குரல்
கனிமொழி எம்.பி.,
சில ஆண்டுகளுக்கு முன் வானளாவிய அதிகாரம் என்ற வார்த்தை பிரபலமாக இருந்தது.
இப்போது, நீதித்துறையில் அது நிலவி வருகிறது. ஜனநாயக நாட்டில் இந்த ஒரு துறை மட்டும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும்? இதுவே ஒரு அத்துமீறல்.
நீதித்துறையின் முடிவுகள் வாதப் பிரதிவாதங்கள் அடிப்படையில் இருக்கின்றனவா? அல்லது பாரம்பரியமாக இருந்து வரும் பகைமையின் அடிப்படையில் இருக்கின்றனவா? என்று தெரியவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்காகப் பேசுகிறார்கள் - செயல்படுகிறார்கள் - திட்டங்கள் தீட்டுகிறார்கள். ஆனால், மக்கள் மன்றத்தோடு எவ்வித பிணைப்பும் இல்லாத நீதிபதிகள் மக்களின் கொள்கைகளை முடிவு செய்யலாமா?
பிருந்தா காரத் எம்.பி.
அரசியல்வாதிகள்மீது, விமர்சனங்கள் வரும் பட்சத்தில் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்வார்கள்.
இல்லாவிட்டால் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், நீதித்துறையில் மட் டும் இப்படி ஒரு நிலைமை இல்லை. மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை நீதித்துறைக்கு வேண்டும். அப்படி இருக்க வேண்டிய தில்லை என்று நீதித்துறையினர் நினைக்கிறார்கள். அது ஜன நாயகத்துக்கு ஆபத்தானது.
எத்தனை ஞாயிற்றுக் கிழமைகளில் நீதிமன்றம் கூடி, விசாரணை நடத்தியிருக்கிறது?
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் நீதித்துறை ஆக்கி ரமித்து வருகிறது. இது கூடாது.
மத்திய அமைச்சர் ஆ. இராசா
20 சதவீத நீதித்துறை அலுவலர்கள் ஊழல்வாதிகள் என்று முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.பி. பரூச்சா கூறியுள்ளார். 500-க்கும் மேற்பட்ட நீதிபதிகள், வழக் கறிஞர்களுடனோ, வெளிநாட்டுத் தூதரகங்களிலோ குடிக்கின்றனர் என்று நீதிபதி வெங்கடாச்சலய்யா கூறியுள்ளார். இப்படி இருந்தால் நீதி பரிபாலனம் எப்படி இருக்கும்? நீதிமன்ற அவமதிப்பு என்ற பிரிவையே நீக்க வேண்டும் என்ற குரல் நீதித் துறையிலேயே எழுந்துள்ளது
``இந்து`` ஆசிரியர் ராம்
நியாயமற்ற, அளவற்ற, உறுதியற்ற அதிகாரங்களைத் தந்திடும் அவமதிப்புச் சட்டம் அகற்றப்படவேண்டும்
நீதிமன்றத்தை எது அவமதிக்கிறது, எப்படி அவமதிக்கிறது என விளக்கம் ஏதுமற்ற நிலை உள்ளது. நீதித்துறையின் தவறுகளைத் தெரிவித்தால் அதனைச் சீர்செய்யும் உருப்படி யான முறை ஏதும் இல்லை. எஸ்.ஆர். பொம்மை வழக்கில் அரசமைப்புச் சட்டக் கூறு 356 எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுபற்றி உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித் துள்ள தீர்ப்புக்கு எதிரான வகையில் நீதிபதி அகர்வால் பேசியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது
``டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் மனோஜ் மிட்டா
``மிட்டே ஏடு தொடர்பான வழக்கில் உண்மைக்கு எதிராக நீதித்துறை செயல் பட்டிருக்கிறது. உண்மையைப் பேசக்கூடாது எனக் கட்டுப்படுத்தினால், அது பொதுமக்கள் நலனுக்கு எதிரானது அல்லவா
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன்
இந்திய அரசைமப்புச் சட்டத்தின் இறையாண்மை ஜனநாயக அமைப்புகளுடன் மட்டும் அடங்கிடவில்லை; மாறாக அது இந்திய மக்களிடையே அமைந்திருக்கிறது. ஜனநாயகத்தின் எந்தவொரு அமைப்பும் சுய கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது தன் அதிகாரத்தை இழந்து விடும் |