குரல்

நல்லாச் சொன்னாங்க நாலு வார்த்தை

நான் சமீபத்தில் அமெரிக்கா போயிருந்தேன். ஏய் ஆசியன்ஸ்.... வாங்க இந்தப் பக்கம் என்று எங்களை மட்டும் இரண்டு முறை சோதனை செய்தார்கள். கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக்கும் சோதனை.

-நடிகர் சிவக்குமார்

எவருக்குமே நாம் அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை. எமது படைக்கட்டுமானங்களை நாம் கட்டியெழுப்பியது எமது மக்களின் தற்பாதுகாப்புக்காகவே. எமது மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான கவுரவமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கானதே.

சுப.தமிழ்ச்செல்வன், (விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர்)

சில ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதில் கவனம் செலுத்துகின்றன. இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தால், அது மக்களின் சிந்தனைகளை சீரழித்து, சமூகத் தரத்தை தாழ்த்திவிடும்.

சுர்ஜித்சிங் பர்னாலா (தமிழக ஆளுநர்)


விவசாயிகள் தற்கொலை - மறைக்கும் மோடி

விவசாயிகள் தற்கொலை - மறைக்கும் மோடி
எங்கள் விவசாயிகள் அதிர்ஷ்டசாலிகள் அவர்கள் வசதிகளுடன் வாழ்க்கிறார்கள். சொந்தமாகக் கார் வைத்திருக்கிறார்கள் எனகிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. வழக்கம் போல இதுவும் இந்துத்துவா புளுகு தான் என்பதை பத்திரிகைகள் தோலுரித்து தொங்கவிட்டுவிட்டன. உண்மை அறியச் சென்ற இழலாளர் ஒருவரிடம், விவசாயம் பொய்த்து விட்டது. கடன் தொல்லையால் செல்வதை தவிர வேறு வழியில்லை என்று ஒரு விவசாயி கூறியுள்ளார்.
அண்மைக் காலத்தில் மட்டும் குஜராத்தில் 300க்கும் அதிகமான விவசாயிகள்ள தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது பதிவானது மட்டும் தான். இன்னும் வெளியே தெரியாதது எவ்வளவோ. இந்துத்துவாக்களுக்கு மத ஆதிக்கம் தவிர மக்கள் மீது ஏது கவலை? என்பதே இதிலிருந்து பெறும் செய்தி.


கேள்விப்பட்டதும் - கேள்வியும்

அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யாராய் இவருரின் திருமணத்திற்குப்பின் அவ்விருவரின் புகழ் மேலும் அதிகரிக்கும் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
திருமணத்திற்கு முன்னரே அவ்விருவரும் புகழ் பெற்றவர்கள். காமராஜர், வாஜ்பாய், அப்துல் கலாம், மாயாவதி, ஜெயலலிதா போன்றோர் திருமணமாகாமலேயே புகழ் பெற்றவர்கள். இந்திரா காந்தி, சந்திரிகா போன்றோர், அவர் தம் கணவரை இழந்த பின்னரே புகழ் பெற்று நாட்டின் பிரதம மந்திரிகளானவர்கள். எனவே, ஒருவரின் திருமணத்திகுப்பின் அவருக்கு புகழ் அதிகரிக்கும் என்ற கூற்று அர்த்தமற்றது.
எனினும், மேலும் புகழ் அதிகரிக்கும் என்ற ஜோதிடர்களின் கூற்று தான் அவர்களின் புத்திசாலித்தனம்.
-கே.கே.பாலசுப்பிரமணியன். கோவை.

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra