வேத நம்பிக்கைகள் எப்படிப்பட்டவை

(பிரேம் நாத் பசாஸ் அவர்களின் இந்திய வரலாற்றில் பகவத் கீதை என்ற நூலிலிருந்து திரட்டியது)
சட்டங்கள் இயற்றி அதைக் கெடுபிடியாக அமல் செய்து உழைக்கும் வர்க்கத்தின் உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் பார்ப்பனர்கள் அனைத்தும் பறிக்கப் பட்டதால் சூத்திரர்கள் துயருக்கும் இன்னலுக்கும் உள்ளானார்கள்.
***
வேதப் பாடல்கள் கடவுளர்களால் பாடப்பட்டன என்ற புதிய பொய் பரப்பப்பட்டது. கடவுளர்களே பார்ப்பனர்களை உயர்ந்த சாதியினர் என்று கூறுவதால் பார்ப்பனர்கள் உயர்ந்த சாதியினர் என்பது மாற்ற முடியாதது; என்றென்றும் நிலைத்திருப்பது என்பதே பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யுரைகள்.
***
எந்த வர்க்கத்தை எடுத்துக் கொண்டாலும் அனுகூலமான உரிமைகளைக் கைப்பற்றிய வர்க்கத் தினர், எப்படிச் செயல்படுவார்களோ, அதைப் போன்றே பார்ப்பனர்களும் தங்களுடைய நலன்களுக்கு உகந்த சட்டங்களை இயற்றிக் கொண்டார்கள். பண்பாட்டின் உறைவிடங்கள் என்று போற்றப்படும் இவர்கள் சமூகத்தில் தாங்கள் வகித்து வந்த மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி பெரும்பான்மை மக்களை அறியாமையிலும் ஆன்ம இழிநிலையிலும் வைத்திருப்பதற்கான திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறார்கள்.
***
பார்ப்பனர்கள் சமூகத்தின் குரல்வளையை இறுக் கினார்கள். அறிவு வளர்ச்சியைத் தடை செய்தார்கள். அறியாமையை ஊட்டி வளர்த்தார்கள். இச்சாதனை களைச் செய்து முடித்த பார்ப்பனர்கள் வேத காலத்திற்குப் பிந்திய நூற்றாண்டுகளில் பழங் கற்பனைக் கதைகளை உண்மையில் நடந்தவை என்று கூற நம்ப வைத் தார்கள். மூடநம்பிக்கைகளை உரமிட்டு வளர்த்தார்கள். இவையெல்லாம் இன்றுவரை தொடர்கின்றன.
***
பார்ப்பனர்களின் காலத்தில்தான் பெண்களும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பார்ப்பனர்களது சாத்திரம் கூறுகிறது: இந்திரனுடைய இடியும் மின்னலும் தாக்கிய தால் பெண்கள் பலவீனர்களாகி விட்டார்கள். எனேவ அவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது. அவர்களின் உடம்பின் மீதுகூட அவர்களுக்கு உரிமையில்லை.
***
வேத நூல்களைக் கற்பதால் பிருமத்தை அறிய முடியாது. அறிவுத் திறன் கொண்டும் அதை அடைய முடியாது. பிரும்மம் யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ அவனால் மட்டுமே பிருமத்தை அடைய முடியும். பிரும்மம் தன்னுடைய உண்மை நிலையை அவனுக்கு மட்டுமே புலப்படுத்தும். (கடோபநிதம்)
கி.பி. முதலாம் நூற்றாண்டு காலத்தில் நாகார்சுனன் என்ற பார்ப்பனன் மகாயாணப் பவுத்தப் பிரிவைப் பார்ப்பனீயக் கோட்பாடுகளுக்கு இணக்கமான ஒன்றாக மாற்றினார். பிறப்பால் இந்துப் பார்ப்பானனான நாகார்சுனன் பவுத்த மதத்திற்கு மதம் மாறியவர்.
***
எதிர்பார்த்தபடியே எண்ணற்ற பார்ப்பனர்கள் மகயொனப் பவுத்த மதத்தில் இணைந்தார்கள். உலை வைக்க உட்பகை உருவாக்கும் செவ்வனே நடந் தேறியது. மகாயான பவுத்தத்தில் பார்ப்பனர்கள் உறவு கொண்டு உட்புகுந்தது திட்டமிட்ட செயலே.
***
பரவசமூட்டும் பக்தி மார்க்கத்தைப் பரப்புவதில் ஈடுபட்ட பார்ப்பனர் தலைமையிலான பவுத்த சங்கம், மகாயா ணத்தின் பெயரால், பகுத்தறிவின் பாற்பட்ட பழைய பவுத்தக் கொள்கைகளைக் கைவிட்டது. பவுத்த தருமம் திசை திருப்பப்பட்டு பாட வேதத்துடன் பவனி வந்தது. புத்தர் அவதாரமாக்கப்பட்டு தெய்வ நிலைக்கு உயர்த் தப்பட்டார். பதக்களியின் யோக நடைமுறை பவுத்த சமயத்துக்குள் புகுத்தப்பட்டது.
