சேதுக் கால்வாய்த் திட்டம்:
புதிய வழித்தடம் என்பது மக்களை ஏமாற்றும் செயல்
மன்னார் வளைகுடாவிற்கும், பாக். கடலுக்கும் (பாக். நீரிணைப்பு) இடையில் உள்ள ஆதாம் பாலத்தில் உள்ள கடல் பகுதி மிகவும் ஆழம் குறைந்து காணப்படுவதால் சிறு படகுகள்கூட இவ்விடத்தை இன்று கடக்க இயலாது. இப்பகுதியை ஆழப்படுத்தி அவ்வாறே பாக். நீரிணைப்புப் பகுதியில் 8 மீட்டர் அல்லது அதற்கு அதிகமாக உள்ள இயற்கை ஆழத்தை 12 மீட்டர் வரை ஆழப்படுத்தி, 300 மீட்டர் அகலமுள்ள ஒரு கப்பல் வழிப்பாதை நடுக்கடலில் அமைப்பதுதான் இந்த சேது சமுத்திரத் திட்டம் ஆகும்.
இது தமிழர்களின் - மக்களின் - 140 ஆண்டு காலக் கனவு ஆகும்.
இதற்கு முன்பு 2450 கோடி ரூபாய் செலவாகும் இத்திட்டத்தினை - எவ்வளவோ வற்புறுத்தியும்கூட, முந்தைய அரசுகள் செயல்பட எடுத்துக் கொள்ளவில்லை.
வாஜ்பேயி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக முன்னணி (சூனுஹ) அதன் கூட்டணிக் கட்சிகள் தி.மு.க., உள்பட (அப்போது) அழுத்தம் கொடுத்ததை ஏற்று பூர்வாங்க முயற்சி தொடங்கப்-பட்டது. காலதாமதம் செய்ததுடன் யானைப் பசிக்குச் சோளப் பொரி போல குறைவான நிதி சுமார் 300 கோடிக்குள்ளே தான் ஒதுக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை அவர்கள் இழந்து விலகினர்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (சூனுஹ) திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமை-யில் அமைந்து, அது பிரதமர் மன் மோகன்சிங் அவர்கள் தலைமையில், கலைஞர் அவர்களின் வழி காட்டுதல் ஆலோசனையின் பேரில் மத்தியில் சிறப்பான ஓர் ஆட்சி அமைத்தது.
இடதுசாரிக் கட்சிகள் வெளியில் இருந்துகொண்டு இவ்வாட்சிக்கு ஆதரவு தந்து வருகிற நிலையில், கப்பல் துறையை தி.மு.க., பெற்று, சேது சமுத்திரத் திட்டத்தை முழு வீச்சுடன் செயல்படுத்த அத்தனை முயற்சி-களையும் அதன் ஆற்றல்மிகு அமைச்சர் திரு. டி.ஆர். பாலு அவர்கள்மூலம் செய்து வருகிறது.
2.7.2005 மதுரையில் பிரதமர் தலைமையில், திருமதி சோனியா, கலைஞர், கூட்டணித் தலைவர்கள் கலந்துகொண்ட தொடக்க விழாநடை-பெற்றது.
பணிகள் மிக வேகமாக நடைபெறத் தொடங்கியதோடு, 2008-க்குள் இது முடி-வடைந்து, சேது கால்வாய் வழியே கப்பல்கள் செல்லும் என்று, கப்பல்துறை அமைச் சர் டி.ஆர். பாலு அவர்களால் அறிவிப் புச் செய்ததை பதவி இழந்து எதிர் வரிசைக்கு மக்களால் தள்ளப்பட்ட பா.ஜ.க., (சங் பரிவாரத்தின் அரசியல் வடிவம்) அதன் கூட்டணிகள், அமைப்புகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
2005 முதலே நீதிமன்றங்களைத் தேடி அலைந்து, இத்திட்டத் தைத் தடுத்து நிறுத்த தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகின் றனர். எதிலும் தடை ஆணையை பெற முடிய-வில்லை அவர்களால்.
30.6.2005 இல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வழக்கு, 15.2.2006 இல் சாமி ஓம்காரனந்தா என்ற ஒரு சாமியாரைவிட்டு இராமநாதபுரம் இந்துக்கள் சார்பாக, அங்கே ஒரு (சூட்) வழக்கு, 6.11.2006 இல் சிவ்சாகர் திவாரி என்ற பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு (தள்ளுபடி செய்யப்பட்டது), பெர்னாண்டஸ் வழக்கிலும் இடைக்காலத் தடை கோரப்-பட்டது. அது உச்சநீதிமன்றத்தால் தரப்-படவில்லை.
11.5.2007 சென்னை - உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி இராம. கோபாலன் வழக்குப் போட்டார்.
13.5.2007 சுப்பிரமணிய சுவாமி சென்னை - உயர்நீதிமன்றத்தில் வழக்கு (திட்டத்திற்கு ஆதரவாக தி.க.,வும் தன்னை இணைத்து வழக்கு மன்றத்தில் வாதாடியது).
18.5.2007 தண்டி சாமி விஜயானந்த பாரத்-ஜி என்ற சங்கராச்சாரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
31.5.2007 கிருஷ்ண சொரூப் பாண்டே என்ற வழக்கு
(இத்தனை வழக்கிலும் ஜார்ஜ் பெர்னாண்-டசை தவிர மற்ற அத்தனை பேரும் பார்ப்-பனர்கள் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்).
எந்த வழக்கிலும் இதுவரை இடைக்காலத் தடை ஆணை வழங்கவில்லை என்றவுடன், மீண்டும் மீண்டும் வழக்குகளை அடுக்கடுக்-காகப் போட்டனர்!
இந்தத் திட்டத்தை செயல்படுத்துமுன் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்று அத்துறை வல்லுனர் குழுவால் உரிய வகை-யில் ஆய்வு செய்யவேண்டிய கட்டாயம் சட்டப்படி உண்டு என்பதாலும், புவியியல் ஆய்வுத் துறை (ழுநடிடடிபஉயட ளுரசஎநல), அகமதாபாத் விண்வெளி ஆய்வு மய்யம் போன்ற பலவற்றினையும், தொல்பொருள் ஆய்வுத்-துறை அத்துணை அமைப்புகளின் சான்றும் (ஊடநயசயஉந) பெற்றே இந்த ஆறாம் வழித் திட்டம் என்ற ஆதாம் பாலம் (இது ஆதாம் ஏவாள் இலங்கையில் தோன்ற ஆதாம் இதனைப் பயன்படுத்தியதாக ஒரு கற்பனைக் கதை) 103 மணல் திட்டுகள், குன்றுகளை-யொட்டியே அமைந்துள்ளது!
தொடக்கத்தில் மீன் பிடிப்புத் தொழில் பாதிக்கப்படும் என்று தூண்டிவிட்டு, புரளி கிளப்பினர் இந்த வழக்காடிகள். பிறகு சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படும் என்றனர். நாகபுரியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் (சூநுநுசுஐ) நீரி என்ற சுற்றுச்சூழல் ஆய்வு மய்யம் அதனை ஆய்வு செய்து, எந்தக் கேடும் வராத குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற சிறந்த தடம் ஆறாம் வழித்தட-மான ஆதாம் பாலம் பகுதியில் அமைவதுதான் என்று கூறிவிட்டது!
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இன்று இராமன் பாலம் என்று கூச்சல் கிளப்பி, இத்திட்டத்தைக் கிடப்பில் போட முயற்சிக்கும் இதே பி.ஜே.பி., ஆட்சியில் இருந்த கப்பல் துறை அமைச்சர்கள் கையொப்-பமிட்டுத்தான், யோசிக்கப்பட்டு மற்ற வழித் தடங்களைவிட இதுதான் எளிதானது, சிக்கனமானது, விரைந்து செய்யக்கூடியது என்று உறுதி செய்துள்ளனர் என்பது மறைக்-கப்படும், மறுக்க முடியாத உண்மையாகும்.
1. 9.3.2001 இல் அமைச்சர் அருண்ஜேட்லி
2. 25.10.2002 இல் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர்
3. 29.10.2002 இல் அமைச்சர் வி.பி. கோயல் அதற்கு முன் அமைச்சர் சத்ருகன் சின்கா (நடிகர்) ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாகபுரியில் உள்ள சூநுநுசுஐ அமைப்பிடம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யுமாறு (நுஎசைடிஅநவேயட ஐஅயீயஉவ ஹளளநளளஅநவே) 27.1.1994 இல் கூறப்பட்டு, பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் 2004 ஆகஸ்ட்டில்தான் அந்த அமைப்பு முழு அறிக்கையினைத் தந்தது.
இப்படி கிடப்பில் போடப்பட்டு, காலதா-மதம் மூலமும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமலும் இதை இயற்கை மரணத்திற்கு விட எண்ணி இருந்த முந்தைய கூட்டணி ஆட்சியினருக்கு, தற்போது வேக வேகமாகப் பணிகள் நடைபெற்று, 2008 இல் கப்பல் சேது சமுத்திரக் கால்வாய் வழியே ஓடும் என்ற செய்தி வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது; இந்தச் சாதனையால் தி.மு.க.,வுக்கும், அது பங்கு வகிக்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் அல்லவா பெருமையும், புகழும் போய்ச் சேரும் என்று எண்ணி, எப்படியும் இதனை முடக்கி மூலையில் தூக்கியெறிய பல தந்திரங்களையும், பாமரர்கள் (இதில் படித்த பாமரர்களும் அடங்குவர்) புரிந்துகொள்ள இயலாவண்ணம், ``பிரச்சினைக்குரிய வழித்-தடத்தை (இராமன் பாலம்) விட்டுவிட்டு வேறு புதிய வழித் தடத்தில் அதனை செய்யலாம் என்று லாவகமாகக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர்!
மொத்தம் 167 கிலோ மீட்டர் நீளத்தில் பாக். நீரிணைப்புப் பகுதியில் தோண்டப்பட வேண்டியது 54 கி.மீ., ஆகும். இதில் ஆதாம் பாலம் பகுதியில் 35 கிலோ மீட்டர்தான். ஏற்கெனவே இந்த இரண்டுப் பகுதிகளில் முறையே 15 மீட்டர், 12 மீட்டர் அளவுக்கு அகழ்வுப் பணிகள் நடைபெறத் தொடங்கிய நிலையில், இப்போது வேறு தடம் தேடலாம் என்று கூறி மாற்றிவிட்டால்,
பெரும்பொருட்செலவு, காலதாமதம் ஆவது உறுதி.
அது மட்டுமல்ல, நமது கடல் எல்லைக்குள் தற்போது மேற்கொள்ளப்படும் திட்டம் உரிமைப்படி நம்மிடம் உள்ளது.
மாற்று வழித் தடம் என்றால், அது சர்வதேச கடல் எல்லையில் செல்லவேண்டி இருக்கும். அதற்கு மற்ற நாட்டவர் ஒப்புதல் பெறவேண்டி-யிருக்கும். அது அவ்வளவு எளிதல்ல.
இலங்கை போன்ற நாடுகள் இத்திட்டம் நிறைவேறினால் பாதிப்பு அடையும் என்பதால், இதற்கு எளிதில் ஒப்புதல் தராது.
2001 இல் அ.இ.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது?
அ.தி.மு.க., இன்று எதிர்க்கிறதே, அதன் 2001 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை என்ன? இதோ:
``இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல-வேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக்-கொண்டுதான் செல்லவேண்டியுள்ளது. இதற்-குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்-திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்.
(அ.இ.அ.தி.மு.க.,வின் 2001 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை, பக்கம் 83-84).
(குறிப்பு: ஆடம்ஸ் பிரிட்ஜ் என்றும், மணல் மேடுகள் என்றும் அன்று கூறிய நிலையில், இப்பொழுது திடீரென்று ``ராமன் பாலம் என ஜெயலலிதா கூறும் முரண்பாட்டைக் கூர்ந்து கவனிக்கவும்).
இராமன், இராமாயணம்பற்றி உச்சநீதி-மன்றத்-தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுக்களில் உண்மைக்கு மாறான எத்தகவலும் யாரையும் புண்படுத்தும் வகையில் சொல்லப்-படவில்லை.
சுப்பிரமணிய சாமி இதனை ஹஉநைவே ழளைவடிசல என்று கூறியதற்கும், அதனை பாதுகாக்கப்-பட்ட பகுதியாக அறிவிக்க-வேண்டும் (ஞசடிவநஉவநன ஹசநய) என்பதற்கும், சூயவடியேட ஆடிரேஅநவே என்று பிரகடனம் செய்யக் கோருவதற்கும் உரியதல்ல அது. அவர் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையே! அறிவியல் நெறிப்படி ஆய்வு செய்வதுதான் தங்கள் வேலை என்றே கூறியுள்ளது மத்திய தொழில் துறை. அவசரப்பட்டு அதனை வாபஸ் பெற்று இருக்க் கூடாது மத்திய அரசு.
இதைப் `பாதுகாக்கப்பட்ட பகுதி, `தேசிய சின்னம் என்று அறிவிக்கவேண்டும் என்று இன்று கேட்பவர்கள், ஏன் அதை பி.ஜே.பி., ஆண்டபோது கூறவில்லை; அப்போது இந்த சூழ்ச்சித் திட்டத்தை அவர்கள் யோசிக்க-வில்லை!
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மனப்பான்மை உடைய பார்ப்பனர்களின் முந்திரிக் கொட்-டைத்தனம் அது! பா.ஜ.க., அ.தி.மு.க., உள்நோக்கத்துடன் செயல்படுகின்றன.
1. 2008 ஆம் ஆண்டிலோ, 2009 ஆம் ஆண்டிலோ பொதுத் தேர்தல் வரவிருக்கும் முன்னர் இத்திட்டத்தை விரைந்து முடிக்க-விடாமல் செய்யவேண்டும்.
2. தேர்தலுக்கு வேறு பிரச்சினை மூலதனம் கிடைக்கவில்லை. அதற்கு இராமனைத் தேடிப் பிடித்துள்ளனர்!
3. பா.ஜ.க.,வில் வாஜ்பேயி - அத்வானி உட்கட்சிச் சண்டை கீழ்மட்டம் வரை அதனை மறைக்கவே, திசை திருப்பவேதான் `இராமன் பாலம் என்ற இந்த பூச்சாண்டி!
உண்மைகளை ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளவற்றைச் சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறோம்.
நர்மதா அணைக்கட்டு வழக்கில் உச்சநீதி-மன்றம் முன்பு கொடுத்துள்ள தீர்ப்புப்படி, பெரும் நிதியைச் செலவழித்து, செயல்படுத்தும் திட்டத்தை - அரசின் முடிவிற்கு மாறாக முடக்கி வைக்க முடியாது - கூடாது என்பதை மனதிற்கொண்டு இதிலும் வெற்றி பெற வழி உண்டு.
தமிழ் மக்கள் இதனை அறிந்துகொள்-வார்களாக!
கி. வீரமணி
ஆசிரியர் |