தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
ஆய்வு
பதிலடி
நாட்டு நடப்பு
சேதுக் கால்வாய்
ஹாலிவுட் கலைவாணர்
மருத்துவமும்
கவிதை
சிறுகதை
எப்படி
நூல் அறிமுகம்
புதிய தொழில்நுட்பம்
அண்ணல் அம்பேத்கர்

 

 

அத்வானிகளுக்கு சில கேள்விகள்

கடந்த 20.09.2007 அன்று சென்னை வந்த பா.ஜ.க. தலைவர் அத்வானி, பத்திரிகை-யாளர்களுக்கு பேட்டி அளித்தார். வழக்கம்-போல உளறிக் கொட்டினார். உள்ளத்தில் மதவெறி இருக்கும் போது உதடுகளும் அதைத்தானே கக்கும், அப்படித்தான் அந்தப் பேட்டி இருந்தது.
மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் ராமனைப்பற்றி எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அத்வானி பதில் சொல்லவில்லை. (பதில் இருந்தால் அல்லவா சொல்ல முடியும்) மாறாக மதவெறியைத் தூண்டுவதிலேயே அவர் குறியாக இருந்தார். அத்வானியின் ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துவைத்து கலைஞரிடம் கேள்வி கேட்ட பத்திரிகை நடுநிலைகள்(?) கலைஞரின் கேள்விகளை அத்வானியிடம் கேட்-கவில்லை. அவ்வளவு நடுநிலையோடு பத்திரி-கைகள் செயல்படுகின்றன. அத்வானியின் பேட்டியிலிருந்து சில செய்திகளுக்கு நமது வினாக்கள் இதோ: நாங்கள் ஆட்சியில் இருந்த போதுதான் சேது சமுத்திர திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் கொடுத்தோம்.
- அத்வானி
கேள்வி:அப்போது அந்தத் திட்ட விளக்கத்தில் ஆதம் பாலம் (ராமன் பாலம்) இடம் பெற்றிருந்ததே. அது அத்வானிகளின் கண்களுக்குத் தென்பட வில்லையா?
ராமன் கட்டிய பாலம் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. - அத்வானி
கேள்வி:அது நம்பிக்கைதான். உண்மை-யில்லை, அப்படித்தானே அத்வானியாரே?
அந்த நம்பிக்கையை மதிக்க வேண்டும்.
- அத்வானி
கேள்வி:மத நம்பிக்கைகள் எனக் கருதப்-பட்ட பலவற்றையும் உடைத்ததாலேயே மனிதர்கள் பல நேரங்களில் காப்பாற்றப்-பட்டுள்ளார்கள் என்பது அத்வானிகளுக்குத் தெரியுமா?
உதாரணமாக, சதி என்ற உடன்கட்டை ஏறுதல் என்பது ஒரு காலத்தில் இந்து மத நம்பிக்கை தான். அதனைத் தகர்த்ததால் தான் இன்று கைம்பெண்கள் காப்பாற்றப்-பட்டுள்-ளனர். அந்த நம்பிக்கையை இன்றும் காப்-பாற்றியிருந்தால், கடந்த கால ஆண்டுகளுக்கு முன்னால் உயிரிழந்த பா.ஜ.க.வின் பிமோத்-மகாஜன் மனைவி இன்று உயிரோடு இருந்-திருக்க முடியுமா? சதி என்ற உடன் கட்டை ஏறும் இந்து மத நம்பிக்கையை இன்று வலியுறுத்தி இந்துத்து-வத்தை தூக்கி நிறுத்தி ஓட்டு கேட்க அத்வானி-கள் தயாரா?
நாத்திக வாதி கருணாநிதியின் கொள்கைப் பிடிப்பை மதிக்கிறேன். ராமர் குறித்து அவர் கூறிய கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
- அத்வானி
கேள்வி:அவர் கொள்கைப் பிடிப்பு புரிகிறதல்லவா? பிறகெப்படி ராமர் குறித்த கருத்தை திரும்பப் பெறுவார்?
கிறித்துவ நாடுகளில் இயேசுவுக்கு எதிராகவும், இஸ்லாமிய நாடுகளில் முகமது நபிக்கு எதிராகவும், கருத்து கொண்ட மனுவை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய முடியுமா?
- அத்வானி
கேள்வி:அவையெல்லாம் கிறித்துவ-இஸ்லாமிய நாடுகள். ஆனால் இந்தியா மதச்சார்பற்ற நாடு. இது தெரியாமலா, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்? மதச்சார்ப்பற்ற அரசியல் சட்டத்தின் படிதானே ஆட்சிப் பொறுப்பில் இருந்தீர்கள்? மறந்து விட்டதா? மீண்டும் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ள அம்மையார் ஜெயலலி-தாவின் கூற்றுப்படி உங்களுக்குத்தான் செலக்-டிவ் அம்னீசியா இருக்கிறதே. அதனால் தான் இப்படிப் பேசுகிறீர்களோ....
இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 295(ஏ)ன் படி மக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக நடந்தால் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
- அத்வானி
கேள்வி:முதலில் இந்தச் சட்டப்பிரிவின் படி அத்வானியைத்தான் உள்ளே தள்ள வேண்டும்.
பாபர் மசூதியை இடித்ததன் மூலம் இஸ்லாமிய மக்களின் மத உணர்வுக்கு எதிராக நடந்தது அத்வானி கும்பல் தானே.
3 ஆண்டு தண்டனைக்கு உட்பட்டுவிட்டு பிறகு மற்றவர்களைப் பற்றிப் பேசுங்கள் அத்வானி.