***
சத்திரியர்கள் பவுத்தப் புரட்சியை முன்னின்று நடத்தினார்கள் காலம் மாறியது. பவுத்தம் வீழ்ந்தது. பகவத் கீதை ஏற்றம் பெற்றது. அதனால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவெனில் அதே சத்திரிய வகுப்பினரில் சிலர் பார்ப்பனியம் கோட்பாடுகளில் புகலிடம் பெற்றதுதான். கீதையின் நாயகனாக ஒரு பார்ப்பன ஆச்சாரியார் சுலபமாக இடம்பிடித்திருக்க முடியும். ஆனால் சூழ்ச்சியில் வல்லவனான கீதை நூலாசிரியன் சத்திரியனான கிருட்டினனைக் கீதையின் நாயகனாகப் படைத்தான்.
***
நவீன தத்துவ மெய்யறிவோடு ஒப்பிடுகையில் வேதக் கவிஞர்களின் கவிதை வெளிப்பாடுகள் அற்பமானவை. வேதகாலச் சிந்தனை பெரும்பாலும் பக்குவமற்றவையாக இருப்பது புரிந்துகொள்ளத்தக்கதே. னு.று. ரைஸ் டேவிட்ஸ் கூறுகிறார் உண்மையைக் கூறப் போனால் வேத நம்பிக்கைகள் அனைத்தும் மூடத்தனமானவை. குழப்பமானவை. தத்துவ முதிர்ச்சியின் வெளிப்பாடுகளாக இவற்றைக் கூறுவது இயலாத காரியம்.
***
தன்னல நோக்குடனும், முழு ஆதாயம் பெறும் சூழ்ச்சியுடனும் தான் பார்ப்பனர்கள், யாகத் திரவியங் களைக் கடவுளர்களிடம் எடுத்துச் செல்லும் இடைத் தரகர்களாகத் தங்களை நியமித்துக் கொண்டார்கள். இடைத்தரகர் வேலைக்காக அவர்கள் பெற்ற சன்மானம் அளவிடமுடியாது. யாசகர்களாக இருந்து யாகம் நடத்தி வைப்பதற்காகப் பார்ப்பனப் புரோகிதர் பெற்ற கொள்ளைப் பரிசுகள் பற்றி வேத இலக்கியங்கள் சிலாகிக்கன்றன. பார்ப்பனர்களுக்கு வாரி வழங்குவதைப் புகழ்ந்து தன்சுருதி என்ற பாடல் தொகுப்பில் ஒழுக்க நெறியற்ற ஆன்மீக உணர்வில்லாத பாடல்களே நிறைந்து இருக்கின்றன.
***
அதர்வ யஜூர் வேதங்களில் மாயமந்திரம் செய்வதற் கான சுலோகங்கள் வழிமுறைகள் போன்றவைதான் நிரம்பி வழிகின்றன. இந்த சுலோகங்களைக் கொண்டு பொதுமக்களுக்கு நன்மை கிடைக்குமாறு சடங்குகள் செல்வதற்குப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தெரியும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
***
தாங்கள் உயர்ந்த சாதியினர் என்று வேதங்கள் கூறுவதாக பிரச்சாரம் செய்வதில் திருப்தியடையாத பார்ப்பனர்கள் பிராமணர்கள் என்ற புதிய வகையான நூல்களை எழுதினார்கள். அவற்றின் மூலம் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்றார்கள்.
***
பார்ப்பனர்களின் சொத்துக்கள் மீது மன்னர்கள்கூட உரிமை பாராட்ட முடியாது. மன்னர்கள் தங்கள் நாட்டையே இழக்க நேர்ந்தாலும் பார்ப்பனர்களது சொத்துக்களில் கை வைக்கக் கூடாது. பார்ப்பனர்கள் மீது மன்னர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று பார்ப்பனர்கள் இறுமாப்புடன் கூறினார்கள்.
பார்ப்பனன் ரிஷிகளின் மரபில் வந்தவன். எனவே அவன்தான் கடவுளர்களுக்கெல்லாம் கடவுள், அதாவது அனைத்து கடவுள்களும் அவனுள் அடக்கம். அதாவது அனைத்துக் கடவுளர்களும் அவனுள் அடங்கல் பண்பாட்டு வரலாற்றில் புரோகிதக் கும்பலின் மூர்க்கத் தனம் எவ்வாறு நம்மைத் திகைக்கச் செய்யும் அளவுக்கு மீறி இருக்கிறது என்பதை மட்டும் குறித்துக் காட்டுவதாக இச்சொற்களை விட்டு விட முடியாது. மாறாக மத்திய காலத்துக்கு முந்திய இந்திய வரலாறு முழுவதிலும், நமக்குக் காணக்கிடைக்கும் முக்கிய வரலாற்று நிகழ்ச்சி கள் அனைத்திற்கும் இந்தச் சொற்கள் முன்னோடியாக அமைந்தன என்பதுதான் நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும்.
***
சூத்திரன் என்பவன் யதகலம வாத்தியன். அதாவது நினைத்த மாத்திரத்தில் கொல்லப்பட வேண்டியவன், என்று அதே ஆணவத்தோடு வேறொரு பிராமணத்தில் ஒரு பார்ப்பான் கூறுகிறான்.

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra