திடிர் வயிற்றுப் போக்கு

நம்முடைய சிறுகுடல் பகுதியில் எளிதில் ஏற்படும் நோய் குடல் அழற்சி (நுவேசவைளை) நோயாகும். வயிற்றில் சேரும் உணவு அடுத்துச் செல்லுமிடம் குடல் பகுதியே ஆகும். நாம் உண்ணும் உணவு சரியாக இல்லாமல் இருந்தால் வயிற்றிலும் அழற்சி-யை உண்டாக்கும். அதனால் இந்நோயை வயிற்று, குடல் அழற்சி (ழுயளவசடி-நுவேசவைளை) என்கிறோம். இந்நோய் இரண்டு காரணங்-களால் ஏற்படலாம். நோய் தொற்று (ஐளேகநஉவடி) ஒரு காரணம். உணவு உடலுக்கு ஒவ்வாமை (ஐனடி-ளலஉசயளல) மற்றொரு காரணம். நோய் தொற்றல் ஏற்படும் வயிற்றுப் போக்கு திடீரென வராது. டைபாயிஃட் (கூலயீடினை) காலரா (ஊடிடநசய) சீதபேதி (னுலளநவேநசல) ஆகிய நோய்கள் நாம் உண்ணும் உணவில் நோய்க் கிருமிகள் இருப்பின் நமக்கு நோய் தொற்று ஏற்படும். பெரும்பாலும் தண்ணீர், அய்ஸ்கிரீம், அசுத்தமான சுற்றுப்புறங்களில் விற்கப்படும் உணவுகள், ஈ மொய்க்கும் பண்டங்கள் ஆகியவை எளிதில் நோய் தொற்றை ஏற்படுத்தும். சரியாக கழுவப்படாத பாத்திரங்-களில் உள்ள உணவு வகைகள், சுத்தமான நீரால் கழுவப்படாத பாத்திரங்-கள், உணவு சமைப்போர், உணவு பரிமாறு-வோர் சுத்தமின்மை ஆகியவையும் நோய் தொற்றை ஏற்படுத்தக் கூடிய முக்கிய காரணங்-கள் என்றால் மிகையாகாது. மாறி வரும் சுற்றுச் சூழலில், மாசு அதிகமாகும் பொழுது குடிநீர் மாசுபடுதல் தவிர்க்க இயலாமலும் நோய் தொற்றை ஏற்படுத்தும் காரணமாக அமைந்துவிடுகிறது. ஆனால் நோய் தொற்றால் ஏற்படும் வயிற்றுப் போக்கு உடனடியாகவோ, திடீரென்றோ ஏற்படாது. நோய்க்கிருமிகள் நம் உடலில் ஊடுருவி, அவை பல்கிப் பெருகியபின்பே நமக்கு நோயின் அறிகுறிகள் தெரியத் துவங்-கும். ஆனால் திடீர் வயிற்றுப்போக்கோ எந்த நோய் தொற்றும் இல்லாமல் திடீரெனத் துவங்கும். இதென்னடா, திடீர் சாம்பார், திடீர் இட்லி, திடீர் பொடி என்றெல்லாம் கேட்டிருக்கிறோம். திடீர் வயிற்றுப் போக்கு என்கிறாரே, என நினைக்கிறீர்களா? நன்றா-கவே இருப்போம். திடீரென்று வயிறு புரட்டத்துவங்கி, கழிவறைக்கு ஓடும் நிலை நம் எல்லோருக்குமே ஏற்பட்டுள்ள அனு-பவம். இதையே தான் திடீர் வயிற்றுப் போக்கு என்கிறோம் (ஹஉரவந ழுயளவசடி நுவேசவைளை) எந்த முன் அறிவிப்பும் இன்றி ஏற்படும் நோய் இது.
நோய்க்காரணம் : (ஹநவடிடடிபல) திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட முதல் காரணம், கெட்டுப்போன உணவு வகைகளை சாப்பிடு-வதேயாகும். நம் வீடுகளில் சமைக்கப்படும் உணவு மிகவும் பழயதாகி விட்டால், கெடத்துவங்கும். அவற்றை உடனடியாக குப்பையில் கொட்டுதல் மிகவும் முக்கியம். அந்த உணவு, வீணாகிறதே என எண்ணி, உட்கொள்வதால் தான் பலவிதமான உடல், குடல் தொல்லைகளும் ஏற்படும். அதே-போல் பூசணம் (குரபேரள) பூத்த உணவுகள் (ஊறுகாய், ரொட்டி) வயிற்றுப் போக்கை உண்டாக்கும். சில உணவுகள் ஒவ்வாமை (ஐனடிளலஉசயளல) ஏற்படுத்தும் (காளான்கள்) தன்மை உடையவை. அவ்வகை உணவுகள் திடீர் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். சில வகைக் காளான்கள்; சில வகை மீன் வகைகள், கருவாடு போன்றவையும் சில-வகைக் காய்கறிகள் கூட ஒவ்வாமை ஏற்படுத்தும் தன்மையுடையவை. இவைகள் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். சிலவேதி-யல் பொருள்களும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். எனாமல், அலுமினியம், ஈயப் பாத்திரங்களில் பாதுகாக்கப்படும் புளிப்புச்-சுவையுடைய உணவு வகைகள், அந்த உலோகங்களுடன் வேதியல் விளைவுகளை (ஊநஅஉயட சுநயஉவடி) உண்டாக்கி உணவை நச்சுத்தன்மையடைய வைக்கும். நச்சுத் தன்மையுடைய அவ்வகை உணவுகள் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடும். சில வகை வைரஸ்களும் உணவு நச்சுத்தன்-மையை உண்டாக்கி, திடீர் வயிற்றுப்-போக்கை ஏற்படுத்தும்.
நோய்த் தொற்று : தொற்று நோய்-களால் ஏற்படும் உணவு நச்சுத்தன்மை ஒரு வகைப்படும். நுண்கிருமிகளின் நச்சுக்களால் (கூடிஒ கூலயீந) ஏற்படும் வகையென்றும், நுண்கிருமிகளே காரணிமாகும் (ஐகேநஉவஎந கூலயீந) வகை எனவும் இருவகைப்படும். நுண்-கிருமிகள் நச்சுகள், சாதாரணமாக உணவு கொடுப்பவரின் மூலமே அதிக அளவு பரவும். அவர்களின் கைகள் அசுத்தமாக இருப்பதும், அதில் ஏதும் புண்கள் போன்ற பாதிப்புகள் (எ.கா.சேற்றுப்புண்கள்) இருப்-பதும், அப்புண்களில் உள்ள நுண்கிருமி-களில் உள்ள நச்சுப்பொருள்கள், உணவு பரிமாறுபவர், பரிமாறும் உணவில் கலந்து மற்றவர்களுக்கும் பரவும்.
உணவு வகைகளில் மொய்க்கின்ற ஈக்களின் மூலம் நோய் கிருமிகள் நேரடியாக உணவில் கலக்கும். அதே போல் கரப்பான், எலி போன்றவை வெளிப்படுத்தும் கழிவுகளும், உணவை பாழ்படுத்தும். உணவகங்களில் சரியான சுகாதாரமான முறையில் சமைக்கப்பெறாத உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் ஆகியவை உணவில் நேரடியாக நோய்க்கிருமிகள் தாக்கி உணவை நச்சுத்தன்மை உடைய-தாக்கும். உணவுகங்களில் நடக்கும் விருந்து-களில் பங்கேற்பவர்கள், திடீர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படுவதற்கு இதுவே காரணம்.
