இனம் இனத்தேடு தான் சேரும்
கேள்வி 1: சாதி மறுப்பு திருமணங்கள் நடத்திக் கொள்பவர்களின் பிள்ளைகளுக்கு அரசு கல்வி வேலை வாய்ப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு செய்தால் மேற்கண்ட திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும், சாதியை ஒழிக்க இதுவும் ஓர் வழியாகுமே?
-மு.திருநாவுக்கரசு,புள்ளம்பாடி
பதில்: இது சரியான கருத்துதான். அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து சமூக நீதிக்குப் போராடும் அமைப்புகளும், ஜாதி ஒழிப்பு சிந்தனையாளர்களும் முயற்சிக்க வேண்டும்.
கேள்வி 2: நகரப் பேருந்துகளில் குளிர்சாதன வசதிகள் எல்லாம் தேவையா?
-மு.தமிழ்ப்பாண்டியன், சென்னை-49
பதில்: தேவைப்படுபவர்கள், கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலையில் வைப்பதில் தவறு என்ன? பொதுவாக இன்றைய சூழலில் அப்படிப்பட்டவைகளை வளர்ச்சி, முன்-னேற்றம் என்றே கருதவேண்டும்.
கேள்வி 3: ராமாயணத்தின் உண்மை என்ற மராத்தி புத்தகத்தில் ஆட்சேபகரமான கருத்து இடம் பெற்றதாகக் கூறி மகாராட்டிர மாநிலம் மம்தாபூர் நகரில் உள்ள ஒரு நூலகத்தை பஜ்ரங்தள் அமைப்பினர் இடித்துத்தள்ளியுள்-ளனரே இது எதைக் காட்டுகிறது? (தினமணி 18.9.07)
-தி.இரமணன், தண்டையார்பேட்டை,சென்னை-81
பதில்: காட்டுமிராண்டிகள் இன்னமும் 21ஆம் நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் இது!
கேள்வி 4: ஜாதி பெயரைச் சொல்லும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதே, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஜாதி பெயரை கூற விரும்பாவிட்டால் எந்த வகுப்பில் சேர்க்-கப்படுவார்?
-ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி
பதில்: கட்டாயப்படுத்துவது வேறு; கூறுவது வேறு. சொல்ல மறுத்து விட்டால் அவர் பொதுப்போட்டியில் முன்னேறிய ஜாதியினர் போட்டி போடுவதைப்போல போட்டி போட வேண்டி-யிருக்கும்.
கேள்வி 5: சமயச் சொற்பொழிவாளர்களுக்கு அரசு கலைமாமணி விருது வழங்கும் போது, பகுத்தறிவுச் சொற்பொழிவாளர்களுக்கு வழங்-காதது ஏனோ?
-பா.கதிரவன், காஞ்சிபுரம்
பதில்: இதுபற்றி முதல்வருக்கும் தமிழக அரசுக்கு இயல் இசை நாடக மன்றத்-திற்கும் அனுப்புகிறோம்.
கேள்வி 6: மீண்டும் அதிமுகவுடன் கூட்டு சேர அத்வானி முயற்சி எடுத்துள்ளாராமே?
-ஜீவிதா ரமேஷ், சே.பேட்டை
பதில்: அத்வானி எடுப்பார்; இனம் (அவர் சிந்தி என்றாலும் அக்கட்சி பார்ப்பன ஜனதா என்பதால்) இனத்தோடு சேரும் வாய்ப்பு ஏராளம் உண்டே!
கேள்வி 7: மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தங்களின் கருத்து என்ன அய்யா?
-ராஜா, மேலமணக்காடு
பதில்: மனிதனாக, மனிதத் தன்மையுடன் மனித நேயத்துடன், நுஅயீயவால என்ற ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்று நடந்து கொள்ள வேண்டும்.
கேள்வி 8: தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர்-களுக்கும், தாழ்த்தப்பட்ட முஸ்லீம்களுக்கும் இன்னும் எஸ்.சி. பட்டியலில் இடம் கிடைக்-காமல் இருப்பதற்கு உண்மைக் காரணம் என்ன?
-சஜோ வில்லியம், விக்கிரவாண்டி
பதில்: மத்திய அரசால்தான் இது செய்யப்பட வேண்டும். மத்தியில் அதிகார வர்க்கம் உயர் ஜாதி ஆதிக்கவர்க்கமாக உள்ளது குறுக்கு சால் ஓட்டுகின்றனர்.
கேள்வி 9: நாளொன்றுக்கு ரூ 72 லட்சம் செலவாகக்கூடிய நாடாளுமன்றத்தையே முடக்கும் பா.ஜ.க. நாடாளத் துடிப்பது சரியா?
-நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில்: பகுத்தறிவுப் படி சரியில்லை. பஞ்சாங்கப்படி அதற்கு ஆசை!
கேள்வி 10: ராமன் ஏகப் பத்தினிவிரதன் என்கின்றார்கள், அவரின் -தகப்பனார்ருக்கு 60,000 மனைவியர் என்பதை ஏற்கின்றீர்களா?
உலகையே படைத்து, காத்து, ரட்சிக்கும் கடவுளர் ஒருவரின்(?) மனைவியை மாற்றான் ஒருவன் நாடு கடத்த இயலுமா?
-சுவாமி பகுத்தறிவானந்தா, குனியமுத்தூர்
பதில்: இராமனுக்கே பலமனைவிகள், இராமாயணத்தில் உண்டு. இந்து மதம் என்ற காட்டுமிராண்டி கால கதைகளில் இதற்-கெல்லாம் சாத்தியம் உண்டே! |