தலையங்கம்

தந்தை பெரியார்

ஆசிரியர் பதில்கள்

அநீதி

வடபுலம்

பதிவுகள்

குரல்

பாலியல் நீதி

இந்துத்துவா

கவிதை
சிறுகதை
எப்படி
ஹாலிவுட் கலை
நூல் அறிமுகம்
அறிவியல்
குறுங்கதை
நடிகவேள் எம்.ஆர்.ராதா
சிறந்த நூலிலிருந்து
தன்னம்பிக்கை
உலகப்பார்வை
பார்ப்னர்கள்
பெட்டிச் செய்திகள

 

 

 

 

பெட்டிச் செய்திகள்

திருக்குறள் - கடவுள் வாழ்த்து

"பெரியார் ஒருமுறை என்னிடம் திருக்குறளுக் குப் புத்துரை எழுதும்படித் தூண்டினார். அப்போது கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்றும் கூறினார்.
நான் திருவள்ளுவரையும் உயர்வாக மதிக்கிறேன். உங்களையும் உயர்வாக மதிக்கிறேன். உங்களுக்காக திருவள்ளுவரின் கொள்கையைப் பொய்ப்பிக்க விரும்பவில்லை. அதேபோல், திருவள்ளுவருக்காக உங்களுடைய கொள்கை யையும் பொய்ப்பிக்கவும் நான் விரும்பவில்லை. உங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்று என்று நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது எழுதுகிறேன் என்று பெரியாரிடம் சொன்னேன்.
இதை நான் பாரதிதாசனிடம் கூறியபோது, பெரியார் சொன்னது கிட்டத்தட்ட சரிதான். முழுக்கவும் சரி இல்லை. ஆனால் பெரியார் சொன்ன குறிக்கோளின் அடிப்படையிலேயே தொடக்க கால சித்தாந்தமே அடங்கி இருக்கிறது. நடுவில் ஆரியம் கலந்ததால் அதன் தோற்றங்களெல்லாம் மாறி இருக்கின்றன. சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளு வருடைய கருத்துக்குப் போகலாம் என்று குறிப்பிட்டார். பாரதிதாசன் கூறிய இந்த விளக்கம், எனக்குப் பிற்காலத்தில் கை கொடுத்து உதவியது. இந்த அடிப்படையில் தான், நான் திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கினேன். பாரதிதாசன் இப்போது உயிரோடிருந்தால், அந்த உரையை விரும்பி வரவேற்றிருப்பார். நல்ல குறிக்கோளை நாடிச் செல்லும் உள்ளப்பண்பு தான், நாகரிகத்தின் வளர்ச்சியாக அமைந்தது என்று காந்தியடிகள் லண்டனில் குறிப்பிட்டார். கடவுளுக்கு அவர் கொடுத்த விளக்கமும், திருக்குறளில் கடவுள் வாழ்த்துக் கொள்கையும் ஒன்று தான் என்பது என் கருத்து.
-க.அப்பாதுரையார், (நூல்: பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் பக்கம் 306.) தகவல்-சேக்கிழான். சென்னை-81.


குலக்கல்வித் திட்டம்

பெரியார் ஒருமுறை என்னிடம் திருக்குறளுக் குப் புத்துரை பெரியார் குலக் கல்வித் திட்டத்தை எதிர்க்காமல் இருந்தால்-இன்று ஆரியரல்லா மற்றோர் யாருக்குமே மேல்நிலை அடைய இயலாது.
1928இல் பிறந்த நான் 1946இல் இடைநிலைக் கலை முடிந்து மதுரை நூற்பகத்தில் சேர்ந்து விட்டேன். ஆனால் என்னுடன் படித்த நண்பர் எஸ்.கண்ணன் (கலைஞரின் உறவினர்) சென்னை சட்டக் கல்லூரிக்கும் மதுரை சட்டக் கல்லூரிக்கும் விண்ணப்பித்தார். இரண்டிலுமே இடம் கிடைக்க வில்லை. பின் ஒரிசா சட்டக் கல்லூரியில் அஞ்சல்வழி கல்வி பயின்று எல்.எல்.பி.பட்டம் பெற்று பின் மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் மேல் வழக்கு நடந்தபொழுது அவர்களுக்காக வாதாடினார்.
1946இல் மதுரையில் வக்கீல் புதுத்தெரு என்ற 600 வக்கில்களால் ஆன தெரு ஒன்று உண்டு. அத்தெருவில் தாத்தா, மகன், பேரன் மூவருமே வக்கீல்கள் ஆக இருப்பவர். வேறுயாரும் வக்கீல்கள் ஆக விடுவதில்லை. 1960ஆம் ஆண்டு இராமநாதபுரம் பேரரசர் உறவின் வகையாக செல்லத்தேவர் அவர்கள் வழக்குரைஞராக ஆனார். அதற்குப் பின் தான் குலக்கல்வி முறை ஒழிக்கப்பட்டு மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள் படித்து வந்தார்கள். ஏன்? ஆசிரியர்கள் கூட 90 சதவிகிதம் பார்ப்பனர்களே.
இன்றுள்ள மாணவ சமுதாயத்திற்கு அன்று நேர்ந்த அவலங்களை அறியச் செய்வது நன்று.
-ரவிக்கவிஞன், சென்னை-92.


கபில்தேவின் புதிய அணி

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கபில்தேவ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய அணியின் தலைவர். (கடைசியும் இவராகத் தான் இருப்பாரோ?) பார்ப்பனரல்லாதவரான கபில்தேவ் தனக்காக விளையாடாமல் குழுவிற்காக விளையாடியவர். அதனால்தான் உலகக் கோப்பையை வென்றார். ஆனால் இவருக்குப் பின் வந்த பல பார்ப்பன கேப்டன்கள், ஆட்டக்காரர்களால் இதுவரை உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு நிரந்தரமாக உள்ள அரசியல், பார்ப்பன ஆதிக்கம் இன்னும் அப்படியே உள்ளதால் இந்தநிலை. இதன் உச்சகட்டமாக அண்மையில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்து கபில்தேவ் நீக்கப்பட்டுள்ளார். கபில்தேவ் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்த அய்.சி.எல். த.இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். இதில் 44 முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இணைந்துள்ளனர். எவ்வளவோ மிரட்டியும் அய்.சி.எல். வலுப்பெற்று வருகிறது. பின்னணியில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரச்சினை இருக்கக்கூடும் என டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு பேச்சு என அங்குள்ள பத்திரிகைகள் எழுதுகின்றன.


துருக்கி தப்புமா?

அய்ரோப்பாவின் நோயாளி என வர்ணிக்கப்பட்ட துருக்கியின் நிலையை அடியோடு மாற்றியமைத்தவர் கமால் அத்தாதுர்க் எனும் முஸ்தபா கமால் பாட்சா. மத அடிப்படைவாதிகளை ஆட்சியிலிருந்து அகற்றி மதச்சார்பற்ற துருக்கியை உருவாக்கினார். இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினராக வாழும் துருக்கி ஒரு மதச்சார்பற்ற குடியரசாகவே திகழ்ந்து வருகிறது. அண்மையில் அங்கு நடந்த தேர்தலில் முதல் முறையாக ஒரு இஸ்லாமிய அடிப்படை மத உணர்வாளரான அப்துல்லா குல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் மீண்டும் மத அடிப்படைவாதிகளின் கைக்குள் துருக்கி சிக்குண்டு விடுமோ என துருக்கியின் மதச்சார்பற்ற மக்கள் கருதுகின்றனர். ஆனாலும் அதிபர் அப்துல்லா குல், துருக்கியில் மதச்சார்பற்ற தன்மையை நிலை நிறுத்தி அனைவரின் அதிபராகத் திகழ்வேன் என்று கூறியுள்ளார். அதிபரின் மனைவி பர்தா அணிந்திருந்ததால் ராணுவ நிகழ்ச்சி ஒன்றிற்கு அதிபரை அழைத்த ராணுவம் அதிபரின் மனைவியை அழைக்க மறுத்துவிட்டது. இதற்குக் காரணம், அதிபரின் மனைவி பர்தா அணிந்து நாட்டின் மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவித்துவிட்டார். அதனால் அழைக்கவில்லை என்று ராணுவம் கூறிவிட்டது. மதச்சார்பின்மை அங்கு நீடித்தால் நல்லது. துருக்கி தப்புமா பார்க்கலாம்.


இன்னொரு புதிய கட்சி

சினிமாவை ரசிப்பவர்களால் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் நடிகர்கள் எல்லாம் கட்சி தொடங்கி விடுகிறார்கள். தனது ரசிகர்கும்பலுடன் கொடிபிடித்து கோஷம் போட்டு தங்கள் சுயவிளம்பரத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இரண்டாண்டுகளுக்கு முன் ஒருவர் கட்சி தொடங்கினார். இப்போது ஒருவர் கட்சி தொடங்கியுள்ளார். ஆனால் எந்தக் கொள்கைத் தெளிவும் இல்லாமல் கட்சி அமைப்பது தான் இளைஞர்களை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்கிறது. இளைஞர்களுக்கு நல்வழிகாட்டவே நான் கட்சி தொடங்கினேன் என்று சொல்லியுள்ளார். புதிய கட்சியின் தலைவர் சரத்குமார். (அண்ணனுக்கு வயது அய்ம்பதுக்கு மேலே) இதற்கு அடுத்து இவர் உதிர்த்த முத்துதான் மிகவும் ஆபத்தானது. நமது கலாச்சாரத்தில் ஜாதிகள் இருப்பதை யாரும் அழிக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளது. இதுதான் அந்த முத்து. ஏன் இப்படிச் சொல்கிறார் தெரியுமா? இவர் நம்பிக் கொண்டிருப்பது தனது ஜாதி இளைஞர்களை. அவர்களைத் தக்கவைக்க, மேலும் ஈர்க்க இப்படி வாய்ஜாலம் பேசியுள்ளார். பெரியாரின் ஆதரவில் எல்லாத் தமிழர்களும் கல்வி கற்க ஆயிரக்கணக்கில் பள்ளிகளைத் திறந்த காமராசரையும் இவர் விடவில்லை. அவரையும் ஜாதி வட்டத்தில் அடைத்துள்ளார் சரத்குமார். கட்சியின் பெயர் அகில இந்திய சமத்துவக் கட்சி. ஆனால் பேசும் பேச்சோ ஜாதிகளை ஒழிக்க முடியாது. இன்னொரு புரியாத கொள்கையையும் வடித்துள்ளர்கள். அதாவது இட ஒதுக்கீட்டு முறையில் பொருளாதார அடிப்படையையும் இணைத்துக் கொள்வது என்று ஒரு விளங்காத கொள்கையையும் அறிவித்துள்ளார். சுயநல அரசியல் வெறிக்கு இளைஞர்கள் ஆட்படுவது நல்லதா என தென்மாவட்ட இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
-அன்பன்

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra