தலையங்கம்
வறுமைக் கோடும் அரைப்பட்டினிகளும்
ஒரு திங்களுக்கு முன், முறை சாரா துறையில் தொழில் அமைப்புகளுக்கான தேசீய கமிஷன் மேற்கொண்ட ஓர் ஆய்வு அறிக்கையை சில நாளிதழ்கள் வெளியிட்டன.
அதிர்ச்சிகளை உள்ளடக்கமாகக் கொண்ட அந்த ஆய்வறிக்கை, பல ஊடகங்களால் முக்கியம் என்று கருதப்படவில்லை போலும்!
இதுபற்றி அதிகம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை; எந்த ஊடகத்தாருக்கும் இது பரபரப்புத் தீனி போடவில்லை என்பதால்!
இந்த ஆய்வு நம் நாட்டின் 83.6 கோடி மக்களைக் கொண்ட ஓர் ஆய்வு. பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும், முஸ்லீம்-களும் அடங்கி யவர்கள் என்பது சுட்டிக்-காட்டத்தக்கது.
ஒரு நாளைக்கு 20 ரூபாயில் இவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்!
இவர்களில் 77 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழ்வதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது!
அதற்கு உண்மையான பொருள் என்ன தெரியுமா?
ஒரு நாளைக்கு 12 ரூபாய்க்கு மேல் இவர்களுக்கு (ரூ. 20 வரை கிடைப்பதால்) இவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழுகிறார்களாம். எப்படி ஒப்பீடு பார்த்தீர்களா?
வாயில்லாத இந்த வறிய மக்களுக்குப் படிக்கவோ, அதன்மூலம் வேலைவாய்ப்புகளைப் பெறவோ இந்து மனு பூமியில் இடம்தான் இன்றும் கிட்டவில்லை!
இன்னொரு ஒப்பீடு சுவையானது. டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் பிச்சையெடுப்-பவர்களின் தினசரி வருவாய் 100, அதிக பட்சம், குறைந்த பட்சம் 30 ரூபாய்!
பிச்சையெடுக்கத் தெரியாத பெரிய மனிதர்கள் தான் அந்த முன் ரகம் ரூ. 20 தினக்கூலி பெறுபவர்கள்!
நமது அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ழுசூஞ- ழுசடிளள சூயவடியேட ஞசடினரஉவ) என்று கூறி, மொத்தமான பொருள் உற்பத்தி அளவீடுபற்றிக் குறிப்பிடுவார்கள்.
ஆனால் நோபல் பரிசினை பொருளா-தாரத்திற்காகப் பெற்ற கேரி பெக்கர் ழுயசல க்ஷநஉமநச ஒரு புது பொருளாதார சொற்-றொடரை உருவாக்கினார். ழுனுஞ - ழுசடிளளடல னுளைவடிசவநன ஞசடினரஉவ என்று, உழைக்காத நேரங்களையும் கூட பொருளாதார நல்-வாழ்வில் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். அதுபோல பலவற்றை எண்ண வேண்டு-மானால் நமது மக்கள் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று வாழும் அந்த 83 சதவிகித மக்கள் திருப்தியோடு அரைப் பட்டினிகள் விதி என்ற போதையுடன் வாழ்ந்து கொண்டே சாகலாம்!
60 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பின் தொலைக்காட்சி, தொலைபேசிகள், தொலைத் தொடர்புகள் வளர்ந்துள்ளன.
சென்செக்ஸ், பங்கு மார்க்கெட் சரிவு-உயர்வு, தங்கத்தின் இன்றைய விலை - இவைகள்தான் இந்த 83 சதவிகித குடிமக்-களான இந்நாட்டு மன்னர்களை ஏற்கச் செய்வனவா?
சிறைகளை நிரப்பினால், சுதந்தரம் பறிக்கப்பட்டால் கூட, பசியில்லாமல் வாழலாமே என்று அல்லவா அவர்களில் சிலர் அல்லது பலர் நினைக்கத் துவங்குவர்!
இதற்கு விடியல் எப்போது? எல்லாம் அவன் செயல், அவன் விட்ட வழி என்ற சோம்பேறித் திண்ணைத் தூங்கி வேதாந்தம் தானா? எரியும் கும்பிகள்தான் எத்தனை நாளுக்கு இந்த சமூக ஏற்பாட்டைப் பொறுத்துக் கிடப்பர்?
கி. வீரமணி
ஆசிரியர் |