தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
நீதி?
குரல்
ஆய்வு
கவிதை
சிறுகதை
ஹாலிவுட் கலைவாணர்
கற்பனை கலாட்டா
நாட்டு நடப்பு
நூல் ஆறிமுகம்
எப்படி?
பேட்டி
நெசந்தானுங்க
சுயமரியாதைத் திருமணம்
உலகப்பார்வை
பதிலடி
2007 நோபல் பரிசுகள்
கல்வி

 

 

கற்பனை கலாட்டா

ஞாயிற்றுக்கிழமை
காலை நேரம்,
கவுண்டமணி தன் வீட்டிற்கு முன்புற-முள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டி-ருக்கிறார். அலங்கரிக்கப்பட்ட கடவுள் படம் வைத்த தட்டை ஏந்தியபடி வையாபுரி அவரிடம் வருகிறார்.
வையாபுரி: அய்யா, வெங்கடாஜலபதிக்கு காணிக்கை.
கவுண்டமணி: (வையாபுரியை மேலும் கீழும் பார்த்து) வெங்கடாஜலபதியே ஃபைனான்-சியலா செட்டில் ஆனவர். அவருக்கு நீ எதுக்கு வசூல் பண்றே?
வை: அவருக்காக வசூல் இல்லீங்க... அவருக்கு முடி காணிக்கை தர நான் திருப்பதிக்கு போறதுக்காக வசூல்.
கவு:(வையாபுரியின் தலையிலுள்ள முடியைப் பார்த்து) இந்த முடியைக் கொடுக்-கறதும் ஒண்ணு, கொடுக்காததும் ஒண்ணு)
வை: அளவு முக்கியமில்லைங்க. வேண்டுதல் தான் முக்கியம்.
கவு: கொடு.. நீ அவருக்கு முடிதர்றதுக்கு நான் எதுக்குக் காணிக்கை தரணும்?
வை: காணிக்கை வாங்கி வர்றதா வேண்டியிருக்கேன்.
கவு: உயிரைக் காப்பாத்தற டாக்டருக்கு, சொத்துக்களைப் பாதுகாத்துத் தர்ற வக்கீலுக்குக் கொடுக்கறது ஃபீஸ். ஆனா, கடவுள் பேரைச் சொல்லி வாங்கற பணத்துக்குப் பேர் மட்டும் காணிக்கை. விவரமான ஆளுங்கதான். அது சரி, நீ காணிக்கை வாங்கி வர்றதா வேண்டியிருக்கே. ஆனா, நான் உனக்கு காணிக்கை தர்றதா வேண்டிக்கலையே!
வை: கடவுள் காரியத்துக்கு இல்லைன்னு சொல்லாதீங்க.
கவு: டேய், வட இந்திய வாயா! அவரோட பக்தன் தானே நீ. உன்னை ஏன் வசதியானவனா அவர் மாத்தலை?

வை: எல்லாரையும் வசதியானவங்களா ஆக்க முடியுங்களா?
கவு: என்னசொல்றே? அவர் நினைச்சா முடியாதா?
வை: (முழிச்சபடி) முடியும்... ஒவ்வொருத்-தராத்தானே அவர் பார்க்கணும்.
கவு: அப்படியா... அவர் உன்னைப் பார்த்துக்கப்புறம் போய் அவரைப் பார்க்கறது.
வை: (சீரியசாகி) காணிக்கை கேட்டா, உண்டு இல்லைன்னு சொல்லிப் பழகுங்க.
கவு: ரெண்டு பேர் கியாரண்டி, சூரிடி போட்டு, சொத்துப் பத்திரத்தைக் கொடுத்துக் கேட்டாலே கடன் உண்டு இல்லைன்னு சொல்ல 6 மாசம் ஆவுது. உனக்கு உடனே உண்டு இல்லைன்னு சொல்லணுமா? ஒண்ணு செய். தோட்டத்துல களை எடுத்து பாத்திகட்டு. நூறு ரூபாய் தர்றேன்.
வை: காணிக்கை கொடுக்க மாட்-டேன்னு சொல்றதுக்கு இத்தனை நியாயம்!
கவு: போடா... ஈச்சம்பாய் தலையா!
(எரிச்சலுடன் கவுண்டமணி வீட்டிற்-குள் வர, அவரின் மனைவி, கோவை சரளா டி.வி.யில் இரு சாமியார்கள் அடித்துக்கொள்ளும் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைக்கிறார்)
கவு: ஏண்டி, இந்த புரோக்கிராமைப் பார்த்தே ஆவணுமா?
கோவை சரளா: பார்த்தாதானுங்க அவனுங்க வண்டவாளம் புரியுது.
கவு: ஏன்.. பார்க்காட்டி புரியாதா? சிந்திச்சா தெரியாதாடி...! அது சரி பொம்பளைங்கள நம்பித்தானே அவங்க பொழைப்பே நடக்குது.
கோ: இந்தா... மத்த பொம்பளைங்க மாதிரி என்னை நெனைக்காதே... நாங்க பரம்பரையா ஈரோட்டுக் காரங்களாக்கும்.
கவு: ஆமா... ஈரோடும்பீங்க. தென்னை-மரத்துல தேன் வடியுதுன்னு, எவனாவது கட்டி விட்டான்னா மோத ஆளா க்யூவிலே நிப்பீங்க.
(அப்பொழுது வீட்டின் காலிங்பெல் ஒலிக்க கதவைத் திறக்கிறார் கோவை சரளா. ஒரு கட்சியின் வட்டச் செயலா-ளரான கிரேன் மனோகர் நிற்கிறார்.)
கவு: அட, நம்ம மு.பு.முத்து.
கோ:இதென்னங்க மு.பு.முத்து?
கவு: அரசியல்வாதியா ஆகிறதுக்கு முன்ன நம்ம பேச்சியண்ணன் கடையில மாஸ்டரா இருந்தப்ப முட்டை புரோட்-டா சூப்பரா போடுவார். முட்டை புரோட்டா முத்துங்கறது சுருங்கி, மு.பு.முத்துன்னு ஆயிடுச்சு.

(பக்திப் பரவசமாக கையில் நன்-கொடை ரசீதுப் புத்தகத்துடன் வீட்டினுள் வருகிறார் கிரேன் மனோகர்)
கவு: வாய்யா மு.பு.முத்து, சௌக்-கியமா?
கிரேன்: சௌக்கியம் தாண்ணே... எய்ட்ஸ் கோயில் கட்டலாம்னு எங்க கட்சிப் பொதுக்குழு கூடி முடி-வெடுத்திருக்கு. அதான்...
கவு: ஏய்யா... தமிழ்நாட்லயே உங்க கட்சியில் 5000 பேர்தானே மொத்தம் இருப்பாங்க. இதுல பொதுக்குழு வேறயா!
கிரேன்: ஜனநாயகம்னு ஒண்ணு இருக்குங்களே...
கவு: அது சரி... எய்ட்ஸுக்குக் கோயிலா?
கிரேன்: (கெக்கக்கேவெனச் சிரித்து) எங்க... எய்ட்ஸ் எப்படி வருதுன்னு தெரியாதுங்களா? அதுக்கு ஏதாவது பண்ணி...
கவு: ஏதாவது பண்ணியா? எய்ட்ஸ் வராம இருக்கணும்னா ஒண்ணும் பண்ணாம இருந்தா போதுமே!
கிரேன்: ஒருவனுக்கு ஒருத்தி எனும் கலாச்-சாரத்தில் வந்தவர்கள் தானே நாம். ராமபிரான்...
கவு: (இரு காதுகளையும் பொத்தியபடி) ஆரம்பிச்சுட்டாண்டா... ராமனைப் பத்திச் சொல்லும்-போது அவரோட அப்பனைப் பத்தியும் சொல்லுங்-கடா.. சரி. பாடகி காஞ்சனாவை வெச்சிட்டிருந்தியே.. இப்ப எங்க அவளையே காணோம்?
கிரேன்: எதிர்க்கட்சி மகளிரணித் தலைவிகூட நெருக்கமாயிட்டதனாலே தொடர்பு விட்டுப் போச்சுங்க!
கவு: மு.பு.முத்து... எய்ட்ஸை ஒழிக்க அரசாங்கம் நிறைய செலவு செஞ்சுட்டிருக்கு. அந்தப் பணத்தை நியூட்டர் பண்ணாம எய்ட்ஸ் பத்தி மக்களுக்கு அறிவியல் ரீதியா எடுத்துச் சொல்லுங்க. அத விட்டுட்டு நோய்க்குன்னு கோயில் கட்டாதீங்க..
கிரேன்: எங்க போய் புதுப்பிக்கறது? கோயில் சொத்துக்களும், வருமானமும் மாட்டிக்கிட்டிருக்கு!
கவு: அதிருக்கட்டும் முத்து, போன வருஷம் ரோட்டோர ஆக்கியரமிப்புகளை அரசாங்கம் எடுத்துட்டு வந்தப்ப, உன் வீட்டு முன்னாலே நீ ஆக்கிரமிச்ச இடங்களை அப்புறப்படுத்திடக் கூடாதுன்னு, உடனே மக்கள் கிட்ட வசூல் செஞ்சு வீட்டுக்குப் பக்கத்துல கோயில் கட்டி எஸ்கேப் ஆயிட்டயில்ல!
கிரேன்: (சிரித்தபடி) அதுபோன வருஷக் கதைங்க. இப்ப தேர்தல் வர்றதுக்குள்ள கோயில் கட்டினாத் தானே தேர்தல்ல ஜெயிக்க முடியும்.
கவு: அப்ப நீங்க கோயில் கட்றது தேர்தல்ல ஜெயிக்கத்தானுங்களா?
கிரேன்: பின்ன இல்லீங்களா?
கவு: ஆமா முத்து... போன தடவை உங்க தலைவர் கோயில் படிகள்ல உருண்டு தேர்தல்ல போட்டியிட்டாரே.... என்னாச்சு?
கிரேன்: என்ன, டெபாஸிட் போச்சு! அது வந்து... அவர் சரியா உருளலீங்க!

கவு: முத்து.. வழிபாட்டு மன்றம்னு பேர் வெச்சுட்டுகூட வசூல் செஞ்சு, சரியில்லாத ரோடுகளை ரிப்பேர் பண்ணுங்க! குடிநீர் வசதி இல்லாத இடத்துல போர் போடுங்க. நம்ம வேல்முருகன் கூட நன்கொடை தருவார்.
கிரேன்: வேல்முருகன்னா நம்ம பழனி முருகனா?
கவு: அவரில்லை.. அவர் வேல் வச்சிருப்பார். இவர் செல் வச்சிருக்கிற ஆயில் மில் வேல்முருகன்.. பகுத்தறிவுவாதி!
கிரேன்: ரோடு போடவும், போர் போடவும் தான் கவர்ன்மென்ட் இருக்கே! கடவுளைக் கவனிக்கத்தானே ஆள் இல்லை.
கவு: (திடுக்கிட்டு) கடவுளையே நீங்க கவனிக்கறீங்களா? நீங்க கடவுளைக் கவனிக்க வேண்டாம். அவரை அவரே கவனிச்சுக்குவார்... உங்க மாதிரி ஆளுங்ககிட்ட இருந்து கடவுளைக் காப்பாத்தினா போதும்.. இப்ப கிளம்பு!
(திருதிருவென விழித்துவிட்டு கிரேன் மனோகர் செல்கிறார்)
கற்பனை: கே.கே.பாலசுப்ரமணியன்