குரல்
நல்லாச் சொன்னாங்க நாலு வார்த்தை
அந்த மணல்திட்டு (ராமன் பாலம்) என சொல்லப்படுவது இயற்கையாக அமைந்ததுதான் என்று நாசா அமைப்பு சொல்லியிருக்கிறது. அந்த அறிவியல் உண்மையை ஏற்றுக்கொள்வது தானே சரியான அணுகுமுறையாக இருக்க வேண்டும்? அதில் சிக்கல் ஏற்படுத்தும் நோக்கோடு சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் மக்கள் விரோத காரியம்.
-மதுரை ஆதீனம்.
அவருடைய (தஸ்லீமா நஸ்ரீன்) கேள்விகளுக்கு நேர்மையான பதிலைத் தர முடியாதவர்கள் அவரை பத்வாகளிலும் (இஸ்லாமிய மத அடிப்படையிலான தீர்ப்புகள்) தாக்குதல்களாலும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். கருத்தை கருத்தாய் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தாக்குதல்களால் எதிர்கொள்வது பாசிசத்தின் வெளிப்பாடு.
-கவிஞர். இன்குலாப்.
பாப்ரிமஸ்ஜித் பிரச்சினையிலும் எல்லை கடந்து பலபேர் மனம் புண்ணாகும் படி வார்த்தைகளை பிரயோகப்படுத்தியிருக்கேன், இனி அது மாதிரி கடுமையான வார்த்தைகளைப் பேச மாட்டேன். ஒன்பதரை ஆண்டு சிறை வாழ்க்கை என்னை அப்படி பக்குவப்படுத்தியிருக்கிறுது.
-அப்துல் நாசர் மதானி, (கேரள மக்கள் ஜனநாயக முன்னணி தலைவர்)
என்னைத் தாக்குவதால் என் கருத்துக்களைத் தடுக்க முடியாது. அய்தராபாத்தில் மரணத்தை என் வெகு அருகில் பார்த்துவிட்டேன். ஆனாலும் நான் எதை நம்புகிறேனோ அதை துணிச்சலாக எடுச்சொல்வேன்.
-தஸ்லீமா நஸ்ரீன், (வங்க தேச எழுத்தாளர்)
எனது தலைமுடியும், உடையும் என் வசதியைப் பொறுத்தது. கல்லூரி நாட்களில் நான் டென்னிஸ் ஆடினேன். துப்பட்டா அணிந்துகொண்டு டென்னிஸ் ஆடமுடியாது. நான் ஒரு ஆணைப் போல உடையணிந்தால் என்னை யாரும் டீஸ் செய்யமாட்டார்கள் என்று என் தந்தை சொல்வதுண்டு. இதுதான் என் தலை அலங்காரத்துக்கு காரணம்.
-கிரண்பேடி (டெல்லி அய்.பி.எஸ். அதிகாரி)
|