தலையங்கம்

தந்தை பெரியார்

ஆசிரியர் பதில்கள்

அநீதி

வடபுலம்

பதிவுகள்

குரல்

பாலியல் நீதி

இந்துத்துவா

கவிதை
சிறுகதை
எப்படி
ஹாலிவுட் கலை
நூல் அறிமுகம்
அறிவியல்
குறுங்கதை
நடிகவேள் எம்.ஆர்.ராதா
சிறந்த நூலிருந்து
தன்னம்பிக்கை
உலகப்பார்வை
பார்ப்னர்கள்
பெட்டிச் செய்திகள

 

 

 

 

ஹாலிவுட் கலைவாணர்-4

ஏழை படும் பட்டை படமக்கிய சாப்ளின்

சு.அறிவுக்கரசு

ஏராளமான பணம் படைத்த சாப்ளின் தன் சொந்த ஊரான லண்டனைப் பார்க்கப் போனார். அவரைப் பார்த்த மக்கள் அவரை மொய்த்துக் கொண்டார்கள். நம்ம ஊர்ப் பையன் சரித்திரம் படைத்திருக்கிறானே என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. சிறுவனாக இருந்த-போது திரிந்த இடங்கள், தங்கி இருந்த ஒர்க் அவுஸ் போன்றவற்றை, மக்கள் கூட்டத்திற்கு பயந்து கொண்டு இரவில் போய்ப் பார்த்தார்.
தன் தாயுடன் தங்கியிருந்த ஒரு சிறிய அறை-யைப் போய்ப் பார்த்தார். கதவைத் தட்டினார். ஓர் ஏழைக் கிழவி திறந்தார். இவரை அவருக்-குத் தெரியவில்லை. தான் யார் என்பதைச் சொன்னார். மகிழ்ச்சியில் அந்தக் கிழவிக்கு ஒன்-றும் புரியவில்லை. அவருடன் பேசிக் கொண்டி-ருந்துவிட்டுக் கைகுலுக்கி விடைபெற்றார். கிழவி தன் கையைப் பார்த்தார். நிறைய நோட்-டுக்கட்டுகள், ஏராளமான பணம், கிழவிக்கு ஒன்றுமே புரியவில்லை. அழத் தொடங்கினாள். பணம் அவளை அழத் தூண்டிவிட்டது.
தன் இளமைக் காலத்தில் தன்னுடன் பழ-கிய ஹெட்டி என்பவளைப் பற்றி விசாரித்தார். அவள் திருமணம் செய்து கொண்டு போய்-விட்டதாகத் தெரியவந்தது. பின் அவள் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
அதைக் கேட்டு சாப்ளின் மிகவும் வருத்தப்-பட்டார். ஏன் என்றால் ஹெட்டியை இவர் காத-லித்தார். எவ்வளவு பணம் தனக்குக் கிடைத்-தாலும், தாம் விரும்பியது கிடைக்காது என்கிற கருத்து இவருக்கு உருவானது. புதிய சினிமா நிறுவனத்திற்-காகப் படம் தயாரிக்கத் தொடங்கினார். 20 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய சினிமா, அதற்கு இரண்டு ரீல்கள் (கூறடி சுநநடநசள) என்று பெயர். சாப்ளினே கதை, திரைக்கதை எழுதி நடித்து இயக்கிய முதல் படம் தி ஃப்ளோர் வாக்கர் (கூந குடடிடிச றுயடமநச) என்பதாகும். படம் பிரமாதமான வெற்றி. சாப்ளினை எல்லாரும் பாராட்டினார்கள்.
உலகத் திரைப்பட வரலாற்றில் நகரும் ஏணிப் படிக்கட்டுகளை (நுளஉயடடிவடிச-எஸ்கலேட்டர்) பயன்படுத்திய முதல் படம் இது-தான். டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில் நுழைந்த திருடனுக்கு உதவியாக அந்த ஸ்டோரின் மேலாளரே இருக்கிறார். பணப் பையைத் தூக்கி திருடனிடம் கொடுக்கிறார். திருடன் ஓடும் போது சாப்ளினைப் பார்த்து விடுகிறான்.தன்னைப் போலவே இருப்பதைப் பார்த்து திகைக்கி-றான். போலீஸ் வந்து விடுகிறது. திருடன் தன் கையில் இருந்த பணப்பையை சாப்ளினிடம் கொடுத்து விடுகிறான். இவர் தூக்கமுடியாமல் பையைத் தூக்கி அதே போன்ற காலிப் பைகள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையில் பணப் பையையும் வைத்து விடுகி-றார். பின்னர் பணப் பையை அடை-யாளம் காண முடியாத நிலை.
திருடன் தப்பி ஓடுகிறான். சாப்ளின் பிடிக்க துரத்துகிறார். திருடன் எஸ்கலேட்டரில் ஏறு-கி-றான். இவரும் எஸ்கலேட்ட-ரில் ஏறித் துரத்துகிறார். மீண்டும் மீண்டும் இதே மாதி-ரித் துரத்தல், இடையிடையே கீழே விழுந்து எழுந்து துரத்தல். கடைசியில் திருடன் பிடிபடுகிறான். எல்லோ-ரும் கடைசியில் திருடனைப் பிடித்துக் கொடுத்-தற்காக சாப்ளினைப் பாராட்டுகிறார்கள். படம் அமோக வெற்றி பெற்றது.
அடுத்து ஒரு படம். வேகபான்ட் (ஏயபயடினே) நாடோடி என்று பொருள். அதில் அவருடன் நடித்த எட்னா பர்வையன்ஸ் எனும் நடி-கையை அவர் மணந்து கொள்வார் என நினைத்தார்-கள், அவரின் நண்பர்கள். ஆனால், அந்தத் திரு-மணம் நடைபெறவில்லை. இந்தப் படம் தி கிட் திரைப்படத்திற்கு முன்னோடி என்கிற வகையில் சாப்ளினுக்கு முக்கியப் படம். வேறெந்தப் படத்தை சார்லி சாப்ளின் எடுக்காமல் இருந்தாலும், இந்த ஒரு படம் மட்டுமே அவரது புகழுக்குக் காரணம் என்று சொல்லக்கூடிய அளவில் அமைந்த சினிமா ஒன்.-ஏ.எம் (டீநே ஹ.ஆ.) என்ற படம். இர-வில் தூங்குவதற்காக மர்பி படுக்கை (ஆரசயீல க்ஷநன) உள்ள அறையில் சாப்ளின் நுழைகிறார். படுக்கையை வெளியே இழக்க விசையை அழுத்துகிறார். படுக்கை அது பொருந்தியிருக்கும் இடத்திலி-ருந்து வெளியே வரவில்லை. முயற்-சிக்கிறார். படுக்கை உடைந்து மரச் சட்டம் மட்டுமே கீழே விழுகிறது.
அலுத்துப் போன சாப்ளின் பெருத்த குடி மயக்கத்தில் இருந்த-தால், உடைகளைக் களையாமல் அப்படியே ஷவருக்கு கீழே நின்று குளிக்கிறார். தூக்கம் தாங்க முடி-யாமல் குளியல் தொட்டிலேயே படுத்துத் தூங்கி விடுகிறார். இந்தப் படமும், பெரும் வெற்றியைப் பெற்றது. தி கவுன்ட், பான் ஷாப், ஈசி ஸ்ட்ரீட், தி இமிக்ரன்ட், தி கியூர், தி அட்வென்ச்சரர் ஆகிய படங்களை பெரும் தொகைக்கு தாம் ஒப்பந்த-மான மியூச்சுவல் நிறுவனத்துக்குத் தயாரித்துக் கொடுத்தார்.
தி கியூர் படத்தில் சுழலும் கதவை வைத்து இவர் செய்த நகைச்சுவை உலக மக்களைக் கவர்ந்தது. தானே சொந்த ஸ்டுடியோ கட்டித் தாமே சொந்தப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கிய போது எடுத்த முதல் படம் எ டாக்ஸ் லைஃப் (ஹ னுடிபள டுகைந ஒரு நாயின் வாழ்க்கை) என்பது. நாய் பட்ட பாடு என்று சொல்கிறோமே, அதே கருத்தை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட ஏழையின் வாழ்க்கைக் கதை. பல கோணங்-களில் ஏழைகளின் துயரங்களைப் படம் பிடித்துக் காண்பித்தது. இதில் அவருக்குத் துணையாக ஸ்கிராப்ஸ் எனும் நாய் உண்டு.
வேலை தேடிச் செல்லும் சாப்ளின் அந்தக் கம்பெனியின் கதவு திறந்ததும் உள்ளே நுழைவார். வேலையற்றோர் கூட்டம் அவரை வெளியே தள்ளி விடும்.
சாலையில் ஒரு எலும்புத் துண்டு. அதைக் கடிக்க இவருடைய ஸ்கிராப்ஸ் நாய் ஓடும். பல நாய்கள் போட்-டிக்கு வந்து மோதுகின்றன. நாய்களுக்குள் சண்டை. தன் நாயைக் காப்பாற்ற சாப்ளின் முயன்று காப்-பாற்றி விடுகிறார். எல்லா நாய்களும் இவரைத் துரத்திக் கடித்து இவரது உடைகளைக் கிழித்து விடுகின்றன. ஏழைகள் படும்பாடை மிகப் பிரமாதமாக இப்படம் வெளிப்படுத்தியது. உலகமெங்கும் பாராட்டு. பாமரர்கள் மட்டு-மல்ல, பண்டிதர்களாலும் பாராட்டப்பட்ட படம்.
அடுத்ததாக இவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்த படம். ஷோல்டர் ஆர்ம்ஸ் (ளுடிரடனநச ஹசஅள) எனும் சண்டைப் படம். துப்பாக்கியே இல்லாமல் சண்டை போட்டு எதிரியான ஜெர்மனியின் அரசனையே கைது செய்கிறார் சாப்ளின் என்று ஓடும் படம். 30 நிமிடங்கள் ஓடிய அந்தக் கால மிக நீளமான சினிமாப் படம் இது. உலகின் ஊமைப் படங்களிலேயே அதிக வசூலை அள்ளிக் குவித்த படம் தி பிக் பேரேட் (கூந க்ஷபை ஞயசயனந) போரை மய்யமாக வைத்து 1925இல் எடுக்கப்பட்ட படம். இந்தப் புகழினாலும் அவரி-டம் குவிந்த செல்வத்தினாலும் கவரப்பட்ட பெண்கள் அவ-ரின் வாழ்க்கையில் இடம் பெற முயற்சிகள் செய்தனர். அவர் மசியவில்லை. அவரைப் பற்றியும் பல கிசுகிசுக்கள். இதை எழுதும் பத்திரிகைகள் ராகசின் (சுயபயணநே) எனப்படும். அவை பல செய்திகளை எழுதினாலும் இவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தம் பெண் நண்பர் எட்னாவுடன் காதலியாக மட்டுமே இருந்தார். மணம் செய்து கொள்வது பற்றிச் சிந்திக்க வேயில்லை.
அந்த நேரத்தில் தான் அவர் மில்பிரெட் ஹாரிஸ் (ஆடைசெநன ழயசசளை) என்ற பதினாறு வயது நடிகையைச் சந்தித்தார். பத்து வயது முதல் நடித்து வரும் இளம் நடிகை. அவளின் தாயார் உடையலங்கார நிபுணர். சினிமாக்களோடு தொடர்புடையவர். தம் மகளைப் பெரிய நட்சத்திரமாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட பெண்-ணைக் கண்டதும் வைத்த கண்ணை எடுக்கவேயில்லை, சாப்ளின்.

-தொடரும்

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra