பெட்டிச் செய்திகள்
உயிரிழக்கும் இந்தியத் தாய்கள்
உலக அளவில் தாய்மையடையும் பெண்கள் இறப்புப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பெண்கள் தாய்மையின் போது உயிரிழக்கிறார்கள்.
தாய்மார்கள் குறியீட்டுத் தரப்பட்டியலில் இந்தியா 61ஆவது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான், உ.பி., ம.பி., பிகார் மாநிலங்களில் இறப்பு விகிதம் அதிகம்.
இளம் பெண்கள் தாய்மை அடைவதும் இந்தியாவில் தான் அதிகம்.
உலக அளவிலான ஒரு கோடி குழந்தை இறப்புகளில் 19 லட்சம் குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
-உலகத் தாய்கள் நிலவரம் குறித்த அறிக்கை 2007-லிருந்து...
அகிலம் விரும்பும் அய்யா
சென்னைக்கு வரும் வெளிநாட்டினர் வழக்கமாக பார்க்கும் இடங்களில் அண்மையில் பெரியார் நினைவிடமும் இடம் பெற்றிருக்கிறது. தமிழக வரலாற்றினை மாற்றியமைத்த அந்த போராட்ட வரலாற்றினை இணையதளங்கள், புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ளும் அவர்கள் சென்னை வந்ததும் அவர் வாழ்ந்த இடத்தை பார்க்கவும், அவரது இயக்கம் இயங்குவதை நேரில் பார்க்கவும் விரும்புவது இயல்புதானே. அண் மையில் வந்தவர் களில் பின்லாந்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடத் தக்கவர். மாபியா கும்பலில் வாழ்கையைத் தொடங்கி, பின்னர் மனம் மாறி சமுதாயப் பணி களில் ஈடுபட்டு வருகிறார் அவர். பெரியாரைப் பற்றித் தெரிந்து கொண்டதும் மிகவும் வியந்தார் அவர்.
அடுத்து வந்த மற்றொரு குழு அமெரிக்கா, அய்ரோப்பா, ஆசியா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கியதாக இருந்தது. அவர்களை அழைத்து வந்தவருக்கு பெரியாரைப் பற்றியும், அம்பேத்காரைப் பற்றியும் நன்கு தெரிந்திருந்தது. பெரியாரின் போராட்ட வரலாற்றை தன் தோழர்களுக்கு எடுத்துச் சொன்ன அவர், அவை சரிதானா என்பதையும் நம்மிடம் உறுதிப் படுதிக் கொண்டார். பெரியாரின் வீடியோ காட்சிகள், நினைவிடம், நினைவு அருங்காட்சியம் ஆகியவற் றைப் பார்த்த அவர்கள் பெரியார், திராவிடர் இயக்கம், பெரியாருக்குப்பின்னான இயக்கத் தலைமை குறித்த தங்கள் அய்யப்பாடுகளை நீக்கிக் கொண்டனர். விடுதலை நாளிதழ் பலவகை யைப் பார்த்தவர் அது பெரியார் தொடங்கிய நாளேடு என்பதையும், உலகின் ஒரே நாத்திக நாளேடு அதுதான் என்பதையும் டுநெசவல என்று ஆங்கிலத் தில் பொருள் என்பதையும் கேட்டு வியந்தார்.
விடைபெறும் போது அவரது பெயரைக் கேட்டோம் டிம் விடுதலை என்றார். இப்போது நாம் அடைந்த வியப்பைப் பார்த்து அவரது பெயரான டிம் ஸ்வோபோடா (கூஅ ளுஎடிடினய) என்பதில் ஸ்வோ போடாவுக்கு விடுதலை என்று பொருளாம்.
அகிலம் ஆள்வார் அய்யா என்பது அறிந்தோர் வாக்கு!
-திடலோன்
மதத்தைப் பற்றி மார்க்ஸ்
மனிதன் தான் மதத்தை உண்டு பண்ணு கிறான் மதம் மனிதனை உண்டு பண்ணவில்லை... மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு பிராணியின் புலம்பல்; மனமில்லாத ஓர் உலகத்தின் உணர்ச்சி; உயிரில்லாத நிலைமைகளின் உயிர் அது ஜனங் களுக்கு அபினி... ஜனங்களுக்குச் சந்தோசத்தை அளிப்பதாகப் பிரமை காட்டுகிற மதத்தை ஒழிக்க வேண்டுமென்று கோருவது, ஜனங்களுடைய உண்மையான சந்தோசத்தைக் கோருவதாகும்.
பொதுவாக மார்க்ஸீயம் மதத்திற்கு விரோதமான மனப்பான்மையையே காட்டி வந்திருக்கிறது. மார்க்ஸீசியர்கள் மதத்தை ஒரு பெரிய ஏமாற்றமாகக் கருதுகிறவர்கள் இந்த விரோத மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், சுரண்டுபவர்கள் தங்களுடைய சுரண்டுந் தொழிலுக்கு அனுகூல மாகவே மதத்தை உபயோகித்து வந்திருக்கின்றனர். மதத்தின் துணைகொண்டு உழைப்பாளிகளான சுரண்டபடு பவர்களை அடக்கியாண்டு வந்திருக் கின்றனர், என்பதேயாம். வறுமைக்கு ஒரு மகத்து வம் கொடுத்துப் பேசுவதும் ஏழைகளுக்கு மோட்ச சாம்ராஜ்யத்தில் நிரந்தரமான இடம் உண்டென்று சொல்வதும், சொத்துடையவர்களின் சூழ்ச்சிகள். உழைப்பாளிகள் தங்களுடைய அடிமை வாழ்க் கையில ஒருவித திருப்தியடைய வேண்டு மென்பதற்காகவும், தங்களுடைய அடிமை நிலை உணராதிருக்க வேண்டுமேன்பதற்காகவும் மதம் ஒரு கருவியாக உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. பொரும்பாலும் என்ன போதிக்கின்றன? அடிமைத்த னத்தின் வெளித்தோற்றங்களாகிய அடக்கம், நிதானம், பொறுமை, திருப்தி முதலிய குணங் களுக்கு ஒருவித புனிதத் தன்மையைக் கொடுத்திருக் கின்றன. பொருளில்லார்க்கு அவ்வுலகத்தைக் காட்டி இவ்வுலகத்தை அவர்களுடைய பிடியிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கின்றன. மனிதன் பிரநலத்தை நாட வேண்டுமென்று போதிக்கின்றன. அப்படி யென் றால் என்ன அர்த்தம்.
பொருளுடையவர்களின் நலத்தை நாட வேண்டுமென்பதுதான். ஏழைகள், தங்கள் சொந்த நலத்தை நாடாமலிருந்தால் தான் பணக்காரர் களுக்கு அனுகூலம். எனவே, மார்க்ஸீசத்தின்படி மதம் என்பது பணக்காரர்கள், தங்களுடைய நன்மைக்காக தங்களுடைய நிலைமை ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காக உபயோகிக்கும் ஒரு கருவி, அதுவே ஏழைமக்களுக்குக் கடிவாளம், மதம் என்கிற இந்தக் கடிவாளத்தை ஏழைமக்களுக்குப் பூட்டிவிட் டால், அவர்கள் பணக்காரர்களுக்குச் சாதகமான பாதையில் ஒழுங்காகச் சென்று கொண்டிருக் கிறார்கள்.
-சு.கொண்டல் சாமி, ஒட்டநத்தம்.கப
இக்சிலேசர் நவீன சிகிச்சை முலம் 55வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை
கருத்தரிக்கும் நிலையை கடந்து விட்ட 55 வயது பெண்ணுக்கு ஒரு உயிரணுவை எடுத்து கரு முட்டைக்குள் செலுத்தி கருவாக்கம் செய்து இரட்டை குழந்தை பிறக்க வைத்து சாதனை செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பக்ராவதியைச் சேர்ந்தவர் அழுகப்பன் (வயது 57) இவரது மனைவி பிருந்தா (வயது 55) இந்த தம்பதியினருக்கு 28 ஆண்டுகளாக குழந்தை இல்லை. பிருந்தாவுக்கு 45ஆவது வயதில் மாதவிலக்கு நின்றுவிட்டது.
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் டாக்டர் செயராணியை சந்தித்து குழந்தைபேறு குறித்து ஆலோசனை கேட்டனர். பிருந்தாவுக்கு 55 வயதாகிவிட்டாலும், அவரது கருப்பை நல்ல நிலையில் இருந்ததால் அவருக்கு டாக்டர்.காமராஜ்-ஜெயராணி இறங்கினர்.
பிருந்தாவின் கணவரின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இக்சி என்ற புதிய மருத்துவ முறையில் ஒரு உயிரணுவை தனியாக எடுத்து கருமுட்டைக்குள் செலுத்தி கருவாக்கம் செய்தனர்.
பின்னர் லேசர் முறையில் கருமுட்டையின் மேற்புறச் சுவரை மெலியச் செய்து, பிருந்தாவின் கருப்பைக்குள் வைத்து வளரச் செய்தனர்.
கடந்த 9 மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்த பிருந்தாவுக்கு 27.08.2007 அன்று அறுவை சிகிச்சை மூலம் இரண்டு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தியாவில் முதல்முறையாக எங்கள் மருத்துவமனையில் தான் 55 வயது பெண்ணுக்கு இக்சி-லேசத் நவீன சிகிச்சை மூலம் இரட்டை குழந்தை உருவாக்கப்பட்டுள்ளது என மருத்துவர் கள் காமராஜ்-ஜெயராணி தெரிவித்துள்ளனர். |