சாப்ளின் நடித்த முதல் சினிமா
குத்துச் சண்டை ஒரு வீர விளையாட்டு. பாக்சிங் என்பதையும் wwf-இல் பார்க்கும் wrestling என்பதையும் ஒன்றாக்கிக் குழப்பிக் கொள்ளக் கூடாது. நான் மிகப் பெரியவன் என்று கூறிக்கொண்ட முதல் எண் குத்துச் சண்-டை வீரர் முகமது அலி போட்ட சண்டை பாக்சிங். இந்தச் சண்டை விளையாட்டில் சார்லி சாப்ளினுக்கு மிகுந்த ஆர்வம். அடிக்கடி பழகிக் கொண்டு வந்தார். அந்நாட்களில் சிறந்த குத்துச் சண்டை வீரரான ஜாக் டெம்சி என்பார் இவருக்கு நண்பர். தாம் சார்லி சாப்ளினின் நண்பன் என்று அந்த வீரர் பெருமைப் பட்டுக்கொண்டார்.
சாப்ளின் கற்றுக் குட்டிதான். ஆனாலும் தான் பெற்ற அனுபவங்களைப் படத்தில் புகுத்தினார். அந்தக் காட்சிகளில் வீரம் தெரி-யாது. நகைச்சுவை அதிகமாக இருக்கும். ஒரு குத்துச் சண்டைக் காட்சி. ஃபேட்டி ஆர்பக்கிள் என்ற நடிகரும் எட்கர் கென்னடி என்ற நடிகரும் குத்துச் சண்டை போடுவார்கள். சாப்-ளின் நடுவர். குள்ளமான இவர் வீரர்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு அடி, குத்து வாங்குவார். குத்து தாங்கமாட்டாமல் அடிக்-கடி கோதாவில் கீழே விழுந்தவர் நடுவர்தான்.
படத்தைப் பார்த்த மக்களும் குத்துச் சண்டை வீரர்களுமே இந்தப் படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். தி நாக் அவுட் என்ற இந்தப் படத்தில் வந்த சண்டைக் காட்சிகளைத் தமிழ்ப் படத்தில் கூடப் பார்த்திருக்கலாமே. இப்படத்தின் வெற்றியால் 10 நிமிடப் படங்கள் 20 நிமிடப் படங்களாகத் தயாரிக்கப்படும் நிலை உருவாகி-யது. நாலரை மணி நேரப் படம் கூட வந்து மிரட்டும் இந்நாள்களில் 10 நிமிடம், 20 நிமிடம் எனப் படங்கள் தயாரிக்கப்பட்டது ஆச்சரிய-மா-கவே இருக்கும்.
இரண்டு பேர் உட்கார்ந்து பானம் ஒன்றை ஸ்ட்ரா போட்டுக் குடித்தபடியே ஒரு பந்த-யத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் பக்கத்தில் உட்காரும் சாப்ளின் அந்தப் பெண் வேறு பக்கம் பார்க்கும் போது ஸ்ட்ராபோட்டுக் குடிப்பார். தம்ளரில் பானம் குறைவதைக் கவனித்து அவள் இவரைப் பார்க்க, இவர் பந்தயத்தை சுவாரசியமாகப் பார்ப்-பது போலப் பாவ்லா பண்ணுவார். இந்த மாதிரிக் காட்சிகளை இன்றும் கூடத் தமிழ் படங்களில் பார்க்கலாம். ஜென்டில் மேன் ஆஃப் லெஷர் என்ற படத்தில் இக்காட்சியை சாப்ளின் செய்து காட்டுவார்.
