தலையங்கம்

தந்தை பெரியார்

ஆசிரியர் பதில்கள்

அநீதி

வடபுலம்

பதிவுகள்

குரல்

பாலியல் நீதி

இந்துத்துவா

கவிதை
சிறுகதை
எப்படி
ஹாலிவுட் கலை
நூல் அறிமுகம்
அறிவியல்
குறுங்கதை
நடிகவேள் எம்.ஆர்.ராதா
சிறந்த நூலிருந்து
தன்னம்பிக்கை
உலகப்பார்வை
பார்ப்னர்கள்
பெட்டிச் செய்திகள

 

 

 

 

பாலியல் நீதி ?

புறக்கணிப்பது நியாயமா ?
மூன்றாம் பாலினத்தின் கேள்வி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்-குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நடந்தது. இதில் இதுவரை இல்லாமல் முதல்முறையாக திருநங்கைகள் எனப்படும் அரவாணிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. கண்ணாடி என்ற கலைக் குழுவில் ஒன்றிணைந்து மனசின் அழைப்பு நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். அதில் சமூகத்தில் அரவாணிகள் நடத்தப்படும் விதம் குறித்தும் அவர்கள் படும் அவஸ்த்தைகள் குறித்தும் நடித்துக் காட்டிய பிறகு இறுதியாக மேடையேறி விளக்கமளித்தார் பிரியதர்ஷிணி என்ற அரவாணி.
அப்போது அவர், எல்லோரையும் போல நாங்களும் மனிதர்களாகத் தான் பிறக்கிறோம். ஆனால் இடையில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தால் இப்படி ஆகிவிடுகிறோம். எங்களை மட்டும் சமூகத்தில் பொண்டுக சட்டி என்றும் ஒம்போதுஎன்றும் பொட்டை என்றும் இன்னும் பலவாறும் அழைக்கிறார்கள். கேவலமாகச் சித்திரிக்கப்-படுகிறார்கள். நாகரீகமாக திருநங்கைகள் என்றும் சொல்கிறார்கள்.
எங்களைப் புரிந்து கொள்ள மறுக்-கிறார்கள். எங்களில் சிலர் தப்பு செய்பவர்-களும் இருக்கிறார்கள் என்பதற்காக ஒட்டு மொத்தமாக எங்களைப் புறக்கணிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? பிறக்கும்போது நன்றாகத்தான் பிறக்கிறோம். இடையில் இப்படி ஆகிவிடுகிறோம். குடிகாரர்களையும், தெருவில் நின்று சண்டைப் போடுபவர்-களையும் ஏற்றுக்கொள்ளும் இச்சமூகம் எங்களை மட்டும் ஒதுக்கி வைத்து கைகொட்டி சிரிக்கிறது. எங்களில் பலரும் இதனாலேயே இப்படி ஆகிவிடுகிறோம்.
நான் முதுகலை அறிவியல் படித்திருக்-கிறேன். ஆனாலும், நான் திருநங்கை என்ப-தால்ள வேலை கிடைக்கவில்லை. பொது இடங்களில் ஆண்கள் தனி இடங்களிலும், பெண்கள் தனி இடங்களிலும் ஒன்னுக்கு, ரெண்டுக்கு ஒதுங்குகிறார்கள். நாங்கள் இதில் எதையும் பயன்படுத்த முடியவில்லை. ஒரு முறை நாங்கள் குழுவாக ரயிலில் பயணம் சென்று கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் பயணம் செய்த பெட்டியில் ஒரே கூச்சல்,-குழப்பம். நாங்கள் எதுவும் செய்யவில்லை. குழப்பம் செய்தவர்கள் அங்கிருந்த ஆண்கள். ரயிலதிகாரி வந்தார். அடுத்த ரயில் நிறுத்தத்தில் அந்தப் பெட்டியில் இருந்து இறக்கி விடப்-பட்டோம். உரிய பயணச்சீட்டு வாங்கி இருப்-பதைக் காண்பித்தோம். அவரிடம் சண்டை போட்டு எங்கள் உரிமையை எடுத்துச் சொல்லி மீண்டும் வேறு பெட்டியில் ஏற்றி விடப்-பட்டோம்.
மறுபடியும் கூச்சல் குழப்பம் சண்டை என்னவென்று பார்த்தால் எங்களை இறக்கி-விடச் சொல்லி சண்டை பிடித்தவர்கள் அந்தப்பெட்டியில் இருந்த பெண்கள். என்ன-வென்று கேட்டால் எங்களால் அந்தப் பெண்-களின் கற்பு(?)க்கு ஆபத்து வந்துவிடுமாம்.
மீண்டும் அதிகாரி வரவழைப்பு! பேச்சு வார்த்தை. சமாதானம் ஆகவில்லை. எங்கள் உரிமைக்காகப்போராடினோம். ஆனாலும் அவமானப்படுத்தப்பட்டோம். பெண்களோ எங்களை இறக்கி விட்டுவிடுவதற்காக போராடி-னார்கள். அதிகாரிக்குத் தர்ம சங்கடம் என்றாலும், பெண்கள் பக்கம் நின்று எங்-களைக் கேவலமாகப் பேசினார். எங்களால் அந்தப் பெண்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் எடுத்துச் சொன்னோம். அவர்கள் கேட்கிற மாதிரி இல்லை. மருத்துவர்களை அழைக்க வேண்டும் என்றார்கள். பெண் போலீசை வரவழைக்க வேண்டும் என்றார்கள். ஒரு கட்டத்தில் அழைத்தும் வந்துவிட்டார்கள். அவ்வளவு பேர் மத்தியிலும் எங்கள் அத்துணைபேர் உடைகளும் களையப் பட்டது. அம்மணமாக்கப்பட்டோம். எங்களு-க்கு எந்த உறுப்புகளும் இல்லை, உணர்ச்சி-களும் இல்லை என்று அவமானப்படுத்தப்-பட்டதில் கூனிக் குறுகிப் போனாம். ஒரு ரயில் பயணத்திற்கே இவ்வளவு போராட்டமா என்று எங்களுக்கு வந்த வேகம் தான் இன்று எங்களை இந்தளவிற்கு உயர்த்தியுள்ளது.
நான் இப்போது ஒரு மாதமிருமுறை இதழில் செய்தியாளராகப் பணிபுரிகிறேன். என்னை மாதிரியே இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மாதம் அய்ந்தாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை நேர்மையான வழியில் சம்பாதிக்கிறோம். பிறர் நினைக்கிற மாதிரி விபச்சாரத்திற்கெல்லாம் நாங்கள் போவதில்லை. ஒருபுறம் சம்பாதித்துக் கொண்டும், மறுபுறம் திருநங்கையருக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற போராடிக் கொண்டிருக்கிறோம்.
விளைவு? தமிழக முதல்வர் எங்களுக்கு தனி வீட்டு வசதியும், குடும்ப அட்டையும் வழங்கி இருக்கிறார். தொழில் கடன் பெற்றுள்ளோம். சுய உதவிக் குழுவும் தொடங்கி பல லட்ச ரூபாய் வரை கடன் பெற்றும் கடனை அடைத்தும் முன்னேறி இருக்கிறோம். இந்தியா முழுமையும் பல நூற்றுக்கணக்கான உள்ளாட்சிப் பிரதி-நிதிகளும் உருவாகி ஆட்சி செய்து வருகி-றோம். தொடர்ந்து இம்மாதிரி கலைநிகழ்ச்சிகள் நடத்தி சமூகத்தில் எங்களுக்கு இருக்கும் அவப்பெயர்களைத் துடைத் தெறியப் போராடத் தயாராகி விட்டோம் என்றார்.

-ம.மு.கண்ணன், புதுக்கோட்டை

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra