தலையங்கம்

தந்தை பெரியார்

ஆசிரியர் பதில்கள்

அநீதி

வடபுலம்

பதிவுகள்

குரல்

பாலியல் நீதி

இந்துத்துவா

கவிதை
சிறுகதை
எப்படி
ஹாலிவுட் கலை
நூல் அறிமுகம்
அறிவியல்
குறுங்கதை
நடிகவேள் எம்.ஆர்.ராதா
சிறந்த நூலிருந்து
தன்னம்பிக்கை
உலகப்பார்வை
பார்ப்னர்கள்
பெட்டிச் செய்திகள

 

 

 

 

அநீதி

கீதை தேசிய அறநெறி நூலா?
மதச்சார்பின்மைக்கு எதிரான நீதிபதிக்குக் கண்டனம்

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் எஸ்.என். சிறீவத்சவா என்ற (பார்ப்பன) நீதிபதி ( இவர் அப்பட்ட-மான இந்துத்துவாவாதி; முந்தைய பி.ஜே.பி., ஆட்சிக்காலத்தில் பதவிக்கு வந்தவராக இருக்கக்கூடும்) தேவையின்றி, அரசின் மதச்சார்பின்மைக்கே எதிரான கருத்தை அறிவித்துள்ளார்.
பகவத் கீதையை தேசிய அறநெறி நூலாக அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளாராம்!
இது உயர்நீதிமன்றத்தின் வேலையா? பா.ஜ.க., - ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா சக்திகள் எங்கெங்கெல்லாம் ஊடுருவி உட்கார்ந்துள்ள-னவோ அங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், இந்துமத வெறித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட தவறுவதே இல்லை.
`பகவத் கீதை என்பது மகாபாரதத்தின் இடைச்செருகல் என்பது அறிஞர்களின் கருத்து.
அது முழுக்க முழுக்க ஓர் ஆரிய பார்ப்பனீய வருணாசிரமத்தை மேலே தூக்கிப் பிடித்து, பெண்களை ``பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று இழிவுபடுத்திடும், கொலை வெறியைத் தூண்டிடும் ஒரு நூல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று!
`கீதையின் மறுபக்கம் என்று நாம் எழுதி, பல பதிப்புகள் வெளிவந்து, லட்சக்கணக்கான பிரதிகளுக்குமேல் பரவியுள்ள நூலில், ஆதாரங்களோடு, மறுக்க முடியாத பல வாதங்கள்மூலம் அந்தக் கருத்தை நிறுவியுள்ளோம். தேசப் பிதா என்று அழைக்கப்பட்ட அண்ணல் காந்தியாரை கொலை செய்ய, கீதைதான் தூண்டியது என்பதை, அவரைத் திட்டமிட்டு சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பான் (ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்டவர்) நீதிமன்றத்திலேயே கூறியுள்ளாரே!
அதை யாராலும் மறுக்க முடியாதே! `நான்கு வருணங்களையும் நானே உருவாக்கினேன் என்று கிருஷ்ணன் கூறுவதாக எழுதியுள்ள அந்த நூல் `இந்துக்கள் என்பவர்கள் அனைவரும் கூட ஏற்கப்படக் கூடியது அல்லவே!
இதில் என்ன புனிதம், புடலங்காய்? இந்து மதத்தில் உள்ள ``சூத்திரர்கள், பஞ்சமர்கள் இவர்கள் இதை ஏற்க முடியுமா? அப்படி ஏற்றால் அவர்கள் மனிதத் தன்மையை இழந்துவிடத் தானே வேண்டும் - அவனவன் ஜாதி தர்மப்படிதான் செயல்படவேண்டும்; அந்த `சுதர்மத்தை அதை உண்டாக்கிய பகவான் ஆன நானே நினைத்தால் கூட மாற்ற முடியாது! என்று கூறுவதைவிட, மனித நேயத்திற்கு எதிரான கருத்து வேறு எதுவாக இருக்க முடியும்?
``மனுவின் மொழி அறமானதொரு நாள் அதை மாற்றும் நாளே தமிழர் திருநாள் என்றார் புரட்சிக்கவிஞர்! மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் நெறி; அதனை அப்படியே எடுத்து உபதேசிப்பதுதானே கீதை!
கீதையை `முட்டாளின் உளறல் என்றார் அண்ணல் அம்பேத்கர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தினைக் காக்கப் பதவிப் பிரமாணம் எடுத்த நீதிபதி ஒருவர், அதன் கொள்கைப் பிரகடனப் பீடிகையில் கூறப்பட்ட செக்யூலர் (ளுநஉரடயச) மதச் சார்பின்மைக்கு எதிராக இப்படி தீர்ப்பில் எழுதலாமா?
உடனடியாக சட்ட அமைச்சர் பரத்வாஜ் இதனை இந்திய அரசு சார்பாக மறுத்துள்ளது வரவேற்கத்தக்கது!
மத்திய சட்ட அமைச்சர் எச்.ஆர். பரத்வாஜ் அவர்கள், ``முஸ்லிம்களுக்கு குரான், கிறித்தவர்-களுக்கு பைபிள் புனித நூல்களாகும். ஒவ்-வொரு மதமும் தமக்கென அறநெறி நூலைக் கொண்டுள்ளது. எனவே, இந்தியாவுக்குக் கீதை அறநெறி நூல் என்று எப்படி கூற முடியும்? இதர மதத்தின் புனித நூல்களுக்கும், நாம் மதிப்புத் தரவேண்டும். எனவே, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்தை நிராகரிக்க-வேண்டும் என்று கூறியுள்ளார்.
நிராகரித்தது - முளையிலேயே கிள்ளி எறிந்தது - ஒரு நல்ல முயற்சியாகும்!
அந்த உயர்நீதிமன்ற நீதிபதிமீது அரசு ``இம்பீச்மென்ட் கொண்டு வரவேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக் கோட்பாட்டிற்கு நேர் எதிரான கருத்து அது. மேலும், பல மதங்களுக்கிடையே பகைமை உணர்ச்சியை உண்டாக்கி, மதக் கலவரத்திற்கு வித்திடும் முயற்சி - அம்முயற்சி என்பதால், இந்தப் பதவி நீக்க நடவடிக்கை அவசியம் என்று சுட்டிக்காட்டவேண்டும்.
இந்தியாவில் என்ன, உலகத்திற்கே ஒரு பொது அறநெறி நூல் என்று ஒரு நூலை சொல்லவேண்டுமானால், அது சமய சார்பற்ற செம்மொழி தமிழ் தந்த திருக்குறள் என்பதை ஓங்கி அடித்துச் சொல்லலாம் - சொல்லவும் வேண்டும்.
இதை வலியுறுத்தியும், அலகாபாத் நீதிமன்றத்தின் அப்பட்டமான உயர்ஜாதிவெறி - மதவெறித் தனத்தைக் கண்டித்தும், மாவட்டத் தலைநகர்களிலோ அல்லது முக்கிய நகரங்களிலோ ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணியினர் தமிழ் இன உணர்வாளர்களுடன் இணைந்து வரும் 19.9.2007 (புதன்) அன்று நடத்திடுவர்.
அதில், 1. கீதை - ஒரு வருணாசிரம தர்மம் பரப்பும் - (இந்து) மதவெறி - கொலைவெறி நூல்!
2. நீதிபதிகள் வரம்பு மீறிடும் தேவையற்ற சர்ச்சைகளை - மதக் கலவரத் தூண்டுதல் கருத்துகளைப் பேசக்கூடாது!
3. உலகப் பொது நூல் - திருக்குறளை, தேசிய நூலாகப் பிரகடனப்படுத்தி அறநூல் என்று அறிவிக்கக் கோருதல் போன்றவற்றை ஒலி முழக்கங்களாக ஆக்கி நடத்தப்படும்.
அனைவரும் இதனை, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை இழிவு ஒழிப்பு, மதவெறி ஒழிப்பு முயற்சிகளின் மறு பக்கமாகக் கருதி, சிறப்புடன் நடத்துங்கள் - நான் சென்னையில் கலந்துகொள்ளக்கூடும்.
அத்துடன், மிக முக்கியமாய்,
4. சென்னை - உயர்நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படும்போது, ஏற்கெனவே பார்ப்பன நீதிபதிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நிலையில், மேலும் பார்ப்பனர்களை - அவர்கள் பெண் என்ற பார்வையிலும் சேர்க்கக் கூடாது.
5. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டு நீதிபதிகளுக்கு மேலும் பிரதிநிதித்துவம் தேவை என்பதையும் வலியறுத்தும் ஆர்ப்பாட்டமாகவும் - அறப்போராட்டமாகவும் அமையும்! உடனே செயல்படுக!

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra