வட புலம்
மாயாவதி ஆட்சியிலும்....
அண்ணல் அம்பேத்கருக்குப் பிறகு வட-இந்திய தாழ்த்தப்பட்ட மக்களால் பெரிதும் நேசிக்கப்படுபவர் கன்சிராம். அவரது வாரிசாக உருவாகி இன்று உத்திரப்பிரதேசத்தை ஆளுகிறார் மாயாவதி. முதன்முதலாக எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் ஆட்சியைப் பிடித்து தாழ்த்தப்பட்ட மக்-களின் கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதியும் உருவெடுத்தது இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தஙகக பதிவுதான். ஆனால், அந்த ஆட்சி உருவான விதம் தான் அம்பேத்கரின் கொள்ளைகள் மண்ணில் மலரவேண்டும் என விரும்பிய-வர்களாலும் பெரியார் பற்றாளர்களாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
பார்ப்பன வாக்குவங்கியைக் குறிவைத்து (உ.வியில் பார்ப்பனர்கள் 13 சதவீதம்) மாயாவதி செய்து கொண்ட கொள்கை சமரசம் ஒடுக்கப்-பட்டோருக்கு எதிராக அமைந்துவிடும் என்ற அச்சமே பெரியாரிஸ்டுகளுக்கும் அம்பேத்-கரிஸ்டுகளுக்கும் ஏற்பட்டது. இந்த அச்சம் சரியானது தான் என்பதை மாயாவதியின் ஆட்சியில் சில நிகழ்வுகள் எடுத்துக் காட்டு-கின்றன.
நூறு நாட்களை நிறைவு செய்துள்ள மாயாவதி ஆட்சியைப் பற்றிய விமர்சனத்தை டெல்லியிலிருந்து வெளியாகும் பல இதழ்கள் எழுதியுள்ளன. அரசியல் நீதியாக கொக்கல், வாங்கல் பிரச்சினைகளும் முலாயம்-மாயாவதி மோதல்களும் அந்தக் கட்டுரைகளில் அலசப்-பட்டுள்ளன. இவைகள் வழக்கமானவை தான். ஆனால், நமது கவலை அங்குள்ள தாழ்த்தப்-பட்ட மக்கள் பற்றியது. அவர்களின் நிலை பற்றியும் த சண்டே இந்தியன் (செப்,9,2007) எழுதியுள்ளது.
கடந்த ஆகஸ்டு முதல் தேதி பிரதாப் கர் மாவட்டத்தின் பதேர்வா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஷிப் முரத் கௌதம் என்பவரின் பேரன் உயர்சாதியினரால் கொல்லப்பட்டுள்ளார். மூன்று நாள் போராட்டத்தின் பின் தான் போபிகள் முதல் சவால் அறிக்கையே பதிவு செய்துள்ளனர். உள்ளூர் பார்ப்ப எம்.எல்.ஏ. ராம் ஷிரோமணி சுக்லாவின் ஆதரவு உயர்சாதிகளுக்கு இருந்தால் போலிகள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை. இந்த எம்.எல்.ஏ. பகுசன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். மாயாவதியின் தலித் பார்ப்பனக் கூட்டால் பதவி பெற்றவர். கொலைகாரர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லையாம். முதல்வர் மாயாவதியை சந்தித்து நீதி கேட்க முயன்ற முதியவர் கௌதமுக்கு சந்திக்கும் வாய்ப்பு சிறைச்சாலை. இதனால் வருத்தமுற்ற பதேர்வா கிராம தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகஸ்டு 15இய் கறுப்புக் கொடியேற்றி ............. உள்ளனர். வழக்கை திரும்ப பெற்றுள்ளார்கள் என காவல்துறையின் உயர்அதிகாரி தொடர்ந்து வற்புறுத்துகிறோம்.
மாயாவதியின் ஆட்சி பற்றி உ.பி.யின் முன்னால் அய்.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர்.-தாராபுரி சட்டமன்றம் மற்றும் அரசுத்-துறைகளில் பார்ப்பனர்கள் தான் எல்லா-வற்றையும் தீர்மானிக்கின்றனர். மாயாவதியின் தலித்-பார்ப்பன கூட்டணியை பாதிக்கும் என்பதால் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான உயர்சாதியினரின் வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்-படுகின்றனர் என்கிறார்.
அரசின் முதன்மையான பதவிகள் உயர்-சாதிக்காரர்களால் நிரப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உயர்சாதிப் பார்ப்பனர்கள் கோலோச்சினால் தாழ்த்தப்பட்டோருக்கு எப்படி நீதி கிடைக்கும்? இனிமேல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று பதேர்வா கிராம மக்கள் சொல்-கிறார்கள். பார்ப்பனர்களோடு கூட்டணி சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை உ.பி. உணர்த்திக்கொண்டுள்ளது. குல்லூகப்பட்டர்-கள் இப்போது மாயாவதிக்குப் பின்னால் இருந்து அவரை இயக்குகிறார்கள். மாயா-வதியை முன்னிறுத்தி மனுவாதிகளின் ஆட்சி நடத்துகிறார்கள். பார்ப்பனக் கூட்டு பாதகத்-தில் முடியும் என நாம் சொன்னது அங்கே நடந்து கொண்டுள்ளது. நூறு நாட்களிலேயே இந்நிலை. இன்னும் 4 ஆண்டு என்ன நடக்குமோ. மாயாவதி என்ன செய்யப்-போகிறார்?
|