நோய்க் கூற்றியல் : வயிற்றிற்கு சென்ற-டையும் கெட்ட, நச்சுத்தன்மை உடைய உணவுகள் முதலில் வயிறு, குடல் பகுதியில் உள்ள சவ்வுப் படலத்தை பாதிக்கும். அந்த இடங்களில் சுழற்சியை உண்டாக்கும். சில நேரங்களில் இந்த இடங்களில் புண்களும் ஏற்படும். சில நேரங்களில் இந்த சிறு குடலில் ஏற்படும் இவ்வழற்சி பெருங்-குடலுக்கும் பரவும். வயிற்றழற்சி, குடல் அழற்சி ஏற்படும் பொழுது உணவை சீராக குடலுக்கு செலுத்தும் இயல்பு பாதிக்கப்-படும். உணவு சாதாரணமாக நம் உணவில் உள்ள நீர் மற்றும் குடிநீர் ஆகியவற்றோடு சேர்ந்து சிறுகுடல் சுவர்களால் உறிஞ்சப்-படும். குடல் அழற்சி ஏற்படும்பொழுது குடலின் இயக்கம் வேகமாகும். அதனால் உணவும், நீரும் உறிஞ்சுதல் தடைப்படும். குடலின் வேகமான இயக்கத்தால் வயிற்றில் உணவும், நீரும் தங்காமல் வயிற்றுப் போக்-காக வெளிப்படும். சிறுகுடலின் வேகமான இயக்கத்தால் குடலில் உள்ள காற்றும் வெளிப்படுவதால் வயிற்றில் இரைச்சல் ஏற்படும். நச்சு உணவால் தனிப்பட்ட நபர் மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவருமே பாதிக்கப்படுவர். அதுவே விருந்தாக இருந்-தால், அந்த விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நச்சுத்தன்மையுடைய உணவு வயிற்றில் சேர்ந்த அரை மணி நேரப் பொழுதில் குமட்டல், வாந்தியை உண்-டாக்கும். உணவு உண்டபின் சுமார் 6 மணி நேரம் கழித்து வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படின், அநேகமாக அது நுண்ணுயிர் நச்சாக (க்ஷயஉவநசயைட கூடிஒளே) இருக்கும். உணவிற்கு பின் 12 மணி முதல் 48 மணி வரை ஏற்படும் வயிற்றுப் போக்கோ, வாந்தியோ, நோய் கிருமிகள் ஏற்படுத்தும் நோய் தொற்றால் தான் என்று அறியலாம். இதுவே இந்நோய் எதனால் உண்டாகிறது என எளிதில் அறிய முடியும். மருத்துவம் செய்வதும் எளிது.
அறிகுறிகள் : உணவில் கலந்துள்ள நச்சுத் தன்மைக்கேற்ப அறிகுறிகள் வேறுபடும். நச்சுத்தன்மை குறைவாக இருப்பின் லேசான குமட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்றவை ஏற்படும். அதுவே அதிக அளவில் இருந்-தால் வாந்தி, வயிற்றுப் போக்கு அதிக-மாகும். நோய்த் தொற்றாலும், நோய் கிருமிகளின் தன்மை, வீரியம், எண்ணிக்கை ஆகியவற்றைப் பொருத்து நோயின் வேகம் மாறுபடும். நோயின் தாக்கம் அதிகமாகும் பொழுது, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, தலை சுற்றல் போன்றவை ஏற்படும். மருத்துவம் செய்யாமல் விட்டு விட்டால், உடலில் உள்ள நீரின் அளவு வேகமாக குறைந்து உடல் நீர்க் குறைவு (னுநாலனசயவடி) ஏற்படும். இதனால் உடல் தளர்ச்சி, ஓய்ச்சல், தொய்வு, நெஞ்சு படபடப்பு போன்றவை ஏற்படும். இந்நிலையிலும் மருத்துவம் செய்யாவிடில், முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு (க்ஷடடிடின ஏடிடரஅந) குறைபாடு ஏற்படும். அதனால் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், இதயம் போன்-றவை செயல் இழக்கும். நோயாளிக்கு இதன் விளைவாக மரணமே நிகழும் நிலை ஏற்படும். மருத்துவம் செய்யாத நிலையில் உயிருக்கே ஆபத்து உண்டாக்கும் இந்-நோயை தகுந்த மருத்துவம் செய்வதால் எளிதில் கட்டுப்படுத்தி, நோயாளியை நல்ல நிலையை அடைய வைக்கலாம். சரியான நேர மருத்துவம், பலரின் உயிரைக் காப்-பாற்றி யுள்ளது.
நோயறிதல் : நோயாளியின் நோய் அறிகுறிகள், நோயாளி உண்ட உணவு மூலம் நோயைப் பற்றி எளிதில் அறிய முடியும். நோயாளி வெளிப்படுத்தும் வாந்தி, வயிற்றுப் போக்கின் பொழுது வெளிப்படும் மலம் ஆகியவற்றை ஆய்வுக்கூடத்தில் சோதிப்-பதன் மூலம் அதில் உள்ள நோய்கிருமிகள் அதற்கான மருந்துகள் ஆகியவற்றை அறிந்து, அதை நோயாளிக்குக் கொடுக்கலாம். நோயின் தாக்கம் ஒரே நேரம் பலரை பாதித்து இருப்பின் அனைவரின் மலம், இரத்தம் ஆகியவை பரிசோதித்து நோயறி-யலாம்.
மருத்துவம் : லேசான பாதிப்பு ஏற்பட்டிருப்-பின் நோயின் அறிகுறிகளும் லேசாக இருக்கும். அந்த வகை நோயாளி-களுக்கு நல்ல ஓய்வு, ஏராளமான திரவ உணவு கொடுக்க வேண்டும். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் குளுகோஸ், சிட்டிகை உப்பு கலந்து நோயாளிக்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். நோயின் தாக்கம் அதிகமிருப்பின் உடனே மருத்து-வமனையில் சேர்க்க வேண்டும். சிரைமூலம் (ஐ.ஏ.) நிரம்ப திரவ உணவுகள் செலுத்தப்-படுதல் வேண்டும். அதே சமயம் நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கத் தகுந்த மருத்துவம் செய்ய வேண்டும். ஒவ்வாமை காரணமாக ஏற்படும் வயிற்றுப் போக்கு திடீரென வருமே ஒழிய, திடீரென்று நிற்காது. அந்த உணவில் உள்ள நச்சுத்-தன்மை குடலிலிருந்து முழுமையாக வெளி-யேறும் வரை வயிற்றுப் போக்கு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த சமயத்-தில் உடலின் நீர்க் குறைபாடு (னுநாலனசயவடி) ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுதல் முக்கியம். உலோக நச்சுப் பொருள்களால் ஏற்படும் வயிற்றுப் போக்கிற்கு, எந்த வகை உலோக நச்சு என ஆய்வின் மூலம் அறிந்து, மாற்று முறிவு மருந்துகளை (ஹவேவைடினந) கொடுப்பதன் மூலம் நோயாளியை நலம-டைய செய்யலாம். பொதுவாக சரியான மருத்துவ ஆலோசனை, சரியான நேரத்தில் செய்யப்படும் மருத்துவம், சரியான மருத்து-வம் இந்நோயை எளிதில் வெற்றிகொள்ள முடியும்.
வருமுன் காத்தல் : சுத்தமான இடம், சுத்தமான உணவு தயாரித்தல், சுத்தமான பரிமாறுவோர் இருந்தாலே இந்நோயின் தாக்கம் பெருமளவு குறைந்துவிடும். குடிநீரின் மூலம் இந்நோய் அதிக அளவு பரவுவ-தால், அதுவும் மழை, புதுவெள்ளம் ஆகிய காலங்களில் தண்ணீர் மாசுபடுதல் அதிக அளவு இருப்பதால் நோய்த்தொற்று ஏராளமான வாய்ப்புகள் உண்டாகும். நீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிப்பதால் நோய்த் தொற்றால் ஏற்படும் வயிற்றுப் போக்கை எளிதில் குணப்படுத்தலாம். நோய்த்தாக்கம் ஓரிருவருக்கு ஏற்பட்டவு-டன், மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவிப்-பதன் மூலம் தடுப்பூசிகள், மருந்துகள் மூலம் மற்றவருக்கு பரவாமல் தடுக்கலாம். பொதுவாக எளிய முறைகளால், நல்ல வண்ணம் தடுக்கக்கூடிய நிலையில் உள்ள இந்-நோய் சரியான கவனிப்பும், மருத்து-வமும் இல்லையெனில் உயிராபத்தையே உண்டாக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்-கை-யாக இருக்க வேண்டும். சுத்தம் சுகம் தரும் என்ற சொலவடை இந்நோய்க்குத்-தான் முற்றும் பொருந்தும்.
-மருத்துவம் தொடரும்.

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra