தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
நீதி?
குரல்
ஆய்வு
கவிதை
சிறுகதை
ஹாலிவுட் கலைவாணர்
கற்பனை கலாட்டா
நாட்டு நடப்பு
நூல் ஆறிமுகம்
எப்படி?
பேட்டி
நெசந்தானுங்க
சுயமரியாதைத் திருமணம்
உலகப்பார்வை
பதிலடி
2007 நோபல் பரிசுகள்
கல்வி

 

 

நீதி?

நீதிமன்றத்தின் இன்னொரு பக்கம்

2450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம். தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் மிகுந்த பயன்விளைவிக்கும் திட்டம். சேதுக்கால்வாய் கப்பல் போக்குவரத்துத் திட்டம். இந்தத் திட்டம் செயல்முறைக்கு வந்தால் இலங்கைக்குப் பாதிப்பு. கொழும்புத் துறைமுகத்துக்கு வருமான இழப்பு. எனவே, அந்த நாடு எதிர்த்தால் சரி. அவர்களுக்காக எதிர்க்கிறார்களோ என்னவோ, ஒரு சிறு கும்பல் இங்கே எதிர்ப்பு காட்டுகிறது.
அரசியல் ரீதியாக அணுகி இத்திட்டம் முடிந்து கப்பல் பயணித்தால் பெயரும், புகழும், பெருமையும் தி.மு.கழகத்திற்கு வந்து விடுமே, முதல்வர் கலைஞர் அவர்களுக்கல்லவா எல்லாப்புகழும் போய்ச் சேரும் என்கிற காந்தாரி மனப்பான்மையில் இதனைச் சிலபேர் எதிர்க்கிறார்கள். ராமனை வைத்துக் கோயில் கட்டலாம் என்று (மனக்) கோட்டை கட்டியவர்கள் கைவசம் இருந்த (செங்) கோட்டையையும் கோட்டை விட்டார்கள். எப்படியும் மீண்டும் (செங்) கோட்டையைப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களின் ஆவலாக இத்திட்டத்தை எதிர்த்துப் பேசத் தூண்டியது.
துணைக்கு இங்கே உள்ள மூக்கறையன்-கள் கிடைத்தார்கள். ஒரு விபீஷணனும், ஒரு திரிடையும் கிடைத்துவிடவே இராவணனை ஒழித்துவிடலாம் என நினைத்து, ராமனை முன்னாலே கொண்டு வந்து நிறுத்தினார்கள். நான் தான் பிள்ளையார் சூழி போட்டவன் எனப் பேசிய விபீஷணன், பத்தாண்டுக் காலமாகவே ஆதாம் பாலம் என்றே எழுதி வந்ததை மறைத்து ராமன் பாலத்தைக் காப்போம் என்று கிளம்பியிருக்கும் திரிக்-கடை ஆகிய இருவரின் ஒத்துழைப்புடன் ராமகோபாலன்களும், சு.சாமிகளும் சேர்ந்து கொண்டு கோஷ்டி கானம் பாடுகின்றனர். ராமனைக் கொண்டு வந்து நிறுத்தி அவன் கட்டிய பாலம், இடிக்க விடமாட்டோம் என்று கூப்பாடு போடுகின்றனர்.
இந்த நிலையில் தான் ராமனை ஒரு கைபார்க்க வேண்டிய அவசியம், தமிழ்-நாட்டின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட தமிழர்களுக்கு ஏற்பட்டது. ராமனை இழுத்துக் கொண்டு வந்து எதையோ பேசிப் புண்ணாக்கிக் கொண்டவர்கள் அவர்களின் வாயைக் குறைசொல்லிக் கொள்ள வேண்டுமே தவிர, நம்மை அல்ல! ராமன் யார்? ராமன் கடவுளா? ராமன் அவதாரமா? ராமன் பாலம் கட்டினானா? ராமன் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாலம் கட்டினானா? அத்தனை ஆண்டு-களுக்கு முன் பாலம் கட்டும், தொழில் நுட்பம் இருந்ததா? அந்தத் தொழில்நுட்பத்தை ராமன் படித்தானா? இப்படியெல்லாம் கேள்வி-களை நாம் அடுக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் தான் உருவாக்கினார்கள்!
இதற்கு முறையாக, அறிவு நாணயத்தோடு பதில் சொல்வதை விட்டுவிட்டு, ஆகா! விட்டேனா பார் என்று தொடைதட்டி, முண்டா கட்டிய பிறகு சவாலை எதிர் கொள்ளா-மல் இருக்க முடியுமா? ஆதார-மற்ற, வரலாறு அல்லாத, கற்பனைக் கதாபாத்திர-மான ராமன் இருந்ததற்கே ஆதாரமோ, சான்று-களோ இல்லாத நிலையில் அவன் கட்டியதாகக் கூறப்படும் பாலமும், புளுகும் தான் உண்-மையில் அந்த இடத்தில் இருப்பது காலப்-போக்கில் இயற்கையாக உருவான மணல் திட்டுதான். அதை வெட்டிப் பாதை அமைப்-பதால் தவறு ஒன்றும் கிடையாது என நீதிமன்றத்-தில் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதனைத் தெரிந்து கொண்ட பொய்யர்கள் கூச்சல் போடத் தொடங்கினர்.
ஒரு பண்டாரம் (பெயர் தெரிந்தது தான்) முதல்வர் கலைஞரின் தலையை வெட்டி, நாக்கை வெட்டிக் கொண்டு வந்தால் தங்கம் தரப்படும் என்று திமிர்த்தனமாகச் சொல்லப்--போகத் தமிழகமே கொந்-தளித்தது. அந்தப் பரதேசிக்குப் பக்கபலமாக இருக்கும் ஒரு அரசியல் கட்சியும் சேர்த்தே கண்டனத்துக்கு ஆளானது. உடனே, பண்-டாரம், தான் அப்படிச் சொல்லவில்லை, ஏடுகள் திரித்து எழுதிவிட்டன என்று பம்மாத்து பண்ணினார். அவருக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அரசியல் கட்சி கத்தரித்துக் கொண்டது.
புண்பட்டுவிட்டது, நம்பிக்கையை நாடகம் செய்கிறார்கள் என்றெல்லாம் சில தேய்ந்த லாடங்களும், செல்லாக் காசுகளும் தெரு ஓரத்தில் ஓலமிட்டன. இந்நிலையில் தான் மூக்கை நுழைக்கிறது நீதித்துறை. திட்டத்தில் ஆதாம் பாலம் பகுதி தவிர, ஏனைய இடங்-களில் திட்டத்தைத் தொடர-லாம்; ஆதாம் பாலம் பகுதியில் மூன்று மாதத்திற்குப் பணியைத் தொடரக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பெரும் பொருள் செலவு செய்து நிறை-வேற்றப்படும் திட்டங்-களை அற்பக் காரணங்-களுக்காகச் சிலர் எதிர்க்கிறார்கள் என்-பதற்காகத் தடைசெய்யக்-கூடாது என்பது ஏற்கெனவே வழங்கப்-பட்டுள்ள தீர்ப்பு. நர்மதை நதி நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் அணைத் திட்டம் தொடர்-பான வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பு!
இந்தத் தீர்ப்பு சேதுக்கால்வாய்த் திட்டத்-திற்குப் பொருந்தாதா என்பது சாதாரண-கட்ட அறிவு உள்ளவர்கள் கூடக் கேட்கும் கேள்வி. தலைக்கு ஒரு ஷாம்பு, தாடிக்கு ஒரு ஷாம்புவா?
இதற்கான பதிலைத் தரவேண்டிய-வர்கள் தராத நிலையில், நீதிமன்றத்தை விட்டு நீதி கேட்பதற்காக, நியாயம் கேட்பதற்காக, வீதிமன்றம் வந்தாக வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டு மக்களின் எண்ணங்களை எதிரொலிக்கும் எல்லாக் கட்சித் தலைவர்-களும் கூடிக் கலந்து பேசி எடுத்த முடிவு-ஒரு நாள் வேலை மறுப்பு! தொழிலாளர்-கள், வணிகர்கள், அரசுப் பணியாளர்கள் என்று பல தரப்பினரும் தங்கள் ஒற்று-மையையும், எழுச்சியையும் உறுதிப்-பாட்டையும் உலகுக்கு உணர்த்திடும் வகையில் எடுத்த ஒரு மனதான முடிவு.
மகன் செத்தாலும் பரவாயில்லை, எனக்கு ஆகாத மருமகள் கழுத்தில் தாலி இருக்கக்-கூடாது என்ற கொள்கையைக் கொண்ட குணசாலி மாமியார் இதுபற்றி வழக்கு மன்றம் போனார். வழக்கு மன்றத்தில் ஒரு விசித்திரமான ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதாவது அடைப்பு நடத்தப்படக்கூடாது என்று.
அதனைக் கேள்விப்பட்ட முதல்வர் கலைஞர் மீண்டும் கட்சித் தலைவர்களின் கருத்தைக் கேட்டு, முழுவேலை மறுப்பைக் கைவிட்டு அதே நேரத்தில் உணர்ச்சிப் பிரவாகத்தை அடைக்க முடியாது என்ப-தால் உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்தார். நாடெங்கும் வெற்றிகரமாக நடந்தேறியது. உண்ணாநிலைப்போராட்-டத்தை 80 ஆண்டுக் காலமாகவே எதிர்த்து வரும் தந்தை பெரியாரின் இயக்கம், நோக்கத்தை ஏற்றாலும் செயலை ஏற்காத-தால் பல ஊர்களிலும் போராட்டத்தை முடித்து வைக்கும் பணியைச் செய்தது.
குணசாலி மாமியார் மீண்டும் வழக்கு மன்றத்தை அணுகிய போது, எங்களை மதிக்காமல் எங்கள் உத்தரவை ஏற்காமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி-னாலும் கண்டிக்கத்தக்கது. எங்களை அவமதித்து விட்டார்கள். அவமதிப்பு செய்தது பற்றி மனு தாக்கல் செய்யுங்கள், அந்த முதலமைச்சரையும், தலைமைச் செயலாளரையும் இங்கே வரவழைக்கிறேன் பாருங்கள்! என்றெல்லாம் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இத்தோடு நிறுத்தியிருந்தால் கூடப் பரவாயில்லை; அவர்கள் அடிக்கடிக் கூறுகிற லட்சுமணன் கோடு இங்கே முடிகிறது. ஆனால், கோட்டைத் தாண்டிப் போய், இந்த அரசைக் கலைக்கச் சொல்லி எழுதுவோம். இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கே கெட்டுப் போய்விட்டது என்-றெல்லாம் பேசியிருக்-கிறார்கள்.
பொதுவாக பேச்சாளர் என்ற (ஸ்பீக்கர்) பதவியில் இருக்கும் சட்டமன்ற அவைத்-தலைவருக்கோ, நாடாளுமன்ற அவைத் தலைவருக்கோ, பேசும் வாய்ப்பு குறைவு. உறுப்பினர்கள் தான் பேசுவார்கள். அதே-போல வழக்கு மன்றத்திலும் தலைமை தாங்கும் அலுவலர்கள் பேசமாட்டார்கள்; வழக்குரை-ஞர்கள் தான் பேசுவார்கள். சினிமா மொழியில் சொல்வதானால் இங்கே அது உல்டா ஆகிவிட்டது.
சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 1994 செப்டம்பரில் ஒரு முழு அடைப்பு(பந்த்) உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. முலாயம் சிங் (யாதவ்) அப்போது முதலமைச்சர். இந்த மாநிலத்தில் தான் இந்தியாவின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் உள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளே 77 பேர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பந்த் நாளன்று வழக்-குரைஞர்-கள் 25 பேர் உயர்நீதிமன்ற வாசலில் நின்று உள்ளே சென்றவர்களை மறித்தனர். உண்மையில் வழக்குரைஞர்கள் சங்கம் பந்த்தை ஆதரிப்பதில்லை என முடிவு செய்திருந்தது. அதனை மீறிச் சிலர் மறிய-லில் ஈடுபட்டனர்.
பந்த்துக்கு ஆதரவான அரசியல் கட்சிக்-காரர்கள் நீதிமன்றம் வந்து கலவரம் செய்து காலித்தனத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அவர்களை ஒன்றும் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. கட்சிக்காரர்களால் வழக்குரை ஞர்கள் தாக்கப்பட்டனர். காவல் துறை-யினர் இதைத் தடுக்காத காரணத்தால் வழக்குரைஞர்கள் கோபம் காவல்துறை-யினர் பக்கம் திரும்பியது. ஆத்திரப்பட்ட காவல்-துறையினர் வழக்குரைஞர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்தனர். ஒரு காவலர் வழக்-குறைஞர் ஒருவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார்.
நிலைமை மோசமாகிப் போனதாலும், தலைமை நீதிபதியின் அறைக்குள் புகுந்து அவரையே தாக்க முயன்றதாலும், பின்பக்க வழியாகத் தப்பித்த தலைமை நீதிபதி தனது காரில் ஏறி வீட்டுக்குச் சென்று தொலை பேசி மூலம் இராணுவத்தை வரவழைத்து நிலை-மையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
அப்படி ஏதாவது இங்கே நடந்ததா? பின் ஏன் அப்படி ஆவேசமான சொற்கள் உதிர்க்-கப்பட்டன? வெளிப் படையாக எல்லோர்-க்கும் தெரிந்த காரணம் தான்!
காரணம் என்னவாக இருந்தாலும், காரியம் சட்டப்படி இருக்க வேண்டாமா? நீதிமன்றத்-தில் கருத்து வெளியிடும் போது யோசித்து வெளியிட வேண்டும். இப்போ-தைய நீதிபதிகள் இதை உணர்ந்தாக வேண்டும் என்று கூறினாரே, இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ்.வர்மா!
இன்னொரு தலைமை நீதிபதியாக இருந்த ஜி.பி.பட்நாயக், நீதிமன்றத்தில் போசும்-போதோ கருத்து வெளியிடும் போதோ நீதிபதிகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றாரே!
மற்றவர் சொல்லித்தான், இவையெல்லாம் உயர்ந்த இடத்தில்(?) இருப்பவர்களுக்குத் தெரிய வேண்டுமா? தெரிந்துமா இப்படிப்-பட்ட சொற்கள்?
தான் யார்? தன் பதவி என்ன? தனக்குரிய கடமை என்ன? தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையைக் கண்டிருந்-தார்கள் என்றால் இப்படிப்பட்ட அவசர கோலச் சொல்லாடல்கள் தவிர்க்கப்-பட்டிருக்கும்!
திராவிடர் கழகத்துக்காரர்களைப் பற்றித் தலைவர் தந்தை பெரியார் சொன்னார்: என் தொண்டர்கள் துறவிக்கும் மேலே என்று! துறவிக்காவது பரமபதம் அடைய வேண்டும் என்கிற ஆசை உண்டு. எங்களுக்கு அதுவும் கிடையாதே!
காலம் கனிந்து விட்டது. தானடித்த மூப்பாக நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதைத் தடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நீதித்துறை சர்வேசு-வரர்கள் எனக்கருதிக் கொள்ளும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. மக்களாட்சியின் சேவகர்கள் தான் எல்லோரும்-யாரும் விலக்கல்ல-என்பதை விளங்க வைக்க வேண்டிய வேளை வந்து-விட்டது. அவர்களின் வட்டத்தை வெளிப்-படையாக வரையறுக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அதைச் செய்தே தீரவேண்டும், இன்றே!