தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
நீதி?
குரல்
ஆய்வு
கவிதை
சிறுகதை
ஹாலிவுட் கலைவாணர்
கற்பனை கலாட்டா
நாட்டு நடப்பு
நூல் ஆறிமுகம்
எப்படி?
பேட்டி
நெசந்தானுங்க
சுயமரியாதைத் திருமணம்
உலகப்பார்வை
பதிலடி
2007 நோபல் பரிசுகள்
கல்வி

 

 

கல்வி

தஞ்சை வல்லத்தில் 29.9.2007 அன்று காலை 10 மணிக்கு , பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தொடக்க விழா நடைபெற்றது.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்திற்கு முதலமைச்சர் கலைஞர் அவர் கள் வந்தபொழுது முதலமைச்சர் கலைஞர் வாழ்க என்ற ஒலி முழக்கம் விண்ணைப்பிளந் தது.
முதல்வர் கலைஞர் அவர்களை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து உணர்ச்சி பொங்க வரவேற்றார்.
சரியாக 10.02 மணிக்கு கல்லூரி வளாகத்தில் தேசிய மாணவர் படையினரின் பொது மரியாதையை முதல்வர் கலைஞர் ஏற்றார்.
10.05 மணிக்கு பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தினை முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார்.
அடுத்து பல்கலைக் கழக வளாகத்தில் மரக் கன்றினை நட்டு வைத்தார்.
10.10 மணிக்கு கட்டட எழிற்கலை வளாகத்தை முதல்வர் பார்வையிட்டார். அனைத்து இடங்களுக்கும் முதல்வர் அவர்களை பல்கலைக்கழக வேந்தர் கி. வீர மணி அவர்கள் அழைத்துச் சென்று காட்டினார்.
தொடர்ந்து பெரியார் புத்தாக்க எரிசக்தி உற்பத்தி செய்யும் இடத்தை முதல்வர் பார்வையிட்டார்.
காலை 10.20 மணிக்கு பெரியார் உயிரி தொழில்நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகத்தைப் பார்வையிட்டார்.
10.40 மணிக்கு பெரியார் அறிவு மய்யத்தைப் பார்வையிட்டார். சமூகநீதிக் காவலர் அர்ஜூன்சிங் நூலகத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
அடுத்து ``கலைஞர் மு. கரு ணாநிதி கணினி மய்யத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.


``டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அரசியல் கல்வி மய்யத்தைத் திறந்து வைத்தார். பெரியார் பண்பலை ஒலி பரப்பை தொடங்கி வைத்தார்.
11.35 மணிக்கு முதலமைச்சர் கலைஞர் பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம், பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் கல்வி மய்யம், திருச்சி பெரியார் செவிலியர் கல்லூரி, கலைஞர் மு. கருணாநிதி கணினி மய்யம், சமூகநீதிக் காவலர் அர்ஜூன் சிங் நூலகத்திற்கானகல் வெட்டுக்களைத் திறந்து வைத்தார்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் தை தொடங்கிவைத்து தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பேசும்போது, பல்கலைக் கழகத்தினுடைய வேந்தர் ஆருயிர் இளவல் வீரமணி அவர்களால் திருச்சியானாலும், அல்லது வல்லமானாலும் இங்குள்ள கல்வி நிலையங்களில் அழைக்கப்படும் போ-தெல்லாம் - தந்தை பெரியாருடைய வாழ்-நாளுக்குப் பிறகும் அவர் மறைந்தார் என்றில்லாமல் நம்முடைய உள்ளங்களி-லெல்லாம் நிறைந் திருக்கிறார், என்றைக்கும் அவர் வாழ்வார் என்பதை எடுத்துக் காட்டுகின்ற சான்றாக வீரமணி அவர்கள் விளங் குகிறார் என்பதை இன்றல்ல; நான் பல நேரங்களிலே எடுத்துக் காட்டியிருக்கின்றேன். அதற்கெல்லாம் ஒரு ஒப்பற்ற உயர்ந்த சான்றாக இந்த விழா அமைந்திருக்கின்றது.
நாங்கள் பெரியார் ஆட்சிக்கு காரணகர்த்-தாக்கள் என்றால், பெரியாருடைய மாட்சிக்கு காரணகர்த்தாவாக இன்றைக்கு விளங்குபவர் என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது.
நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். திராவிடர் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே ஊடல் ஏற்பட்டு, ஏன் பேச்சுவார்த்தைகூட இல்லாத சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம்-கூடு, அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்க்கின்ற ஒரு நிலையைப்-போல், நான் அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தவன். ஏனென்றால் அப்படி எட்டிப்-பார்த்தது, சதி குணத்தால் அல்ல, துர்குணம் என்பார்களே அந்த குணத்தால் அல்ல. எட்டிப்பார்த்தது - நாம் அந்த வீட்டை தாய்வீ-டாகக் கொண்டவர்களாயிற்றே, அந்தத் தாய்வீட்டில் நடக்கின்ற காரியங்-களை-யொட்டித்தானே நம்முடைய வீட்டிலும் செயல்பாடுகள் நடைபெறவேண்டும் என்பதற்-காக, சுருக்கமாக சொன்னால், புரியும்படி சொன்னால் - அதைப் பார்த்து நாம் என்-னென்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்வதற்காக எட்டிப் பார்த்த-துண்டு என்று குறிப்பிட்டார்.. பெரியார் மணி யம்மை பல்கலைக் கழக வேந்தர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது தலைமை உரையில், திருவாரூருக்கு அருகில் உள்ள முதல்வர் கலைஞர் அவர்களுடைய சொந்த ஊரான - பிறந்த ஊரான திருக் குவளையை மய்யப்படுத்தி கலைஞர் பெயரால் ஒரு பல்கலைக் கழகம் ஓராண்டுக்குள் உருவாக்கப்படும்.
அதை நாங்களே முன் னின்று தொடங்கு-வோம். இதற்கு உணர்வுபூர்வமான தமிழர்கள் நன்றியுள்ள தமிழர்கள், நல்ல சிந்தனை-யாளர்கள் கலைஞர் பெயரால் பல்கலைக் கழகம் உருவாவதற்கு உதவி செய்யக் காத்திருக்-கிறார்கள்.
தலைவர்கள் என்கிற வரி சையில் பார்த்தால் பெரியார், அண்ணா ஆகியோருக்குப் பல் கலைக் கழகம் இப்பொழுது வந்துவிட்டது. அந்த தலைவர் களுடைய வரிசையில் இருப் பவர்தான் நம்முடைய கலை ஞர் அவர்கள்.
அதேபோல, இலக்கியவாதி களான பாரதியார், பாரதி தாசன், மனோன்மணியம் சுந் தரனார் ஆகியோர்களுடைய பெயராலே, இன்றைக்குப் பல்கலைக் கழகம் இருக்கிறது.
நம்முடைய கலைஞர் அவர்களோ மாபெரும் இலக்கியவாதி.
எந்த வகையில் பார்த்தாலும் கலைஞர் அவர்களுடைய பெயராலே பல்கலைக் கழக மாவது மிகப் பொருத்தமான ஒன்றாகும்.
அதை நாங்களே முன்னின்று செய்து முடிப்போம் என்று கூறியிருந்தோரின் பலத்த கரவொலிக்கிடையே வேந்தர், தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் அறிவித்தார்.
தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 22.9.1989 ஆம் ஆண்டு தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி கட்டடங்களைத் திறந்து வைத்த பொழுது அன்றைக்கு ``இந்தக் கல்லூரி பல்கலைக் கழகமாக உருவாக்கப்படும் என்று மாபெரும் அறிவிப்பை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களாட்சி திரும்பவேண்டும் என்று மியான்மா நாட்டு மக்கள் அண்மையில் மேற்கொண்ட போராட்டம் ராணுவ ஆட்சி-யால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டு விட்டது. கடந்த 45 ஆண்டு காலமாக நடைபெறும் ராணுவ ஆட்சியின் கீழ் இந்த நாட்டின் பொருளாதாரம் சீரழிந்த நிலையில் உள்ளது. 90 விழுக்காட்டுக்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடுகின்றனர். மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சரியான உணவின்றி நோய்வாய்ப்படும் நிலையில் உள்ளனர். தனி நபர் சராசரி வருவாயோ, ஆசியாவிலேயே மிகக் குறைந்த அளவில், 175 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
ஆனால் இந்நாட்டின் ராணுவ அரசோ, நான்கரை லட்சம் வீரர்களைக் கொண்ட தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய-தொரு ராணுவத்தைப் பெற்றுள்ளது. நாட்-டின் மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்கு இந்த ராணுவத்திற்காகவே செலவிடப் படு-கிறது என்னும்போது, நாட்டில் என்ன முன்னேற்றப் பணிகள்தான் நடைபெறும்?
யாங்கோனுக்கு வடக்கே 250 மைல் தொலைவில் மலேரியா காய்ச்சல் மலிந்த காடுகளின் இடையில் நே பு தா என்னும் இடத்தில் ஒரு புதிய தலைநகரை ராணுவ அரசு உருவாக்கி வருகிறது. தேவையற்ற இந்த புதிய தலை நகரை உருவாக்க நாட்டின் வருவாயில் பெரும் பகுதி வீணே செலவிடப்படுகிறது. இப் புதிய தலைநகர் தங்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும் என்று ராணுவ சர்வாதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர் போலும்.
எந்த வித முன் அறிவிப்புமின்றி ஆகஸ்ட் மாதத்தில் டீசல் போன்ற பெட்ரோலியப் பொருள்களின் விலையை ராணுவ ஆட்சி இரு மடங்காக உயர்த்தியது; இயற்கை எரிவாயு-வின் விலையை அய்ந்து மடங்காக உயர்த்தி-யது. அத்தியாவசியப் பொருள்களின் விலையும், பொதுப்போக்குவரத்துக் கட்டணங்-களும் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்தன. முன்னமேயே வறுமையில் வாடும் மக்களை இந்த விலை உயர்வுகள் வெறுப்-படையச் செய்தன. இதன் காரணமாகவே அண்மையில் போராட்டங்கள் நடை-பெற்றன.
இதற்கு முன் 1988 இல் இது போன்று, மக்களாட்சி வேண்டி மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டது. 20 ஆண்டு களுக்குப் பின் ராணுவ ஆட்சியின் கொடுமைகள் தாங்க முடியாமல் மறுபடியும் ஒரு போராட்டம் வெடித்துள்ளது. ஆனால் இதில் ஒரு புதிய திருப்பமாக, இந்தப் போராட்டத்திற்கு புத்த பிட்சுக்கள் ஒட்டு மொத்தமாக ஆதரவு அளித்துள்ளனர்.
என்றாலும் ராணுவ ஆட்சி போராட்டக்-காரர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தும், வன்முறைத் தாக்குதல் நடத்தி-யும் போராட்டத்தை அடக்கி விட்டது. போராட்டத்தில் புத்த பிட்சுக்கள் பங்கு கொள்ள இயலாதவாறு அவர்கள் தங்கள் மடாலயங்களிலேயே முடக்கப்பட்டு-விட்டனர். இனி ஒரு போராட்டமோ, புரட்சியோ அண்மையில் தலை எடுப்பதற்-கான நம்பிக்கையோ, அறிகுறியோ இல்லை.
இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியான அவுங் சான் சூ கி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக அவரது இல்லத்திலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் வெடித்த போராட்டத்தை அடக்கிவிட்ட ராணுவ ஆட்சி சர்வதேச நாடுகளின் கவனத்தை திசை திருப்ப சூ கி அம்மையாருடன் பேச்சு-வார்த்தை நடத்தப் போவதாக அறிவித்-துள்ளது. என்றாலும் அவரை இல்லச் சிறையிலிருந்து விடுவிக்க ஆட்சி தயாராக இல்லை.
சர்வதேச நாடுகள் மியான்மா நாட்டில் மக்களாட்சி மலரச் செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளன. அய்க்கிய நாடுகள் அவை இந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்-துள்ளது. ஆனாலும் பாதுகாப்பு அவையில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள சீனாவும், ரஷ்யாவும் ஆதரவாக உள்ளவரை ராணுவ ஆட்சிக்கு எந்த பாதகமான செயலையும் அய்க்கிய நாடுகள் மன்றம் மேற்கொள்ள முடியாது. அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மியான்மார் ராணுவ அரசுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் மக்களாட்சி நாடான இந்தியாவோ எந்த விதமான கண்டனமும் தெரிவிக்காமலும் அமைதி காப்பது மட்டுமன்றி, ராணுவ ஆட்சிக்கு ஆயுதங்கள் அளிக்கவும் தயாராக உள்ளது.
இன்னும் எத்தனை நாள்களுக்கு மியான்மா மக்கள் இத்தகைய சர்வாதிகார ராணுவக் கொடுங்கோல் ஆட்சியில் துன்புறப் போ-கின்றனர்? எப்போது அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.