தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
நீதி?
குரல்
ஆய்வு
கவிதை
சிறுகதை
ஹாலிவுட் கலைவாணர்
கற்பனை கலாட்டா
நாட்டு நடப்பு
நூல் ஆறிமுகம்
எப்படி?
பேட்டி
நெசந்தானுங்க
சுயமரியாதைத் திருமணம்
உலகப்பார்வை
பதிலடி
2007 நோபல் பரிசுகள்
கல்வி

 

 

ஆய்வு

தத்துவ விசாரணைதான், பகுத்தறியும் ஆற்றல் தான், மானுடத்திற்குத் தேவை-அதனை வலியுறுத்துகிறது இக்கட்டுரை.

ந.ஆனந்தம்

தத்துவம் ஒரு கருவியே, தர்க்கரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் அறிவியல் ஆய்வு மேற்கொண்டு உண்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சியைத் தான் தத்துவம் என்றழைக்கி-றோம். தத்துவ விசாரணை மேற்கொள்வது என்பது, எந்த விஷயம் அல்லது பொருள் பற்றியும் அறிவுப்பூர்வமாக பல கேள்விகள் எழுப்பி அதற்கு அறிவுப்பூர்வமான விடைகள் கண்டு, அவ்விடைகளின் அடிப்படையில் சிந்தித்து உண்மையை அறிவது தான்.
தத்துவம் எவ்வாறு விசாரணை மேற்கொள்-கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, உதாரணத்-திற்கு இனஉயர்வு என்ற பொருளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். ஐரோப்பிய நாடுகளில், வெள்ளை இன மக்கள் பிற இன மக்களை விட அறிவாற்றல் மிக்கவர்கள் என்ற கருத்து நிலவுகிறது. இந்நம்பிக்கை சரியானதா? தவறானதா? என்பதை அறிவுப் பூர்வமாக ஆய்வு செய்வோம்.
மனித சமுதாயத்தின் முன்னேற்றம் முற்றி-லும் வெள்ளை இன மக்களின் பங்களிப்பு-தானா? பிற இனங்கள் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்ய வில்லையா? சரித்திரம் படித்தால், மனித சமுதாய முன்னேற்றம் பல்வேறு இனமக்களின் பங்களிப்பினால் தான் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவுறக் காணமுடிகிறது. நாகரிகங்களின் எழுச்சி-யையும், வீழ்ச்சியையும் பற்றி விமர்சனம் செய்துள்ள சரித்திர அறிஞர் அர்னால்ட் டாயின்பீ, பல்வேறு இனங்கள் உண்டாக்கிய நாகரிகங்களின் எண்ணிக்கையைப் பட்டிய-லிட்டிருக்-கிறார். ஒவ்வொரு இனமக்களும் உண்டாக்கிய நாகரிகங்களின் எண்ணிக்-கையைக் கூறியிருக்கிறார். நோர்டியாக் இன மக்கள் 4 அல்லது 5 நாகரிகங்கள், அல்பைன் 7, மத்திய தரைக்கடல் பிரதேசம் 10, பழுப்பு இனத்தவர் (திராவிடர், மலாய் இனம்) 2, மஞ்சள் இனம் 3, அமெரிக்க சிவப்பு இனம்2 என்று கூறியிருக்கிறார். இவ்வாறு, பல்வேறு இனமக்கள் பல நாகரிகங்களை உருவாக்-கியிருக்கின்றனர். இச்சரித்திரச் சான்றுகள் பல்வேறு இன மக்களும் மனித சமுதாய முன்னேற்றத்திற்கு பங்களித் திருக்கின்றனர் என்பதை உறுதி செய்கின்றன.
வெள்ளை நிற இன மக்களுக்கும், பிற இன மக்களுக்கும் உடல் அளவில் வித்தியாசங்கள் இருக்கின்றதா? மரபு அணுக்களில் வித்தியா-சங்கள் இருக்கின்றதா? இது பற்றி ஆய்வு செய்த மருத்துவ அறிஞர்கள் உடல் அமைப்-பிலும், மரபு அணுக்களிலும் வெள்ளை இன மக்களுக்கும், பிற இனமக்களுக்கும் எந்தவித வித்தியாசங்களும் இல்லை என்கிறார்கள். கருப்பு நிறக் குதிரைகளுக்கும், வெள்ளை நிறக் குதிரைகளுக்கும் குணாம்சங்கள் எவ்வாறு ஒரே மாதிரியாக இருக்கின்றனவோ, அதுபோலத்-தான் பல நிறமுடைய மனிதர்களின் செயல்-திறனும், குணாம்சமும் ஒன்றாகத்தான் இருக்கின்றன என்கிறார்கள். அறிவாற்றலிலும் வித்தியாசம் இல்லை என்கிறார்கள். இப்-பதில்கள் இன உயர்வு என்பது தவறான கருத்து என்பதை மெய்ப்பிக்கின்றன.
அமெரிக்க நாட்டில் கருப்பு நிற இனமக்கள் ஏன் உயர்பதவிகளில் இல்லை? பதவிகளில் இருக்கும் கருப்பு இனத்தவர்களும் ஏன் சிறப்பாக செயல்படுவதில்லை? என்பது ஆய்வுசெய்த மனோதத்துவ வல்லுநர்கள் அந்நாட்டின் சமூகச்சூழலைத் தான் குற்றம் சாட்டுகின்றார்கள். ஆரம்பக்கல்வி நிலையில், பயிலும் திறனில் கருப்பு நிறக் குழந்தைகள், வெள்ளை நிறக் குழந்தைகளுக்கு இணையாக உள்ளனர். புரிந்துகொள்ளும் திறனிலும் வித்தியாசம் இல்லை. ஆனால், அவர்கள் இளைஞர் பருவத்தை அடையும் போது கொஞ்சம் கொஞ்சமாக, தாங்கள் தாழ்ந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை உணர்-கிறார்கள். தங்களுக்கு சமையல் வேலை, சுமை தூக்குவது, சுத்தம் செய்வது போன்ற உடலு-ழைப்பு வேலைகள் தான் அளிக்கப்படும் என்பதை உணர்கிறார்கள். இவ்வுணர்வுகள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, வாழ்க்-கையில் உயர்நிலையை எட்ட வேண்டும் என்ற ஆசையை அழித்துவிடுகிறது. இவ்வாறு, அமெரிக்க நாட்டில் கருப்பு இன மக்கள் சிறப்பாக செயல்படாமைக்கு அவர்கள் மீதுள்ள சமூக, பொருளாதார அடக்குமுறை-கள் தான் காரணமாகும். மரபு அணுக்கள் கரணமல்ல. இதிலும், இன உயர்வு என்ற கருத்து தவறானது என்று உறுதி செய்கிறது.
ஒழுக்கவியல் என்பது தத்துவத்தின் ஒரு பிரிவாகும். மனிதர்களின் ஒழுக்கம் மனிதர்-களின் நடத்தை, குணம் சம்பந்தமாக சிந்தனை செய்வதாகும். ஒரு செயல் நல்லதா அல்லது கெட்டதா என்பதையும், ஒழுக்கமானதா அல்லது ஒழுக்கமற்றதா என்பதைத் தீர்மானம் செய்ய ஒழுக்கவியல் ஆய்வு ஒரு கருவியாகப் பயன்படுகிறது. ஒழுக்கவியல் ஆய்வை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு பல விதிகளை பல தத்துவ அறிஞர்கள் சொல்லியுள்-ளார்கள். ஜெர்மன் நாட்டு தத்துவ அறிஞர் இமானுவேல் காண்ட் (1724-1814) கூறியுள்ள கருத்து சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அவர் மூன்று விதிகளைக் கூறி, அதைப்பயன்படுத்தி ஒரு செயலின் தன்மையை உணரலாம் என்கிறார். முதல் விதி:
எந்த ஒரு செயலும் பொது நியதிக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஒரு செயல், ஒப்புக்கொள்ளப்பட்ட பொது ஒழுக்கநெறிக்கு இசைவாக இல்லை என்றால் அச்செயல் ஒழுக்க மற்றதாகும். பொதுவான சட்டத்தை மீறும் நபர், பிறர் அச்சட்டத்தைக் கடைப்-பிடிக்க வேண்டும் என்றும், மீறக்கூடாது என்றும் விரும்புகிறார். தான் மட்டும் அச்-சட்டத்தை மீறலாம் என்று நினைத்துக் கொள்கிறார். அது ஒழுக்கமற்றதாகும். தங்களு-டைய சுயநலத்திற்காக, பொதுச் சட்டத்தி-லிருந்து தன்னிச் சையாக விதிவிலக்கு அளித்துக் கொண்டு செய்யப்படும் செயல்கள் அனைத்-தும் ஒழுக்கமற்ற செயல்களாகும்.
இரண்டாவது விதி:
மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப்-பட வேண்டியவர்கள். அனைத்து மக்களுக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் அளிப்பது ஒழுக்கமான செயலாகும். அவ்வாறு அளிக்க மறுப்பது ஒழுக்கமற்ற செயலாகும். தான் எவ்வாறு பிறரால் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பு-கிறானோ, அவ்வாறு பிறரை நடத்த வேண்டும் என்று தந்தை பெரியார் கூறினார். நாம், நம்முடைய மகிழ்ச்சிக்காக பிறருடைய மகிழ்ச்-சிக்கு கருவியாக மட்டுமே இருத்தல் கூடாது. மொத்தத்தில், அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் அளித்தல் ஒழுக்கமான செயல்-களாகும். உரிமைகளை மறுத்தல் ஒழுக்கமற்ற செயல்களாகும்.
மூன்றாவது விதி: ஒழுக்கம் சம்பந்தமாக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் தீர்க்கமான சிந்தனை-களின் அடிப்படையில் இருப்பதோடு, மனித சமுதாயமெங்கும் செயல்படுத்தத்தக்கதாக இருக்க வேண்டும். ஒழுக்க விதிகளை செயல்-படுத்தும்போது, அதன் அடிப்படை நோக்கம் தான் முக்கியம். செயல்முறைகள் அடிப்படை நோக்கத்திற்கு எதிர்விளைவுகள் ஏற்படுத்தும் வகையிலும், பாதகமாகவும் இருத்தல் கூடாது. மேலும், ஒரு நபரின் ஒரு செயல் சரியான-தென்று கருதப்பட்டால், அதே செயலை அதே சூழ்நிலையில் எவர் செய்தாலும் சரியென்று கருதப்பட வேண்டும். இவ்வாறு அனைவரு-க்கும் செயல்படுத்த முடிந்த ஒழுக்க விதிகள் யாவும் சரியானவை; ஒழுக்கமானவை.
இவ்விதிகளைப் பயன்படுத்தி இன உணர்வு என்ற பொருளையே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். காண்ட் கூறியுள்ள முதல் விதியின்படி, எந்த ஒரு செயலும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பொதுச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, இன உயர்வுக் கோட்பாடு முதல் விதியின் படி ஒழுக்கமற்றதாகிவிடுகிறது.
இரண்டாவது விதி, அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இன உயர்வுக் கோட்பாடு பிற இன மக்கள் சம உரிமையும், சம வாய்ப்பும் பெறத் தகுதியற்றவர்கள் என்று கருதுகிறது. ஆகவே, இரண்டாவது விதியின்படி இன உயர்வுக் கோட்பாடு ஒழுக்கமற்றதாகிறது.
மூன்றாவது விதி, ஒழுக்கவிதிகள் எங்கும், யாவருக்கும் செயல்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்கிறது. இன உயர்வுக்கொள்-கையே இன வேற்றுமையை நியாயப்படுத்து-வதிலும், பிற இனமக்களின் உரிமைகளை மறுப்பதையும் மையமாகக் கொண்டது. மூன்றாவது விதிக்கு இக்கருத்து முரண்-படுகிறது. ஆகவே, இக்கருத்து ஒழுக்க-மற்றதாகும்.
இவ்வாறாக, உண்மையைக் கண்டறிய தத்துவ விசாரணை உதவுகிறது. செயல்-பாடுகளில் எவை நல்லவை, எவை ஒழுக்க-மானவை என்பதைக் கண்டறிய ஒழுக்கவியல் விசாரணை உதவுகிறது. எனினும், தத்துவத்-திற்கு பல எல்லைகள் இருக்கின்றன. தத்துவம் ஒரு கருவியே தவிர, அதனால் தன்னிச்சையாக செயல்பட இயலாது.
தத்துவம் நன்முறையில் பயன்படுத்தப்பட அடிப்படைத் தேவை மெய்காணும் தேடல் உணர்வு மக்கள் மனதில் இருக்க வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான மன-உறுதியும், நேர்மையும், மக்கள் மனதில் இருக்க வேண்டும். தங்களைச் சுற்றியிருக்கும் சமுதாயச் சூழலுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும். இனப்பாகுபாடு அல்லது சாதிப்பாகுபாடு நிலவும் சமுதாயங்களில் வாழ்கிற மக்கள் இனஉணர்வு அல்லது சாதி உணர்வு நம்பிக்-கைகளுக்கு உட்படாமல் அதைப்பற்றி சுயமாக சிந்திக்கும் மனதைரியம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல, ஒவ்வொரு சமுதாயமும் தங்களுடைய பண்பாட்டின் அடிப்படை மதிப்பீடுகளைத் தத்துவ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தர்க்கரீதியாகவும், காரண காரியங்களின் அடிப்படையிலும் தங்களுடைய மதிப்பீடுகளை பரிசீலனை செய்ய வேண்டும். எப்பொருள் பற்றியும் வெளிப்படையாக விவாதங்கள் நடைபெறு-வதை ஊக்கப்படுத்த வேண்டும். ஆய்வின் முடிவுகள் மதிப்பீடுகளில் மாற்றங்கள் தேவையென்று உணர்த்தினால், சமுதாயம் தங்களுடைய மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரை மக்கள் தொகையும், அதன் பெருக்-கமும் உலகிற்கு ஒரு பிரச்சனையாக இல்லை. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத் திலிருந்து இது ஒரு முக்கிய பிரச்சனையாகிவிட்டது. பல்வேறு நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்தினாலும், இறப்பு விகிதம் குறைந்த காரணத்தாலும், மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாகி, அது ஒரு சமூகப் பிரச்சனையாக உருவாகிவிட்டது. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்-படுத்து-வதின் அவசியத்தை உணர்ந்தன. நெடுங்காலமாக நிலவிவரும் எண்ணங்-களையும், மதக்கோட்பாடுகளையும் புறந்தள்ளி-விட்டு பல சமுதாயங்கள் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் பல நடவடிக்-கைகள் எடுத்திருக் கின்றன. கடந்த காலத்தில் வாழ்ந்த பல சமுதாயங்கள் தத்துவ விசாரணகளை மேற்கொண்டு தங்களு-டைய லட்சியங்களை செம்மைப்படுத்-தியிருந்தால், உலக சரித்திரமே வித்தியாசமாக இருந்திருக்கும். பல மனித நேயமற்ற செயல்கள் உலகில் நடைபெற்றிருக்காது. எடுத்துக்காட்-டாக, இன உயர்வுக் கோட்பாடு பற்றி ஐரோப்பியர்கள் தத்துவ விசாரணை செய்திருப்-பார் களென்றால், அது தவறு என்று உணர்ந்திருப்பார் கள். பிற இன மக்களிடம் ஓரளவு நாகரிகமாக நியாயமாக நடந்திருப்-பார்கள். ஹிட்லரும், அவருடைய சகாக்களும் ஆரிய இனமே உயர்ந்த இனம் என்ற அறிவுக்குப் புறம்பான கோட் பாட்டை தத்துவச்சல்லடை மூலம் சலித்துப் பார்த்திருந்-தால், லட்சக்கணக்கான அப்பாவி யூதர்களைக் கொலை செய்திருக்கமாட்டார்கள். அதுபோல, இந்திய மக்கள் சாதியத்தை தத்துவ விசாரணைக்கு உட்படுத்தி, ஆய்வு செய்-திருப்பார் களேன்றால், இந்தியச் சமுதாயம் சாதிப்பிரச்சனை யிலிருந்து வெகுகாலத்திற்கு முன்னரே விடுபட்டிருகும்.