தலையங்கம்

தந்தை பெரியார்

ஆசிரியர் பதில்கள்

அநீதி

வடபுலம்

பதிவுகள்

குரல்

பாலியல் நீதி

இந்துத்துவா

கவிதை
சிறுகதை
எப்படி
ஹாலிவுட் கலை
நூல் அறிமுகம்
அறிவியல்
குறுங்கதை
நடிகவேள் எம்.ஆர்.ராதா
சிறந்த நூலிருந்து
தன்னம்பிக்கை
உலகப்பார்வை
பார்ப்னர்கள்
பெட்டிச் செய்திகள

 

 

 

 

எப்படி?

ஓட்டிப் பிறக்கும் இரட்டைக்
குழந்தைகள் ஓரே பாலினம் எப்படி

இரட்டைக் குழந்தைகள் இரட்டை வகையில் உள்ளனர். தனித்தனியாகச் சுற்றுக் கால நேர வித்தியாசத்தில் பிறப்பவை ஆணாகவோ, பெண்ணா-கவோ அல்லது ஆண், பெண் கலந்தோ பிறக்கின்றன. இது ஒரு வகை. ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள் (சயாமிய இரட்டையர்) ஒன்று ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ ஒரே பாலினத்தில் பிறக்கின்றன. இது இரண்டாம் வகை. இந்த வேறுபாடு எப்படி?
முதல் வகையை மானோசைகாட்டிக் என்றும் இரண்டாம் வகையை டைனோசைகாட்டிக் என்றும் பிரித்திருக்கிறார்கள்.
மனிதக் கரு முட்டை கருவுற்ற 12 நாள்களுக்குள் இரண்டாகப் பிரிந்து விடுவதால் இரட்டைக் குழந்தைகள் உருவாகின்றன. இவற்றின் மரபணு (டி.என்.ஏ) முழுக்க முழுக்க ஒரே மாதிரி இருக்கும். ஒ,ல குரோமோசோம்களின் சேர்க்கைக்கு ஏற்பு (44+ஒஒ) என்றால் பெண்ணாகவும் (44 + ஒல) என்றால் ஆணாகவும் பிறக்கின்றன.
டைனோசைகாட்டிக் என்ற ஒட்டிப் பிறக்கும் குழந்தைகளின் உற்பத்தி வேறு 12 நாள்களுக்குப் பிறகு கரு முட்டை இரண்டாகப் பிரியும் நிலை ஏற்பட்டால், முட்டை சரியான வகையில் இரண்டாகப் பிரியாததால், ஒட்டிப் பிறக்கின்றன. ஒரே பாலினமாக இருக்கின்றன.
இப்படியாக பிறக்கும் குழந்தைகளை நிலைக் கண்ணாடி இரட்டையர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்களது கைரேகைகள் நிலைக்கண்ணாடியில் தெரிவதுபோல இட, வல மாற்றத்துடன் அமைந்திருக்கும். ஒருவர் வலது கைப் பழக்கம் உள்ளவராகவும், ஒருவர் இடக்கைப் பழக்கம் உள்ளவராகவும் இருப்பர். இவர்களை மானோ அம்னியாட்டிக், மானோ கோவியானிக் என்றும் அழைப்பார்கள்.
மீன்கள் கூட இப்படி ஒட்டிப் பிறக்கின்றன.

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra