உலகப்பார்வை
உலகத் தரம் பெற்ற கியூபாவின் மனித உரிமை
"அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகப் பிறக்கிறார்கள். மதிப்பிலும், உரிமைகளிலும் அனைவரும் சமம் எனப் பிரகடனப்-படுத்துகிறது சர்வ தேச மனித உரிமைக் கழகம். ஆனால், அந்தக் கூற்று என் காலடிக்குச் சமம் என்கிறது அமெரிக்கா. பொருளியல் பலம், பிரச்சாரப் பலம், தலையாட்டி நாடுகள் ஆகிய-வற்றை தன்னகத்தே கொண்டு, ரத்தக்களறியி-னால் ஆட்சிக் கவிழ்ப்புகளைச் செய்து வருகிறது அது. ஜனநாயகம், மனித உரிமை இவ்விரண்டையும், தன் காலணியாக்கி, உலக நாடுகளைக் காலனியாக்கத் துடிக்கிறது அமெரிக்கா. ஆனால், கியூபா குறித்து அது என்ன செல்கிறது. கியூபாவில் மனித உரிமை உருக்குலைந்து போனது, ஜனநாயகம் செத்துவிட்டது. மனிதர்கள் வாழ அச்சப்படு-கிறார்கள் என ஒப்பாரி வைக்கிறது. இந்த ஒப்பாரிக்காக 250 கோடி டாலரும் ஒதுக்-கியுள்ளது. ஆனால், கியூபாவின் மனித உரிமை எப்படியானது என்பதை நேர்மையாளர்கள் அறிவர்.
கியூபாவின் தலைசிறந்த மக்கள் புரட்சி
மனிதனை மனிதன் அடிமை செய்யும் கொடுமையை என் இரத்தத்தால் களைவேன் என்றார் கியூபாவின் முதன்மைப் போராளி ஹொஸே மார்த்தி. அதன் பின் புரட்சியின் மூலம் 1959களில் ஆட்சிக்கு வருகிறார் பிடல் காஸ்ட்ரோ. இன்றைக்கு 48 ஆண்டுகள் முடிந்து போய்விட்டன. அவர் கால்களின் நெகத்திற்குக்கூட சிராய்ப்பு ஏற்ப முடிய-வில்லை. அமெரிக்காவின் வஞ்சகமான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அடிபணியாதவர், எதிர்த்து நின்று கேள்வி எழுப்பும் முதகெலும்புக்காரர், அற்புதமான சுயமரியாதைக்காரர்! அதனால் தான் அமெரிக்கா அவரை 600 முறை கொலை செய்ய முயற்ச்சித்தது. கியூபாவுக்கு எதிராக தனி வானொலியே அமைத்து, அதற்கு ஹொஸே மார்த்தி எனப் பெயரிட்டது. கியூபாவில் மனித உரிமை மலிந்தது. பாதுகாப்பு இல்லை எனக்கூறு, புதுவாழ்வு தருவதாக மூளைச் சலவை செய்து கள்ளத் தோணி மூலம் கியூபர்கள் கடத்திச் சென்றது அமெரிக்கா. கியூபாவின் தனித்தன்மை, தனிச் சிறப்பு என்ன தெரியுமா? உலக நாடுகளின் தலைவலி அமெரிக்கா, அமெரிக்காவின் தலைவலி கியூபா!
கியூபாவின் சிறைச்சாலை
உலக நாடுகளில் மனித உரிமை அதிகம் பாதிப்பது சிறைக் கூடங்களில். அதற்கான அதிகாரம் இராணுவத்திடமும், காவல் துறையிடமும் இருக்கும். ஆனால், கியூபாச் சிறைச்சாலை என்பது இதிலிருந்து முற்றிலும்-வேறுபாடானது. சிறையில் உள்ள கைதியிட-மோ, காவலில் உள்ள மனிதரிடமோ சிறு வன்முறையையும் பயன்படுத்தாதவர்கள். தன்புறுத்தப்படுவதோ, அவமானப்படுத்து-வதோ கிஞ்சிற்றும் கிடையாது. ஒரு கைதி ட கொலை செய்யப்பட்டதில்லை.
48 ஆண்டுகளில் மக்களுக்கு எதிராக காவல்துறையைப் பயன்படுத்தாத ஒரே புரட்சி அரசு கியூபா என்றால் உங்களுக்கு ஆச்சர்ய-மாக இருக்கும். ஆனால், அது தான் உண்மை! கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் தோட்டாக்கள், மோப்ப நாய்கள் இவைகள் கியூபா மக்கள் அறிந்திராதவை. ஆனால், ஜனநாயகம் என்றும், சுப்பர் ஜனநாயகம் என்றம் பேசும் உலக நாடுகளில் இவைகளை எப்படி பயன்படுத்தி வருகிறது என்பதை நாமறிவோம். கியூபாத் தெருக்களில் சென்று கொலை, சித்திரவதை, காணாமல் போதல் குறித்து கேட்டுப்-பாருங்கள்... அவர்களுக்கு அந்தக் கேள்வியே புதியதாக இருக்கும்.
கைதிகள் எங்களின் வெற்றிகள்
கைதிகள் எங்களின் வெற்றிகிள், என்று சொன்னார் பிடல் காஸ்ட்ரோ. காரணம் அவர்களை நாங்கள் மதிக்கும் விதம் அப்படி என்றார். கியூபாச் சிறையிலிருந்து வெளியேறும் கைதிகள் ஆரோக்கியமான மனிதர்களாகவே செல்கிறார்கள். சிறைகளில் வன்முறைகளை அறவே அனுமதிப்பதில்லை. (இவ்விடத்தில் ஈராக்கின் அபுகிரைப் சிறைச்சாலையை நினைத்து விடாதீர்கள்) சில நேரம் கைதிகள் சீருடை அணிய மறுப்பதுண்டு. ஆனால் கட்டாயப்படுத்துவது கிடையாது. வன்முறை-யைப் பயன்படுத்துவதைவிட ஒழுங்கின்-மையைப் பொறுத்துக் கொண்கிறார்கள். கியூபாவில் அனைவருக்கும் ஒரே சட்டம் தான். அமெரிக்காவின் அடிவருடியாக மாறி, கியூபாவிற்கு சேதம் விளைவித்தாலும், அவ-ரையும் சாதாரண சட்டத்தின் கீழ்தான் விசாரிக்கிறார்கள்.
15,000 கைதிகள் சிறையில் இருந்தார்கள். அவர்களில் தண்டனைக் காலம் முடியும் வரை இருந்தவர்கள் மிகச் சிலரே. பெரும்பாலும் விடுவிக்கப்பட்டனர். எதனால், ஏகாதிபத்திய நெருக்கடியாலா? என்று கேட்பார்கள், இல்லை. புரட்சியின் பெருந்தன்மையால் என்று சொன்னார் பிடல்! எந்த அமெரிக்கச் சிறையிலும் கியூபாக் கைதிகளுக்கு இந்த வசதி கிடைக்குமா? எங்களிடம் கைதியாக இருந்து சென்றவர்கள், மீண்டும் எங்களுக்கு இடையூறு தரமாட்டார்கள். காரணம் கியூபா போற்றும் மனித உரிமை அப்படி!
காந்தனாமோ
கியூபா மண், மனித உரிமைக்கு எப்படி பெயர் பெற்றதோ, அதே மண்ணில் தான் காந்தனாமோ சிறையும் இருக்கிறது. இது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமெரிக்க இராணுவச் சிறை. 1903ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகன் எஸ்ட்ராடா பால்மா, கியூபாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த போது, அமெரிக்காவின் கப்பல் படை கியூபாவில் இயங்கலாம் என அனுமதித்து-விட்டார். அதன் தொடர்ச்சி தான் இந்த காந்தனோமோ சிறை. இந்த சிறையின் சிறப்புகள் என்ன தெரியுமா?
அண்மையில் ஈராக்கின் அபுகிரைப் சிறை-யின் கொடுமைகள் கண்டு உலகமே கண்ணீர் விடுத்ததே, அதற்கான பயிற்சி கொடுத்த இடம் இந்த காந்தனோமோ சிறை தான். முதல் தரமான கொடுமைகளும், வன்முறைகளும் இச்சிறையில்தான் தொடங்கும். இந்தச் சிறைச்சாலையின் அகராதியில் விடுதலை என்கிற வார்த்தையே கிடையாது. அய்.நா.-சபையின் விசாரணைக் குழு ஒன்று இச்சிறை-க்கு சித்திரவதை முகாம் எனப் பெயரிட்டது. 2006ஆம் ஆண்டு மே மாதம் அய்.நா.சபையின் மனித உரிமைக் கழக அதிகாரிகள் இச்சிறை உடனடியாக மூடப்பட வேண்டும் என்றார்கள். அமெரிக்காவும், அய்.நாவுக்குப் பயந்து சிறையை மூடிவிட்டதாக நினைக்காதீர்கள். மாறாக 3 கோடி டாலர் செலவழித்து சிறையை விரிவுபடுத்தியது. இந்தச் சிறையில் மட்டும் வெளிநாட்டவர்கள் 10,000 பேருக்கு மேல் கைதிகளாக உள்ளனர்.
உங்கள் நாட்டில் மனித உரிமை மீறல்கள் நடப்பது உண்மையா? என்று கேட்ட போது, கியூபா வெளியுறவுத் துறை அமைச்சர் பெலிப் பேரெஸ்ரோக் இப்படிச் சொன்னார். உண்தை தான்! கியூபாவில் உள்ள அமெரிக்கா காந்தனா-மோ சிறையில் தான் அப்படி நடக்கிறது, என்றார்.
கியூபாவின் அங்கீகரித்த உலக நாடுகள்
கியூபாவை வீழ்த்த இராணுவ நடவடிக்-கையும், தீவிரவாதமும் உதவாது என நினைத்த அமெரிக்கா சில தன்னார்வ(?) குழுக்களை விலைக்கு வாங்கி கியூபாவில் மனித உரிமை மீறல் நடப்பதாக கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சரம் செய்தது, பொருளாதார நெருக்கடி, படையெடுப்பு அச்சுருத்தல், படுகொலை நடவடிக்கைகள், நாச வேலைகளும் ஒரு புறம் தொடர்ந்து வந்தது. உலகில் 60 நாடுகளுக்கும் மேல் இராணுவப் படையெடுப்பை நிகழ்த்திய அமெரிக்கா, கியூபாப் பயங்கரவாதம் குறித்து வாய்கிழிய கத்திப் பார்த்தது, கியூபாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடத்தியது. ஜெனிவாவில் நடந்த மனித உரிமைக் கூட்டத்தில் கியூபாகுறித்து பக்கம், பக்கமாய் புகார் வாசித்தது-ஆனால் இறுதியில் நடந்தது என்ன?
உலகின் 135 நாடுகளின் பேராதவுடன் பன்னாட்டு மனித உரிமைக் கழகத்தில் கியூபா உறுப்பினராகி விட்டது. அய்.நா.அவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பு நாடுகள் கியூபாவை அணைத்துக் கொண்டன. இந்தளவிற்கு மனதி உமை (?!) குறித்துப் பேசும் வட அமெரிக்கா, இதுவரை மனித உரிமைக் கழகத்தில் உறுப்பினராகவில்லை. குறைந்த பட்சம் வேட்பாளராகக் கூட நிற்கவில்லை. தாம் தோற்றுப் போவோம் என்கிற எண்ணமும், தாம் செய்துவரும் அசிங்கங்களும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
மனித சமூகத்திற்கு கியூபாவின் பங்களிப்பு
கியூபா அரசும், கியூபா மக்களும் மனித சமூகத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பு அளவிடற்-கரியது. ஏனெனில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடைகளை அனுபவித்து, அமெரிக்காவின் நேரடியான தொடர் தாக்குதல்களைச் சந்தித்து வரும் நிலையில் தானும் முன்னேறி, உலக நாடுகளுக்கம் உதவிகள் செய்வதென்பது அசாதரணமானது. கியூபாப் புரட்சியின் வெற்றிக்கும், அதைப் பாதுகாக்கும் திறமைக்கும் அவர்களின் கொள்கைப் பிடிப்பே காரணம் இருந்து வருகிறது. எங்களுக்குத் தேவை செயல்கள், சொற்கள் அல்ல என்கிறார்கள் கியூபாக்கள்.
கியூபா வேறு! அமெரிக்கா வேறு!
அமெரிக்கா 1,50,000 இராணுவத்தினரை உலக நாடுகளுக்கு அனுப்பி, அந்நாடுகளை ஊடுருவி அழிக்க அனுப்பியுள்ளது. கியூபா சொல்லொணா கொடுமைகளை அனுபவித்து, கடுஞ்சூழலை தாங்கி நின்று 30,000 கியூபா மருந்துவர்களை 70 நாடுகளுக்கு மருத்துவ சேவை செய்ய அனுப்பியுள்ளது.
அமெரிக்கா 1,00,000 இராக்கியர்களை கொன்று குவித்து, அந்நாட்டு எண்ணெய் வளத்தை உறிஞ்சிக் குடிக்கிறது. அதே வேளை 26 இலத்தீன் அமெரிக்க நாடுகளில் 3,00,000 பேர்களுக்கு இலவச கண் சிகிச்சையை கியூபா மருத்துவம் செய்கிறது.
அமெரிக்கா விமானங்களில் மயக்க மருந்து செலுத்தப்பட்டு, கைவிலங்குப் பூட்டப்பட்டு, கைதிகளை ஒரு சிறையில் இருந்து வேறொரு சிறைக்கு இரகசியமாக கொண்டு செல்ல விரைகிறார்கள். கியூபா விமானங்கள் இயற்-சைப் பேரழிவுகளும், கொள்ளை நோய்களும் தாக்கிய பகுதிகளுக்கு நடமாடும் மருந்துவ-மனையாக, மருத்துவர்களுடன் விரைந்து செல்கிறது.
வெல்வார் என்பது நிச்சயம்!
வல்லரசு நாடான அமெரிக்கா இந்த உலகிற்கு ஆற்றி வரும் உதவிகள், பங்களிப்புகள் எத்தகையது? சின்னசிறு நாடான குட்டி கியூபா ஆற்றும் பங்களிப்பு எவ்வாறானது? வதந்திகள் வேகமாகப் பரவும். ஆனால், நிலைத்திருப்பதில்லை என்பதை அமெரிக்கா உணர வேண்டும். ஒரு அய்ந்து ஆண்டு காலம் அதிபர் பதவியில் இருப்பதற்கே இவ்வளவு திறமை(?) என்றால், கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ 48 ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். அம்மக்களுக்கு பிடலின் முகம் இன்னும் சலிக்கவில்லை. ஒவ்வொரு கியூபரும் சொல்ல வருவது இதைத்தான், கியூபாவை எதிர்ப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணை போகிறவர்களுக்கும் எங்களிடம் ஒரு செய்தி உண்டு. தாய்நாடு அல்லது வீரமரணம்!. |