்பட்ட நேரங்களில் 83 விழுக்காட்டினர் மந்னயை விட்டுப் போய்விட்டனர். காரணம், யாரும் ஆதரவுக்கரம் நீட்டவில்லை. பாதிரியாரும் கண்டு கொள்ளவில்லையாம்.
கத்தோதிக்கப் பேராயர்களின் மாநாடு இந்தக் கருத்தை ஏற்றுச் சில வழி முறைகளைத் தெரிவித்தது.
பரலோக விருந்து நடக்கிறது. புதிய மந்தை அமைப்பு. வருபவர்கள் நகைகளை அணிந்து-வர அனுமதிக்கப்படுகிறார்கள். ஆதிமந்தை என்ன சொல்கிறது? கீழ்ப்படி, பணம் கொடு, ஜெபம் செய்! என்கின்றன. ஆடுகள் தயாராக இல்லை. விழித்துக்கொண்டு விட்டன.
பழைய கசாப்புக்காரனிடம் நம்பிக்-கையை இழந்துவிட்டுப் புதிய கசாப்புக் கடைக்காரனிடம் போகின்றன. எப்படியும் பலியாகிவிடும் அறிவு பறிபோகும். அறிவுக்கு விடுதலை கிடைக்காதே! |