தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
நீதி?
குரல்
ஆய்வு
கவிதை
சிறுகதை
ஹாலிவுட் கலைவாணர்
கற்பனை கலாட்டா
நாட்டு நடப்பு
நூல் ஆறிமுகம்
எப்படி?
பேட்டி
நெசந்தானுங்க
சுயமரியாதைத் திருமணம்
உலகப்பார்வை
பதிலடி
2007 நோபல் பரிசுகள்
கல்வி

 

 

நெசந்தானுங்க

மெகாத் தொடர், மெகாத் தொடர்னு பெண்களைக் கண்ணீர் மழை பொழிய வைத்த தொலைக்காட்சிகள் இப்போது நடிகர்களை அழவைத்து ஊருக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஆடல், பாடல், நகைச்சுவை என திறமையை வெளிக் கொண்டு வரும் விதத்தில் போட்டிகளை தமிழகம் தழுவிய அளவில் நடத்தத் தொடங்கியது விஜய் தொலைக்காட்சி. தொடக்கத்தில் போட்டி, விறுவிறுப்பு என்றிருந்தாலும், போட்டியின் போது தேர்ந்தெடுக்கப்-படாதவர்கள் அழு-வதை இரண்டு காமிராக்களைக் கொண்டு படமாக்கி அதற்கு சோக இசையைக் கோர்த்து இழுத்து வெளியிட்டு போலியான சோக நிழலை உருவாக்கினார்கள் விஜய் டி.வி.க்-காரர்கள்.
நிகழ்ச்சியின் வெற்றி மற்ற தொலைக்காட்சி யினரையும் பற்றிக் கொள்ள, ஆளாளுக்கு ஒரு விதமான தலைப்புப் போட்டு ஒரே விதமான நிகழ்ச்சிகளைச் செய்ய ஆரம்பித்தனர். இந்த டி.வி.யில் முடித்து, அந்த டி.வி. முடித்து இந்த டி.வி. என சின்னத்திரை நடிகர்கள் அழுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ஆடத்தொடங் கினார்கள்.
முகங்கள் மாறாமல் இருப்பதால் மற்றவற்றி-லா-வது மாற்றத்தைக் கொண்டுவர வேண்டு-மென மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.
காப்பி டம்ளரில் கையெழுத்து என்று இவர்கள் வாங்கினால்... களிமண் தகட்டில் கைரேகை பதிப்பு என்று அவர்கள் வாங்கினார்கள். கலக்கப்போவது யாரென்று இவர்கள் கேட்டால், அசத்தப்போவது யாரென்று அவர்கள் கேட்டார்கள். டிஜிட்டல் மதிப்பெண்களை இவர்கள் போட்டால், மதிப்-பெண் அட்டையை அவர்கள் காட்டினார்கள். இப்போது அடுத்துரும் டிவிக்காரர்கள் புதியதாய் என்ன செய்வதென்று புரியாமல் காற்றில் மதிப்பெண்களை வரைந்து காட்டு-வோமா என்று யோசித்துக் கொண்டிருக்-கிறார்கள்.
இப்படி போட்டி வலுத்துப் போக, மீண்டும் நிகழ்ச்சியைத் தூக்கி நிறுத்த இன்னொரு அழுகை நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. பிஞ்சில் பழுத்த பலா ஒன்று நடுவர் பொறுப்பில் இருந்துகொண்டு, நீ ஆடியது ஆட்டமே இல்லை என்று சொல்ல, அதற்கு போட்டியாளர் பதிலளிக்க.. நீண்டு கொண்டே சென்ற விவாதத்தின் முடிவில் நான் வெளி-யேறுகிறேன் என்று சொல்லி நடுவர் வெளியேறுவதாக நாடகத்தின் இறுதிக் காட்சி முடிந்தது.
இதில் நடுவராயிருந்த நடிகர் சிம்பு சொந்த சரக்குகளை கொஞ்சும் அவிழ்த்துவிட்டார். ஏற்கனவே பல வம்புகளில் மாட்டிகெட்ட பெய-ரெடுத்-திருக்கும் நேரத்தில் தனக்கு அனுதாபம் தேடிக் கொள்ளும் வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்திக்-கொண்டார். விஜய் டி.வி.க்கு.. விலகிப்போயிருந்த நேயர் வட்டமும், விளம்பரமும் மீண்டும் கிடைத்-தது. நேயர்களுக்கு.. சின்னத்திரையில் ஒரு வெள்ளித்-திரை நடிகர் நடித்த நாடகத்தை பார்த்த திருப்தி அப்பாடா... ஜென்ம சாபல்யம் அடைஞ்சாச்சு!....


Year 1981
1.Prince Charles got married
2. Liverpool crowned Champions of Europe
3. Australia lost the Ashes
4. Pope Died
1 Year later 1982
Foot ball World Cup won by Italy
1 Year later 1983
India won the world cup!!!
Year 2005
1.Pince Charles got married
2.Liverpool crowned champions of Europe
3.Australia lost the Ashes
4.Pope died
1 Year later 2006
Football World Cup won by Italy
1 Year later 2007
2007 Cricket World Cup : India???

இப்படி ஒரு மின்னஞ்சல் 2007 உலகக் கோப்பையின் போது வந்ததே நினைவிருக்கா? அப்போது பிடுங்க முடியாததால் தங்கள் கணிப்பை நிலைநிறுத்த 20-20 உலகக் கோப்பையின் வெற்றியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் கீழ்காணும் மின்னஞ் சல் வரிகளில் வெளிப்படுகிறது.
இதுதான் ஜோசியத்தின் திறமை... அதாவது யாருடைய வெற்றியையாவது தன்னுடையதாக்கிக் கொள்வது. நாஸ்ட்ரடாமஸ் தொடங்கி சாதாரண கிளி ஜோசியக்காரன், எலி ஜோசியக்காரன் வரைக்கும் அதுதான் கதை.
குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாக என்று நாகரிகமாகச் சொன்னாலும் சரி, அவரைக்கு பதில் துவரை விளைந்தாலும் தான் சொன்னது போல்தான் நடந்தது என்ற ஏதாவதொன்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படித்தான் இந்த மின்னஞ்சலும்...
இதில.. எப்படி எங்க லாஜிக்குன்னு தலைப்பு வேற...! என்னங்கடா உங்க லாஜிக்கு!
போப் சாவுறதுக்கும், சார்லஸ் மறுக்கா மணம் முடிக்கறதுக்கும், இந்தியா ஜெயிக்கிறதுக்கும் இன்னாங்கடா லிங்க்.. அதில ஏதுடா லாஜிக்கு? (இதில் இன்னொரு உண்மை என்னவென்றால் போப் முதலாம் ஜான்பால் இறந்தது 1978-இல்)
அப்ப இன்னொரு தபா இந்தியா ஜெயிக்கணும்னா, கமீலாவைக் கவுத்துவுட்டுட்டு சார்லஸ் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணுமா? இல்ல போப்புதான் பொட்டுன்னு போவணுமா? கிரிக்கெட் பேரைச் சொல்லி உலக யுத்தத்தை ஆரம்பிச்சிறாதிங்கடா? (இதில் வரும் டாக்களை விவேக் பாணியில் மட்டும் படிக்கவும்)
வரலாறு அச்சுப்பிசகாமல் திரும்ப நிகழ்வதில்லை ங்கிற வரலாற்றை மறந்துடாதீங்க!
சரி, நம்ம பழைய பிரச்சினைக்கு வருவோம்...
2007-இல் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் போன்ற இன்றைய பூணூல் திருமேனிகளால் முடியாததை 24 ஆண்டுகள் கழித்து இன்னொரு பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டிலிருந்து வந்திருக்கும் தோனி சாதித்துக் காட்டியிருக்கிறார். (இது தனி மனிதரின் வெற்றியல்ல.. குழுவின் உழைப்பு என்ற வியாக்கியானங்கள் எல்லாம் பார்ப்பனரல்லாதோர் சாதிக்கும் போது தான் வெளிவரும். இல்லையேல் பார்ப்பனர்களை மீடியாக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும்)
இரண்டு பார்ப்பனரல்லாதார்கள் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பைகளைக் கைப்பற்றி யிருக்கிறது.
தகுதி திறமை பேசுவோர் இந்த லாஜிக்கை பார்க்க வேண்டுமல்லவா?
1983-ல் வெங்கட்ராமன், கவாஸ்கர் போன்ற பூணூல் திருமேனிகளால் முடியாததை பின்தங்கிய ஹரியானா மாநிலத்திலிருந்து வந்த கபில்தேவ் சாதித்துக்காட்டி உலகக் கோப்பையை வென்றார்.
அப்படி 1983-இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கும், 2007ல் 20-20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கும் என்ன ஒற்றுமைன்னு லாஜிக்குடன் பார்த்தால் இன்னொரு உண்மை விளங்கும்.
இரண்டு அணிகளின் தலைவர்களும் யார் என்பதில் அடங்கியிருக்கிறது அந்த ஒற்றுமை.