குரல்
நல்லாச் சொன்னாங்க நாலு வார்த்தை
ஆத்திகம், நாத்திகம் இரண்டில், நாத்திக வழியில் போகிறவர் களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
ஆத்திக வழியில் போறவுங்க கடவுள் கிட்ட பாரத்தை இறக்கி வச்சுட்டு வந்துடுவாங்க, ஆனால், நாத்திக வாதிங்க ரொம்ப தைரியமா எல்லா விஷயத்தையும் எதிர்கொள்ளுவாங்க.
- நடிகை கோவை சரளா
விளையாட்டோடு தொடர்பு கொண்டவர்கள், செயல்படுவதற் கான நேரம் வந்து விட்டது. அவர்கள் தான் விளையாட்டின் அருமையை உணர்ந்தவர்கள். அவர்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அரசியல்வாதிகள் மற்றும் பிசினஸ் மேன்கள் நமக்குத் தேவையில்லை.
- கபில்தேவ்
ஆங்கிலேயர்கள் நியாயமான இடம் கொடுத்ததால் தான் காந்தியின் போராட்டம் வெற்றி பெற்றது. அந்த இடம் காஷ்மீரிகளுக்கு இந்தியாவில் அளிக்கப்படவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் காஷ்மீரிகளையும் சேர்த்துக்கொள்ள இந்திய அரசுக்கு பெரிய வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், புதுடில்லி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாவிட்டால் அமைதிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள் அர்த்தமில்லாமல் போய்விடுவார்கள்.
-யாசின் மாலிக், (தீவிரவாதப் பாதையை கைவிட்டு அரசியல் இயக்கம் கண்டுள்ள காஷ்மீரி ஹாஜிக்குழுத் தலைவர்)
தாமதிக்கப்படும் நீதி...?
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் 2.59 கோடி வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. உயர்நீதி மன்றங்களில் 98 லட்சம் வழக்குகள் தீர்ப்பாகாமல் உள்ளன.
உச்ச நீதி மன்றத்தில் மட்டும் 43 ஆயிரம் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.
எவ்வளவு முயற்சித்தாலும் ஓர் ஆண்டில் 20 ஆயிரத்துக்கும் மேல் வழக்குகளை தீர்க்க முடியாது.
-சொல்லியவர்:உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.
|