இந்தியாவில் இழிவுபடும் பெண்கள்

பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் காவல்துறையிடம் ஒரு புகார் தாக்கல் செய்யப்-பட்டுள்ளது. பூஜா சலோடியா என்னும் கோடீசுவரன் ஒருவரின் மனைவி தாக்கல் செய்துள்ளார். தன் கணவர் மீதும் அவரது குடும்பத்தின் 17 பேர்கள் மீதும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து பார்த்துத் தெரிந்து-கொண்டு பெண்ணாக இருந்த காரணத்-தால் இரண்டுமுறை கருக்கலைப்பு செய்யு-மாறு தன் கணவனாலும், கும்பத்-தாராலும் கட்டாயப்படுத்தப்பட்டதாப் புகார் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இந்தப் புகார் முதன் முதலாக தரப்பட்டதாகும். புகார் தந்தவரின் கணவர் சிராக் என்பவர் பெரும் தொழிலதிபர். பெரும் பணக்காரர் இவரின் மனைவி பூஜா சலோடியாவுக்கு ஏற்கனவே இரட்டைக் குழந்தை-கள் பிறந்தன. அவை இரண்டும் பெண்-கள். இதற்காக இவரைக் கொடுமைப்படுத்தி இவரது தந்தையிடமிருந்து குழந்தைகளின் வளர்ப்புச் செலவுக்காக 25 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.

 

சனிக்கிரகம்

பழகிப் போனதாலேயே ஒரு பொருளின் தன்மை; அல்லது நிகழ்வின் தன்மை இப்படித்-தான் என்று அறுதியிட்டு இறுதி முடிவு கூறுவதென்பது அறிவியலுக்குப் பொருத்த-மற்ற தீர்வு! பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்; மேலத் தெருக்காரர் சொன்னார்; மேல ஊர்க்காரர் சொன்னார்; அல்லது மேலை நாட்டுக்காரர் சொன்னார் என்று சொற்பேச்சுக் கேட்டு, அது-பற்றிய உண்மையான தன்மையைத் தெரிந்து கொள்ளாமல் நம்புவதென்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
சமீப காலமாக சனிப் பெயர்ச்சிப் பலன் என்ற தடயமற்ற ஒரு ஊடகத்தால் மக்களை ஏமாற்றி வரும் நிலை வெகுவாக வளர்ந்திருக்-கிறது. ஒரு காசுக்கும் பயன்படாத இது மாதிரி நம்பிக்கையும், அதன்பால் செயல்படுகிற நடவடிக்கைளும், எந்த வகையிலும் பயன்-படாது என்பது சிந்திக்கிற எவரும் ஒப்புக் கொள்வார்கள்.

 

"பொரியார்" 100ஆவது நாள் விழா

தந்தை பெரியார் அவர்கள் அணிந்திருந்த பச்சைக்கல் கணையாழியை தம்பி சத்யராஜ் அவர்களுக்கு அணிவிக்கின்ற அந்தப் பணியினை நம்-முடைய ஆசிரியரும், இன்றை-க்குத் தமிழர் தலைவராக இருப்பவருமான எனது ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள் எனக்கு அளித்து, அந்தப் பச்சைக் கல் மோதிரத்தை அவருக்கு நான் அணிவித்த நிகழ்ச்சியோடு இந்த இனிய விழா ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்-கின்றது.

