இந்துத்துவா
மோடியின் ராஜ்யத்திலே
குஜராத் காந்தியாரின் பிறந்த மாநிலம். மராட்டியமும், குஜராத்தும் பிணைந்தே இருந்து, மொழிவாரி மாநிலம் பிரிவினையால் பிரிக்கப்-பட்ட மாநிலம். பல ஆண்டுகளாகக் காங்-கிரசுக் கட்சி மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.-எஸ். கட்சியின் அரசியல் வடிவமான பாரதீய ஜனதாக் கட்சி ஆள்கிறது. நரேந்திர மோடி எனும் இந்துமத வெறி பிடித்தவர் முதலமைச்சர்.
காங்கிரசு ஆண்ட போது முழஹஆ கூட்டணி ஆண்டது. அதாவது, கத்தியார் (முளாயவசலைய) அரிகன் (ழயசதைய) பழங்குடியினர் (ஹனஎயள) முசுலிம்கள் (ஆரளடஅ) கூட்டணி ஆண்டது. உயர்--ஜாதி ஆதிக்க ஜாதியான பட்டிதார் ஜாதிக்கு எதிரான அணி இது. இதை இரண்டாக உடைக்க பா.ஜ.க. முயன்றது.
மக்ரந்த் தேசாய், கங்கர் சிங், வகேலா, கேசுபாய் பட்டேல் ஆகியோர் இந்தப் பிளவு ஏற்-படுத்தும் பணியைச் செய்தனர். குஜராத்தி-களுக்கு மதத்தைவிடவும் ஜாதி முக்கியம்; ஜாதியை விடவும் அதன் உள்பிரிவு முக்கியம். இந்த வகை உள்பிரிவுகளை ஒன்றடக்கி ஒரு கூட்டணியை உருவாக்கியது பா.ஜ.க. இதன் அடுத்த கட்டமாக ஜாதிகளை ஒன்றடக்கிட முயன்றது. இந்த வகைக் கூட்டணியால் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இது ஒன்றும் லேசுப்பட்ட காரியமல்ல; ஆனாலும் பா.ஜ.க. சாதித்துவிட்டது.
இதைத் தக்கவைத்துக் கொள்ள அது முயல்கிறது. வலுவான மூன்று பேர்களில் அதிகாரப் போட்டி நடைபெற்று கங்கர்சிங்வ-கேலா கலகம் செய்த போதும் பேசுபாய் பட்டேலுக்கும், நரேந்திர மோடிக்கும் போட்டி ஏற்பட்ட போதும் இது நீடித்தது.
ஆனாலும், சில ஆண்டுகளாக ஒற்றுமையில் வெடிப்பு ஏற்பட்டு விட்டது. சுவாமி நாராயண் என்ற பிரிவுக்காரர்களுக்கும் ஸ்வத்யால் பரிவார் பிரிவுக்கும் வெளிப்படையாகக் கருத்து வேற்றுமை ஏற்பட்டுவிட்டது. சுவாமி நாரா-யண் பிரிவில் ஏற்பட்ட உள் கட்சிச் சண்டை-களின் விளைவாக இந்தப் பிரிவின் சாதுக்கள் மீது கொலைக் குற்றங்கள் கூடக் கூறப்-பட்டுள்ளன. இரண்டாகப் பிளவுபட்டு மோதிக் கொண்டதன் விளைவு இது.
சீர்திருத்தவாதிகள் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்ட ஸ்வத்யய் பரிவார் கூட வாரிசுச் சண்டையிலிருந்து தப்ப முடியவில்லை. (இதனை ஏற்படுத்தியவர் 2003இல் இறந்து போனார்) பதவிச் சண்டை முற்றிப் போய்க் கொலைகளே நடந்துவிட்டன. சொத்துக்கள் யாருக்கு என்று மோதிக் கொள்வதில் போட்டியும், பொறாமையும் ஏற்பட்டுள்ளன. பெரிய வியாபாரக் கூட்டங்களை யார் கைப்-பற்றுவது என்பதிலேயே, நேரம் போகிறது.
இந்நிலையில் இவர்களுடன் அதிகாரப் பங்கீடு செய்து கொள்ள பா.ஜ.க. தயாரில்லை. சங்கபரிவாரங்களுக்குள் பரஸ்பரம் நம்பிக்கை இல்லாத தன்னையும், இணக்கமற்ற தன்மையும் நிலவுகிறது. இதன் காரணமாக ஆளுங்கட்சி மதப்பிரிவுகளைத் திருப்திப்படுத்திட முயல-வில்லை. பா.ஜ.கட்சியின், யாத்திரை எனும் கட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைக் காட்டி-லும் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசு-வதிலும், யோகாசனங்கள் செய்து காட்டு-வதிலும் ஆர்வம் காட்டுகிறது. இதன் விளை-வாக ஜாதிகளின் முக்கியத்துவம் கூடுதலாகிறது.
முதலமைச்சர் மோடிக்கு ஜாதிகளின் எதிர்ப்பு வலுத்து வருகிறது. போலி ஜாதியும் பட்டிதார் ஜாதிகளும் தங்களுக்குக் கூடுதலான மந்திரி பதவிகள் கேட்கின்றன. கட்சிப் பதவி-களிலும் பெரும்பங்கு கோருகின்றன. ஒளிவு மறைவோ கூச்ச நாச்சமோ இல்லாமல் என் ஜாதிக்கு என்ன தருவாய்? என்று கேட்கின்றன.
கட்சிக் கட்டுப்பாட்டுக்கு எதிராக நடந்தனர் என்று 5 சட்டமன்ற உறுப்பினர்களை மோடி நீக்கிவிட்டார். இந்த 5 பேரும் லூவா பட்டேல் ஜாதியைக் சேர்ந்தவர்கள். எனவே, உள் பிரிவுக்காரர்களைத் திருப்திப்படுத்தும் நோக்-கில், போக்கில் பா.ஜ.க. இல்லை எனத் தெளிவாகிறது.
எனவே, வரும் தேர்தலில் ஜாதி தான் இந்துத்துவா கிடையாது. எது வெற்றி பெறும் எனப் பார்ப்போம்! எது வெற்றி பெற்றால் என்ன? இரண்டுமே கொள்ளிக்கட்டை தானே! இரண்டையும் துரத்தினால் தான் குஜராத் மட்டுமல்ல, நாடே உருப்படும்!
|