தலையங்கம்

தந்தை பெரியார்

ஆசிரியர் பதில்கள்

அநீதி

வடபுலம்

பதிவுகள்

குரல்

பாலியல் நீதி

இந்துத்துவா

கவிதை
சிறுகதை
எப்படி
ஹாலிவுட் கலை
நூல் அறிமுகம்
அறிவியல்
குறுங்கதை
நடிகவேள் எம்.ஆர்.ராதா
சிறந்த நூலிருந்து
தன்னம்பிக்கை
உலகப்பார்வை
பார்ப்னர்கள்
பெட்டிச் செய்திகள

 

 

 

 

ஆசிரியர் பதில்கள்

நடைமுறை யதார்த்தம் பற்றியும் சிந்திக்க வேண்டும்

கேள்வி: இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் இறங்கியிருக்கும் ரிலையன்ஸ், வால்மார்ட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் சில்லரை வர்த்த-கத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்-களைப் பாதிக்காதா?
-மு.திருநாவுக்கரசு, புள்ளம்பாடி.
பதில்: பாதிக்கச் செய்யும் என்றாலும் அதைச் சட்டபூர்வமாக அரசுகள் தடுக்க முடியாது. மக்களும் தரமும் மலிவு விலையும் கிடைக்கும் கடைகளுக்குத்-தான் சென்று பொருள்களை வாங்குவார்கள். சில்லரை வர்த்தகத்தை எந்த அளவு நிலைநிறுத்த முடியும் என்பது மிகவும் சிக்கலான ஒன்று. பொதுமக்கள் முன் வருவார்களா? ஏனென்றால் நுகர்வோர் விலை மலிவானதாகத்தானே பார்த்து வாங்கிச் செல்வார்கள்! கால மாறுதலைக் கவனித்தே அரசுகள் செயல்பட முடியும். வாக்கு வங்கி அரசியலுக்காக கூக்குரல் போட்டால் மட்டும் போதாது. நடைமுறை யதார்த்தம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

கேள்வி: கடமையைச் செய்.. பலனை எதிர்பார்க்காதே என்பதும் ஒரு வகைச் சுரண்டல் தானே? - நெய்வேலி.க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில்: நிச்சயமாக. அதற்காகத்-தானே ஏற்பட்டது. அர்ச்சகர் வசூலிக்கிறாரே அவரிடம் இந்த சொல் பலிக்குமா?

கேள்வி: மானை சுட்டுக்-கொன்ற நடிகருக்கு அய்ந்து ஆண்டு-கள் ஜெயில்! ஆனால் ஆளையே கொன்ற-வருக்கோ... பெயில்! சட்டம் குழப்பு-கிறதே.. இந்த அவலம் ஏன்?
-நெய்வேலி.க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.
பதில்: மனுவின் சிந்தனை இன்னமும் நம்நாட்டு நீதித்துறையை ஆட்சி செய்கிறதே!

கேள்வி: பிரதமர் மன்மோகன் சிங் தன்னை குறிப்பிட்ட நாளில் சாகடிக்க யாகம் செய்யப் பட்டதாக ஆங்கில இதழில் பேட்டியில் சொன்ன-தற்கு, யாகம் என்பது ஒருவரது நல்வாழ்வுக்-காக நடத்தப்படுவது, யாருடைய சாவுக்கும் நடத்தப்படு-வதல்ல என்று பா.ஜ.க. தலைவர் மல்கோத்திரா ஆவேசமாய் கூறினா-ராமே, உண்மை அதுவா?
ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி.
பதில்: சத்ரு சங்கார யாகம் பற்றி அவாளுக்கு நாமா சொல்லிக் கொடுப்பது? வெட்கம்! வேதனை!!

கேள்வி: கலைஞர் குறையில்-லாத ஆட்சி நடத்தினாலும் அவரால் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணி-யாளர்கள் பெறும் சம்பளம் குறை-வாக உள்ளதே?
-வீர.செல்வம், பூம்புகார்.
பதில்: அடுத்த பட்ஜெட்டில் அவர்-களுக்கும் விடியல் வரக்கூடும்; கார-ணம் அனைவரையும் - அதிலும் அடித்தளத்தில் உள்ள அனைவ-ரையும் - கருணையோடு பார்த்து நிதியும் நீதியும் வழங்குபவர் நமது முதல்வர்!

கேள்வி: நமது நாட்டில் உள்ள பல மாநிலங்கள் முற்றிலும் சுயநல நோக்கோடு, தமது மாநிலம் மட்டும் முன்னேற வேண்டு-மென்று, மாநிலப் பற்று மேலோங்கி செயல்-படுவது சரியா? இது நம் நாட்டின் எதிர்-காலத்திற்கு நல்லதா?
- அறவரசன், சென்னை
பதில்: ஒருமைப்பாடு என்பது உண்மையி-லேயே இருக்கிறதா? என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்டார் நமது முதல்வர். அதுதான் இதற்கு ஒரே பதில்.

கேள்வி: தாங்கள் எப்போதாகிலும் தகுதியில்லாத ஒருவரைப் புகழ்ந்து, அதனால் பின்னர் வருந்திய நிகழ்வுகள் தங்களுக்கு வாய்த்ததுண்டா?
-கரு.காளிமுத்து, வடகாடு
பதில்: புகழ்ந்து என்பதற்குப் பதிலாக ஒரு திருத்தம் - தூக்கிவிட்டு என்று அந்த இடத்தில் போட்டுக் கொண்டு படித்-தால் ஆம் என்ற விடை என்-னிடத்தி-லிருந்து கிடைக்கக்கூடும்!

கேள்வி: திருவண்ணாமலையில், பாலிடெக்னிக் படித்த ஒருவர், என் அனுமதியின்றி என் உடலில் சித்தர் ஒருவரின் ஆவி இருக்கின்றது. அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று காவல்துறைக்கு புகார் மனு அளித்துள்ளது பற்றி?
-ந.அதியமான்பரிதி, தருமபுரி-1
பதில்: உடனே மன நல மருத்துவரிடம் அவரை அனுப்ப வேண்டும்.

கேள்வி: பழனியில் ரோப் கார் விபத்தில் பலர் இறந்தும், பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனரே முருகக் கடவுளால் காப்பாற்றப்-படவில்லையே மக்கள் இன்னும் புரியாமல் மூடப்பழக்கங்களில் உள்ள-னரே இவர்களைத் திருத்த வழி என்ன?
- ஈ.சிதம்பரம், திருவில்லிபுத்தூர்
பதில்: பலர் குடியால் இறந்தாலும் குடியைவிட்டு விட முடியவில்லையே பலரால். அதுபோலவே இந்த போதையும்!

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra