தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
நீதி?
குரல்
ஆய்வு
கவிதை
சிறுகதை
ஹாலிவுட் கலைவாணர்
கற்பனை கலாட்டா
நாட்டு நடப்பு
நூல் ஆறிமுகம்
எப்படி?
பேட்டி
நெசந்தானுங்க
சுயமரியாதைத் திருமணம்
உலகப்பார்வை
பதிலடி
2007 நோபல் பரிசுகள்
கல்வி

 

 

பதிலடி

84 வயது முதியவர் ஒருவரை அவர் குடும்பமும், நம் சமூகமும் கொடுமைப்படுத்திக் கொண்டு இருப்பதைப் பார்த்து நாம் ஏன் வாய்மூடி சகித்துக் கொண்டு இருக்கிறோம்?
கலைஞர் கருணாநிதிதான் அந்த முதியவர்!
மேடைப் பேச்சுகளில் ஒரு விஷயத்தி-லிருந்து இடையில் இன்னொன்றுக்கு தாவிப்போய் விரிவாகப் பேசினாலும், மீண்டும் விட்ட இடத்துக்கே கச்சிதமாக வந்து அர்த்தத்-து-டன் கோர்த்துக் கொள்ளும் பேச்சாற்றல் உடையவர் கருணாநிதி
இப்போது பல வாக்கியங்களைப் பாதியில் விட்டுவிட்டு வேறொன்றுக்கு போய்விடுகிறார்
சட்டைப் பையில் வைத்த காதிகத்தைக் கூட மறந்துபோய் வேறெங்கோ தேடுகிறார்
ஒரு காலில் கட்ஷூ கழன்று போனது கூடத் தெரியாமலே தொடர்ந்து நடந்து செல்கிறார்
இப்படி கடும் உழைப்புக்கு அவரை உட்படுத்துவதை ஒரு குடும்பமும், சமூகமும் தொடர்ந்து செய்யுமானால் அது மனித விரோதச் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை
அவருடைய இரத்தவாரிசுகளுக்கு ஒரு கேள்வி!
ஒரு தலைவராக அவரைப் பார்க்காமல், ஒரு தந்தையாக அவரைப் பாருங்கள். தினம் இப்படி உடல் உபாதையுடன் அவர் பொது வேலைகளைச் சுமந்து கொண்டு அலைக்-கழிக்கப்படுவது உங்களுக்குச் சம்மதம்தானா? ஏன் அவருக்கு ஓய்வு தர மறுக்கிறீர்கள்?
கலைஞருக்கு ஒரு கேள்வி?
உங்கள் விருப்பம்போல ஓய்வு எடுக்கவும், உங்கள் விருப்பம் போல் கருத்து தெரிவிக்கவும் தடையாக இருக்கும் பதவியைத் தூக்கி எறியக்கூட வேண்டாம், கைமாற்றிவிட்டுப் போக ஏன் தயங்குகிறீர்கள்?
விருப்பப்படி இருக்க விடுங்கள் என்ற தலைப்பில் ஒரு பார்ப்பனர் ஆனந்த விகடன் (அக்டோபர் 10) இதழில் இவ்வாறு கட்டுரை எழுதியுள்ளார்.
கலைஞர் மேல் இவ்வளவு கரிசனம் கொண்டு கட்டுரை தீட்டப்பட்டதன் நோக்கம் என்ன?
இந்தியப் பெருநாட்டின் அரசியல் சூறா-வளியே இன்று தமிழக முதல்வர் கலைஞரை மையம் கொண்டுதான் சுற்றிக் கொண்டி-ருக்கிறது.
இந்தியா முழுமையும் பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
தென்னாட்டில் கிளர்ந்த இந்த உணர்வு வடநாட்டிலும் பற்றிக் கொண்டுவிட்டது.
இந்த கடுமையான நெருக்கடியில் சிக்கிக்-கொண்டு தவிக்கும் பார்ப்பனச் சக்திகள் இதற்கு சூத்திரதாரியாக இருக்கும் கலைஞரை, இந்திய அரசியலிலிருந்து ஓரங்கட்ட துடியாய்த் துடிக்கின்றன. அதன் விளைவே ஆனந்த விகடன் கட்டுரை.
கலைஞர் மேல் திடீர் கருணைபொழியும் பார்ப்பனச் சக்திகள் கண், காது விளங்காது முடங்கிக் கிடந்த பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரருக்கோ, அடல் பிகாரி வாஜ்பாய்க்-கோ, முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்கோ, இந்த அறிவுரைகளை வழங்கியதுண்டா?
ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் கண்ணீர் விட்ட கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. பழைய பார்ப்பன பஞ்சதந்திரங்-கள் இனி எடுபடாது.
விருப்பப்படி இருக்க விடுங்கள் என்று தலைப் பிட்டிருக்கிறதே ஆனந்த விகடன்? இது யாருடைய விருப்பம்? கலைஞரின் விருப்பமா? கோடானு கோடி தமிழ் மக்களின் விருப்பமா? பார்ப்பன கூடாரத்தின் விருப்பமா?
இன்றைக்குக் கலைஞருக்கு வயது 84
1962ல் தந்தை பெரியாருக்கும் வயது 84. அந்த 84 வயதில் தனது சுகம் பற்றி தந்தை பெரியார் இதோ பேசுகிறார்.
சாதாரணமாக நான் ஈசிசேரில் உட்காரு-வதே கிடையாது. எங்கள் வீடுகளில் விலையு-யர்ந்த நாற்காலிகளும், சோபாக்களும்

இருக்கிற-தென்றாலும் ஈசிசேர் (சாய்வு நாற்காலி) கிடையாது. இருந்தாலும் அதை உபயோகிப்-பதில்லை.
ஏனெனில், நான் முதலாவதாக உட்காரும்-போது சாய்ந்து கொண்டு கைகால்களை நீட்டிக் கொண்டு உட்காருவதும் இல்லை. இவையெல்லாம் சுகவாசிகள் அனுபவிக்க-வேண்டியவைகள். நான் அப்படிச் சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புபவன் அல்ல! மேலும், சீட்டில் உட்காரும் போது முழுச்சீட்டில் கூட இல்லாமல் பாதி அளவு மட்டும் சீட்டில் முன் தள்ளி உட்காருவேன்.
மேலும், என்னுடைய வாழ்நாளில் பெரும்-பான்மையும், பிரயாணம் தான் அதிகம் என்ற போதிலும், பிரயாண காலத்தில் அநேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய்ப் பிரயாணம் செய்ய நேரிட்-டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக் கொண்டுதான் செல்வேன். ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்கும்படியாக மணியம்-மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதேதோ கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்த்துவிட்டுக் கடைசியில் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு.
ஆனால், அதிகம் தூங்கமாட்டேன். இப்-படிப்-பட்ட ரகளையின் காரணமாக நானும், மணியம்மையாரும் ஓரிரண்டு தினங்கள் பேசாமல்கூட வருத்தமாக இருப்போம்.
இப்படி எனக்கு, தூங்குவது என்ற பழக்-கம் கூட வெறுப்பாகிவிட்டது! தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதேயில்லை.
இப்படி சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவிதக் கஷ்டமும் இன்றி இருக்கிறது என்று எழுதினார் தந்தை பெரியார்.
- (தந்தை பெரியார் 84வது பிறந்தநாள் மலர்-1962)
வயது ஏற ஏற மூப்பும் ஏறும்தான். அதற்-காகப் பொதுப் பணியை உதறி படுக்-கையில் கிடக்கவேண்டுமா? உடலுக்கு வயது உண்-டென்றாலும், உணர்வுக்கு அதுவே பல-மாகிறது.
முதுமை வேறு - முதிர்ச்சி வேறு.
இளம் வயதிலேயே முதுமை அடைவோர் உண்டு. தந்தை பெரியார், கலைஞர் போன்-றோர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளிலும், பொதுத் தொண்டிலும் இளமை முறுக்கு உடையவர்கள்.
தன் பணிக்கு உடல் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்துகிறது என்கிற மாத்திரத்-தில், தன் பொறுப்பிலிருந்து விடுபடுவது குறித்து கலைஞரே முடிவு செய்யும் பக்குவம் உள்ளவர்தான்.- அதற்கு ஞாநிகளின் வழிகாட்டு-தல்கள், குத்தல்கள் தேவையில்லை.
கலைஞர் அவர்களின் முதிர்ச்சி திராவிட இனத்திற்கு - இளைஞர் சமூகத்திற்கு - பகுத்தறிவு வழி காட்டுகிறது. தன்மான உணர்வைக் கூர்தீட்டு-கிறது. அதற்கு முகம் கொடுக்கும் சக்தியற்றவர்கள் கலைஞரின் முதுமையை முன்னிறுத்தி, அனுதாபம் காட்டுவதுபோல முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆரிய மாயையை உணர்ந்தவர்கள் நாங்கள். நயவஞ்-சகம் எங்களிடம் வேண்டாம் - அது பலிக்காது.