தன்னம்பிக்கை
தீ மிதிக்கும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள்
உலகமயமாதலுக்குப் பிறகு பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கிப் படை-யெடுத்தன. நல்ல ஊதியம் தரப்-படுவதால் இளைஞர்களும் அந்நிறுவனங்களை நோக்கிப் படையெடுத்தனர். இரவு பகலாக கண்விழித்து அமெரிக்காவுக்காக பி.பி.ஓ.வில் வேலை செய்யும் இளைஞர்களும் பெருகிக்-கொண்டே வருகின்றனர். அமெரிக்காவில் பகல் - இங்கே இரவு என்பதால் இந்த நிலை.
உடலியல் கூறுகளின் மருத்துவ நிபுணர்-களோ இரவு நேரம் எந்தக் குறுக்கீடுமற்ற இதமான உறக்கம் 6-லிருந்து 7 மணி நேரமா-வது இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால், பன்னாட்டு பி.பி.ஓ. நிறுவனங்களில் பணிபுரி-வோரால் இரவு நேரம் உறங்கமுடிவதில்லை. பகலிலேயே உறங்குகின்றனர். ஊரே அடங்கி அமைதியாகிய இரவு நேரத்தின் உறக்கம்போல நிச்சயம் பகல்நேர உறக்கம் இருக்காது. இப்படி உடலையும், உடல் ஓய்வின்மையாலும் மன அமைதியின்மையாலும் பாதிக்கப்படுவோர் பெருகி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இவை ஒருபுறம் இருக்க, பிற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளமும் போதிய பிறவசதிகளும் செய்து தரப்படுகிறாம். அத்தோடு ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலாவும் உண்டு. சுருக்கமாகச் சொல்வதானால் வேலை நேரம் முழுவதும் வேலையைப் பெறுவதற்கான தந்திரம்தான் இவைகளெல்லாம்.
இந்த வசதிளோடு தொழில் சார்ந்த பயிற்சிகளோடு தன்னம்பிக்கை பயிற்சியும் புதிதாக அளிக்கப்படுகிறது என்ற செய்தி அண்மையில் வெளியாகியுள்ளது. அதாவது மனதை திடமாக வைத்துக் கொள்ள, எதையும் செய்து முடிப்போம் என்ற தைரியத்தை உருவாக்கிக் கொள்ள பல களப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
மலை ஏறும் பயிற்சி, பலகை உடைக்கும் பயிற்சி (கராத்தேயி-ல் ஓடு உடைப்பது போல) படகு சாகசம், மரக்கட்டை மீது நடைப் பயிற்சி - இப்படிப் பயிற்சிகள் தரப்படுகின்றன. இந்த வரிசையில் தீ மிதிக்கும் பயிற்சியும் தரப்படுகிறது என்பது ஒரு புதுமையான செய்திதான்.
தீ மிதிக்கும் பக்தர்களின் செயலுக்கு மனித சக்தியே காரணம். அதற்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்பதை நிரூபித்து தமிழ்-நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திராவிடர் கழகம் அறிவியல் விளக்க நிகழ்ச்சியாக நடத்தி வருகிறது. தீ மிதிக்கும் பக்தர்களோ பல நாட்களாக விரதம் என்ற பெயரில் காலில் செருப்பு அணியாமல் வெறுங்-காலுடன் நடந்து காய்ப்பேறி காலால் நெருப்-பில் நடப்பார்கள். ஆனால் பெரியார் தொண்டர்-கள் எந்த விரதமும் இல்லாமல் செருப்பு-டன் நடந்த மென்மையான கால்களா-லேயே நெருப்பை மிதித்துக் காட்டி வரு-கின்றனர்.
எந்த ஒரு மனிதனாலும் சாத்தியமே என்-பதை அறிவியல் உண்மை.
இப்போது இந்த கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்குப் பயிற்சி தரும் தன்னம்பிக்கை பயிற்சியாளர்கள் புதுவிதமான விளக்கங்களை சொல்கிறார்கள். எந்த ஒரு செயலையும் நம்மால் செய்ய முடியாதோ என்ற தயக்கம் காரண-மாக அதை நாம் தள்ளிப் போடுவோம். செய்யமுடியாது என்று நினைப்பதை செய்ய முடிகிறது என்பதைத்தான் இந்த தீ மிதித்தல் காட்டுகிறது என்று கூறுகிறார் பயிற்சியாளர்.
இனி அம்மன் பேரைச்சொல்லி ஊரை ஏமாற்றும் தீ மிதியெல்லாம் பக்திக்குத் தீனி-போடாது. மன வலிமையையும், தன்னம்-பிக்கையையும் தவிர பிற பரலோக பக்திக் கெல்லாம் பாடைகட்ட வேண்டியது தான்.
-அன்பன் |