 

தந்தைபெரியார்

நம்மைப் பொறுத்தவரையில் தமிழர்-களைப் பொறுத்தவரையில் நம்முடைய பெயர்கள் என்பவைகள் எப்படி இருந்து வந்தன என்றால், மதச்சார்பு அற்றதாக, மதத்திற்கு ஏற்பட்டு வெறும் பெயமுட்டுக் குறிச்சொல் என்கிற முறையிலே தான் இருந்து வந்திருக்கின்றன. மத சம்பிரதாயத்தின் அடிப்-படையிலே தமிழர்களுக்குப் பெயர் இருந்த-தில்லை; தமிழ்ப் பெயர்களைப் பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும்

 

ஆசிரியர் பதில்கள்

கேள்வி 1 : தான் சங்கராச்சாரியாரின் பக்தன் என்பதால் அவரின் வழக்கை விசாரிக்க மாட்டேன் என உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறியிருக்கிறரே... (தினத்தந்தி 7.8.2007 பக்-2)
-கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்
பதில் : அவர் மட்டுமா... நீதிபதிகளால் இன்னும் எத்தனையோ பேர் உண்டு. அவர் அவ்வளவு விளம்பரப் படுத்தியிருப்ப

 

தோழர் தோழியர் தேவை

மதுரை, திண்டுக்கல், ஈரோடு
வயது 26, பத்தாம் நிலை, தையல் கலை, டிடிபி படித்த தோழியருக்கு தோழர் தேவை.
வயது 33, எம்.ஏ., பொது நிர்வாகம் (கணினி, தட்டச்சு, தையல்) சமூக செயல்பாட்டாளர், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர், மதுரை. மாதம் ரூ.7000/- வருமானம் வரக்கூடிய கலப்புத்திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.
வயது 35, எட்டாம் வகுப்பு, தேநீர் தயாரிப்பாளர் (Tea Master)ஆக பணிபுரிந்து மாதம் ரூ.4500/- வருமானம் பெறக்கூடியவரும் கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.

 

சாப்ளின் நடித்த முதல் சினிமா

சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த முதல் சினிமா மேக்கிங் ய லிவிங் (ஆயமபே ய டுஎபே) என்பதாகும். வாழ்க்கைக்கான வழி என்ற தலைப்பு கூட அவரைப் பொறுத்த-மட்டில் சரியானதாகவே அமைந்ததது. படம் 1914 பிப்ரவரி மாதம் 2ஆம் தேதியன்று வெளிவந்தது. பெரிய வெற்றியைப் பெறவில்லை.
ஆனால் ஒப்பந்த நடிகரான அவருக்கு வராச் சம்பளம் தந்தாக வேண்டுமே! படத் தயாரிப்பாளர் படம் எடுக்கத் தொடங்கினார். வெறுமனே உட்காரவைத்துச் சம்பளம் தர முடியாதல்லா? படப்பிடிப்புக் குழுவினருடன் நடிகரை அனுப்பிவிட்டார். தயாரிப்பாளர் உடன் செல்லவில்லை.

 

தலையங்கம்

நாட்டில் படிப்பறிவு வேகமாக வளர்ந்து வருகின்ற நிலையில், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மிக முக்கிய தேவையாகும்.
மக்கள் நல அரசாக விளங்கும் எந்த அரசும், இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கிட, தொழில் மயமாக நாட்டை ஆக்கினால் தானே முடியும்?
கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்து, கடந்த 15 மாதங்களாக நடைபெறும் ஆட்சி, அது தேர்தல் அறிக்கையில் தந்த 177 வாக்குறுதிகளில் 70 தவிர, இதற்குள்ளேயே 5 ஆண்டு காலத்திற்காகக் காத்திராமல், `ராக்கெட் வேகத்தில் செய்து முடித்து வருகின்றதே!
சொன்னதை மட்டும் இந்த ஆட்சி செய்யவில்லை; சொல்லாத தையும் அல்லவா சேர்த்து செய்து வரலாறு படைத்து வருகிறது!
தமிழ்நாட்டைத் தொழில் மயமாக்கும்போது, அதைப் பரவலாகவும் ஆக்கிட பல அருமையான தொழில் திட்டங்களை, பொதுத் துறை, தனியார் துறை, கூட்டுத் துறை (இரண்டும் இணைந்தவை) என்று சிறப்பாக செய்து வருகின்றது தமிழ்நாடு அரசு.

 

சுசு ஏஞ்சல்

ஆதிக்கத்தையும், அநீதியையும் எதிர்த்துப் போராடும் போராளிகள் மட்டுமல்ல, அவர்-களின் குடும்பமும் அத்தனை இன்னல்-களுக்கும் ஆளாக நேரிடும். போராட்டக்-காரனின் இழப்பு தாயையோ, உறவுகளையோ, நண்பர்-களையோ போராட்டத்தினுள் நுழைத்து விடுகிறது. தன் பிள்ளை, தன் வீடு என்று இருந்த தாய், மகனது ஈடுபாட்டால் சோசலிசப் போராட்டத்தினுள் புகுந்ததை கார்க்கி விளக்குகிறார். தந்தை அண்ணன், கணவன் என்ற சொந்தங்-களை போரில் இழந்த பெண், நாட்டுக்குகாகத் தன் ஒரே மகனையும் போருக்கனுப்பிய கதையைப் பேசுகிறது புறநானூறு! அதையும் தாண்டி, போராளியாக விதைக்கப்பட்ட, மகனின் மறுவடிவமாக மாறுகிற தாய்மார்கள். இன்றைய தமிழீழத்தில் கண் கூடு. அப்படிப்-பட்ட ஒரு தாயின் கதைதான் சுசு ஏஞ்சல்.

 

கவிதை

கையில் கமண்டலமும்
வாயில் புளுகும் வைத்து
பிச்சையில் உடல்
வளர்த்தாய்
உலைக்களத்தில் வெந்த
எம் உழைப்பை....
இளைப்பாற குடித்த கஞ்சி
பரபிரம்மா தந்ததென்றாய்
நன்றிக் கடனுக்கு...
ஆட்டுப்பட்டி காவல்காத்த
கிழக்காக குடிகொண்ட
கிருஷ்ணன் இடிதாக்கி
கருகியதை
தெய்வக் குற்றமென்றாய்....
பசியால் குழந்தை
கேவலைப் பார்த்து
பாவத்தின் தண்டனை
என்றாய்...
சாக்கடை அள்ளி
காசில் குடித்த
டீ தண்ணியை
புண்ணியத்தின்
வெகுமதி என்றாய்...
நீ சொல்லும்
கடவுளை
காணச் சென்றேன்...

 

சிறுகதை

வைகறையில் கோயிலைச்சுற்றி வந்த காவலாளி ஏழுமலை கர்ப்பக்கிருகத்தில் சாமிகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். சாமிகளுடன் சாமிகளின் காவலர்கள் துவார-பாலகர்களும் காணாமல் போயிருந்த பேரதிர்ச்சியில் கணகளை ஓட்டிய அந்த அறுபது வயது மனிதரின் பார்வையில் கர்ப்பக்-கிருகத்துப் படியின் முதுகில் செப்புப்பட்டயம் ஒன்று நாடிநரம்புகளை நடுக்குவதாக அகப்-பட்டது. என்ன நடந்தது? என்ற பீதியில் ஏழு-மலை பதைபதைப்புடன் பட்டயத்தை படிக்க ஆரம்பித்தார்.
-மகாகனம் பொருந்திய கோயில் உறங்-காவலர் குழுவின் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்களுக்கு மற்றும் கிராம பொதுமக்களுக்கு வராகமூர்த்தி -லஷ்மி சமேபூதரின் காவற்காரர்களில் இளைய-வனாகிய இடது துவாரபாலகன் வணக்-கத்துடன் வரையும் லிகிதம்.

 

நூல்

திருக்குறள்-நூலுக்குக் காலந்தோறும் உரைநூல்கள்
வெளிவந்தவண்ணம் உள்ளன.
அவற்றுள் பல முற்றிலும் பழைமையான சமயக் கண்ணோட்டத்தில் அமைந்தவை; சில, புதுமையான பகுத்தறிவுப் பார்வையில் அமைந்தவை.
அறிவியல் பார்வையின் அடிப்படையில்
ஓர் உரை நூல் இப்போது வெளி-வந்துள்ளது. திருக்குறள் அறிவியல் அகல-வுரை - என்கிற பெயரால் அறிஞர். மாத்தளை சோமு அவர்களால் எழுதப்பட்ட நூல் அது.
உரையாசிரியர்.சோமு அவர்களின் நோக்கமும் போக்கும் புதுமையானது, பாராட்-டத்தக்கது.
யாப்பனமதியோடு புணர்ச்சி வகையுடன் கூடிய
குறட்பாவினை முதலில் தொகுத்து, அடுத்து பொருள் விளங்கும்படி சந்தி பிரிக்கப்-பட்ட சொல்லமைதியோடு குறட்பாவினை கொடுத்-திருப்பது சிறப்புடையது.
பொருட்சிக்கலான குறள்களுக்கு உரைரைய அவர் மேற்கொண்ட நெறி அறிவியல் மனப்பாங்கின் பாற்பட்டதாகும்.
பொதுவாக, சிறிய அளவில் பொழிப்-புரையும் சில பாக்களுக்கு நெடிய அளவில் விளக்கமும் எழுதப்பட்டுள்ளன.

 

குரல்

அந்த மணல்திட்டு (ராமன் பாலம்) என சொல்லப்படுவது இயற்கையாக அமைந்ததுதான் என்று நாசா அமைப்பு சொல்லியிருக்கிறது. அந்த அறிவியல் உண்மையை ஏற்றுக்கொள்வது தானே சரியான அணுகுமுறையாக இருக்க வேண்டும்? அதில் சிக்கல் ஏற்படுத்தும் நோக்கோடு சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் மக்கள் விரோத காரியம்.

 

பதிவுகள்

சூலை 31 - டெல்லியில் தபால் நிலையங்களில் இரயில் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது.
ஆகஸ்ட் - 1 - 2007 ஆம் ஆண்டுக்கான மக்சாசே விருதுக்கு பிரபல பத்திரிகையாளர் பி.சாய்நாத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் - 2- நியூசிலாந்தின் வடக்குப் பகுதியான வனாது தீவுக்கருகில் தென் பசிபிக் கடலில் நிலநடுக்கம். 7.2 ரிக்டர் அளவு பதிவானது.

 

நாட்டு நடப்பு

பெருமளவில் வெளியேறுகிறார்களா? எகிப்திலிருந்து மோசே தலைமையில் இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) வெளியேறி-னார்களே (பத்துக் கட்டளைகள் இங்கிலீஷ் படத்தின் காட்சி) அது போலவே கிறித்த-வர்களே கேரளாவில் வெளியேறு-கிறார்களாம். எங்கே போகிறார்கள்? மேய்ப்பனை விட்டுப் போகவில்லை. வேறொரு மந்தைக்குப் போகிறார்கள். பெந்தகோஸ்ட் பிரிவுக்குப் போகிறார்கள்.
எல்லா மதங்களைப் போலவும், இதிலும் ஏகப்பட்ட பிரிவுகள். ஏ முதல் இசட் வரை என்று சொல்லலாம். இப்போதைய போப் பெனடிக்ட் லத்தீன் மொழியில் கும்பிடலாம் என்று கூறி விட்டதால், ஆல்பா முதல் ஒமேகா வரை பிரிவுகள்.
மதங்கள், மக்களை நல்வழிப்படுத்து-வதற்கும் ஒற்றுமைப் படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டன என கூறினார்கள். கூறுகிறார்கள். ஆனால், மதங்களே ஒற்று-மையாக இல்லை. ஒரு மதத்திற்குள்ளேயே பிரிவினைகள்.

 

பெட்டிச் செய்திகள்

வாட்டும் வறுமை........

வித்தியாசமான கட்சிதான்......

ரெண்டு பேருக்கும் முட்டிக்கிச்சு.......

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra