தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
ஆய்வு
பதிலடி
நாட்டு நடப்பு
சேதுக் கால்வாய்
ஹாலிவுட் கலைவாணர்
மருத்துவமும்
கவிதை
சிறுகதை
எப்படி
நூல் அறிமுகம்
புதிய தொழில்நுட்பம்
அண்ணல் அம்பேத்கர்

 

 

சேதுக் கால்வாய்ப் பாதைகள் - ஓரு பார்வை

சேதுக் கால்வாய்த் திட்டம் பற்றிய சிந்தனை 1860இல் தொடங்கியது. அன்று முதல் 1922 வரை 62 ஆண்டுகளில் மொத்தம் 9 வழித்தடங்கள் பற்றி ஆய்வுகள் செய்யப்-பட்டன. எல்லாமே பாம்பன் கடல் பகுதி வழியாகச் செல்பவைதாம். நிதி இன்மையால் இவை செயல்படுத்தப்படவில்லை.
இந்திய விடுதலைக்குப் பிறகு 5 வழித்தடங்-கள் ஆலோசிக்கப்பட்டன. 1961, 1968, 1981, 1998 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் அய்ந்து பாதைகள் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன.
1961இல் ஆராயப்பட்ட பாதை ராமேஸ்வரம் நகரின் வழியாகச் செல்லும் வகையில் இருந்ததால் கைவிடப்பட்டது. இது சர்.ஏ.-இராமசாமி முதலியார் குழு பரிந்துரைத்த பாதை.
1968இல் வெங்கடேசுவரன் குழு அறிவித்த பாதையும் அவ்வழியிலேயே இருந்ததால் அதுவும் ஏற்கப்படவில்லை. நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டுள்ள பகுதிக்குள் இப்-பாதை செல்வதாக இருந்தாலும் சுற்றுச் சூழல்கேடு வரும் என்பதாலும் நிராகரிக்-கப்பட்டது.
1981இல் தனுஷ்கோடியின் இடையே செல்லும் வகையில் ராமேஸ்வரம் கோயிலுக்கு மேற்கே ஒரு பாதையை லட்சுமி நாராயணன் குழு தெரிவித்தது. அந்தக் காலத்தில் சுற்றுச்-சூழல் பற்றி இந்திய அளவிலேயே யாரும் யோசிக்காத காலமானதால், யாரும் கவலைப்-படவில்லை. எனினும் 1996இல் தமிழ்நாடு அரசு மீண்டும் இதைப்பரிசீலித்தபோது கப்பல் போக்குவரத்துத் துறையின் சார்பில், மாற்றுப்-பாதை கூறப்பட்டது. 1996இல் இந்திய அரசு கூறிய மாற்றுப்பாதை தனுஷ்கோடி வழியாக கோயிலுக்குக் கிழக்குப் பக்கமாகச் செல்லும் வகையில் அமைந்திருந்தது.
1998இல் நீரி (சூநுநுசுஐ) அமைப்பினர் வேறொரு பாதையைக் கூறினர். இது தனுஷ்-கோடியைச் சுற்றிச் சென்றது. ஆனாலும், கப்பல் போக்குவரத்து நோக்கிலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு நோக்கிலும் ஏற்றுக்கொள்ளப்-படாமல் மறுக்கப்பட்டு விட்டது.
1998இல் கப்பல் போக்குவரத்துத் துறையின் குழு ஒரு பரிந்துரையைச் செய்தது. நான்காம் வழித் தடத்தையே பரிசீலிக்கலாம் என்றது. ஆனால், சுற்றுச் சூழல் பாதுகாப்புத்துறை அதனை ஏற்க வில்லை. கப்பல் போக்குவரத்துத் துறையும் அப்பாதை கப்பல் பயணிப்பதற்கு உகந்தது அல்ல எனக்கூறித் தள்ளுபடி செய்து விட்டது.
தற்போது செயல்பட்டு வரும் ஆறாம் வழித்தடம் (சூநுநுசுஐ) பரிந்துரைத்தது. பாம்பன் தீவைச் சுற்றிக் கொண்டு ஆதாம்பாலம் வழியாகச் செல்லும் வகையில் உள்ளது. முந்தைய பாதைகளில் இருந்து 20 முதல் 25 கி.மீ. வரை அப்பால் செல்லும் பாதையாகும். இதனால் சுற்றுச் சூழலும், இயற்கை வளங்களும் காப்பாற்றப்படும். மீன் வளர்ச்சிக் பாதிப்பு இருக்காது. ஆகவே, இதனை நாக்பூர் நீரி நிறுவனம் (இந்திய அரசின் முதன்மை நிறுவனம்) பரிந்துரைத்துள்ளது.
இதற்கு மாறாக நான்காம் வழித்தடத்தை ராமகோபாலனும், ராமேஸ்வரம் குப்புராமும் விரும்புகின்றனர். நீளமும், செலவும் குறையும் எனக்கூறும் இவர்கள் சுற்றுச்சூழல் பற்றியோ, இயற்கைவளம் பற்றியோ, மீனவர் நலம் பற்றியோ கவலைப்படவில்லை. கற்பனை ராமன் கட்டாததும், இன்றளவும் இல்லாதது-மான பாலம் பற்றியே கவலை மிகக் கொண்டுள்ளார்கள்.

சேதுக் கால்வாய் வழி ஓப்புதலளித்தது பா.ஜ.கட்சி தான்!

சேதுக் கடல் கப்பல் போக்குவரத்துக் கால்வாய் வெட்டுவதற்கான முயற்சிகள் 1860-ஆம் ஆண்டில் இருந்தே தொடங்கப்பட்டன. 147 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த ஆண்டு பணிகள் நிறைவடைந்து 2008இல் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கெடுக்க வேண்டும், தமிழன் கால்வாயைக் கலைஞர் வெட்டினார் என்ற புகழ் அவருக்குச் சேரக்கூடாது என்கிற கெட்ட எண்ணத்துடன் சில சக்திகள் எதிர்க்கின்றன.
அரசியல் ஆதாய நடவடிக்கைகளுக்கு ராமனைத் துணைக்கு அழைத்து தொல்லை தருகின்றனர். ராமன் பாலம் இருப்பதாகக் கூறி எதிர்க்கிறார்கள். ஆனால் யார் எதிர்க்கிறார்களோ, அவர்களே இதனை அனுமதித்து ஆணையிட்டிருக்கிறார்கள். அருண் ஜெய்ட்லி, வி.பி. கோயல், சத்ருகன் சின்கா, எஸ்.திருநாவுக்கரசர், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, தம்பிதுரை என பா.ஜ. கட்சிக்காரர்களும் அதிமுககாரரும் இதில் அமைச்சர் களாக இருந்த போது ஒப்புதல் தந்திருக்கிறார்கள்.
2001 மார்ச் 9ஆம் தேதி தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிலையம் (சூநுநுசுஐ) நாக்பூர் நிறுவனம் இதுபற்றி ஆய்ந்து அறிக்கை தரவேண்டும் என்று அருண்ஜெய்ட்லி ஆணையிட்டார். 2002 அக்டோபரில் இந்த நிலையம் தன் அறிக்கையைத் தந்தது. அக்டோபர் 23ஆம் தேதி துணை அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் ஆய்வுக் கூட்டம் நடத்தி அதன் முடிவை அறிவித்தார்.
தூத்துக்குடியிலிருந்து மன்னார்குடா வழியே கிழக்கே, வடகிழக்கே நீடித்து பாம்பன் தீவின் தென் பகுதிக்குச் சென்று ஆதம்பாலத்தின் வழியே சர்வதேசக் கடல் வழி சென்று, பிறகு வங்கக்கடல் பாதையில் இ ணயும் பாதைதான், சுற்றுச் சூழல் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாத வழித்தடம் என்று பரிந்துரைத்தது.
எஸ்.திருநாவுக்கரசர் குறிப்பு எழுதி அமைச்சர் கோயலுக்கு 25.10.2002இல் அனுப்பினார். கால் வாயை எத்தனை மீட்டர் ஆழத்துக்கு வெட்ட வேண்டும் என்பது பற்றி அறிவுரை கேட்டார். 29.10.2002இல் கோயல் 10 மீட்டர் ஆழத்துக்கு மேல் வெட்டக் கூடாது என எழுதி அனுப்பினார். இந்தப் பணியை மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தனி ஆணைகள் பிறப்பித்தார்.
2003 செப்டம்பர் 29இல் அடுத்து வந்த அமைச்சர் சத்ருக்கன் சின்ஹா நாடாளுமன்ற மேலவையில் கால்வாய் ஆதம்பாலம் வழியாகப் பாம்பன் தீவுக்குக் கிழக்கே வெட்டப்படும் என அறிவித்தார்.
எனவே, கருத்துரு திட்டம் வழித்தடம் எல்லாமே பா.ஜ.க. தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியால் முடிவு செய்யப்பட்டவை அவர்கள் ஒருபோதும் தேசிய முக்கியத்துவம் பெற்ற சின்னம் ராமன் பாலம் எனக் கருதவேயில்லை.
ஆதாம் பாலம் என அமைச்சர் கூறியது, இப்போது எப்படி ராமன் பாலம் ஆயிற்று? அத்வானி, ஜெயலலிதா விளக்குவார்களா?