எப்படி?
பசிபிக் பெருங்கடலில் உள்ள பலநூறு தீவுகளில் ஒன்று ஈஸ்டர் தீவு. இது எரிமலையாக இருந்தது. சாகடிக்கப்பட்ட இயேசு புதைக்கப்பட்ட மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து வந்தார் எனும் மூடநம்பிக்கை கிறித்துவ மதத்தில் உண்டு. அப்படி, உயிரோடு எழுந்த நாள் ஈஸ்டர் நாள் எனப்படுகிறது. அந்த நாளில் இந்தத் தீவைக் கண்டுபிடித்ததால் இந்தப் பெயர் தீவுக்கு வந்தது.
இந்தத் தீவின் கடல் கரையில் படத்தில் உள்ளது போன்ற கல் சிலைகள் நிறைய உள்ளன. இந்தச் சிலைகளை நட்டது யார்? எப்படி நடப்பட்டன? இன்னும் இது புதிர்தான்.
இந்தச் சிலைகளுக்கு மோஆய் (ஆடிய) என்று பெயர். நின்ற நிலையில் நூற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன. நிறுத்தப்படாமல் (நின்ற கோலம்) மலைகளில் கிடக்கும் (கிடந்த கோலம்) சிலைகள் ஏராளம் உள்ளன. யார் இவற்றை வடித்தனர்? செதுக்கினர்?
இந்தத்தீவின் பழங்குடிகள் ராப்பனுய் (சுயயீயரே) என்பவர்கள் செய்தார்களா? சிலை ஒவ்வொன்றும் 14 டன் எடை உள்ளது என்பதால் எப்படித் தூக்கி நிறுத்தியிருக்க முடியும் என்பது தொல் பழங்கால ஆய்வறிஞர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. உங்களுக்குப் புரிகிறதா? |