பேட்டி

(அறிவார்ந்த நோக்கம், நேர்மையற்ற கிறிஸ்தவர்கள், கற்பனை நண்பரை விட கடவுள் மேலானவர் அல்ல என்பவை பற்றி ரிச்சர்ட்ஙீஙீடாக்கின்ஸ் என்ற புகழ் பெற்ற உயிரியலாளர் பேசுகிறார். அறிவியல் மீது மத நோக்கம் கொண்ட தாக்குதல்களுக்கு எதிராகவும் உரு மலர்ச்சி (பரிணாமக் கொள்கை) யை ஆதரிப்பதன் மூலமும் இவர் பெரும்புகழ் பெற்றவர். அவர் பெலிஃபெண்ட் இதழில் அளித்த பேட்டியிலிருந்து.)
கல்வியின் நிலை பற்றி, குறிப்பாக அறிவியல் கல்வி பற்றி நீங்கள் கவலை கொண்டுள்ளீர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் உங்களால் கற்பிக்க இயலுமானால், மக்கள் எதை நம்பவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்?
சான்றுகள், ஆதாரங்கள் மெய்ப்பிக்கின்ற எதையும் அவர்கள் நம்பவேண்டும் என்று நான் விரும்புவேன். சான்றுகளை, ஆதாரங்-களை அவர்கள் பார்க்கவேண்டும், அவற்றை, அவற்றின் தகுதியின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தன்னுள் தோன்றியது என்பதற்காகவோ அல்லது நம்பிக்கை காரணமாகவோ எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. முற்றிலும் சான்றுகள், ஆதாரங்களின் அடைப்படை-யிலே எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அனைத்து சான்றுகளையும், ஆதாரங்-களையும் மதிப்பிட அனைவராலும் இயலாது. அளவைக் கோட்பாட்டு இயல்பியல் ஆதாரங்-களை மதிப்பிட நம்மால் இயலாது. எனவே, ஒரு சில விஷயங்களை நம்பிக்கையின் அடிப்-படையில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி-யுள்ளது. நான் ஓர் உயிரியிலாளன் என்பதால், இயல்பியல் என்ன கூறுகிறதோ அதை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அறிவியல் என்பது மதிப்பிடும் ஓர் நடைமுறையாகும். நானே அறியும் வகையில் இயல்பியலாளர்கள் செயல்படுவதை நான் நம்புகிறேன். மக்கள் தங்கள் நம்பிக்கையை சான்று, ஆதாரங்களின் அடிப்படையில் கொள்ள வேண்டும் என்றும், நம்பிக்கை, தெய்வீகக் காட்சி, பழக்க வழக்கம் அல்லது அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நம்பிக்கை கொள்ளக் கூடாது என்றும் நான் விரும்புகிறேன்.
உரு மலர்ச்சி (பரிணாமக் கொள்கை) பற்றி மக்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
உரு மலர்ச்சி (பரிணாமக் கொள்கை) என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பலரும் அதை புரிந்து கொள்ள-வில்லை. சில வாரங்களுக்கு முன்பு இந்-நாட்டின் (அமெரிக்காவின்) இரு வேறு மதத் தலைவர்கள் இது பற்றி கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு மனிதனுக்கு வாலுடன் கூடிய குரங்கு பிறப்பதை நான் பார்த்தால் உரு மலர்ச்சிக் கோட்-பாட்டை நான் நம்புவேன் என்று அவர்கள் கூறினார்கள்.
இது உரு மலர்ச்சி அறிவியல் என்றால் என்ன என்பதைப் பற்றி அறியாமல் தடுமாறுவதாகும். உரு மலர்ச்சி இயலாளர்கள் இவ்வாறு-தான் நம்புகிறார்கள் என்று அவர்கள் கருது-வார்களேயானால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதில் வியப்பேதும் இருக்க முடியாது. முக்கிய உயிரியல் கோட்-பாட்டைப் பற்றி சிறிதளவு கூட அறியாத-வர்கள் ஒரு நாகரிக நாட்டில் தலைமைப் பொறுப்புகளில் எவ்வாறு இருக்க இயலும்?
தற்செயலாக நிகழ்வது என்பதற்கு நோக்கம் கொள்வது என்பது ஒரு மாற்றாக அமைய முடியாது என்று அண்மையில் பேசும் போது கூறினீர்கள். உரு மலர்ச்சி என்பது அவ்வப்போது தற்செயலாக நிகழ்வது என்றே பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.
அது பொருத்தமற்றது; முட்டாள்தன-மானது. எது தேவை என்பது எதிர்பார்க்க இயலாதது என்ற பொருளில் கூறப்படுவதே ஒழுங்கு அமைவற்ற (திட்டமிடப் படாத) மாற்றம் என்பது. இயற்கைத் தேர்வு என்பது குறிப்பிட்ட நோக்கம் அற்றது என்பதாகாது. இயற்-கைத் தேர்வு என்பது வழிநடத்திச் செல்லப்படும் ஒரு நடைமுறையாகும். ஆனால் அது கடவுள் என்ற உயர்ந்த ஆற்றலால் வழி-நடத்திச் செல்லப் படுவதில்லை. எந்த மரபணு நீடித்து உயிர் வாழ்கிறது, எது உயிர்வாழ இயல்வதில்லை என்னும் எளிய வழிகாட்டும் நடை முறையே இயற்கைத் தேர்வு ஆகும். அது குறிப்பிட்ட நோக்கம் கொண்ட ஒரு நடை-முறையே. தனது செயல்களை விலங்குகள் எவ்-வளவு சிறப்பாக செய்ய முடியுமோ, அது வேட்-டையாடுவது, பறப்பது, மீன் பிடிப்பது, நீந்துவது, தோண்டுவது எதுவாக இருந்-தாலும் சரி, அவ்வளவு சிறப்பாகச் செய்யும் விலங்குகள் தங்கள் மரபணுக்களைத் தங்கள் வம்சாவளிக்கு அளிக்கின்றன. நோக்கம் கொண்ட நடைமுறையின் காரணமாகவே சிங்கங்-கள் வேட்டையாடுவதில் வல்லவையாக உள்ளன; மான்கள் சிங்கங்களிடமிருந்து தப்பி ஓடுவதில் திறமையானவையாக உள்ளன; மீன்கள் நீந்துவதில் திறமை மிகுந்தவையாக உள்ளன.
நல்ல அறிவியல் கல்வியும், உரு மலர்ச்சி பற்றியும் கற்பிக்கப்பட்ட அறிவார்ந்த மக்களில் பலர், அறிவியலின் முன் நிற்க இயலாமல் தோல்வியுறும் மதம் கூறுவதை நம்பவே செய்கின்றனர். இதிலிருந்து உங்களுக்குத் தோன்றுவது என்ன?
இதைக் கண்டு என்ன நினைப்பது என்றே தெரியவில்லை. அறிவியலுக்குச் செய்யப்படும் நம்பிக்கை மோசடி என்றே அதை நான் எண்ணுகிறேன். அறிவியலுக்கும் மேலாகக் கருதும் ஒரு மதச் செயல் திட்டத்தை, அவர்கள் மட்டுமே அறிந்துள்ள காரணங்-களுக்காக, அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
இயற்கைத் தேர்வு மற்றும் ஒழுங்கமை-வில்லாத (திட்டமிடப்படாத) மாற்றம் ஆகியவை பற்றி சிந்திக்கும் மக்களில் சிலர் வெறுப்பும் மனச் சோர்வும் அடைவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உரு மலர்ச்சி மற்றும் இயற்கைத் தேர்வு எனும் கருத்து, தனிப்பட்ட மக்களின் வாழ்க்கை, பொதுவான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையுமே பொருள் அற்றதாகச் செய்து விடுவதாக சிலரை உணரச் செய்கிறது.
மக்களை வெறுப்படையவும், மனச்சோர்-வடையவும் அது செய்கிறது என்பது உண்மை-யா-னால் அது கஷ்டமானதுதான். என்றாலும் அதுதான் உண்மையானது. இந்த பிரபஞ்சம் நமக்கு அனுதாபமோ, ஆறதலோ அளிக்கக் கடமைப்பட்டது என்று எவரும் எதிர்பார்க்க இயலாது. நம் மனதில் மகிழ்வான உணர்வினை அது ஏற்படுத்தவேண்டும் என்றும் எதிர்பார்க்க இயலாது. அது உண்மையானது என்றால், உண்மையானதுதான்; எனவே அதனை ஏற்று, அதனுடன் இணைந்து வாழ முற்படுவதே சிறந்ததாகும்.
என்றாலும், இதனால் ஒருவர் மனச்சோர்வ-டைய முடியும் என்ற நான் கருதவில்லை. சோர்வடைந்ததாக நான் உணரவில்லை. நான் உற்சாகமாகத்தான் உள்ளேன். அறிவியலைக் கவிதை அளவுக்கு உயர்த்தி, அறிவியல் பற்றி ஆன்மீக வழியில் அல்லாது ஒருவர் எவ்வாறு வேடிக்கையாகக் காட்ட இயலும் என்பதை எனது வானவில் கலைகிறது என்ற நூல் காட்டுகிறது. இது இயற்கையை மீறிய உணர்-வினால் செய்யப்படுவதல்ல; என்றாலும் இன்னும் விடைகாண இயலாத ஆனால், மகிழ்ச்சி தரும் புதிர்கள் பல இருக்கவே செய்கின்றன.இப் பிரபஞ்சத்தின் அளவு, எல்லை, புவியியல் காலத்தின் ஆழம், உயிரின வாழ்வில் காணப்படும் பெரும் சிக்கல் ஆகிய இவை அனைத்தும் எனக்கு தூண்டுதல் அளிக்-கும் தன்மை கொண்டவையே. அவற்றைக் கற்பது, ஆய்வது எனது வாழ்க்கையைப் பொருளுள்ளதாக, பயனுள்ளதாக ஆக்குகிறது.
கடவுளை படைப்பாளி என்று சுட்டிக் காட்டும் ஆன்மீக விளக்கம் மிகுந்த மனநிறைவளிப்பதாக இல்லை என்று கூறி அறிவார்ந்த படைப்பு நோக்கத்தை நீங்கள் விமர்சிக்கிறீர்கள், குறை கூறுகிறீர்கள். வாதமுறை அடிப்படையிலும், அறிவியல் அளவிலும் நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கருதுகிறேன்.
ஆமாம். எங்கிருந்து அந்தப் படைப்பாளி வந்தான் என்பதை அது விளக்கவில்லை. இவ்வளவு சிக்கல் நிறைந்த கணக்கிலடங்கா உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின என்ப-தையும், இவ்வளவு உயிரினங்கள் உரு மலர்ச்சி யின் மூலம் தோன்றியிருக்க முடி-யாது என்ப-தையும் அவர்கள் வலியுறுத்துவார் களானால், நன்று. இவை அந்த அளவுக்கு சிக்கல் நிறைந்தவையாக இருந்தால், அவை எப்படி படைக்கப்பட்டிருக்க இயலும்? அப்-படி-யானால் அத்தகைய படைப்பாளி அவற்றை விட கூடுதலாகச் சிக்கல் கொண்ட-வனாகத்-தானே இருக்க வேண்டும்.
மற்றொரு நிலையில் ஆன்மிக ரீதியிலான பதிலை பெரும்பாலாக மக்கள் ஏற்றுக் கொள்வதாகவே தோன்றுகிறது. அதில் என்ன பிரச்சினை இருப்பதாக நீங்கள் காண்கிறீர்கள்?
வேறு எந்த நிலையில்?
கடவுள் என்னும் கருத்து மிகவும் மனநிறைவு அளிப்பதாக உள்ளது என்று மக்கள் கூறும் நிலையில்...
அப்படியா? உங்கள் சிந்தனைகளையும், உங்கள் பிரார்த்தனைகளையும் கேட்க இயன்ற, உங்களுக்குத் தேறுதலும், ஆறுதலும் அளிக்-கும், இறப்புக்குப் பின் உங்களுக்கு வாழ்வு அளிக்கும் கற்பனையிலான ஒரு நண்பர் உங்களுக்கு அறிவுரை, ஆலோசனை அளிக்க முடியும் என்று நம்புவது இயலுமா? உங்-களால் அவ்வாறு நம்ப முடிந்தால் அது மனநிறைவளிப்பதாக இருக்கக்கூடும். ஆனால் ஒரு பொய்யை நம்புவதற்கு யார்தான் விரும்புவார்கள்?
உரு மலர்ச்சியை நம்புவதன் தொடர்ச்சிதான் நாத்திகமா?
மாற்ற இயலாதபடி தெளிவாக அவை இரண்டும் இணைக்கப்பட முடியாதவை. ஏனென்றால் இறையியல் நம்பிக்கை கொண்-டவர்களில் பெரும் அளவினர் இயற்கை உரு மலர்ச்சித் தத்துவத்தை நம்பு-கின்றனர். உண்மையைக் கூறுவதானால், கத்தோலிக்க அல்லது ஆங்கிலேய அல்லது வேறு எந்த அறிவார்ந்த தேவாலய அமைப்பைச் சேர்ந்த, மதிக்கத்தக்க இறையியல் நம்பிக்கை யாளர்கள் உரு மலர்ச்சியை நம்புகின்றனர். அதுபோலவே, உரு மலர்ச்சித் தத்து-வயிலாளர்களில் பெரும் எண்ணிக்கை கொண்ட-வர்கள் மத நம்பிக்கையாளர்-களாகவும் உள்ளனர். எனது தனிப்பட்ட உணர்வைப் பற்றி கூறவேண்டு-மானால், உரு மலர்ச்சியை நான் புரிந்து கொண்டதுதான் என்னை நாத்திகத்துக்கு வழி நடத்தியது என்று கூறுவேன்.
மனிதரிடையே காணப்படும் மிகவும் ஆர்வமளிக்கும் அல்லது குறிப்பிடத்தக்க அவர்களது நடத்தையை இயற்கைத் தேர்வி-னால் அளிக்க முடியாது என்று கூறுபவர்-களுக்கு உங்களால் என்ன பதில் கூறமுடியும்? குடும்பத்தைச் சாராத குழந்-தைகளை தத்தெடுத்துக் கொள்வது, தாங்களாக விரும்பி மணம் செய்து கொள்ளாமல் இருப்பது, வாழ்-நாள் முழு-வதும் பிரார்த்தனையிலேயே செலவிட முடிவு செய்வது போன்ற நடத்தை-யைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். உங்களுக்குச் சொந்தமில்லாத அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரின் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்வது என்பது ஆர்வமளி-க்கும் ஒரு செய்தியாகும். ஒரு மரபணுக் கண்ணோட்டத்-தில் செய்யக் கூடாத, சுயநல-மிக்க, தவறான செயலை மனிதர் மட்டுமன்றி, மற்ற உயிரினங்களும் செய்வதேன்? இடம் பெயரும் பறவைகள் இதைத்தான் செய்கின்றன. மற்ற இனங்கள் (பறவைக் குஞ்சுகள்) உருவா-வதற்-காகவே உண்மையில் அவை இவ்வாறு செய்கின்றன. இத்தகைய இடம் பெயரும் பறவைகளைத் தத்தெடுத்துக் கொள்ள நிர்பந்தப்படுத்தப்படும் பெற்றோரைப் பொறுத்-தவரையில் இது ஒரு தவறேயாகும்.
எனவே, இவ்வாறு குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வது என்பது ஒரு மோசமான ஒப்பீடாகும். இந்த வழக்கில், தத்தெடுத்துக் கொள்ளப்படுவது, உங்களின் சொந்த இனமல்ல.
தத்தெடுத்துக் கொள்ளும் பெற்றோர் தத்தெடுத்துக் கொண்ட குழந்தைகளை நேசிப்பதில்லை என்பது போன்று இக் கருத்து எடுத்துக் கொள்ளப்படுவதை நான் வெறுக்கி-றேன். ஆனால், ஒரு குழந்தை வேண்டும் என்ற பெருவிருப்பம் இத்தகைய பெற்றோரின் உணர்வுகளை பலப்படுத்துகிறது என்பதி-லிருந்து, அதை ஒரு மரபணுத் தவறு என்று உங்களால் நினைக்க இயலும். அவர்களால் ஒரு சொந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாத போது, ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்வதன் மூலம் அவர்கள் பெற்றோராக வேண்டும் என்ற தங்களின் பெருவிருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இதேபோன்று நாம் பாலியல் விருப்பங்-களையும், உணர்வுகளையும் பெற்றுள்ளோம். நாம் பாலியல் உறவை விரும்பும்போது, நாம் கருத்தடை முறையைப் பயன்படுத்துகிறோமா இல்லையா என்பது ஒரு பிரச்சினையே அல்ல. பாலியல் இன்ப நுகர்வு, பாலியலின் இயல்பான நோக்கமான இனப் பெருக்கத்திலிருந்து பிரிக்கப்பட்டு விடுகிறது. ஆனாலும், நாம் வளர்க்கும் குழந்தை நம் சொந்தக் குழந்தை இல்லை என்றபோதும், அதன் பெற்றோராக இருப்பதில் நாம் மகிழ்ச்சி அடைவது போன்ற அதே வழியில், பாலியல் உறவையும் நாம் அனுபவிக்கவே செய்கிறோம். ஆக்கபூர்வமான நம்பிக்கை கொள்வதற்கு ஆதார மான சில முக்கியமான விஷயங்களை, இயல்பாகவோ அல்லது இயற்பொருள் வாதக் கண்ணோட்டத்திலோ, உங்களால் குறிப்பிட முடியுமானால், அவை என்னவாக இருக்கும்?
இந்தப் பால் வீதி மண்டலத்தைப் பற்றியும், பலகோடி பால்வீதி மண்டலங்களில் இது ஒன்று என்ற உண்மையைப் பற்றியும், நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்-வதில் மனித இனம் உண்மையிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளது என்பதையும், இப் பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்களில் நாமும் ஒரு பகுதி என்ப-தையும் எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் பிரபஞ்சத்-தில் பெருமை மிக்க ஏதோ ஒன்று இருப்பதா-கவே நான் நினைக்கிறேன். ஊக்கம் அளிக்கும் ஒரு உண்மையான சிந்தனையாகவே அதனை நான் காண்கிறேன். அறிவியலுடன் எந்தவிதத் தொடர்பும் அற்ற மற்ற விஷயங்கள் - இசை, கவிதை, பாலியல், நேசம் - போன்றவைகளும் இருக்கவே செய்-கின்றன என்பது நன்கு தெரிகிறது. அத்துடன் கூடுதலாக இருக்கும் உண்மை என்னவென்றால் நாம் எப்போதுமே பெற இயன்ற ஒரே வாழ்க்கை இதுதான் என்பதே. இறந்த பின்னரும் நீ மறுபடியும் பிறந்து வாழப்போகிறாய் என்று உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. உனக்குக் கிடைத்-திருக்கும் வாழ்க்கையை எந்த அளவுக்கு அனுபவிக்க முடியுமோ, அந்த அளவுக்கு அனுபவித்து, அந்த வாழ்க்கையை முழுமை-யாக வாழ்ந்து பார்.
உங்கள் மகள் வருங்காலத்தில் மதநம்பிக்கை கொண்டவளாக மாறினால், அது பற்றி நீங்கள் எவ்வாறு உணர்வீர்கள்?
நல்லது. அவ்வாறு இருப்பது அவளது விருப்பம். அவள் அவளாக இருக்க விரும்பு-கிறாள் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. அவள் எதை விரும்புகிறாளோ அதைச் செய்ய அவள் சுதந்திரம் பெற்றிருக்-கிறாள். அவ்வாறு மதநம்பிக்கை கொள்ளும் அளவுக்கு அவள் முட்டாளாக இருக்க-மாட்டாள் என்றே நான் நினைக்கிறேன். ஆனாலும், அவ்வாறு இருப்பதோ இல்லால் இருப்பதோ அவளது முடிவே.
உங்களின் சொற்களை மதநம்பிக்கை கொண்ட மக்கள் எவ்வாறெல்லாம் திரித்துக் கூறினார்கள் என்பது பற்றி நீங்கள் கூறியிருக்கிறீர்கள். உங்களின் எந்தெந்த சொற்கள் அவ்வாறு திரித்துக் கூறப்பட்டன?
அவற்றிற்கு வரலாறு ஏதுமில்லை என்பது போன்ற பழைய கால உயிரினம் அல்லது தாவரப் படிவங்களின் திடீர் வெடிப்புதான் கேம்ப்ரியன் வெடிப்பு என்பது போன்று, அது படைப்பாளி என்பது போன்ற ஒலியுடன் எதையாவது கூறி நான் எனது வாதத்தைத் தொடங்கும் போதெல்லாம், அதன் காரணம் என்ன என்பதை விளக்குவதற்-கான ஒரு முன்னோட்டமாகத்தான் நான் அதைக் கூறுகிறேன் என்பது வெளிப்படை.
ஆனால் இவர்கள் நான் கூறுவதை முழு-மை-யாகக் கூறாமல் அவர்களுக்கு சவுகரிய-மானதை மட்டுமே எடுத்துக் கூறுவார்கள். அடிப்படையில் அவர்கள் நாணயமற்ற-வர்கள் என்பதையே இது எடுத்துக் காட்டு-கிறது. உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எதுவும் உண்மையி-லேயே அவர்களுக்குக் கிடையாது. தங்களின் பிரச்சாரத்தில் மட்டுமே அவர்கள் ஆர்வம் கொண்டவர்கள்.
நீங்கள் கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில், உங்கள் சொற்களை தவறாகப் பொருந்தாத இடத்தில் வைத்து அவர்கள் அடிக்கடி கூறும் உங்களின் ஒன்று அல்லது இரண்டு சொற்றொடர்களைச் சுட்டிக் காட்ட முடியுமா?
(தமிழாக்கம்: த.க.பாலகிருட்டிணன்)
|