சாப்ளினின் மணவாழ்க்கை
சு.அறிவுக்கரசு
 |
சார்லி சாப்ளினின் வாழ்விலும், காதல் வந்து போனதுண்டு. அவரும் காதலித்திருக்கிறார். மேலை நாடுகளில் காதலிப்பது சாதாரணமானது தான். அங்கே அப்பா, அம்மா பார்த்து செய்து வைக்கும் கல்யாணம் கிடையாது. ஆணும், பெண்ணும் ஈர்க்கப்பட்டு, காதலில் ஈடுபட்டு பழகிப் புரிந்து கொண்டு வாழ்க்-கையை அமைத்துக் கொள்வார்கள். அந்த மாதிரிக் காதலில் இவரும் மாட்டிக் கொண்டது. ஆனால், இவர் மட்டுமே காதலித்தார். அவள் காதலிக்கவில்லை. ஒரு தலைக் காதல் மட்டுமே!
ஹெட்டி (Hetty) என்ற பெண்ணின் மீது இவருக்குக் காதல். லண்டனில் இவர் இருந்த போது - வாழ்ந்த போது என்று சொல்ல முடியாது அல்லவா?-இவர் கொண்ட காதல். இவர் வளர்பருவத்து வாலிபன். வருமானம் நிலையில்லாத வாலிபன். பிள்ளையாருக்கே சைக்கிள் இல்லை; பூசாரிக்கு மோட்டார் பைக்கா? என்பது போல, ஹெட்டி நினைத்திருக்-கலாம், இவனுக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கே லாட்டரி, இவனுக்கு என்ன காதல்? என்கிற எண்ணம் ஏற்பட்டு இருக்கலாம். அவனுக்கு சாப்ளின் மீது காதல் ஏற்படவில்லை.
காதல் தோல்வி
வயிற்றில் ஓரளவு ஈரம் ஏற்பட்டவுடன் ஹெட்டியைத் தேடினார். அவள் திரு-மணம் செய்த கொண்டு வாழ்ந்து, இறந்-தேவிட்டாள் என்ற செய்தியைச் சொன்-னார்கள். எல்லாமே அர்த்த-மற்றவை. தான் வாழும் வாழ்வு, பெற்ற புகழ், தேடிய வருமானம் என்று எதுவுமே பொருள் படிந்ததாகப் படவில்லை அவருக்கு லண்டன் காதல் இவ்வாறு ஆகிப் போனது என்றால், அமெரிக்க காதல் வேறு வகை. எட்னா பர்வேயன்ஸ் என்றவளை இவருடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் கிளம்பின. ஏடுகள் இவர்களுக்குள் தாம்பத்யம் ஏற்படுத்தி-யது முதல் எல்லாவற்றையும் எழுதித்தீர்த்-தன. சாப்ளின் நினைத்ததோ, வேறு மாதிரி! திருமணம் செய்து கொண்டால், குடும்பம், குழந்தைகள், அவர்களை ஆளா-க்கும் பொறுப்புகள், இவையெல்லாம் திரையுலக வாழ்க்கையை வீணாக்கி அழித்துவிடும் என்று அச்சப்பட்டார். ஜஸ்ட் லைக் தட் காதலியாகவே வைத்துக் கொள்ளலாம் என்று கருதி-னார். செய்தார்.
இன்னொரு பெண் மில்பிரட், ஹாரிஸ் என்பார் இவர் வாழ்க்கையில் குறுக்கிட்டார். வயது பதினாறு தான். ஆடை அலங்காரப் பணியில் இருந்த பெண் ஒருவரின் மகள். சினிமா தொடர்புள்ள குடும்பம். பத்து வயதுப் பெண் மில்பிரட்டை சினிமாவில் நடிக்க வைத்துப் பழக்கினார். திரைப்படத் தயாரிப்-பாளர் ஒருவர் தந்த விருந்துக்கு வந்த தாயும், மகளும் சாப்ளினைச் சந்தித்தனர். மகளைப் பார்த்த சாப்ளின் மயங்கியே போனார்.
அமெரிக்க கவர்ச்சி
நம் நாட்டில் கருநிறத் தலைமயிருக்குப் பெரும் அழகு இருப்பதாக ஒரு மரியாதை. மேலை நாடுகளில் பொன் வண்ணக் கூந்தலுக்குச் (செம்பட்டை நிறம்) சிறப்பு. மில்பிரட்டின் பொன்வண்ண மயிரும் வண்டு போன்ற விழிகளும் சாப்ளினைக் கவர்ந்து விட்டன. இருகயல் இணை விழிகளே-இடர் செய்தன எனையே என்ற நிலைக்கு ஆளாகி விட்டார். 29 வயது இளைஞர் சாப்ளின். 16 வயது பருவமங்கை மில்பிரட் ஹாரிஸ். இருவருக்கும் ஈர்ப்பு. பெண்ணின் தாயார் கணக்குப் போட்-டார். மகள் சாப்ளினை மடக்கி விட்டால்...? மனம் கணக்கின் விடை காணத் துடித்தது.
சட்டத்திற்கு மாறாக...
அழகிய பெண் மகள் இவள் எனப் பார்த்த சாப்ளினை அடிக்கடி மில்பிரட் சந்திக்கும் வாய்ப்புகளை அவள் தாயார் உருவாக்கித் தந்தார். சாப்ளின் பங்கு பெறும் விருந்துகளை அறிந்து கொண்டு அங்கெல்லாம் ஆஜரானார் தம் மகளுடன்! விருந்துக்கு இவர்களுக்கு அழைப்பு இருக்கவேண்டும் என்பதெல்ம் கிடையாது. விருந்தின் போது சாப்ளினுடன் சிரிக்கச் சிரிக்கப் பேச வைத்தாள் தன் மகளை! 16 வயதை 21 வயதுக்கு மேலே காட்டிடும் அலங்காரங்களுடன் தன் மகளை நடமாட விட்டாள்.
21 வயதுக்குக் குறைந்த பெண்ணோடு பழகி உறவு கொள்வது அமெரிக்கச் சட்டப்படிக் குற்றம். அது வன்கலவியாகவே சட்டப்படி கருதப்படும், பெண்ணின் சம்மதம் இருந்-தாலும்! த;ணடனை எவ்வளவு தெரியுமா? 80 ஆண்டுகள்! இப்படிப்பட்ட சட்டம் இருப்பது சாப்ளினுக்குத் தெரியாது! மில்பிரட்டின் தாய்க்குத் தெரியும். அதனால் தான் தன் மகளைத் தாராளமாக அனுமதித்தார். விருந்து முடிந்ததும் சாப்ளினுடன் தன் மகளைக் காரில் அனுப்பி வைக்கும் பழக்கத்திற்கும் பயப்-படவில்லை.
ஒரு நாள் காரில் புறப்பட்ட சாப்ளினும், மில்பிரட்டும் பசிபிக் கடல் ஓரத்தில் செல்லும் போது சாலையில் அழகிய சூழலில் பயணித்-தனர். ஒரு பக்கத்தில் நீலக்கடலும், மறுபக்கத்-தில் பசுமை படர்ந்து குன்றுகளும் இடையில் சாலையும் என்கிற மாதிரி மிக அழகியப் பகுதி. மேலே நீலவானம். கண்சிமிட்டும் நட்சத்திரங்-கள். இனிய மென் காற்று. பயணம் இந்திர லோகத்தை(?) நினைவூட்டும்.
இணைந்தனர் இருவரும்
காரிலேயே இவர்கள் இருவரும் திருப்-பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? என ஆண்டாள் கேட்டதைச் சோதனை செய்து கொண்டே வந்தனர். பாலோடு தேன் கலந்தற்றே என்று வள்ளுவரே வருணித்த அதர பானத்தை இருவரும் பருகிக் கொண்டே பயணித்தனர். முத்த மழை இவர்-களின் உள்ளங்களை நனைத்தது. போதை தலைக்கேறிவிட்டது, சாப்ளினுக்கு!
மில்பிரட்டை ஏற்றுக்கொண்டு காரில் சுற்றத்துடித்தது இவரின் இதயம்! இதற்காக மில்பிரட் பணியாற்றம் ஸ்டுடியோவின் வாசலில் காத்துக் கிடந்தார் காரோடு! இதை அறிந்த கொண்ட மில்பிரட் வேண்டுமென்றே தாமதமாக வெளியில் வந்தாள். ஆனாலும், காத்துக் கிடப்பதில் சுகமுண்டு என்றே கிடந்தார் சாப்ளின். நாளடைவில் புரோபோஸ் (Propose) செய்தார். அதாவது தம் காதலை-வெளிப்படுத்திக் கடிமணம் செய்து கொள்ளத்-தாம் தயார் என்பதைக் கூறினார். மில்பிரட் மகிழ்ச்சியடைந்து சரியென்றாள். அவளின் அம்மா ஏற்கவில்லை, ஏன்?
உடனே, தலையாட்டிவிட்டாள், மரியாதை இருக்காதாம். இழுத்தடித்து, இதோ, அதோ என்று கூறினால் தான் மதிப்பு உயருமாம்! நல்ல தொழில் தெரிந்த தாய் தான்! ஆசைவயப்பட்டு விட்ட ஆணிடம் கறப்பதற்கு இது தான் வழி எனக் கற்று வைத்திருந்தாள். தாய்க்குத் தெரிந்த தொழில் நுட்பம் மகளுக்குத் தெரியவில்லை. மையல் வயப்பட்டு மயங்கிக் கிடந்த மங்கை சாப்ளினை அடையத் துடித்தாள். புரிந்து கொண்ட தாய் மில்-பிரட்டை ஹாலிவுட்டிலிருந்து வேறு எங்கா-வது போய் கொஞ்ச காலத்திற்கு இருக்கச் சொன்னாள். மகள் இதைச் சாப்ளினுடன் பரிமாறிக் கொண்டாள்.
இல்லறம் ஏற்றனர்
உதவாதினித் தாமதம், உடனே செயல் செய்யப்புறப்படு என்கிற பாணியில் சாப்ளின் உடனடியாகத் திருமணம் செய்துகொள்வது என்ற முவுக்கே வந்துவிட்டனர். அம்மாவா-வது, ஆட்டுக்குட்டியாவது என்கிற துணிச்சல் மகளுக்கு வந்துவிட்டது, திருமணப்பதிவு அலுவலரைத் தேடி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஓடினார்கள். அவர் இல்லாததால் திரும்பிவிட்டனர். இது தாய்க்குத் தெரிந்து-விட்டது. தாம், தூம் என்று குதித்தாள், கோபாவேகப் பட்டாள் இவர்கள் மசிய-வில்லை. பணிந்தாள் தாய், பச்சைக் கொடி காட்டினார்.
ஷோல்டர் ஆர்ம்ஸ் படம் வெளிவந்த மூன்றாம் நாள் 23.10.1918இல் சாப்ளின் மில்பிரட்டைத் தன் வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்டார். சாப்ளினின் நண்பர் குழாம் இதை எதிர்பார்க்கவேயில்லை. இவ்வளவுச் சிறிய பெண்ணைத் தம் மனை-வியாக்கிக் கொள்வார் என்று அவர்களும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இவர்கள் சந்தித்து 100 நாள்கள் கூட ஆக வில்லை. அதற்குள் எப்படித் திருமணம் முடிந்தது என்று ஆச்சரியப்பட்டார்கள். வழிமுறை-யெல்லாம் பார்த்துக் கொண்டா மோகம் வரும்?
தம்பதிகளுக்கெனப் பெரிய வீட்டைக் கட்டினார் சாப்ளின். தன் அன்பு மனைவி-யோடு, வசதிகளோடு வாழ விரும்பினார் சாப்ளின். அவ்வளவு பெரிய வீட்டைப் பராமரிக்கக் கூடத் தெரியவில்லை, மில்பிரட்டு-க்கு! அதைவிட மோகம், அதில் அவளுக்கு நாட்டம் இல்லை. அவளுடைய ஆசை-யெல்லாம், பெரிய புகழ் பெற்ற நடிகரின் மனைவி என்ற பெயர், அதனால் வரும் சினிமா வாய்ப்புகள். அதன் காரணமாகத் தனக்குப் புகழ், பெரும் வந்து சேர வேண்டும் என்பதிலேயே கவனம்!
கசந்தது அனைத்தும்
இல்லத்தரசி நடிகையாகக் கூடாது, நடிகை இல்லத்தரசியாக முடியாது என்பது சாப்ளி-னின் கொள்கை. எனவே, கணவனும், மனை-வியும் இருவேறு முனைகள். எளிதில் ஒன்றாக முடியாத முனைகள். இரவில் ஓயாத சண்டைகள் போடுவதுதான் இவர்களின் வாழ்க்கை என்றாகிவிட்டது. இத்தனையையும் மீறி ஒரு சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் செய்தாள் மில்பிரட். சண்டைத் தீயில் நெய் வார்க்கப்பட்டது போல் ஆயிற்று. உச்சக்கட்ட சண்டைகள் நடந்தன.
வீட்டில் பலருக்கும் விருந்துகள் தரத் தொடங்கினாள் மில்பிரட். நாளெல்லாம் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு உழைத்-துக் களைத்து ஓய்வுக்காகத் தம் வீட்டுக்கு வந்தால், அங்கே விருந்தும், கூத்தும் குடியும் எனக் கும்மாளம்! குடிபோதை ஏறிக் களியாட்டம் போடுபவர்கள், வெறியாட்டம் ஆடுபவர்கள், அடித்துக்கொள்பவர்கள் என்று பலதரப்பட்ட கோரங்கள் தான் இவர் காணக் கிடைத்தன. விருந்துகள் வேண்டாம் என்றார். மனைவி கேட்கவில்லை. என்னடைய நண்பர்-களை ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை? என்று கேள்வி கேட்டுச் சண்டை போட்டு-விட்டு நண்பர்களுடன் நடனமாடப் போய்விடுவார்.
வந்தது குழந்தை
நாளும் தொடர்ந்த இந்த நரக வேதனை-யின் விளைவாக சாப்ளின் வீட்டுக்கு இரவில் வருவதேயில்லை. ஸ்டுடியோவிலேயே படுத்துத் தூங்கிவிட்டுக் காலையில் வருவார். இப்படியே, ஓராண்டுக் காலம் ஓடி விட்டது. இந்த காலத்தில் மில்பிரட் கருவுற்றாள். பெண் தாய் ஆனால், போக்கு மாறும், பொறுப்பு வரும் இழந்த இன்பத்தை மீண்டும் பெறலாம் என்று நினைத்தார் சாப்ளின். குழந்தையும் பிறந்தது. ஆண் குழந்தை. ஆனாலும், மூன்றாம் நாள் குழந்தை இறந்து விட்டது. சாப்ளினும்-மில்பிரட்டும் நொறுங்கிப் போனார்கள். ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து அழுதார்கள். இருந்தாலும் என்ன? குழந்தை-யைப் புதைத்தார்கள். கல் நட்டார்கள் (Epitah) சின்ன மூஞ்சூறு (The Little Mouse) என்று எழுதி வைத்தார்கள்.
காலப் போக்கில் மில்பிரடிடம் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. மீண்டும் விருந்து-கள், நடனங்கள், கும்மாளங்கள். இதில் கலந்து கொள்ளாத கணவனை வந்திருந்தவர்களின் எதிரிலேயே விமரிசனம் செய்தாள். திட்டினாள். மறுபேச்சு பேசாமல் சாப்ளின் வீட்டை விட்டுப்போய்விடுவார். துஷ்டையைக் கண்டு தூர விலகினார். வாழ்க்கையை விட்டு விலகி-விட இருவரும் விரும்பினார்கள். மணவிலக்கு பெற இருவரும் விரும்பினார்கள். சட்டப்படிக்-கான நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
சாப்ளின் வீட்டில் தங்காமல், விளையாட்டு மன்றத்தில் தங்கினார். இறந்துபோன மூன்று நாள் மகனை நினைத்து வருந்தினார். அழுதார். எவ்வளவு மென்மையான நெஞ்சம் அவருக்கு? அவர் மனதில் மூன்று நாள் மகன் விளைவித்த தாக்கம்தான் அவரது புகழ்பெற்ற சினிமாவான தி கிட் (The Kid). |