சிறுகதை

நடேசன் டிரான்ஸ்போர்ட் உரிமையாளரும் அவர் பிள்ளைகளான பெருமாள், ராஜேந்திரன், சரஸ்வதி ஆகிய பெயர்களில் உருவான பி.ஆர்.எஸ். பஸ் சர்வீசின் அதிபருமான நடேசன் பிள்ளைக்கு கடந்த சில வருடங்களாகவே மனம் நிம்மதியற்று அதில் வெறுமை குடிகொண்டிருந்தது. பொருட்செல்வமும், குழந்தைச் செல்வமும் அவருக்கு ஒருங்கே வாய்க்கப் பெற்றாலும் அவரது ஆண் பிள்ளைகள் இரண்டும் ஊமையராய் பிறந்திருந்தனர். பிறவியின் போதே ஏற்பட்ட அந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவர் கடைபிடித்த உபாயங்கள்தாம் எத்தனை? எத்தனை? ராகு, சனி வாசஞ்செய்யும் ஊர்களுக்குச் சென்று அதன் பேரில் விசேஷ பூசைகள் செய்தார். அந்தந்த மாதங்களுக்கு உரிய கடவுளர்கள் இருப்பு கொள்ளும் ஊர்களுக்குச் சென்று அங்கேயே தங்கி உண்ணா நோன்பும் மற்றும் நிபம நிஷ்டைகளையும் ஒழுகி வந்தார் நடேசன். இயற்கையிலேயே துள்ளல் தன்-மையும் இரக்கச் சிந்தனையும் வாய்க்கப் பெற்ற நடேசன் சோதிடர்கள் கேட்டுக் கொண்டதற்-கிணங்க ஏழைகளுக்கு அன்னதானமும் புது வஸ்திரமும் வழங்கினார் இதற்கு இடையில் அவர் பல மருத்துவர்களை நாடி தன் பிள்ளைகளுக்கு பேச்சு வராதா என முயன்று பார்த்தார். அவர் பிள்ளைகளை சோதித்த பல மருத்துவர்கள் பிறவிச் செவிட்டு ஊமைத் தன்மையை போக்கவே முடியாது என்று கைவிரித்து விட்டனர். அவர்களில் ஒரு மருத்துவர் சுவாமி அருளாநந்தரைப் போய்ப் பார்த்து அவர் தீட்சை பெற்றால் உமது குழந்தைகள் கண்டிப்பாக பேசும் சக்தியைப் பெறுவார்கள் என்றார்.
உடனே, செயலில் இறங்கினார் நடேசன். பக்கத்து மாநிலத்தில் பெரிய அளவில் ஆசிரமம் அமைத்து லட்சக் கணக்கான பக்தர்கள் தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட சுவாமி அருளாநந்தரின் மூச்சுக் காற்று பட்டாலே முர்த்தன்யமான நோய்கள் நீங்கும்; அவர் கரம் பட்டாலே கொடிய நோய்கள் அகலும்; அவர் வாய் திறந்து ஏதாவது ஒரு பக்தனிடம் பேசிவிட்டாலோ சம்பந்தப்-பட்டவரின் ஜென்ம சாபல்யம் நீங்கும்; அவர் தம் வாழ்வில் துன்பத்தின் நிழதுல்கூட படியாது என்றும் குபேரனாகவே இருப்பார் என்று சாமியாரின் சீடர்கள் வருவோர் போவோரிடத்-தில் அவரிடன் மகிமையை பறைசாற்றிக் கொண்டிருந்தனர். சுவாமியிடம் வந்து போன சிலரும், தாங்கள் தோஷம் நீங்கி பாவம் அகன்று புத்தொளிப்பற்று புதுவாழ்வு புகுவதாக வேறு கூறினர். அருளாநந்தன் சுவாமி பற்றி இப்படியெல்லாம் கேள்விப் பட்ட நடேசன் தன்னிரு பிள்ளைகளையும் அழைத்-துக் கொண்டு அவரிடம் வந்து சேர்ந்தார். தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சுவாமியின் அகில் நெடுசாண் இடையாக தலையில் வீழ்ந்து வணங்கிய நடேசன் பின்பு எழுந்து நின்றார். சுவாமி! இவன் என் மூத்த பையன்!... என்று பேசிய அவரை இடைமறித்து கையமர்த்திய சாமியார் உம் மூத்த பையன்!... அது உன் இரண்டாவது புதல்வன் உமக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கும்!.. உமது ஆண் வாரிசுகள் இருவரும் ஊமைகள் சரிதானே!.. என்றார். நடேசன் ஆச்சரியத்தில் மூழ்கினார். தான் வந்த நோக்கம் பற்றி இதுவரை எவரிடமும் உரைக்காமல் இருந்து சாமியார் மட்டும் தன் பூர்வோத்திரம் முழுதும் சொல்-கிறாரே இது எப்படி? அருளாநந்தர் ஒரு தீர்க்கதரிசி என்கிறார்களே! அது இதுதானோ!
 |
சாமியார் கேட்டார்! உமது பிள்ளைகள் பிறவிலேயே பேசவில்லையா? அல்லது இடையில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு பேசவில்லையா?
சுவாமி!... பிறப்பிலிருந்தே இருவரும் பேசவில்லை!... அய்ய! நான் செல்வம் பெற்று சீரும் சிறப்புமாக இருக்கிறேன்!... என் பிள்ளைகள் பேசவில்லையே என்ற குறை நாளுக்கு நாள் என்னை வருத்திக் கொண்-டேயிருக்கிறது!.. நான் என்ன பாவம் செய்-தேன்!... இறைவன் எனக் இவன் இப்படியொரு குறையை கொடுத்தார்! தாங்கள் தாம் குழந்தைகளை பேச வைக்கவேணும்!
ஆண்டவன் குறை சொல்லாதீரும்!... மனிதன் வினைப்பயன் மீதே வாழ்க்கை வந்தமடும்! இன்னும் ஆறு மாதத்தில் உமது குந்தைகள் பேசுவார்கள் போம்! என்ற சாமியார், திரும்பி தன் சீடரைப் பார்த்தார். அவர் இரண்டு கண்ணாடி குப்பிகளை கொண்டு வந்து சுவாமியிடம் கொடுத்தார். ஒரு கண்டிக்குப்பியல் இருந்த நீரை நடேசன் பிள்ளைகள் மீது தெளித்த பின்பு ஒரு சீசாவில் இருந்த தேனை சிறிது எடுத்து இருவர் நாவிலும் தடவிவிட்டார். பின்பு! மிஸ்டர் நடேசன்! இது இமயமலையில் இருந்து தருவிக்கப்பட்ட புனித நீர். இதன் மகிமை சொல்லில் அடங்கா! இதை தினமும் உமது பிள்ளைகள் ஸ்நானம் செய்த பின்பு தலையில் தெளித்து விடும். இந்த தேனையும் அவ்வப்-போது நாக்கில் தடவி வரவும்! நிறம், குணம், உருவம் அற்ற இறைவன் எம் மனிதரையும் வதைப்பதில்லை! அவர் அருளால் உமது பிள்ளைகள் குறை நீங்கி சுகம் அடைவார்கள்! நீர் செல்வந்தர் என்று கூறினீர்! இதோ அந்த உண்டியலில் உம்மால் ஆன காணிக்கையை செலுத்திவிட்டுப் போ! அதில் நீர் செலுத்தும் பணம் ஏழைகள் வாழ்வுக்காகத்தான் செல-விடப்-படுகிறது! என்றார் சாமியார்.
அருளாநந்தரின் தேன் தடவிய பேச்சால் நடேசன் பேச்சந்து திக்குமுக்காடிப்போனார். சுவாமி, தன் பிள்ளைகள் பேசுவார்கள் என்றார்! தன்னை பெரிய செல்வந்தர் என்கிறார்! தன் காணிக்கை ஏழைகளுக்கு போய்ச் சேரும் என்கிறார்! நடேசன் இப்போது கவுரவப் பிரச்சினையில் மாட்டிக் கண்டார். அவர் இருபத்து அய்ந்தாயிரம் ரூபாயை உண்டியலில் செலுத்தினார். சாமியார் முகம் மலர்ந்தார்.
தன் இருப்பிடம் திரும்பிய நடேசன். அருளாநந்தர் கூறியபடி செய்து வந்தார். ஆறு மாதங்கள் சென்றன. பிள்ளைகள் பேசவில்லை. நடேசன் ஆறு மாதத்திற்கொரு முறை என சாமியாரை ஆறு தடவைகளுக்கு மேல் போய் பார்த்து வந்தார். அப்-போதும் பிள்ளைகள் பேச-வில்லை. ஒவ்வொரு தட-வையும் அருளாநந்தர் தாம் அதிகம் பேசினார். அவர் பெயரசிதான்! அருள் இருந்ததே தவிர இறவைன் மற்ற எந்த அருளையும் அவரு-க்கு வழங்க மறுத்து-விட்டான். இறைவன் சாமி-யாருக்கு அருள் வழங்-கினால்தானே அவர்தம் பக்தர்களுக்கு அருளைப் பாய்ச்ச முடியும்? பாவம் அந்த சாமியாரை காண-வரும் பக்தர்கள்! ஆனால் நடேசனைப் பற்றி தகவல் கொடுத்தமைக்காக அந்த மருத்துவருக்கு சாமியார் மடம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை போய் சேர்ந்தது.
இப்போது நடேசன் பிள்ளைகள் வாலிப பருவத்தினராயினர். பெருமாளுக்கு வயது 25. அடுத்தவன் இவனை விட இரண்டு வயது குறைவானவன். பெருமாள் சிறுவனாய் இருக்கும் போதே கையில் சாக்பீஸ் எடுத்து தரையில் ஏதாவது படம் போட்டுப் பார்ப்பான். நாளடைவில் - பார்க்கும் எவரையும் பார்க்கும் எதனையும் அப்படியே தத்ரூபமாக வரையும் கலையினைப் பெற்றான் அவன். சித்திரக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தான் அவன்.
ஒருநாள் தனது ஊரில் உள்ள புகழ்பெற்ற கோயினுள் அமர்ந்து அங்குள்ள சிற்பங்களை ஒரு தாளில் வரைந்து கொண்டிருந்தான் பெருமாள். அப்போது இந்தியா சுற்றுலா வந்த லண்டன் நகரைச் சேர்ந்த வில்லியம் ஜேம்ஸ் என்ற வெள்ளைக்காரர் அங்கு வந்தார். பெருமாள் வரையும் சிற்ப சித்திரத்தைப் பார்த்து பெரிதும் வியப்புற்றார். அவன் பிறவி ஊமை என்று அறிந்து பின்னர் பெருமாளிடம் தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினார் அந்த வெள்ளைக்காரர்.
ப்ரண்ட்ஸ்... நான் லண்டனில் வசிக்கும் ரெட்கிராஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு அதிகாரி! அமெரிக்காவில் ஏற்பட்ட புயலினிலும் வெள்ளத்தாலும் லட்சக் கணக்கானோர் இன்னல் பட நேர்ந்த போது நான் அங்கு நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தேன்! அப்போது என் என் மனைவி ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள்! நான் நிவாரண முகாமி-லிருந்து லண்டன் திரும்பு-வதற்கு ஒன்றரை வருடம் ஆகி-விட்டது!
இதற்குள் என்னுடைய அருமை மகளும் ஒரே குழந்-தையும் ஆன அப் பெண்-குழந்தை ஒரு விடத்தில் இறந்துவிட்டது! நான் பணி முடிந்து வீடு வந்தபோது இறந்துபோன என் குழந்தை-யின் புகைப்படத்தை மட்டும் பார்க்க முடிந்தது! என் குழந்தை எப்படி இருப்பாள்! அதன் முகத்தோற்றம் எப்படி இருக்கும் என்பது கூட தெரியாமல் வேதனையுற்றேன்! அந்த போட்டோவை பலரிடம் காட்டி அதை உயிருள்ள தோற்றம் போல கண்கள் திறந்து பார்க்கும் ஒரு நிலையைப் போல் ஆக்கித் தர முடியுமா என்று கேட்டேன்...
இதோ என் மகள் படம்! அதை நான் விரும்பியவாறு வரைந்து தர முடியுமா? என்று அவர் ஆங்கிலத்தில் கேட்டதை ஓரளவு தமிழ் பாதி அதை செய்கை மூலம் தட்டுத் தடுமாறி பெருமாளிடம் சொன்னார் ஒரு கைடு. பெருமாள் அதை முழுதும் இரக்க முடியாமல் போய் ஒரு பேனாவும் பேப்பரை கொடுத்து கைடுவை எழுதச் சொன்னான். கைடும் அவ்வாறு எழுதிக்காட்டவே, வெள்ளைக்காரர் விருப்பத்தை புரிந்து கொண்ட பெருமாள் குழந்தை படத்தை வாங்கி அதை வரையத் தொடங்கினான்.
கண்மூடி படுத்த நிலையில் இறந் கிடந்த குழந்தைப் படத்தை முற்றிலும் மாற்றி குழந்தை ஒரு இருக்கையில் அமர்ந்த படி இருக்கும் நிலையில் வரைந்தான் பெருமாள். அக்குழந்-தையின் கண்களும் திறந்துவிட நிலையில் அதை மிக நுணுக்கமாக சிரமப்பட்டு வரைந்து அதை அந்த வெள்ளைக்காரர் கையில் கொடுத்தான் அவன். அவர் அதை தன் மனைவி எலிசா காரனேலிடம் கொடுத்தார். அவள் முகம் மலர்ந்து ஆச்சர்யத்டன் நம் குழந்தை உயிரோடு எழுந்து வந்தது போல் இருக்கிறது என்று கூறி அழத் தொடங்கி-விட்டாள். பின்பு தன் மனைவியை சமாதானப்படுத்திய வில்லியம் ஜேம்ஸ் கைடு பக்கம் திரும்பி. ஆகா! அற்புதம்! மிக அற்புதம்! எங்கள் மகள் உயிரோடு இருப்பது போலவே அப்படியே தத்ரூமாக வரைந்து விட்டார்! ரொம்பவும் நன்றி! நண்பரே! உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்! என்று ஆங்கிலத்தில் வினவுதோடு சிறிதும் சளைக்-காமல் அவர் தன் கைப்பையைத் திறந்து நூறு ரூபாய் நோட்டு கட்டுக்கள் அய்ந்தை எடுத்து பெருமாள் கையில் திணித்தார். பெருமாள் இன்ப அதிர்ச்சியில் அதை வாங்க மறுத்தான். மீண்டும் அந்த வெளைக்காரர் வற்புறுத்தி அவனிடம் பணத்தை கொடுத்ததோடு குழந்தை படம் பத்து பிரதி எடுத்துக் கொண்டு மகிழ்வுடன் சென்றார்.
தன் பிள்ளை பெருமாள் வரைந்த ஒரு படத்திற்கு 50,000 ரூபாய் சன்மானம் பெற்றதை கேள்வியுற்று அவனைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் விட்டார் நடேசன். பின்பு மகனே! பெருமாள்! உன் பிறப்பு வீணாகி விட்டதே என்று கவலைப்பட்டேன்! நீ பேசாவிட்டாலும் பரவாயில்லை! இந்த உலகில் அறிவினால் எதையும் சாதிக்க முடியும் என்று உன் சித்திரக் கலை மூலம் நிரூபித்விட்டாய்! ஆனால் இந்த கலையை வருமான வரை விலை பேசாதே! அதை ஒரு தொண்டாகவே எண்ணி செய்துவா! உன்னையும் ராஜேந்திரனையும் இனி எந்த சாமியாருடனும் அழைத்துப் போக மாட்டேன்! உங்களிடம் இருக்ம் திறமையை வெளிப்படுத்துவதே இனி என் நோக்கமாக இருக்கும்! என்றார்.
ஆம் இப்போது பெருமாள் பேசவில்லை. ஆனால் அவன் வரைந்த சித்திரங்கள் பேசிக் கொண்டேயிருக்கின்றன! அவன் ஊனத்தை ஆன்மீகம் வெல்ல முடியவில்லை; அறிவு வென்றது! |