தலையங்கம்

தந்தை பெரியார்

ஆசிரியர் பதில்கள்

அநீதி

வடபுலம்

பதிவுகள்

குரல்

பாலியல் நீதி

இந்துத்துவா

கவிதை
சிறுகதை
எப்படி
ஹாலிவுட் கலை
நூல் அறிமுகம்
அறிவியல்
குறுங்கதை
நடிகவேள் எம்.ஆர்.ராதா
சிறந்த நூலிருந்து
தன்னம்பிக்கை
உலகப்பார்வை
பார்ப்னர்கள்
பெட்டிச் செய்திகள

 

 

 

 

சிறுகதை

பொருத்தம்

இப்படி நீங்க நடந்துக்குவீங்கன்னு நான் கனவிலும் நினைக்கலை மாமா. ஏன் இப்படிச் செய்தீங்க? கண்ணன் கண்கள் ரத்தச் சிவப்பா-யிருக்க, கோபத்தை விழுங்கிவிட்டுப் பேசினான்.
அவனது கோபத்துக்கான காரணம் மாணிக்-கத்துக்குத் தெரியும். என்றாலும், என்ன கண்ணன், நீ எதைச் சொல்றே? ஏன் இவ்வளவு கோபப்படறே? என்று ஒன்றும் தெரியாதவர் போலக் கேட்டார்.
ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க மாமா... பாபு ஜாதகத்தை திருப்பி அனுப்பிட்-டீங்களாமே, ஏன்?
அந்த ஜாதகம் அல்லிக்குப் பொருந்தமா-யில்லை. அதனால அனுப்பினேன்
பாபுவுக்கு என்ன குறைச்சல்? அவனுக்குப் படிப்பில்லையா-அழகில்லையா-வசதி இல்லையா?
இதெல்லாம் இருந்து என்ன பண்றது.. ஜாதகப் பொருத்தம் இல்லையே?
ரெண்டு குடும்பத்துக்கும் மனப் பொருத்தம் இருந்தாப் போதும் மாமா... பாபு எவ்வளவு வருத்தப் படறான் தெரியுமா.. அல்லியும் அவன் புகைப்படத்தைப் பார்த்திட்டுப் பிடிச்சிருக்-குன்னு சொன்னா... கல்யாணம் பண்ணிக்கப் போற ரெண்டு பேருக்கும் புடிச்சிருக்கு.. ரெண்டுமே சமுதாய மதிப்புள்ள குடும்பம்... இவிட வேறு என்ன பொருத்தம் வேணும்?
ஜாதகப் பொருத்தம் வேணும்பா, நீ இள இரத்தம், உங்களுக்கெல்லாம் சொன்னாலும் புரியாது.. பொருத்தமில்லாத மாப்பிள்ளையைக் கட்டி வச்சி அல்லியோட வாழ்க்கை பாழாய்-டுச்சின்னா காலமெல்லாம் துன்பப்படப் போறது நாங்கதான், நீயில்லை.. புரியுதா?
உங்க முடிவு இதுதானா?
ஆமாம்
பாபுவோட ஜாதகத்தை உங்கள்ட்ட கொண்டு வந்து கொடுத்தது நான்.. அதை என்கிட்ட திருப்பித் தராமல் நேரா அவங்-களுக்கு நீங்க அனுப்பறது முறையா.. உங்களின் செயல் எங்களின் நட்பையே பிரிக்கிற அளவுக்-குப் போய்டுச்சி.. ஏன் அப்படிச் செய்தீங்க?
உன் கிட்ட நேரில் கொடுத்திருந்தால் இன்-னும் ரெண்டு மடங்கு அதிகமா குதிச்சிருப்பே... எனக்கு என்னவோ நான் செய்தது தப்பா தோணலை..
சரி, நான் கிளம்பறேன்... அக்கா, நான் வர்றேன்... அல்லி, உனக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவன் பாபு.. அதனாலதான் அவன் கூட நீ வாழணும்னு ஆசைப்பட்டேன்.. உன்னைப் பெத்தவங்களுக்கு அது புரியலை.. உனக்குப் பொருத்தமான வரன் அவங்க தேடிச் சேர்த்து வைப்பாங்க.. என்னைத் தப்பா நினைக்காதே... நான் புறப்படறேன்
கண்ணன் கோபத்தோடு மோட்டார் சைக்கிளை உதைக்க, அது புகை கக்கிவிட்டுப் புறப்பட்டது.
என்னங்க, அவன் கோபம் நியாயமானது தானே? என்று தம்பியின் சார்பில் அவன் போன பிறகு குரல் கொடுத்தாள் கவுரி.
போடி, உள்ளே... எல்லாம் எனக்குத் தெரியும்.. இப்பத்தான் பெருசா நியாயம் சொல்ல வந்துட்ட! மாணிக்கம் போட்ட கத்தலில் கவுரி அடங்கி உள்ளே போக, அல்லி வேறு வழியின்றி அம்மாவைத் தொடர்ந்தாள்.
====
மாணிக்கம் அதே கோபத்தோடு அல்லிக்கு தீவிரமாய் மாப்பிள்ளை தேடத் தொடங்-கினார். ஊரில் இருந்த அத்தனைத் திருமண மையங்களையும் தொடர்பு கொண்டார். தரகர்களை வரவழைத்துப் பேசினார்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது அய்ந்து ஜாதகங்களாவது அவர்களின் வீடு தேடி வந்தன.
பொருத்தம் பார்க்கிற ஜோதிடர் நாகலிங்-கம், பகல் பொழுதெல்லாம் மாணிக்கத்தின் கூட்டிலேயே கழிப்பது வாடிக்கையானது.
இறுதியாக, சென்னையில் ஒரு தனியார் துறையில் பணிபுரிந்த பொறியாளன் செல்வம் என்பான் ஜாதகம் ஏகப் பொருத்தமாய் இருப்ப-தாய் நாகலிங்கத்தால் கண்டறிந்து சொல்லப் படவே மாணிக்கம் மகிழ்ச்சி அடைந்தார்.
உடனே, அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். பெண் பார்க்க நாள் குறிக்கப்-பட்டது.
பார்த்தியாடி, உன் தம்பி என்னவோ ஒரே துள்ளா துள்ளினானே... எங்களுக்கும் தெரியும்... இப்ப நான் பார்த்திருக்கிறதும் வசதியான இடம் தான்... மாப்பிள்ளை இஞ்சினீயர்.. மாசம் அய்ம்பதாயிரம் சம்பளமாம்... போதுமாடி? மாணிக்கம் தன் திறமையை கவுரியிடம் பீற்றிக் கொண்டார்.
என்ன கருத்து சொன்னாலும் அவரிடம் எடுபடாது என்பதால் கவுரி ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கிவிட்டு நகர்ந்தாள். அல்லி-யிடம் கருத்தே கேட்கப்படவில்லை.
பெண் பார்க்கும் படலம் துரிதமாக நடந்-தேற, திருமணத்திற்கு வைகாசி மாத்திலேயே நாள் குறிக்கப்பட்டது. மாப்பிள்ளை, திருமணத்-திற்கு அடுத்தநாளே ஒரு ப்ராஜக்ட் வேலை தொடர்பாக லண்டன் செல்ல வேண்டு-மென்றும், ஒரு மாதம் கழித்துத் திரும்பி வந்து பெண்ணை அழைத்துச் செல்வார் என்றும் சொன்னார்கள்.
மாணிக்கத்துக்கு அவர்கள் சொன்னது பிடிக்கவில்லை என்றாலும், பொருத்தமான ஜாதகம் என்பதால் அரைமனதோடு ஒத்துக் கொண்டார். கண்ணன், தன் கருத்துக்கு மதிப்பிருக்காது என்பதால் மவுனம் காத்தான். திருமணம் ஏக தடபுடலாய் ஏற்பாடாகியது. தாய்மாமன் என்ற முறையில் கண்ணனும் தன் கோபத்தையெல்லாம் மூட்டை கட்டித் தூர வீசிவிட்டுத் திருமண வேலைகளை ஈடுபாட்-டாடு செய்தான். மாணிக்கம், தனது ஒரே மகளின் திருமணம் என்பதால் பணத்தைத் தண்ணீராய் செலவு செய்தார்.
விடிந்தால் திருமணம்.
மண்டபம், உறவினர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இரவு விருந்து முடிந்து இன்னிசைக் கச்சேரி நடந்தது. உறவினர் அனைவரும் திருமண ஏற்பாடுகளையும், விருந்து உபசரிப்பு-களையும் பாராட்டிப் பேச, மாணிக்கம் பெருமிதத்தில் மிதந்தார்.
பொழுது விடிந்தது.
நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த மாப்-பிள்ளை வீட்டார், முகூர்த்த நேரம் நெருங்கிய போது தான் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்-கள். வந்தவர்கள் அனைவரின் முகமும் வெல-வெலத்து வாடிக் கிடந்தது. மாப்பிள்ளையின் தகப்பன் மாணிக்கத்தை ஒரு தனி அறைக்கு அழைத்துப் போனார். கண்ணனும் கூடப் போனான்.
என்னாச்சு சம்பந்தி.. என்ன நடந்திச்சு? மாணிக்கம் பதற்றமாய் வினவினார். அவர் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து மாணிக்கத்திடம் கொடுத்தார்.
அப்பா என்னை மன்னித்து விடுங்கள். என்னோடு பணிபுரியும் வாணியை நான் மனதாரக் காதலிக்கிறேன். உங்களிடம் சொல்ல பயம். அவளுக்கும் என்னால் துரோகம் செய்ய முடியாது. உங்களின் வற்புறுத்தலால் தான் இவ்வளவு தூரம் வந்தேன். சொல்லாது போகி-றேன். என்னை எல்லோரும் மன்னித்து-விடுங்கள்-செல்வம். அதைப் படித்த மாணிக்கம் இடிந்து போய்ச் சரிந்தார். சிறுபிள்ளை போல அழுதார்.
அவர் கையிலிருந்த தாளைப் பிடுங்கிப் படித்த கண்ணன் கோபத்தின் உச்சிக்கே போனான், ஏன்யா, எங்களையெல்லாம் கேணப் பயலுகன்னு நெனச்சியா.. லட்சக்-கணக்குல செலவு பண்ணி நாங்க கல்யாண ஏற்பாடு பண்ணுவோம்.. நீங்க தாலி கட்ற நேரத்துல வந்து இப்படி ஒரு தாளைக் கொடுத்-திட்டு ஸாரி சொல்லிட்டுப் போய்டுவீங்க... உங்களை எல்லாம் பிடிச்சு உள்ளே வைக்காம விட மாட்டேன்... நேற்று விருந்து சாப்பிட்ட மாப்பிள்ளை எங்கேய்யா போனான்... எங்கே இருந்தாலும் அவன் இங்கே.. இப்போ வந்தாக-ணும்... இல்லைன்னா உங்க சொந்தக்காரன் ஒரு பயலும் மண்டபத்தைவிட்டு வெளியே போக முடியாது சொல்லிட்டேன்!
உங்க கோபம் நியாயமானதுதான்.. நாங்-களும் காலையிலிருந்து அவனைத் தேடாத இடமில்லை... அவனோட நெருங்கின ஒரு சிநே-கிதனைப் பிடிச்சி உதைச்ச பிறகு தான் விடி-காலை விமானத்துலயே அவன் ஏறிட்டான்ங்-கிற அதிர்ச்சியான செய்தி எங்களுக்கு கிடைச்-சது... நானும் ஒரு பெண்ணைப் பெற்றவன்... உங்க கஷ்டம்.. அவமானம் எல்லாம் எனக்குப் புரியுது... உங்களுக்கு ஆன செலவு பூரா நான் ஏத்துக்கறேன்... என்னை மன்னிச்சிடுங்க என்று அந்தப் பெரிய மனிதர் மாணிக்கத்தின் கால்-களில் விழுந்தார்.
மீண்டும் கோபமாய் அவரது சட்டையைப் பிடிக்கப் போன கண்ணனை, மாணிக்கம் தடுத்துக் காலில் விழுந்த அந்த மனிதரை எழுப்பி நிறுத்தினார். உங்க மகன் பண்ணிய தப்புக்கு நீங்க என்ன செய்வீங்க பாவம்... சத்த-மில்லாம உங்க உறவுக்காரர்களை அழைச்-சிட்டு மண்டபத்தை விட்டுப் போய்டுங்க..
அவர் தலை கவிழ்த்து அறையை விட்டு வெளியேறினார்.
மாமா, இந்த மாதிரி ஆட்களை சும்மா விடக் கூடாது மாமா என்று எகிறிய கண்ணனை மாணிக்கம் தடுத்தார்.
மாமா, வெளில போய் என்ன சொல்லப் போறீங்க?
நீதான் எனக்கு இப்போ உதவி செய்யணும் கண்ணன், உன் தோழன் பாபுவையும் அவ-னைப் பெத்தவங்களையும் போன் போட்டு உடனே இங்கே வரச் சொல்லு... அந்தப் பையனுக்கும்.. அல்லிக்கும் கல்யாணம்...
மாமா, பொருத்தமில்லைன்னு..
உன் கிண்டல் எல்லாம் அப்புறம் வச்சிக்கலாம், முதல்ல போனை போடு!

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra