பதிவுகள்
சூலை 31 - டெல்லியில் தபால் நிலையங்களில் இரயில் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது.
ஆகஸ்ட் -1 - 2007 ஆம் ஆண்டுக்கான மக்சாசே விருதுக்கு பிரபல பத்திரிகையாளர் பி.சாய்நாத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் -2- நியூசிலாந்தின் வடக்குப் பகுதியான வனாது தீவுக்கருகில் தென் பசிபிக் கடலில் நிலநடுக்கம். 7.2 ரிக்டர் அளவு பதிவானது.
ஆகஸ்ட் -4 - மகேந்திரகிரி ஆய்வு மய்யத்தில் கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சோதனை வெற்றி.
ஆகஸ்ட் -7-எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் அய்தராபாத்தில் தாக்கப்பட்டார். அவருடன் பகுத்தறிவாளர் டாக்டர் இன்னையாவும் தாக்கப்பட்டார்.
ஆகஸ்ட் -11- இந்தியா குடியரசுத் துணைத்தலைவராக ஹமீது அன்சாரி பதவியேற்றார்
பார்வதி : உங்கள துவைச்சு போடுங்க, சமைச்சு போடுங்கன்னா சொல்றேன்... இந்த காளையை துரத்திட்டு ஒரு டொயோட்டா வாங்குங்கன்னு தானே சொல்றேன்.
பரமசிவன் : ?! ?! ?!
பரமசிவன் : என்ன அங்கே கூச்சல்?
நாரதன் : துவார பாலகர்கள் எங்களுக்கும் ஏ.கே.47 துப்பாக்கி வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், சுவாமி!
பரமசிவன் : ஏனாம்?
நாரதன் : துப்பாக்கியுடன் வரும் சிலைத்திருடர்கள் இவர்கள் கையிலுள்ள கற்கால ஆயுதங்களைப் பார்த்து கேலி செய்கிறார்களாம்!
லெட்சுமி : என்ன நாரதரே, கைலாசத்திலே என்ன கசமுசா!
நாரதன் : வேறு ஒன்னுமில்ல தேவி..... நம்ம சிவபெருமான் தலையிலேயே கங்கையை செட்டப் பண்ணி வச்சிருக்கிற விசயம் பார்வதிக்கு தெரிஞ்சு போச்சாம்!
-குன்னம் ராமண்ணா
ஆண்களுக்கு தனி இடம் கொடுத்த மாநாடு
தந்தை பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்றனர். இருந்தது; அன்னை மணியம்மையார் தலைமையில் வீறு நடை-போட்டது; ``இராவண லீலா நடத்தி இந்தியா-வையே குலுக்கினார் அன்னையார்.
மணியம்மையாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்றனர், இருக்கிறது, வலிமை-யாக இருக்கிறது என்பதை திருச்சியில் நடைபெற்ற திராவிட மகளிர் எழுச்சி மாநாட்-டைக் கண்டோர் (11/08/2007) மூக்கின்மேல் விரலை வைத்தனர். இது கழகம் காணாதது மட்டு-மல்ல, பெண்கள் மட்டுமே கலந்து-கொண்ட மாநாடு - பெண்கள் மட்டுமே பங்கேற்ற பேரணி, நன்கொடை திரட்டியது முதல், ஏற்பாடு-களை செய்தது வரை, பெண்கள் மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும் பெருமைமிகு மாநாடு - இதற்கு முன் எங்கு நடந்தது? எந்தக் கட்சி நடத்தியது - எந்த அமைப்பு நடத்தியது - எங்கு நடத்தியது?
அடடா, என்ன காட்சி, என்ன காட்சி!
அற்புதம்! அற்புதம்! பார்த்தவர்கள் பரவசம் அடைந்தனர். கண்டவர்கள் களிப்புற்றனர். மாநாட்டில், கழகத் தலைவர் அவர்கள் கூறியதைப் போல பெண்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அது எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதற்கு திருச்சி மாநாடே எடுத்துக்காட்டு!
வரலாற்று சிறப்புமட்டுமல்ல என்றும், நெஞ்சில் நிற்கும் மாநாடு என்றாரே தமிழர் தலைவர் - அது உண்மை - நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
பேருக்கான பேரணியல்ல, பெருமைக்குரிய பேரணி என்றாரே - அது எத்தனை துல்லிய-மான உண்மை.
பெண்கள் முழக்கமிட்டு வந்த எழுச்சி-யையும் வெகுவாகப் பாராட்டினர்.
திருச்சியில் நடைபெற்ற பே()ரணி- திருச்சியை அதிரவைத்தது. பெண்கள் மட்டுமே - ஆம் பெண்கள் மட்டுமே பங்கேற்ற பேரணி அது. தமிழ்நாட்டில் இப்படி யொரு தனித்-தன்மையோடு - பெண்களைத் தவிர ஆண்-கள் பங்கேற்காத பேரணி என்பது இதுதான் முதல் தடவை!
ஆச்சரியக் குறியாய் அதி சயப் பார்வை-யோடு திருச்சி மக்கள் வாய்ப் பிளந்து பார்த் ததற்கு இதுதான் முக்கியக் காரணமாகும்.
ஏ அப்பா, திராவிடர் கழகத் தில் இவ்வளவு மகளிரா - அதுவும் போர்ப்படையைச் சேர்ந்த-வர்கள் போல கட்டுப் பாட்டோடு மிடுக்கு நடை போட்டு (அன்ன நடையல்ல!) புரட்சி-கரமான முழக்கங்களை (அச்சிட்டுக் கொடுக்-கப்பட்டி ருந்தது) முழங்கி வந்ததைக் கண்டு வியக்காமல் என்ன செய்வார்கள்?
மகளிர் கைகளில் தீச்சட்டி! கடவுளின் சக்தியால்தான் தீச் சட்டி ஏந்த முடியும் என்-பதை - இந்தத் தீச்சட்டி மூலம் பொசுக்கி எறிந்-தனர் கழக மகளிரணியினர். தப்பாட்டம் என்றால் ஏதோ ஒரு ஜாதியினருக்கு மட்டுமே உரியது என்று ஒதுக்கி வைத்திருந்தனர். கலை யைக் கூட சனாதனம் ஜாதிக் குறி குத்தி விலக்கி வைத்திருந்ததோ!
தப்பாட்டம் மட்டுமா? சுருள் கத்தி வீச்சுக்கலை - இது மட்டும்தானா? சிலம்-பாட்டம்! தமிழர்களுக்குரிய கலையாயிற்றே இடையில் காணாமல் போய்விட்டதே மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் மாணவிகள் சிலம்பாட்டத்தை வெகு அற்புதமாக நடத்திக் காட்டினர்.
பெண்கள் காக்கிச் சீருடை யணிந்து இராணுவ அணி வகுப்பையும் விஞ்சும் வகை யில் வீர நடைபோட்டு வந் தனர். கட்டளைச் சொற்கள் அத்தனையும் தமிழிலேயே!
பெரியார் மறையவில்லை - வாழ்கிறார் - வாழ்ந்து கொண்டிருக்கிறார் - இலட்சிய மயமாய் பெண்ணுரிமை மயமாய் என்பதை எடுத்துக்காட்டினார் கழகத் தலைவர் மாநாட்டு நிறைவுரையில்.
பெரியார் தனி மனிதரல்ல, ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், ஒரு திருப்பம் என்று அறிஞர் அண்ணா சொன்னதை நினை-வூட்டினார்.
பெண்களுக்குத் தனியே இடம் உண்டு என்று சொன்ன காலம் போய், ஆண்களுக்குத் தனியிடம் உண்டு என்று அறிவிக்க வேண்டிய நிலை சாதாரணமானதா? - தமிழர் தலைவர் இதனைச் சுட்டிக்காட்டியபோது பெண்கள் மத்தியிலிருந்து கடல் அலைகள்போல ஆரவாரம்!
என்னை மட்டும் மேடையில் அமர அனுமதித்துள்ளீர்கள். என்னை எந்தக் கணக்கில் வைத்துள்ளீர்ளோ எனக்குத் தெரிய-வில்லை என்ற வினாவை ஆசிரியர் அவர்கள் எழுப்பியபோது சிரிப்பு அலைகள்! போனால் போகிறது - ஆண்களுக்கான ஒரு பிரதிநிதி என்று அனுமதித்துள்ளீர்கள் என்று கருது-கிறேன் என்றார். பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாத்திர பகுதிகளைக் கொளுத்துவோம் என்றும் முத்தாய்ப்பாக அறிவித்தார் தமிழர் தலைவர்.
மாநாட்டு நிகழ்ச்சிகளையும் பேரணி-களையும் காட்சிகளையும் கண்டு நெகிழ்ந்தே போனார் - கழகத் தலைவர். ஆம், உண்மையிலேயே தனித்தன்மையான மாநாடுதான்! ஆண்களுக்குத் தனியிடம் அளித்த மாநாடுதான்!
மக்கள் எடுத்த உறுதி மொழிகள்
மகளிருக்கான பத்து உறுதிமொழிகளை தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்துக்கூற பல்லாயிரக் கணக்கில் மாநாட்டில் திரண்ட பெண்கள் மட்டும் எழுந்து நின்று அந்த உறுதிமொழிகளைத் தொகுத்துச் சொன்னார்கள். 1) நல்ல உடல் நலமே நல்ல உளநலத்திற்கான ஊற்றுக் கண் என்பதை உணர்ந்து வாழ்வதுடன், ஊர்நலம், உலக நலம் ஓம்பும் மானுடத்தின் உண்மை தொண்டாளராக, மனிதநேய காப் பாளராக என்னை நான் அர்ப்பணித்துக் கொள்வேன்.
2) எனது சிந்தனைகளும் செயலும் ஒத்துப் போகும் பகுத்தறிவு வாழ்க்கையையே வாழ்வேன்.
3) திருமணம் என்பது இணையரை தேர்ந்தெடுப் பதுதானே தவிர எஜமானரை அல்ல என்பதை நம்புபவள் நான்.
4) ஜாதி மறுப்புத் திருமணம், விதவைத் திருமணம், மணவிலக்கு ஆனவர்களுக்கு மறு திருமணம் ஆகியவற்றை வரவேற்று வாழும் சுயமரி யாதை வீராங்கனை நான்.
5) வரதட்சணை கொடுப்பது சுயமரியாதையை இழக் கும் கொத்தடிமை முயற்சியாகும். அதற்கு ஒருபோதும் நான் இணங்க மாட்டேன்.
6) எளிமை, சிக்கனம், பிறபாலினரிடம் பண்புடன் பழகும் பான்மையைப் பெற்று வாழ்ந்து காட்டுவேன்.
7) இளமை என்பது வளமைக்காக என்று நினைக் காமல், தொண்டுக்கான அது வும் சமுதாயத் தொண்டுக் கான வாய்ப்பே என்று கருதி வாழ்வேன்.
8) கடவுள், மதம், ஜாதி, சினிமா, சோதிடம் என்ற பல்வகை மூடநம்பிக்கைகள் அண்டாத பெரு நெருப்பாக வாழ்வேன்.
9) உரிமைகளை மட்டும் பேசாமல், கடமைகளை ஆற் றுவதிலும் பொறுப்போடு செயல்படுவேன்.
10) அனைவருக்கும் அனைத்தும் என்ற புதிய புது உலகம் காண என்றும் உழைப்பேன். |