நாட்டு நடப்பு

பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம் (BHU) என்பது பண்டித மதன் மோகன் மாளவியா என்ற பார்ப்பனரால் தோற்றுவிக்கப்பட்டது. சனாதன வைதீக, இந்துமதப் பார்ப்பன வெறிக் கொள்கைகளுக்குப் பெயர் போனவர். வட்டமேசை மாநாடு இங்கிலாந்து அரசால் லண்டனில் நடத்தப்பட்டது. இந்துக்கள் சார்பில் கலந்து கொள்ளஇங்கிலாந்துத் தலைநகர் லண்டன் போக வேண்டும் இவர். வான்வழிப் பயணம் இல்லாத வேளை. தரைவழிப் பயணத்திற்கும் பாதை கிடையாது. கப்பல் வழி மட்டும் தான் அவ்வழியிலும் இவர் போக முடியாது!
காரணம் இவர் பிராமனோத்தமர்! கடல் தாண்டக் கூடாத ஜாதி. அதை மீறிக் கடல் தாண்டி லண்டன் போய் ஆராய்ச்சி செய்ததால் தான் கணித மேதை கும்பகோணம் ராமானு-ஜம் (அய்யங்கார்) ஜாதிப் பிரஷ்டம் செய்யப்-பட்டார். அவரது சாவுக்கும் யாரும் வர-வில்லை. பிணம் தூக்கவும் ஆளில்லை. அம்மாதிரி நிலை மாளவியாவுக்கு வரும், வரவேண்டியது தான் ஆனால் வரவில்லை.
பரிகாரம் செய்துவிட்டாராம். சந்தியா வந்தனத்தைச் செய்தாராம். பிராமணாயாமம் பண்ணினாராம். மிலேச்ச நாட்டுக்குப் போனாலும் சாஸ்திரோக்தமாக நடந்து கொண்டாராம். எப்படி? இங்கிருந்தே கொஞ்சம் கங்கை ஆற்று நீரையும் களிமண்-ணையும் கையோடு எடுத்துக் கொண்டுபோய், லண்டன் தேம்ஸ் நதிக்கரையை கங்கைக் கரையாக மாற்றிவிட்டாராம். அதனால் தான் அப்போதே இவருக்கு (களி) மண்ணுருண்டை மாளவியா என்றே பெயர்!
இந்துக்கள் என்ற போர்வையில், பார்ப்-பனர்களின் படிப்பு மேம்பாட்டுக்காகப் பனாரஸ் இந்து, பல்கலைக் கழகம். இதைப் பார்த்த இசுலாமியர்கள் ஒரு கல்விச்சாலை தொடங்கிக் கொள்ள வெள்ளையர்கள் அனு-மதித்த ஏற்பாட்டின் விளைவுதான் அலிகார் முசுலிம் பல்கலைக் கழகம்! இதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி என்பது!
மத அடிப்படையில் பல்கலைக் கழகங்கள் இருந்தால் என்ன படிப்பு கிடைக்கும்? பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்த மட்டில் இது ஜாதிப் பல்கலைக் கழகமும் கூட!. மத, ஜாதி வெறிதான் கொடிகட்டிப் பறக்கும் பார்ப்பான் பண்ணயம் தானே! ஆசிரியர்கள், அலுவலர்கள் எல்லாமே அவாள் தானே!
இந்நிலையில் இப்போது அங்கே ஜாதி ஆதிக்கம் பற்றிக் குரல் கேட்கிறது. விந்தை என்னவென்றால் ஜாதி ஆதிக்கம் பற்றி பார்ப்பனர்கள் கூக்குரலிடுகிறார்கள். ராஜ-புத்திர தாக்குர்கள் ஆதிக்கம் செலுத்து-கிறார்கள் என்று பார்ப்பனர்கள் கூச்சலிடு-கிறார்கள். கூப்பாட்டுக்குத் தலைவர் ராஜேஷ் மிஸ்ரா எனும் பார்ப்பனர். இவர் காங்கிரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
காரணம், பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பஞ்சாப் சிங் தாக்குர் ஜாதி. மய்ய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தாக்குர். அமைச்சரைக் குற்றம் கூறி விரலை நீட்டுகின்றனர் பார்ப்பனப் படிப்பாளிகள்! 2005-இல் நியமனம் செய்யப்-பட்ட 105 ஆசிரியர்கள் அத்தனைப் பேருமே தாக்குர்களாம். இடஒதுக்கீடு (எஸ்.சி, எஸ்.டி) 22.5 விழுக்காடு போக, மீதியில் தாக்குர்களின் விகிதாச்சாரம் கூடுதலாக உள்ளது என்-கிறார்கள். சரி, இவர்கள் மக்கள் தொகை விழுக்-காடும், பதவி அனுபவிக்கும் விழுக்காடும் நியாயமாக இருக்கிறதா? நியாயமாக இருந்ததா?
உத்தரப் பிரதேசத்து 10 விழுக்காடுப் பார்ப்-பனர்கள் இதுவரை 90 விழுக்காடு விழுங்கிக் கொண்டு இருந்தார்களே! வேறோரு உயர்-ஜாதிக்காரன் வருகிறான் என்றவுடன் வயிற்-றெரிச்சல் படுகிறார்களே, இவர்களே அடித்துக் கொண்டு போகிறார்களே என்று! பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு எவ்வளவு காலம், எவ்வளவு வயிற்றெரிச்சல் இருந்தது? இருந்து கொண்டி-ருக்கிறது? எங்கள் கூப்பாட்டை வகுப்பு வாதம் என்று பேசினீர்களே! நீங்கள் இப்போது பேசுவதற்கு என்ன பெயர்? வகுப்பு வாதம் தானே!
தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வரும்-போது தெரிகிறதா? |