பெரிய பணக்காரர் ஒருவர் தன் திரண்ட சொத்துகளைத் தன் உறவுக்காரப் பெண்ணுக்கு எழுதி வைத்துவிட்டுச் செத்துப் போகிறார். அந்தச் செய்தியைப் பத்திரிகையில் படித்து-விட்ட சாப்ளின் (அந்தப் பெண்ணுடன்தான் ஒரு பூங்காவில் உட்கார்ந்து கொண்டிருக்-கிறார்) அந்தப் பெண்ணைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு கண்ணில் தென்பட்ட கிறித்தவப் பாதிரியாரிடம் போய் நிற்கிறார். தங்கள் இரண்டு பேருக்கும் உடனே திருமணம் செய்து வைக்கச் சொல்கிறார். பாதிரியார் தம்மிடம் பைபிள்கூட இல்லையே, எப்படித் திருமணம் செய்து வைப்பது என்கிறார். உடனே, சாப்ளின் தெருவோர டெலிபோன் பூத்தில் இருந்து டெலிபோன் டைரக்டரியை எடுத்துப் பாதிரி கையில் தந்து கல்யாணம் செய்துவைக்கக் சொல்லி திருமணம் செய்து-கொள்கிறார். மதச் சம்பிரதாயங் களைக் கிண்டல் செய்தாரோ? ஆத்திரம் கொண்டவர் முன்னே சாத்திரம் எதுக்கடி? என்றாரோ?
பணக்காரி விசயத்தைப் புரிந்துகொண்டு இருந்தாலும் என்ன செய்வது என வாழ்க்-கையை நடத்திக் கொண்டிருக்கிறாள். அவள்- ஒருவிருந்து வைக்கிறாள். விருந்தில் வேலைக்-காரியாகத் தன் காதலியை சாப்ளின் சந்திக்-கிறார். கட்டித் தழுவுகிறார். பணக்கார மனைவி பார்த்து விடுகிறாள். கையில் எதுவும் இல்லாத-தால் விருந்துக்குத் தயாரித்த கேக், ரொட்டி, தின்பண்டங்களைக் கோபத்துடன் எடுத்து சாப்ளினை நோக்கி அடிக்கிறாள். வந்த விருந்தினர்கள் மீது அவை படும், ஒரே களேபரம்.
இந்தக் காட்சியைக் கூடத் தமிழ்ப்படங்-களில் பார்க்கலாமே. இந்தப் பைத்ரோயிங் (ஞஐநு கூசடிறபே) என்பதை உலகம் முழுவதும் கூட படங்களில் காப்பி அடிக்கிறார்கள்.
இவரின் தி டிராம்ப் (கூந கூசயஅயீ) என்ற படம் உலகப் புகழ் பெற்றது. இதன் கதை சாப்ளிளின் வாழ்வில் நடந்தது தான். சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்து கொண்டிருந்த போது ஒருவனைப் பார்க்கிறார். ஊர் சுற்றி ஏழை அவர். அவரை ஒரு உணவு விடுதிக்கு அழைத்-துப் போகிறார். என்ன சாப்படுகிறாய்? எனக் கேட்பார். பசிக்கு நான் புல்லைக் கூடத் தின்பேன் என்பார் அவர். ஆனால், குடிக்க? தண்ணீ-ரைத் தான் குடிக்கணும். என்ன பண்றது? இந்தத் தண்ணீர் இரும்பு மேலே பட்டால் துருபிடிக்கிறது. வயித்துக் குள்ளே போனா, என்ன செய்யுமோ? என்றார் நாடோடி.
அவர் எண்ண ஓட்டம் புரிந்துவிட்டது, மதுக்கடைக்கு அழைத்துப் போய் மது குடிக்க வைத்தார். குடித்தவுடன் அவர் பேசினார்: உங்களைப் பார்த்தா பணக்காரராத் தெரியுது. ஆனா, எனக்கு இருக்கிற சந்தோசம் உங்களுக்கு வருமா? நான் டிக்கெட் இல்லாம எதில வேணுமானாலும் ஏறி அமெரிக்கா முழுக்கப் பார்த்துட்டேன். நீங்க பார்த்திருக்கீங்களா? நான் போட்டுக்கிட்டிருக்கிற இந்த ஒரே டிரஸ்தான் எனக்கு. ஆனாலும், நான் சந்தோசமா இருக்கேன்... இதெல்லாம் பணக்காரரான உங்களுக்குப் புரியாது சார், என முடித்தார் நாடோடி.
சாப்ளின் சிந்தித்தார். அவரது மூளையில் பொறி தட்டியது. நாடோடிக்குப் பணம் கொடுத்து அவரை அனுப்பிவிட்டு, சிந்தித்தார். இந்தச் சந்திப்பு அவரை வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவு தான் சினிமாக் கதை. படம் எடுத்தார். புகழ் குவித்தார். இன்றளவிலும் சாப்ளின் என்றால் தி டராம்ப் படம் தான் யாருக்கும் நினைவுக்கு வரும்.
கால்போன போக்கில் தனிமையாக ஒருவன் நடந்து போகும் காட்சி இவரின் பல படங்-களில் இடம் பெறும். இதைப் பலபேர் பல நாடுகளில் பல படங்களில் காப்பி அடித்திருக்-கிறார்கள். (நினைத்துக் கொள்ளுங்கள் கல்-யாண பரிசு) அவையனைத்துக்கும் இவர் தான் ஆதிகர்த்தா. இந்தப் படத்தைப் பார்த்தவர்-களை சாப்ளின் சிரிக்க வைத்தார். அதைவிட அதிகமாகச் சிந்திக்க வைத்தார். அந்த வகையில் தான் அவர் ஹாலிவுட் கலைவாணர்!
சாப்ளினைப் போல உடையணிந்து மீசை வைத்து நடை நடந்து நடிப்பவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களுக் கிடையே போட்டிகளும் நடந்ததுண்டு. இப்படிப்பட்டப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் இருவர் பிற்காலத்தில் புகழ் பெற்றவர்களா-யினர். ஒருவர் கார்ட்டூன் படம் எடுத்து உலகப் புகழ் பெற்ற வால்ட் டிஸ்னி, மற்றவர் 100 வயதில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாப் ஹோப்! (நம்மூரின் கமல்ஹாசன் கூட சாப்ளின் வேடத்தில் நடித்தாரே!)
இப்படி நடைபெற்ற போட்டி ஒன்றில் இவரே கலந்து கொண்டார் என்றாலும், இவருக்கு நான்காம் இடம்தான் கிடைத்தது. அசலை விட நகல்கள் அவ்வளவு கச்சிதம்.
அப்படிப்பட்ட கால கட்டத்தில் மீயூச்சுவல் ஃபிலிம் கார்ப்பரேஷன் எனும் நிறுவனம் இவரைப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது, எவ்வளவுக்குத் தெரியுமா? ஆறு லட்சத்து 70 ஆயிரம் டாலர் ஆண்டு ஒன்றுக்கு! 1910-களில் அந்தத் தொகை! 20 டாலர் வாரம் ஒன்றுக்கு எனச் சம்பளம் வாங்கியவர். ஆண்டு ஒன்றுக்கு 1040 டாலர் வாங்கியவர், ஒரே ஜம்ப் அடேயப்பா!
ஆனாலும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறிய ஓட்டலில் சிங்கிள் ரூமில் தான் தங்கியிருந்தார். இவர் வாங்கிய லட்சக்கணக்-கான சம்பளப் பணம் இவரை மாற்றவில்லை. அப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ஒரு டாலர் தான். அந்தச் சமயத்தில் 50 ஏக்கர் நிலம் புற நகர்ப்பகுதியில் விலைக்கு வந்தது. தன் நண்பன் ஒருவன் இவரிடம் வந்து இருவரும் கூட்டாக அந்த இடத்-தை வாங்கலாம் என்று அழைத்துப் போய் காட்டினார். கட்டாந்தரையாக இருந்த நிலத்தைப் பார்த்த சாப்ளின் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். நண்பர் தான் மட்டுமே வாங்கிக் கொண்டார். பின்னாளில் அந்த இடத்தில் பெட்ரோல் இருப்பது கண்டு பிடிக்கப்-பட்டதால் நண்பர் கோடீசுவரனாக உயர்ந்து விட்டார். இது சாப்ளினைச் சற்று பாதித்தது.
|