சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
நாத்திக இசைக்கலைஞன் லூனஸ் மத்தூப்
நூல்: கலகம் காதல் இசை, ஆசிரியர்: சாருநிவேதிதா, வெளியீடு:உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600 018.
நூலிலிருந்து....
நீ இறந்து விட்டாலும் கூட வாழ்ந்துகொண்டு தான் இருக்-கிறாய் - ஒரு வரலாறாக, ஒரு போராட்டமாக, ஒரு நம்பிக்-கையாக
-டுடிரநேள ஆயவடிரஇன் பாடலி-லிருந்து..
1998ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, அந்தக் கார் தாக்குதலுக்கு ஆளானது. காரை 79 துப்பாக்கி ரவைகள் துளைத்-திருந்தன. அந்தக் காரில் இருந்த-வர் பெயர்:லூனஸ் மத்தூப் (1956-1998). பெர்பெர் கலாச்சாரம் என்பது 3000 ஆண்டுப் பழைமை யானது. மிக வளமையாக இருந்த மக்ரீப் பகுதி, பாலைவனமாக மாறியபோது, இவர்கள் நாடோடி-களாக மாறினார்கள். பிற்காலத்-தில் அரபு மற்றும் ஃப்ரெஞ்சு ஊடுருவலுக்குப் பிறகும் கூட இவர்கள் தங்கள் மொழியையும், கொண்டாட்டமான இசையையும் தக்க வைத்துக் கொண்டனர். இந்த பெர்பெர் இனத்தின் பெரும்பான்மையான மக்கள் அல்ஜீரியாவின் வடகிழக்கிலுள்ள கபீலியா என்று அழைக்கப்படும் மலை-கள் சூழ்ந்த நிலப் பகுதியில் வாழ்கின்றனர். ஃப்ரான்ஸிட-மிருந்து சுதந்திரம் பெறுதற்காகப் பெருமளவில் பங்கெடுத்த கபீலிய மக்கள் போராட்டக் குணமும், சுயமரியாதையும் மிக்கவர்கள். ஏனைய அல்ஜீரியர்களிடமிருந்து வேறுபட்ட தனித்துவம் மிக்க கலாச்சாரமும், கூயஅயணபைவ என்ற பிரத்தியேகமான மொழியும் கொண்டவர்கள். ஃபிரான்ஸிடமிருந்து அல்ஜீரியாவிற்கு விடுதலை கிடைத்-ததும், அதில் தங்கள் விடுதலையும் அடங்கியிருக்கும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உலகிலுள்ள எல்லா பெரும்பான்மை இனத்திடமும் காணப்-படும் ஆதிக்க குணமே அல்ஜீரியர்களிடமும் இருந்தது. அல்ஜீரியா அரபு மயமாக்கப்படுவதற்கு ஆயிரம் ஆண்டு-களுக்கு முன்பிருந்தே கபீலிய பெர்பெர்களிடம் இருந்து வந்துள்ள தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்-கவோ அவர்கள் தயாராக இல்லை; அல்ஜீரியாவின் பன்முகத்தன்மையை மறுத்து ஒரே தேசம், ஒரே இனம், ஒரே மதம் என அறிவித்தவர்கள் அரபி மொழி தெரியாதவர்-கள் உட்பட அனைத்து அல்ஜீரியர்களும் அரபி மொழி-யையே பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணையின் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டனர். மீறுபவர்களுக்கு சுமார் 10.000 ரூபாய் தண்டனை. தமாஸீர் மொழி பெர்பெர்களின் சொந்த பூமியான கபீலியாவிலேயே பள்ளிகளில் தடை செய்யப்பட்டது. மதத்தால் நாம் ஒன்றுபட்டாலும், இனத்தாலும், மொழியாலும், கலாச்சாரத்தினாலும் வேறுபட்ட வர்கள் என்று கூறிய கபீலியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மாணவர்கள் ஓர் ஆண்டு பள்ளிகளைப் புறக்கணித்தார்கள். எனினும் அரபி மொழியைப் போலவே தமாஸீருக்கும் சம உரிமை வழங்கப்படவேண்டும் என்ற அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, கபீலியாவில் அல்ஜீரியாவுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. கிட்டத்தட்ட மைய அரசின் அதிகாரம் பெயருக்குத்தான் நிலவுகிறதே தவிர, உண்மையில் அங்கே ஒரு சுயாட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனாலும் கபீலிய விடுதலைப் போராளிகள் அல்ஜீரியா ராணு-வத்தினரால் கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்வாகத் தான் இருந்து வருகிறது. 2001இல் ஒரு நாள்-ஒரு பள்ளிச் சிறுவன் ராணுவத்தால் கொல்லப்பட்டதை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடியபோது அவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. கபீலி-யாவின் இந்த விடுதலைப் போராட்டத்தைத் தனது பாடல்கள் மற்றும் இசையின் வாயிலாக முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கிய-மானவர் லூனஸ் மத்தூப்.
ஓ கென்ஸா, என் மகளே!
நாம் நம்முடைய வாழ்வைத் தியாகம் செய்திருக்கிறோம்
-நாளைய அல்ஜீரியாவுக்காக.......
எனவே, அழாதே.
ஓ கென்ஸா, என் மகளே!
1993 ஆம் ஆண்டு கபீலியப் பத்திரிகை-யாளரும், நாடகாசிரியருமான கூயாநச னுதயடிரவ கொல்லப்பட்டபோது அவர் மகள் பென்ஸா-வுக்காக லூனஸ் மத்தூப் இயற்றிப் பாடிய பாடலிலிருந்து.
கபீலியாவில் பல ஆண்டுகளாக ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இது வரை கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டுகிறது. 1998ஆம் ஆண்டு மத்தூபின் கார் தாக்கப்பட்டபோது அவருடன் அமர்ந்திருந்த அவர் மனைவியும், இரண்டு மைத்துனிகளும் படுகாயமடைந்தனர். இதே சம்பவத்தின் போது, அந்த இடத்துக்கு 300 மைல் தூரத்தில் ஒரு படுகொலை நடந்தது. கழுத்து அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அந்தப் பதினேழு பேரும் அப்பாவி கிராமத்தி-னர். இதேபோல் அந்த ஒரே வாரத்தில் மூன்று படுகொலைகள் நடந்தன.
கபீலிய மக்களால் மத்தூபின் மரணத்தை நம்பவே முடியவில்லை. மத்தூபை யாராலும் கொல்ல முடியுமா என்றே அவர்கள் ஆச்சரியத்-துடன் கேட்டனர். அந்த மரணச் செய்தி உண்மையெனத் தெரிந்தபோது கபீலியாவி-லிருந்த அத்தனை அல்ஜீரிய அரசு அலுவல-கங்களும் கொளுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் இறந்தனர்.
மத்தூபின் கொலையில் எங்களுக்குச் சம்பந்தமில்லை என்று அல்ஜீரிய அரசு மறுத்து விட்ட நிலையிலும் கலவரம் தொடரவே, அய்க்கிய நாடுகள் சபை தலையிட வேண்டி-வந்தது. மத்தூபின் கொலை அல்ஜீரியாவில் உள்நாட்டுப் போரை ஏற்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்ட சதியே என்று பல ஆய்வாளர்-கள் கருதுகின்றனர். இக்கொலையின் மூலம் நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது தீவிரவாத இயக்கமே என்று கருதிய அரசாங்கம் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நாடு முழுவதும் பல அப்பாவி இளைஞர்களைக் கொன்றது. மத்தூபின் கொலைக்கு ஒரு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டாலும் கபீலிய மக்கள் அதை நம்பவில்லை; அல்ஜீரிய அரசே அவரைக் கொன்றது என்றே அவர்கள் கருதுகிறார்கள். மத்தூப்புக்கு மக்களிடமிருந்த செல்வாக்கைப் பார்த்து பயந்த மைய அரசு அவர் வாழ்நாளில் அவரைக் கைது செய்த-தில்லை. ஆனால், அவரது பாடல்களை மட்டும் வானொலியில் தடை செய்தது. 1988ஆம் ஆண்டு நடந்த கலவரங்களின் போது, ஒரு போலீஸ்காரன் இவரை அய்ந்து முறை சுட்டு, இறந்துவிட்டார் என்று எண்ணி நகர்ந்து-விட்டான். ஆனால் மத்தூப் பிழைத்துக்-கொண்டார். அப்போது அவருக்கு 17 அறுவை சிகிச்சைகள் நடந்தன. அதன் பலனாக அவரது ஒரு கால் 5 செ.மீ. அளவுக்கு உயரம் குறைந்தது. 2 ஆண்டுகள் மருத்துவமனையில் இருந்தார்.
1992இல் இவருடைய பெயர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கொலைப் பட்டியலில் இருந்தது. காரணம் -மத்தூப் தன் வாழ்நாள் முழுவதும் நாஸ்திகவாதியாகவும், மதச்சார்-பற்றவராகவும் இருந்தார். 1994இல் ஒரு தீவிரவாதக் குழுவால் இவர் கடத்தப்பட்டார். இரண்டு வாரங்கள் ஆகியும் விடுதலை செய்யப்படாததால், கபீலியா முழுவதும் அதன் தலைநகரான கூணை டீரணடிர-வில் கூடியது. இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மத்தூபின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர். மேலும், இவரது ஆதரவாளர்கள் அல்ஜீரியா-வின் மீது முழுமையான போரில் ஈடுபடுவோம் என்று அறிவித்தனர். இத்தகைய பிரம்மாண்ட-மான மக்கள் எழுச்சிக்குப் பிறகுதான் மத்தூப் விடுவிக்கப் பட்டார். (ஆனால் இந்தக் கடத்தலே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்றது மற்றொரு கபீலிய விடுதலைக்-குழு. அக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் குநசாயவ ஆநாந. மெஹன்னியும் ஒரு பாடகர் தான்)
தான் எழுதிய சுயசரிதையான சுநநெடடய-வின் முடிவில் மத்தூப் குறிப்பிடுகிறார்: எதிர்த்துப் போராட எல்லோரையும் அழைக்கிறேன். வார்த்தைகளால் மட்டுமல்ல; தேவைப்-பட்டால் பயங்கரவாதத்தை ஆயுதங்களைக் கொண்டும் எதிர்த்தாக வேண்டும். எனது ஒருவனின் மரணத்தின் மூலம் பல போராளிகள் உருவாவார்கள் என்று மத்தூப் குறிப்-பிட்டபடியே அவர் மரணம் பல மத்தூப்களை உருவாக்கியது. இப்போது கபீலியாவில் தமாஸீர் மொழிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை வெறும் ஏட்டளவில் தான் உள்ளது. போராளிகளின் தண்டனைக்குப் பயந்து அரசு நிறுவனங்கள் எதுவும் அத்தடையை நடை-முறைப்படுத்துவதில்லை.
மொழி-கலாச்சாரம்-அரசியல் இது குறித்து மத்தூப் எழுதிய நான் எப்படி ஒரு கலகக்காரனானேன்? என்ற கட்டுரையி-லிருந்து சில பகுதிகளைக் காண்போம்.
நம்முடைய வெள்ளைக்காரத் தந்தையரு-க்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் கத்தோலிக்கப் பாதிரிகளாக இருந்தாலும், அவர்-களுடைய போதனாமுறை மதச்சார்-பற்றதாக இருந்தது. அவர்களில் ஒருவர் சங்கிலி-களால் பிணைக்கப்பட்டு ரோமாபுரிக்கு இழுத்துச் செல்லப்பட்ட யுகுர்த்தாவைப் பற்றிக் கூறினார்.
யுகுர்த்தா நமது வரலாறு. யுகுர்த்தா நமது புராணம். யுகுர்த்தாவுடைய சாகசங்கள் நமக்கு மனப்பாடம். யுகுர்த்தா நமது பெர்பெர் அரசன். ரோமாபுரியின் அடக்குமுறையை எதிர்த்த அரசன். ஆனால், அவனுடைய மனைவியின் தந்தையால் காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டான்.
நான் சிறுவயதில் படித்த அந்தப் புத்தகத்-தில் படங்களும் இருந்தன. அதில் ஒரு படத்தில் யுகுர்த்தா கையில் விலங்குடன் தன் கொட்டடி-யில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அந்தப் படம்தான் என் கண்களைத் திறந்துவிட்டது. நமது மூத்தோனாகிய பெர்பெர் அரசன் எவ்-வாறு இப்படி அவமானப் படுத்தப்பட முடியும்? அந்தக் குறிப்பிட்ட தருணத்தில், நாம் அநீதியிழைக்கப்பட்டு விட்டோம் என்ற ஓர் அந்தரங்கமான வலியை உணர்ந்தேன். நமது தலைநகர பஸ்ஸில் என்னால் ஒரு வார்த்தைகூட பெர்பெர் மொழியை பேச முடியாதவாறு நமது நாவுகள் தடை செய்யப் பட்டிருக்கின்றன. கபீலியர்கள் என்ற ஓர் இனமே இல்லாதது போல் கருதப்படுகிறது. இந்தப் புறக்கணிப்பு என்னுள் ஆவேசத்தை ஏற்படுத்தியது. அவ்வாறாகத்தான் எனது இளமைப் பருவம் கழிந்தது. அரபியை நான் வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்தேன். பெர்பெர் -நமது தாய் மொழி-தடை செய்யப்-பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக எமக்கு ஒரு மொழி வேண்டும். அது ஃபிரெஞ்சாக இருந்துவிட்டுப் போகட்டுமே?
அரபியை நான் என்றுமே என்னுடைய மொழியாக உணர்ந்ததில்லை. அதை அவர்கள் என் மீது திணித்ததால் நான் அதை நிராகரித்தேன். கபீலியாவின் மலைகளில் வளர்ந்தவன் நான். எனது வாழ்க்கையின் மொழி கபீலிதான். ஃபிரெஞ்ச், அலுவலக மொழி. இதற்கிடையில், நமது கலாச்சாரத்திற்கே அடிப்படையாக விளங்கும் தமாஸீரை நம்-மிடமிருந்து பிடுங்கித் தூக்கியெறியப் பார்த்-தார்கள். தமாஸீரையும் ஃப்ரெஞ்ச்சையும் விட்டுவிட வேண்டுமாம். முடியாது என்று மறுத்தேன். அரபி வகுப்புகளில் நான் பாடத்தைப் படிக்காமல் விளையாடினேன். நான் செல்லாத ஒவ்வொரு வகுப்பும் என் எதிர்ப்-பைக் காட்டியது. என் விடுதலையுணர்-வின் ஓர் அடையாளம் அது. என் எதிர்ப்பு மிகவும் தன்னிச்சையானது; அர்த்த பூர்வ-மானது. அந்த மொழி எனக்குள் ஊடுருவ முடிந்ததேயில்லை. இந்தத் தருணம் வரை, எனக்கு அரபியில் ஒரு வார்த்தை கூட தெரியாது. என் பெயரை மட்டுமே எழுதத் தெரியும். அவ்வளவுதான். என் பிறந்த தேதியைக்-கூட அம்மொழியில் எனக்கு எழுதத் தெரி-யாது. இந்த மறுதலிப்பின் பொறுப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
அரபு மொழி நம்மீது திணிக்கப்பட்ட-தென்றால் அதன் அர்த்தம் என்ன? பெர்பெரின் வரலாற்றுப் பாரம்பரியத்தை முற்றாக அழித்து விடுவதுதான். இதைப் புரிந்துகொள் வதற்கான வாய்ப்பை நமக்கு ஃபிரெஞ்சுக் கல்வி அளித்தது. அதன் மூலமே நமக்கு விடுதலை பற்றிய உணர்வும், அறிவும் கிடைத்தது. தெகார்த்தே, ஸோலா, யூகோ, பாதலேர் போன்றவர்களைப் படித்திருக்காவிட்டால் அது நமக்குக் கிடைத் திருக்காது. அல்ஜீரிய அரபிக் கல்வி இதை நமக்கு அளிக்கவில்லை. அது நம்மை அடக்கி ஒடுக்கி, நம் குரல்வளையைப் பிடித்து நெரித்தது. அதன் பலனைத்தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனது அடையாளத்தை இழந்து, எங்கே சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
என் மொழியான தமாஸீர் இங்கே தடை செய்யப்பட்டிருக்கிறது. நான் பேசவும், பாடவும் கற்றுக்கொண்ட மொழி. பல லட்சக்கணக்கான மக்கள் பேசும் அந்த மொழி, அல்ஜீரியா கல்வித் துறையைப் பொறுத்தவரை இல்லவே இல்லை. எனவே, என் மொழியைப் பேசுகின்ற ஒவ்வொரு தருணத்திலும் என் வாழ்வும், இருப்பும் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. நாம் நம்முடைய மொழியைப் பேசுவதே ஓர் எதிர்ப்புச் செயல்பாடுதான். நாம் வாழ்கிறோம். அதற்காக நம் மொழிக்கு நன்றி கூறுவோம். என் தாயின் மூலமாக என்னை வந்தடைந்த இந்த மொழியே என் ஆத்மா. என் பாடல்-களையும், என் கதைகளையும் கனவு கொள்ள வைத்ததன் மூலம் என்னை உருவாக்கிய இந்த மொழிக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.
இசை என்பது எங்களுக்குப் பொழுது போக்கு அல்ல; அது
எங்கள் அடையாளத்தின் குறியீடு.
-கபீலியாவின் ஒரு இசைத்தட்டு விற்பனை-யாளர் கூறியது.
1978ஆம் ஆண்டு தனது முதல் ஆல்பத்தை வெளியிட்ட மத்தூப், அவர் கொல்லப்பட்ட 1998வரை 36 ஆல்பங்களை வெளியிட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் அவர் பாடல்கள் தடை செய்யப்பட்டிருந்த போதி-லும், கபீலியாவின் முதல் தரப் பாடகராகவே விளங்கினார்.
“Although dying of hunger and exxhaution, we won’t surrender
Nor shall we kneel down as long as heroes are still among us
No matter how things for us, we will remain
With our roots and wisdom, we’ll cleanse and free Algeria
From your deceit and lies.”
-அல்ஜீரியாவின் தேசிய கீதத்தைப் பகடி செய்து மத்தூப் பாடிய பாடலிலிருந்து...
மத்தூபின் முதல் ஆல்பத்தில் நிவாரண நிதி என்று ஒரு பாடல் உண்டு. 1962இல் ஃபிரான்ஸிலிருந்து விடுதலை பெற்ற பிறகு அதன் அதிபராக இருந்த க்ஷந க்ஷநடடய ஒரு மக்கள் நலத்திட்டத்தை அறிவித்து அதற்காக மக்களிடமிருந்தே நிதி திரட்டினார். அதன்படி, அல்ஜீரியப் பெண்கள் தங்கள் நகைகள் அனைத்தையும் சுதந்திர அல்ஜீரியாவின் எதிர் காலத்துக்காக வழங்கினர். ஆனால், அந்த நகைகள் அவ்வளவும் பெண் பெல்லாவின் சொந்த கஜானாவுக்கே போய்ச் சேர்ந்தது. இதை நேரடியாக எதிர்த்து மத்தூப் பாடிய பாடலே நிவாரண நிதி .
தன் வாழ்நாள் முழுவதும் அதிகாரத்-தையும் அடக்குமுறையையும் எதிர்த்தே பாடினார் மத்தூப். 1988இல் நடந்த கலவரத்தின்போது, மக்களை அமைதி வழிக்குத் திரும்புமாறு வலியுறுத்தி தெருவில் நின்று நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோதுதான் அவர் ராணுவச் சிப்பாயால் சுடப்பட்டார். பிழைத்து எழுந்ததும் அச்சம்பவத்தை வைத்து வெட்கங்-கெட்ட ராணுவம் என்ற பாடலை இயற்றிப் பாடினார். மத்தூப் மட்டுமல்ல; அவரைப் போல் தொண்ணூறுகளில் கொல்லப்பட்ட கலைஞர்களின் எண்ணிக்கை 70. 1994இலிருந்து 98 வரை கொலை மிரட்டல் தரப்பட்ட ரய் பாடகர்கள் அய்ந்து பேர். அவர்களில் ஷாப் ஹாஸ்னியும் மத்தூபும் அடக்கம், ஹாஸ்னி கொல்லப்பட்ட அதே ஆண்டில் மத்தூப் விடுவிக்கப் பட்டார். ஆனாலும் அவரைக் கொல்வதற்கு கொலையாளிகள் மேலும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய-தாயிற்று. 1995இல் மற்றொரு ரய் பாடகர் சுயஉனை க்ஷயயெ-ஹாஅநன கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் பாடகி டுடைய ஹஅயச-உம் அவரது கணவரும் கொல்லப்பட்டனர். அடுத்த ஆண்டு கொல்லப்பட்ட ரய் பாடகர் ஷாப் அஜீஸ். அப்போது அவர் வயது:28. மத்தூபின் பாடல்களும் ரய் வகையைச் சேர்ந்தவைதான். ஆனால் மற்ற ரய் பாடகர்களுக்கும், இவருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்-றால், இவருடைய ரய் கபீலிய மொழியான தமாஸீரில் பாடப்பட்டது. கபீலியாவின் விஷேசமான, மலைப்பாங்கான நிலத்தையும், அதன் கலாச்சாரத்தையும் உள்ளீடாகக் கொண்டது மத்தூபின் இசை.
இதேபோல் கொல்லப்பட்டவர்தான் கவிஞரும், எழுத்தாளருமான கூயாயச னுதயடிரவ. 1994இல் கொல்லப்பட்ட மற்றொரு கவிஞர் லுடிரஉநக ளுநவெ. பிறகு, அல்ஜீரியாவின் மிகப் புகழ்பெற்ற நாடகாசிரியரான ஹனெநடமயனநச ஹடடடிரடய கொல்லப்பட்டார். அவரத் தொடர்ந்து அல்ஜீரிய நாடகப் பள்ளியின் இயக்குநரான ஹணணநனநே ஆயனதடிர-யும் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைப்பட்டியல் அல்ஜீரியா-வில் இன்னும் தொடர்ந்துகொண்-டேயிருக்கிறது... |