மதிப்பிழக்கும் தீபாவளி

அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தா-லொழிய கடவுள் ஒழிவதைத் தடுக்க முடியாது என்றார் பெரியார். மாறுதலை ஏற்றுக் கொண்டால்தான் அவன் மனிதன் என்பார்கள். கால மாற்றத்தில் பழக்க வழக்கங்கள் என்ற பெயரால் கடைப்-பிடித்து வந்த பலவற்றையும் மனிதன் மாற்றிக் கொண்டு வந்துள்ளான். வேளாண்மை சார்ந்த மனித வாழ்வின் பல வாழ்க்கை நிகழ்வுகளை இன்று காண முடியவில்லை. வேளாண்மை அறிவியல் சார்ந்ததாக மாறிய போது பல சிற்றூர் சடங்குகள் இல்லாமல் போயின. சிற்றூர்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்தபோது இதுபோல பல விடப்பட்டன.
தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாள் என்ற ஆதித் திருநாள் மட்டுமே இன்று எஞ்சியிருப்பதற்குக் காரணம் அது அறிவியல்பூர்வமானது என்பதாலும் இயற்கைக்கு நன்றி காட்டும் பெருநாள் என்பதாலும்தான்.
சிறுசிறு இல்லச் சடங்குகள், குல தெய்வ வழிபாடு என்பவையும் நகரத்திற்குக் குடி-பெயர்ந்த காரணத்தால் தமிழர்கள் விட்டு-விட்டாலும் பொங்கலை மட்டும் கொண்-டாடிக் களிக்க இன்னும் கிராமத்திற்குச் செல்கிறோம்.
நகரத்திற்கு வந்த பிறகு நம்மைத் தொற்றிக் கொண்ட ஆரியப் பண்டிகை பலவற்றில் முதன்மையானதாக தீபாவளியை தமிழன் கொண்டாடி வருகின்றான். நாயக்க மன்னர்-களின் காலத்தில்தான் தீபாவளி பெருமளவு பரப்பப்பட்டதாக வரலாற்றாளர்களால் குறிக்கப்படுகிறது.
அதற்கு முன் இந்தப் பண்டிகை தமிழ்-நாட்டில் கொண்டாடப்பட்டதில்லை என்-பதை பல- தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆதாரபூர்-வமாக கூறுகிறார்கள்.
இயற்கைச் சூழலை ஒட்டியே வாழ்வை அமைத்துக் கொண்ட தமிழன், நிச்சயம் ஒரு மழைக் காலத்தில் தீபாவளி என்ற பண்டி-கையைக் கொண்டாடியிருக்க முடியாது. ஏனெ-ன்றால் இந்த அய்ப்பசி மாதம் தொடர்ந்து மழை பொழியும் பருவநிலை கொண்ட மாதம். விவசாயப் பலன்களும் பெற முடியாத மாதம். எனவே நிச்சயம் இந்தக் காலக்கட்டத்தில் ஒரு விழாவை எடுத்திருக்க முடியாதுதான். பின் எப்படி தீபாவளி பிரபலமானது?
கடவுளைப் பரப்ப பார்ப்பனர்களால் வெகு லாவகமாகக் கையாளப்பட்டது கலை என்னும் கவர்ச்சி மிகுந்த ஊடகம். செவி வழிக்கதை-களாகப் புனையப்பட்ட புராணக் கதைகள், பின் அதுவே எழுத்து வடிவம் பெற்று இலக்கியமாக்கப்பட்டன. இந்தக் கதைகள் கோயில்களில் நாடகங்களாக நடித்துக் காட்டப்பட்டன. நடிப்பை நம்பிய மக்கள் அதனை உண்மை எனக் கருதினர்.
மனிதனுக்கு கேளிக்கை அவசியம். எவ்வளவு சோகம் நிகழ்ந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு தன்னைக் கேளிக்கைகளுக்கு உட்படுத்திக் கொள்வது மனித இயல்பு. இந்த மனித இயல்பை பலமாகப் பற்றிக் கொண்ட பார்ப்பனீயம் தமது கடவுள்களைப் பரப்ப, மதத்தை வளர்க்க கோயில்களில் சிற்பங்களை வடிக்கச் செய்தது; திருவிழாக்களில் கலை நிகழ்வுகளை நடத்தியது; இல்லங்களில் சடங்குகளைப் புகுத்தியது. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொன்னது.
பார்ப்பனப் பண்டிகை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு கதையின் பின்னணியில் தான் அமைந்திருக்கும். கண்டிப்பாக அதில் பலவித-மான உணவுப் பொருள்கள் இடம் பெற்றிரு-க்கும். அமாவாசை, அதாவது மாதம் ஒரு முறை வருவது என்றாலும் அன்று வடை, பாயாசம் வைக்க வேண்டும் என்பார்கள்.
இப்படி வாழ்நிலையோடு தொடர்பு-படுத்தியே முறைகளை, சடங்குகளை பார்ப்-பனர்கள் அமைத்தார்கள். அப்படித்தான் இந்தத் தீபாவளியையும் புகுத்தினார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும், புது ஆடை உடுத்த வேண்டும், பல இனிப்புப் பல காரங்கள் செய்ய வேண்டும், வாணவேடிக்-கைகள், பாட்டாசுகள் வெடிக்க வேண்டும் என ஒரு கொண்டாட்டத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் இணைத்து இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தை தமிழர் வாழ்வில் நுழைத்தனர். நகரமயமாதலில் வாழ்ந்த தமிழன் பார்ப்பன வீடுகளிலும், பணக்கார உயர் ஜாதியினர் வீடுகளிலும் கொண்டாடப்பட்டு வந்த தீபாவளிக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு தனது பாட்டன் நரகாசுரன் கொல்லப்பட்ட நாளையே கொண்டாடிவந்தான்.
தந்தை பெரியார் அவர்கள் தீபாவளிக் கதையை பட்டிதொட்டியெங்கும் எடுத்துக்கூற அதனால் எங்கும் மானக்கேடு, அறிவுக் கேடு, பொருள் இழப்புகளைப் பட்டியலிட்டார். சுயமரியாதை இயக்கம் சூடுபிடித்த காலத்தில் தீபாவளி எதிர்ப்பு சரியானதுதான் என தமிழர்களுக்குத் தோன்றியது. பலரும் கொள்கைப்பூர்வமாக உணர்ந்து தீபாவளி கொண்டாட்டத்தைக் கைவிட்டனர். தொடர்ந்து வரும் பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒரு புறம்; மாறிவரும் வாழ்க்கைச் சூழல் மறுபுறம். தொலைக் காட்சி ஊடகமும், கணினித் தொழில் தொழில் நுட்பமும் ஆக்கிரமித்து விட்ட சூழலில் தீபவாளிக் கொண்டாட்டத்தின் போக்கு மாறிவிட்டது. இப்போதெல்லாம் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டாயா என்று யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் அன்று ஒருநாள் விடுமுறை கிடைக்கிறதே என தீபாவளியன்று காலை 10 மணி வரை தூங்குவோர் அதிகம். வீட்டில் பலகாரம் சுடுவதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. ஏனென்றால் பலகாரம் சுடும் பெண்கள் எல்லாம் வேலைக்குச் சென்று விட்டார்கள். எனவே இனிப்புகள் அங்காடிகளில் வாங்கப்-படுகின்றன. புத்தாடைகள் அணியும் போக்கும் மாறிவிட்டது. ஏனென்றால் ஆண்டுக்கொரு புத்தாடை எடுக்க தீபாவளி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி-விட்டது. ஆண்டு முழுவதும் தள்ளுபடி தருகின்றன ஜவுளிக்கடைகள். குடும்பத்தினர் ஒருவரை நம்பியே இருந்து வந்த நிலையில் அவரது போனசில் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இன்று எல்லோரும் வேலைக்குச் செல்வதால் அவரவர் நிலைக்கு ஏற்ப புத்தாடைகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்போதெல்லாம் பிறந்த நாளுக்கும் திருமண நாளுக்கும் புத்தாடைகள் எடுப்பது வழக்கமாகி விட்டது. எனவே இந்தப் புத்தாடைப் பழக்கம் தீபாவளிக்கு விடை கொடுத்துவிட்டது.
25 ஆண்டுகளுக்கு முன்னால் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது இருந்த மதச் சடங்குகளை, கடவுள் வழிபாட்டை பின்பற்று-வது என்ற கட்டாயம் இப்போது இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. தீபாவளி நாளில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது என்பது கூட குறைந்து விட்டது. மாறாக ஆங்கிலப் புத்தாண்டு நாளில் நள்ளிரவிலேயே பக்திக் கடையைத் திறந்து பார்ப்பனர்கள் வணிகம் செய்கின்றனர். ஜனவரி 1இல் சிறப்புப் பூஜை என்பது எந்த ஆகம விதிகளில் உள்ளது எனத் தெரியவில்லை.
தீபாவளி நாளில் வெளியில் சென்று வருவதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தடுத்துவிட்டன. ரிமோட்டை மாற்றி மாற்றி அதில் லயித்துக் கிடக்க வேண்டிய நிலை. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே துணியெடுப்பதிலும், வெடி வெடிப்பதிலும் ஈடுபட்ட பரபரப்பு மெல்ல மெல்ல குறைந்து இந்த ஆண்டு ஒரு சில நாளுக்கு முன்தான் அந்தப் பரபரப்பு இருந்தது.
கேளிக்கையின் மனமகிழ்ச்சியின் வெளிப்-பாடே இன்னும் வாண வேடிக்கையும், பட்டாசுகளும் மட்டுமே தீபாவளியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அதிர்ச்சியளிக்கும் பட்டாசு ஓசையை கொஞ்சம் அடக்கி வைத்-துள்ளது என்றாலும், இளைஞர்கள் பட்டாசு வைப்பதில் இன்பம் காணுகிறார்கள். அதிக விலையுடைய பட்டாசுகளை வெடிப்பதில் ஈடுபடுகின்றனர். இதனால் பல விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடி காரணமாக தமிழகம் முழுவதும் 252 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 63 இடங்களில் தீ விபத்துக்கள் நிகழ்ந்தன. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வைக்கக் கூடாது, பள்ளி, கல்லூரி, குடிசைப் பகுதிகளில், வழிபாட்டுத் தலங்களில் வெடிக்கக் கூடாது என அரசு எச்சரித்தது ஓரளவு பலனைத் தந்ததாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இப்படி படிப்படியாக தீபாவளி கொண்-டாட்-டங்கள் குறித்த சிந்தனை மாறி வருவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல வடபுலத்திலும் இதே நிலைதான். புது டெல்லியில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக நடக்கும் என்பார்-கள். ஆனால் அங்கும் இந்த ஆண்டு வழக்கமான விழாக்களும் இல்லை என செய்திகள் கூறுகின்றன. மக்களின் மன மாற்றம் மற்றும் விலை உயர்வு காரணமாக தங்கம், இனிப்பு, பட்டாசு விற்பனை கடந்த ஆண்டைப் போல இல்லை என்று இந்திய வர்த்தக சங்க கூட்டமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது.
நம் இனத்திற்கு எதிரான சிந்தனையே தீபாவளியின் அடிப்படை என்ற கருத்து ஒரு பக்கம் மக்களால் உணரப்பட்டு வந்தாலும், ஏதோ ஒரு நாள் விடுமுறையைக் கழிக்க தீபாவளி பயன்படுவதாகவே பெரும்பாலா-னோர் கருதுகிறார்கள். இந்தப் போக்குகளிலும் மாற்றம் தெரிவது மகிழத்தக்க செய்திதான். எப்படியோ தமது பண்பாட்டுக்கெதிரான, வாழ்க்கை முறைக்கு எதிரான ஆரியப் பண்டிகை மெல்ல மெல்ல தமிழர் வாழ்வை விட்டு அகல்வது நல்லது தான். மாறாக தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை மீண்டும் புத்துணர்ச்சியோடு கொண்டாட பலவ-கையிலும் முன்னெடுக்க வேண்டும். அப்போது-தான் முற்றிலுமாக தீபாவளியைப் புறந்தள்ள முடியும். |