நூல் அறிமுகம்
முகமது யூனுஸ்
2006ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற பங்களாதேசைச் சேர்ந்த முகமது யூனுசின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.
அரசால் செய்ய முடியாத அரிய பணியைச் செய்தவர் யூனுஸ். பங்களாதேஷ் ஏழைகளுக்கு கிராமீன் வங்கிள மூலம் பொருளாதார உதவியளித்து உதவிய கதையையும் நூல் விவரிக்கிறது. தன்னலமற்ற தனி மனிதரால் சமுதாயத்தை தலை நிமிரச் செய்யமுடியும் என்பதற்கு யூனுஸ் அண்மைக் கால எடுத்துக்காட்டு.
நூலிலிருந்து...
பெண்களின் கவனத்துக்கு. எங்கள் வங்-கிக்கு வாருங்கள். பெண்களுக்குச் சிறப்பு கடன் வசதிகள் அளிக்கப்படும். இப்படி ஓர் அறிவிப்பை வாசலில் மாட்டி வைத்தார் யூனுஸ். இல்லையென்றால், அவர்களுக்கு எப்படித் தெரியும்?
ஆனால், இதிலும் கூட ஒரு சிக்கல். பெரும்-பாலான பெண்களுக்குப் படிக்கத் தெரியாது. நேரில் போய் சொல்லலாம் என்றால் அதுவும் முடியாது. யூனுஸ் யார் வீட்டுக்கும் செல்ல முடி-யாது. வாசல் கதவைக் கூடத் தொட முடியாது. கணவன்களுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடுவார்கள். யார் நீ? எதற்காக வீட்டுக்கு வந்தாய்? எத்தனை திமிர் இருந்தால் என் வீட்-டுப் பெண்ணிடம் பேசுவாய்? வீட்டில் கல-வரம் வெடிக்கும். மத சம்பிரதாயங்களை மீறி-விட்டதாக அலறுவார்கள். மண்டை உடையும்.
எதற்கு வம்பு? கூடவே ஒரு மாணவியை அழைத்துச் சென்றார் யூனுஸ். கிராமப்புறப் பெண்களின் கையைப் பிடித்து உட்கார வைத்-துப் பேசுவது அந்த மாணவியின் வேலை. எப்ப-டிக் கடன் பெறுவது, எப்படித் திருப்பிச் செலுத்-துவது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். தெருமுனையில், யூனுஸ் நின்று கொண்டிருப்-பார். அந்த மாணவிக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், வீட்டை விட்டு வெளியில் வந்து யூனுஸிடம் கேட்டுவிட்டுத் திரும்புவார். ஒவ்-வொரு வீடாகச் சென்று பேச வேண்டும். அது-வரை, யூனுஸ் காத்துக் கொண்டிருப்பார்.
ஒரு முறை, திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒதுங்குவதற்கு வேறு இடம் இல்லை. வழக்கம் போல் தெரு முனையில் நின்று கொண்டிருந்தார். யூனுஸின் மாணவியி-டம் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்-ணுக்கு யூனுஸைப் பார்க்கப் பரிதாபமாக இருந்-தது. சரி, போய் அவரை உள்ளே அழைத்து வா என்று ஒரு குடையைக் கொடுத்து அனுப்பினார்.
தயங்கித் தயங்கி அந்த வீட்டுக்குள் நுழைந்-தார் யூனுஸ். சிறிய வீடு. உள்ளே அரிசி கொதித்-துக் கொண்டிருந்தது. ஒரு தடுப்புக்கு அந்தப் பக்கம் யூனுஸ் அமர வைக்கப்பட்டார். மறுபக்-கம், பெண்கள், அக்கம் பக்கத்தில் இருந்தவர்-கள். பயத்துடன், ஆச்சரியத்துடன் திரண்டிருந்-தார்கள். கடன் என்றதும் ஒவ்வொருவராகக் கழன்று கொள்ள ஆரம்பித்தார்கள்.
நான் எதற்காக கடன் வாங்க வேண்டும்?
என்னது கடனா? அவ்வளவுதான். என் கணவனுக்குத் தெரிந்தால் கொன்றேவிடுவார்?
யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்
ஹாஹா, நாங்கள் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பேசாமல் என் கணவருக்குக் கொடுங்கள், அவர் உருப்படியாக ஏதாவது செய்வார்.
பெண்கள் பணத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்வார்களே, உங்களுக்குத் தெரியாதா?
திண்டுக்கு அந்தப் பக்கம் இருந்தபடி, ஒவ்-வொரு கேள்விக்கும் பதிலளித்தார் யூனுஸ். உங்கள் மேன்மைக்கு, உங்கள் குடும்பத்தின் மேன்மைக்குத் தான் கடன் அளிக்கிறோம். சிறிது சிறிதாகத் திருப்பிச் செலுத்தினால் போதும். ஏதாவது சிறு தொழில் செய்யுங்கள். லாபம் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்கலாம். தயவு செய்து நாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள்.
சிலர் தலையாட்டுவார்கள், சிலர் வேண்-டாம் என்பார்கள். ஒப்புகொண்டவர்களின் பெயர்-களை மட்டும் எழுதி வைத்துக் கொண்டு திரும்பிவிடு-வார்கள். மறுநாள் மற்றொரு தெரு.
நெஞ்சத்தில் ஹைக்கூ...
கவிஞர்.இரா.இரவி/வெளியீடு:ஜெயச்சித்ரா, 6, தாளமுத்துப் பிள்ளை சந்து, வடக்கு மாசி வீதி, மதுரை-1.
பக்கம் 64, ரூ.25/-
நூல் முழுக்க ஹைக்கூ குவியல். பல சமூகம் மற்றும் அரசியல் குறித்தவை. அழகியலும் உண்டு. இங்கே சில...
மகிழ்ச்சியில் மழலை
சிறைக்கு விடுமுறை
இன்ற ஞாயிறு.
அடித்த மாடு
சண்டி
அடிக்காதீர் பிஞ்சுகளை
பூக்களைப் பறிக்காதீர்
படித்ததும் பறித்தனர்
படித்தவர்கள்?
வேடமிடும் உலகம்
பல்லக்கு ஊர்வலம்
பசியால் இறந்தவனுக்கு
எழுத்திலும் அநீதி
ஆண் நெடில் தொடக்கம்
பெண் குறில் தொடக்கம்
கதம்பம் (சிறுகதைகள்)
ஈரோடு இறைவன் : வெளியீடு : கலைஞர் பாசறைப் பதிப்பகம், 1, ஏகப்பன் தெரு, புதுப்பேட்டை, சென்னை-2.
பக்கம் 151, ரூ.60/-
பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு நூல். அத்தனையும் சமூக அவலங்களையே பிரதிபலிக்கின்றன. மருதன் கதையின் ஒரு பகுதியில் ஆசிரியரின் உள்ளம் பேசுகிறது. அது இதோ...
டே நீ கிறித்துவனா
இல்லை அய்யா!
அப்படியென்றால் நீ இசுலாமியனா
இல்லை அய்யா!
அப்ப நீ இந்து தான்
இல்லை அய்யா!
அடடே! நீ புத்த மதமா
அய்யா அதுவும் இல்லை!
அப்ப யாருதாண்டா நீ. எங்க ஊரில் நின்று கொண்டு எங்களுக்குப் புத்தி சொல்கிறான். நம்ம வயிற்றில் மண்ணைப் போடுறானே!
அய்யா என்னிடம் இல்லாத அனைத்தையும் கேட்டீர்கள். இசுலாமியனா, கிறித்துவனா, இந்துவா, புத்தமா என்று. உங்கள் கண் முன்னால் இருக்கும் உண்மையை மட்டும் கேட்காமல் விட்டுவிட்டீர்களே. நான் மனிதன். நான் ஒரு உயிர். என் அறிவுக்கும், என் படிப்பறிவுக்கும் எட்டிய வரை உலகில் இருதலை ஒட்டியவர்கள் உண்டு. இரு உடல் ஒட்டியவர்கள் உண்டு. கை, கால் உறுப்புகள் அதிக அளவில் இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். படித்தும் உணர்கிறேன். ஆனால், உலகில் இரு உயிர் ஒருவருக்கு இருந்தது. நேற்று ஓரு உயிர் எங்கோ போய்விட்டது. ஒரு உயிர் மட்டும் இன்னும் இவரிடம் இருக்கிறது எனக் கேட்டதுண்டா? பார்த்ததுண்டா? நம்மோடு இரு உயிர் கொண்டவர் பிறந்தது உண்டா? இல்லையே. அனைவருக்கும் ஒரே உயிர்தான்.
குச்சி அய்ஸ்
அமல் ராஜ்: வெளியீடு:புஷ்பம் பதிப்பம், 165, காரணீஸ்வர பகோடா தெரு, மயிலாப்பூர், சென்னை-4.
பக்கம் 218, ரூ.100/-
நூலிலிருந்து...
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்...
ஜகத்தினை அழித்திடுவோம்... இது பொய்...
தன்னைத் தானே அழித்துக் கொள்ளுகிறான்...
மனிதன் இது நிஜம்...
உண்மையிலேயே இங்கு தனி மனிதனுக்கு உணவில்லையா...
ஏன் இல்லை... அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது...
பிறகு ஏன் பட்டினிச் சாவுகள்... எங்கே பிரச்சினை...?
பங்கீடு தான்... பிரச்சினை...
குக்கிராமத்தில் ஒரு ஏழை...
அவன் ஒரு வேளை சாப்பிடும் கூழின் விலை 40 காசுகள்...
அடுத்த வேளை கிடைக்கும், கிடைக்கா-மலும் போகும்...
கிடைக்காத போது அவன் சாப்பிடுவது....
ஆடு, மாடு குடிக்கும் அசுத்தமான கம்மாத் தண்ணீர்...
நட்சத்திர ஓட்டல்களில், பணக்கார வீடு-களில்... ஒரு வேளை வெளியே வீசப்படும்... உணவின் மதிப்பு லட்சங்களில்.
பசித்த மனிதன் சாப்பிடும் உணவு 40 காசுகள்...
தெருப்பன்றிகள் சாப்பிடும் உணவு லட்சங்-கள்...
எப்படி இருக்கிறது இந்திய ஜனநாயகம்.
கண்ணீரில் எரியும் கனவுகள்
த.ரெ.தமிழ்மணி: வெளியீடு: பாவாணர் பதிப்பகம், 2-99, வேலங்குடி, கீழப்படுகை, திருவாரூர்-610 109.
பக்கம் 80, ரூ.30/-
புதுக்கவிதைகள் அனைத்தும் எரியும் கனவுகள் அல்ல; எரியும் கவிதைகள், இன உணவு, மொழி மானம், பகத்தறிவுக் கருத்துகளின் வீச்சு கவிதைகளாய் கனல் கக்குகிறது.
நூலிலிருந்து .....
ஏன் பாபர் மசூதியை..? கேட்டேன்.
செய்கிந்து என்றான்.
ஏன் பெரியார் சிலையை...?
கேட்டேன்.
செய்கிந்து என்றான்.
ஏன் பெரியாற்று அணையை....?
கேட்டேன்.
பதில் கூறாமல்
உடைத்தவன் திருப்பிக் கேட்டான்
கேள்வி கேட்கிறாயே...
நீ என்ன தீவிரவாதியா?
எதிர்த் தாக்குதல் கூடாதென்றார்கள்...
கைகட்டிக் கொண்டேன்.
கேள்வி கேட்கக்கூடாது
என்றார்கள்...
வாய் மூடினேன்.
|