பகுத்தறிவு சரவெடி

நீதிபதி : ஏம்பா, சாமி சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தினாயாமே, உண்மையா?
திருடன் : ஆமாங்க எசமான், சாமி தான் என் கனவுல வந்து என்னைக் கூட்டிப்போ என்று சொன்னது, அதான்...

மாரி : நம்ம ஊர்ல மழையே இல்லைன்னு கழுதைக்குத் திருமணம் செய்து வைக்கப் போறதா நம்ம நாட்டாமை சொல்றார்....
பாரி : நாட்டாமைய முதலில் முப்பது வயசாகியும், வீட்ல இருக்கற அவரோட பொண்ணுக்கு திருமணம் செய்து வைக்க சொல்லுங்க.

கந்தன் : மருதமலைக்கு சென்றால் தீராதவினையெல்லாம் தீர்ந்து போகும்னு சொன்னாங்களே, உன் பிரச்சினை தீர்ந்ததா...?
கம்பன் : அட ஏன்டா, மலை ஏறும் போது கல் தடுக்கி கீழே விழுந்து மண்டை உடைந்துவிட்டது, கோயிலுக்கு போய் வர வாங்கிய கடனையே இன்னும் அடைக்க முடியவில்லை...
-இரா.கமலக்கண்ணன், சித்தோடு
கம்பிகளில் தொங்கும் பாலங்கள் கட்டப்படுவது எப்படி?

ஆற்றின் மேல், கடலின் மேல் மிகப்பெரிய நீலமான பாலங்கள் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இவை எப்படி கட்டப்படு கின்றன? கல்கத்தாவில் ஹவுரா பாலம், ரிஷிகேஷில் லட்சுமண் பாலம், கொல்கத்தாவில் அண்மையில் கட்டப்பட்ட வித்யாசாகர் பாலம் ஆகியவை கட்டப்பட்ட டெக்னிக் என்ன?
இவற்றை இரண்டு வகைப்படுத்துகிறார்கள். ஊயடெந ளுவயலநன எனப்படும் கம்பிகளில் தங்கும் வகை ஒன்று. கொல்கத்தாவின் வித்யாசாகர் பாலம் இந்த வகை. பாலத்தின் நடுவே உள்ள உயரமான டவர்கள் கேபிள்கள் மூலம் பாலத்தின் அழுத்தும் சக்தி, நீட்டும் சக்தி, நகர்த்தும் சக்தி, வளைக்கும் சக்தி முதலியவற்றைப் பார்த்துக்கொள்கிறது. இப்படிப்பட்ட டவர்கள் ஒன்றுக்கொன்று நீண்ட இடைவெளியில் அமையலாம். வித்யாசாகர் பாலத்தின் இந்த இடைவெளி (ளுயீய) 457 மீட்டர் ஆகும்.
பழைய ஹவுரா பாலம், ஊயவேடைநஎநச என்ற வகைப் பாலம். இதில் பொருத்தப்பட்டுள்ள எல்லாக் கம்பிகளும் மொத்த அழுத்தத்தையும் சமமாகப் பங்கு போட்டுக் கொள்ளும் வகையில் கட்டப் பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் நீளம் 705 மீட்டர்.
-செங்கோ
|