பதிவுகள்

ஆகஸ்டு 16 : பெரு நாட்டில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு 500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ரிக்டர் அளவில் 7.9 புள்ளிகள் பதிவானது. சாலமன் தீவில் 6.7 ரிக்டர் புள்ளிகள் பதிவானது.
ஆகஸ்டு 17 : இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
- மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக் நிறுவனம் (ழஹடு) சக்தி எஞ்சின் பொருத்தப்பட்ட நவீன ரக துருவ் போர் ஹெலிகாப்டரை சோதித்து வெற்றி அடைந்தது.
ஆகஸ்டு 18 : மத்திய அரசு வழங்கி விருதுகளான தொல்காப்பியர் விருது மற்றும் குறள் பீட விருது ஆகியவற்றுக்கு தொகைகள் உயர்த்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் அறிவித்தார்.
ஆகஸ்டு 19 : இனவெறி காரணமாக இந்தியர்கள் ஜெர்மனியில் தாக்கப்பட்டனர்.
ஆகஸ்டு 21 : மெக்ஸிகோவை டின் என்று அழைக்கப்படும் சூறாவளி காற்று தாக்கியது. வேகம் 280 கி.மீ.
- சென்னையிலிருந்து சீனாவுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. (டைகர் பேர்ல்) புலி முத்து என்று பெயர்கொண்ட முதல் கப்பல் துறைமுகத்தை வந்தடைந்தது.
ஆகஸ்டு 22 : ஜப்பான் பிரதமர் ஷின்டே அபே இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினர்.
ஆகஸ்டு 23 : எல்லா பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக இருக்கும் என்று அறிவிக்கும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
ஆகஸ்டு 24 : நேபாள இந்து மன்னரின் அரண்மனை நாட்டுடமையாக்கப்பட்டது. அவரது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன.
ஆகஸ்டு 25 : அய்தராபாத் லும்பினி பூங்காவில் குண்டு வெடிப்பு 60க்கும் மேற்பட்டோர் பலி.

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra