ஆசிரியர் பதில்கள்
கேள்வி : திரைப்படத் துறையில் இருப்பவர்கள் கருப்பு பணம் பற்றி பேசுவது சரியா?
-மு.தமிழ்ப்பாண்டியன், சென்னை 49.
பதில்: ஏன் இராமலிங்க விலாஸ் மில்டேரி ஓட்டல் போர்டு பார்த்த-தில்லையா? அதுபோல ரசியுங்கள்.
கேள்வி : அகிம்சையைப் பொறுத்-தவரையில் பிராமணீயம் கொல்லு-தலை தன்னிடத்தில் கொண்-டது, ஆனால் சமண மதம் கொல்லா-மையை அடிப்படையாகக் கொண்-டது. புத்த மதம் இந்த இரண்டுக்கும் இடையில் நடுநிலைப் பாதையைக் கொண்டுள்ளது என அண்ணல் அம்பேத்கர் கூறி-யுள்ளாரே?
உயிர்க் கொலை குறித்து புத்தரின் கொள்கை என்ன?
-ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி.
பதில்: நீங்கள் கூறிவிட்டீர்களே! அதுசரி புத்தர்கள் மாமிச உணவை பிறர்கொன்றவைகளை உண்ணுகிறார்கள் அந்தக் கொள்-கைப்படி.
முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காகவோ, சொன்னார்கள் என்பதற்காக நடந்தார்கள் என்பதற்-காகவோ, நீங்கள் எதையும் ஏற்க-வேண்டாம் என்பதே புத்தரின் பகுத்தறிவு அறிவுரை.
கேள்வி : கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த முதல் குடிமக்கள்-தமிழர்கள். அப்படி-யானால், மூத்த முதல் குடிமக்களி-லிருந்து பிரிந்து சென்ற ஒரு கூட்டம், மத்திய ஆசியப் பகுதியிலிருந்து பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து கழித்த பிறகு, திரும்பவும் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் வந்திருக்கிறார்கள் என்பது சரிதானே?
வீ.மு.சின்னத்தம்பி,தொப்பக்கரடு, நத்தக் காடையூர்.
பதில்: உங்கள் கேள்வியின் அடிப்படையே பகுத்தறிவு விரோதம். அலங்கார பேச்சு. கல்லும் மண்ணும் தோன்றும் முன்பு மனிதன் ஒரு போதும் தோன்றியிருக்க முடியாது என்பதே அறிவியல் உண்மை. கேள்வி : புராணங்களை விஞ்சும் மாயாஜால ஹாரிப்-பாட்டருக்கு பெரிய வரவேற்பு உள்ளதே?
-ஆர்.சுமதி, சென்னை-78.
பதில்: என்ன செய்வது, இளையர்களுக்கு இப்படி பேய்க் கதைகளில் ஒருவகை ஈர்ப்பு. ஆனால் அவர் நம் நாட்டைப் போல கடவுளாக மாறாமல் இருந்தால்போதும்! கேள்வி : பெரியார் வாக்குகளைப் பொறுக்கவோ, ஆட்சிக்கு வரவோ விரும்பவில்லை எனினும் ஆட்சிக்கு வருபவர்களால் தானே அவரின் லட்சியம் சாத்தியமாகிறது...?
-கே.கே.பாலசுப்பரமணியன், குனியமுத்தூர்.
பதில்: வரும் எந்த ஆட்சியிலும் வேலைவாங்க முடியும் - மக்கள் சக்தியைக் கொண்ட தலைமையால். அதற்காக அவர்கள் அரசியலில் குதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை!
கேள்வி : அமெரிக்காவுடனான இந்தியாவின் அணு தொடர்பான ஒப்பந்தம் நன்மையா? தீமையா?
-கு.சதீஷ், செங்குன்றம்.
பதில்: சில நன்மைகள் கலந்த பெருந்தீமை! கேள்வி : குலக்கல்வித் திட்டத்தை பெரியார் எதிர்த்ததும், அதே சமயம் ராஜாஜி ஆதரித்ததும் ஏன் என்று விளக்கமாக சொல்லுங்கள்.
இன்றைய இளைய சமுதாயத்துக்கு இதைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.
-இரா.இராஜேந்திரன், மயிலாடுதுறை
பதில்: ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள் அவனவன் அப்பன் தொழிலை மகன் அரை நேரம் செய்யப் பழகிட வேண்டும் . அரை நேரம் வகுப்பு; மீதி அரைநேரம் குலத்தொழில்; இது நீடித்திருந்தால், இன்று அனைத்து ஜாதியினர் குறிப்பாக, பார்ப்பனர் தவிர மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவ பிஞ்சுகள் எஞ்சினியர்-களாகவோ, டாக்டர்களாகவோ இப்போது வருவது போல் வரமுடியாது போயிருக்கும்! கேள்வி : வர்க்க பேதம், வர்ணாஸ்ரம பேதம் - என்ன வேறுபாடு?
-நெய்வேலி.க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில்: வர்ணபேதம் - பிறவி அடிப்படை மாற்ற முடியாது! வர்க்க பேதம் - பணத்தை அடிப்படையாகக் கொண்டு மாறிடும் நிலை உண்டு. நேற்றைய பார்ப்பான் - பறையன் - சூத்திரன் இன்றும் அதே ஜாதி, நாளையயும் அதே ஜாதி - இது வர்ண பேதம்! நேற்றைய பணக்காரன் இன்றைய ஏழை.இன்றைய ஏழை நாளை முதலாளி ஆகலாம் ----.- இது வர்க்க பேதம்!
வர்க்க பேதம் - உலக முழுவதும் உண்டு. வர்ணபேதம் - இங்கு மட்டுமே உண்டு. |