தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
ஆய்வு
பதிலடி
நாட்டு நடப்பு
சேதுக் கால்வாய்
ஹாலிவுட் கலைவாணர்
மருத்துவமும்
கவிதை
சிறுகதை
எப்படி
நூல் அறிமுகம்
புதிய தொழில்நுட்பம்
அண்ணல் அம்பேத்கர்

 

 

புகம்பத்தைத் தாங்கும் வீடு

சிற்பி பாமா

இன்றைய நிலையில் நில நடுக்கத்தால் பாதிக்கப்படுகிற மக்கள் உலகம் முழுமையும் தாங்கொண்ணாத் துயரில் தம்மை அழித்துக்-கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவுதான் விஞ்ஞான அறிவியலில் மனிதன் வளர்ச்சி பெற்றாலும், இதுபோன்ற இடர்ப் பாடுகளிலிருந்து மக்களைக் காப்-பாற்ற முடியாத நிலையில் மனிதன் தினந்-தோறும் போராடிக் கொண்டிருக்கிறான்.
நில நடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கிற திறன் இன்னும் வளர்ச்சி பெறவில்லை; என்றாலும், பூமியின் உள் அடுக்குத் தொடர்பான விபரங்களை மனிதன் அறிந்திருக்கிறான்.
நமது காலுக்குக் கீழ் உள்ள பகுதி சுமார் 27 மைல்களிலிருந்து 4 மைல்கள் ஆழம் வரை பல்வேறு அளவுகளில் அமைந்திருக்கிறது.
இதனை அடுத்துள்ள பகுதி, "Lawa" என்று சொல்லப்படுகிற எரிமலைக் குழம்பு நிலையில் நமது காலுக்கடியில் நீண்டு கொண்டிருக்கும் மலைத் தொடர்களின் மீது ஏற்படுத்தும் மோதல் மேற்பரப்பில் வாழும் நமக்கு நில அதிர்வை ஏற்படுத்துகிறது.
எந்தப் பகுதி எவ்வளவு ஆழம் இருக்கிற-தென்ற விபரம் தெரியாத நிலையில், நாம் அதனின் தாக்குதல்களை அனுபவித்து வருகி-றோம்.
நில நடுக்கத்தின் கொடூரமான தாக்குதலில் இருந்து தப்பித்து வாழ்வதுதான் இனிமேல் நாம் எடுக்கவேண்டிய முயற்சி.
கட்டிடக் கலையில் மனிதன் அபரிமிதமான வளர்ச்சியில் முன்னேறியிருந்தாலும்; இனிமேல் அதுமாதிரியான கட்டிடங்கள் கட்டப்படு-வதைத் தவிர்த்து, மனித உயிர்கள் காப்பாற்றப்-பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு கட்டிடங்களைக் கட்டி அதில் வாழ வைப்பதுதான் இனிவரும் காலங்-களில் எடுத்துக்கொள்ள வேண்டிய நட-வடிக்கை.
அகன்று விரிந்து அமைந்துள்ள ஒரு கருங்கல் பாறையொன்றில், இன்னொரு பாறையை தகுந்த தொழில் நுட்பத்துடன் பொருத்துவோம்; இரண்டு பாறைகளுக்கும் நடுவே ஒரு விரல் அளவு இடைவெளிவிட்டு, சரியான படிவுடன் அமைத்து, கீழ் உள்ள பாறையை வெடி வைத்து தகருங்கள். அப்-போது மேல் உள்ள பாறை சற்று நகர்ந்து கொடுக்குமே தவிர, கீழ் உள்ள பாறைபோல் கீறல் விழாது.
தவிர, கீழ் உள்ள பாறை ஆழம் மிகுந்த பகுதியாதலால், அதன் அடிப்பகுதியில் ஏற்-படுத்தும் மோதலின் தாக்குதல், பாறையின் மேற்பகுதிவரை செல்கிற போது அதன் அதிர்வு சற்று குறைவாக அதிரும். எனவே, அதனால் மேற்பகுதியில் அமைந்தள்ள பாறை ஒரு போதும் கீறல் விழவே விழாது.
அதன் அடிப்படையில் சிந்தித்து, ஆய்வு நடத்தி உருவாக்கப்பட்டது தான், இதில் காட்டியுள்ள மாடல் வீடு! Foundation பலமாகப் போட்டு பல அடுக்கு மாடிக் கட்டிடங்-களாகக் கட்டி பழக்கப்பட்ட நாம், இது மாதிரி வீடுகள் போன்று கட்ட வேண்டு-மென்றால் பார்வையைச் சற்றுவேறு பக்கமாகத்-தான் திருப்புவோம்; என்றாலும், பழகிப்போன வாழ்க்கையை, இயற்கையின் சீற்றம் கருதி, மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
இங்கு காட்டப்பட்டுள்ள வரைபடம் வீட்டின் குடிரனேயவடி இருக்க வேண்டிய அமைப்பை மிகச் சுருக்கமாக காட்டியிருக்-கிறேன்.
வீட்டிற்கும் கீழ்உள்ள Foundationக்கும் உள்ள தொடர்பில் 10 விட்டமுடைய Ball அதை இணைக்கும் Housing Plate; இதைத் தாங்கும் 1-0 1-0 x 3 சதுரமுடைய ஆயபநேவ Power Plate அமைப்பை இணைத்து 2 x 1/2 அளவில் படத்தில் காட்டியுள்ளபடி உடிஉசநவந beam-ல் இணைத்து கட்டி முடிக்கப்பட்டால், நிலநடுக்கம் ஏற்படும் நேரத்தில் கீழ் பகுதியில் அமையப்பெற்ற Foundationி மட்டுமே உடைபடும். மேல் உள்ள வீட்டின் Foundation பாதிப்பு ஏற்படாமல் வீட்டை நகர்த்திவிடும்.
இதன் தன்மை அனைத்தும் அளவிட்டு அதற்கேற்ற முறையில் எடை (Weight) இருத்தல் வேண்டும்.
இது மாதிரி வீடுகள் அமையப் பெற்றால் நில நடுக்கம் இடர்ப்பாடுகளிலிருந்து உயிர்கள் பாதுகாக்கப்படும் என்பது எமது உறுதியான ஆய்வின் முடிவு.