சிறந்த நூலிலிருந்து

நூல்: புற்றுநோயும், புதிய அணுகுமுறையும்
ஆசிரியர்: டாக்டர்.கே.ஸ்ரீ.ஸ்ரீதர்.
வெளியீடு: உபாசனா பப்ளிகேசன்ஸ், 6 மன்னார் தெரு, தியாகராயர் நகர், சென்னை-17. பக்: 288, ரூ.70/-
நூலிலிருந்து...
செல் பிரியும் நியதிகளுக்குக் கட்டுப்-படாமல், சில செல்கள் தன்னிச்சையாகப் பிரிந்து, பெருகி முதிர்ச்சியற்ற செல் தொகுப்புகளா-கின்றன. இவை தங்களுக்கென தனியாக இரத்த ஓட்டம் போன்றவைற்றை எடுத்துக்கொண்டு பக்கத்திலுள்ள நல்ல செல்களின் இடத்தையும் ஆக்கிரமித்தபடி வரையறையில்லாமல் வளர்ந்து கொண்டே போவதால், கட்டிகளாகவோ, புண்களோகவோ மாறுகின்றன. இது தான் புற்றுநோய்.
***
புற்று நோய் செல்கள் என்பவை புதியதாக வேறு எங்கிருந்தோ வந்து உடலில் தொற்றிக்-கொண்ட அந்நிய செல்கள் அல்ல. அவை-யெல்லாம் நமது உடம்பிலேயே இருக்கக்கூடிய நல்ல செல்கள் தான். பிறகு எப்படி புற்றுநோயாக மாறின?
நல்ல கேள்வி தான்.
செல்பிரியும் காலத்திலேயே ஏதாவது ஒரு தாக்கத்தினால் செல் அமைப்பில் மாற்றம் ஏற்படலாம்.
கர்ப்பிணித் தாய் பக்கவிளைவுள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டு அல்லது கதிர்வீச்சால் பதிக்கப் பட்டு, அல்லது தட்ப வெப்பநிலை மாற்றத்திற்குஆளாகி இருக்கும்போது கரு பாதிக்கப்பட்டுவிடும். இந்த பாதிப்பு எல்லாச் செல்களிலும் இருக்கும் எனக் கூறிவிட முடியாது. ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம் அல்லது ஒரு சில செல்களில் இருக்கலாம்.
இப்படிபாதிக்கப்பட்டு பிரியக்கூடிய செல்லின் மையக் கருவில் தான் அந்த பாதிப் ஏற்படும். இந்த பாதிப்பும் குறிப்பாக ஜீனில் உண்டாவதால், அடுத்தடுத்துப் பிரியும் செல்களிலும் இந்த பாதிப்புகள் கடத்தப்பட்டுக் கொண்டே போகும். செல்களும் தான் எப்படி செயல்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டை இழந்துவிடும். இதனால் செல்லின் உருவத்திலும், செயல்பாட்டிலும், அதன் பிரிந்து பெருகும் வளர்ச்சிகளிலும் மாறுபாடு ஏற்படும்.
இயல்பான செல்லைவிட பாதிக்கப்பட்ட செல் பெரியதாக மாறும்போது அதன் மையக்கருவும் பெரியதாகக் காணப்படுவதோடு, வேகமாகப் பிரியக்கூடியதாகவும், இப்படி மாறுபட்ட செல்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தும் காணப்படும். இந்த கட்டத்திலேயே உடம்பிற்குள் புற்றுநோய் வித்து ஊன்றப் பட்டாகிவிட்டது என்பதை இதைப் படித்தபிறகு இப்போது உங்களுக்குத் தெரியவரும். ஆனால் செல் பிரியும் போது உங்களுக்குத் தெரியாதே!
***
எயிட்ஸ், சார்ஸ் போல புற்றுநோய் என்பது இப்போது வந்திருக்கிற நோயல்ல. அது மிகப் பழங்காலத்திலிருந்தே இருக்கக்கூடிய நோய்.
இதைப் பற்றி நமது சித்தர்கள் நிறை தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேல் நாட்டினர் அதைப்-பற்றி ஆராய்சிகள் எல்லாம் செய்திருக்கிறார்கள்.
இந்த நண்டு சின்னத்தை புற்றுநோய்க்குக் கொடுத்தவர் ஹிப்போகிரேட்டஸ் என்ற கிரேக்க அறிஞர். கேன்சர் என்பது லத்தீன் மொழிச் சொல். இதற்கு நண்டு என்று பொருள்.
அந்தக் காலத்திலேயே புற்றுநோய் வந்து இறந்துபோனவர்கள் சடலங்களை அறுத்து, நோய் எப்படி இருக்கிறது, அதன் தன்மை என்ன என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்த மேதை இவர்.
நண்டு வளையை அமைந்துவிட்டால், அது வேறொரு பக்கத்தில் வளையைத் தோண்டிக் கொள்ளும். அதேபோல ஒரு பக்கத்திலுள்ள கேன்சரை அகற்றிவிட்டால் அது வேறொரு பக்கத்தில் திடீரென முளைக்கும். இதையெல்லாம் பார்த்து தான் அவர் இந்த நோய்க்கு நண்டு நோய் எனப் பெயர் வைத்தார்.
***
 |
புற்று நோய் உடனே தெரியக்கூடிய நோயல்ல. அது உடலில் பல ஆண்டு காலமாகத் தங்கிப் பரவி, அதன் பிறகு மேலே வரும். நான் உடம்புக்குள்ளே இருக்கிறேன். இன்னும் கொஞ்ச காலத்தில் மேலே வருவேன் என்றெல்லாம் அறிகுறிகள் மூலம் உங்களுக்கு தகவல் சொல்லிவிடாது.
எந்த அறிகுறிகளையும் காட்டாமல் அப்படியே தங்கியிருந்து திடீரென, வந்து பாதிப்பை அதிகரிக்கும். ஒருவேளை உடலின் மேற்பகுதியில் வந்தால் இப்படி கண்டுபிடித்து-விடலாம். உள்ளுறுப்புகளில் வந்தால் என்ன செய்வீர்கள்?
ரொம்ப சிக்கல் தான், இல்லையா?
சிலர் மட்டும் தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, தற்செயலாக இதைக் கண்டுபிடிக்கிறார்கள்.
மற்றவர்களெல்லாம்?
உடம்புக்கு ஒரு பிரச்சினை வந்தால், அது குறிப்பிட்ட காலத்திற்குள் மறைந்துவிடும். அவ்வாறு மறையாமல் மாதக் கணக்கில், வருடக்கணக்கில் நீடித்தால், புற்றுநோயாக இருக்குமோ என சந்தேகப்படலாம். உடனே மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு நோயை உறுதி செய்து கொள்ளலாம்.
எல்லாப் புற்றுநோயும் ஒரே மாதிரியாக வளர்ந்து விடாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டவையாக, மெதுவாகவோ, வேகமாகவோ வளரக் கூடியவையாக இருக்கும்.
உதாரணமாக, தைராய்டில் புற்று வந்தால், வேகமாகப் பரவும், ஆனால், உதட்டில் வந்தால் மெதுவாகப் பரவும். இவ்வாறே பாதிக்கப்பட்ட நபர் இளைஞராக இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தியோடு போராடி மெதுவாக வளரும், வயதானவராக இருந்தால் இயல்பாகவே அவருக்கு சக்தி குறைந்திருப்பதால் எளிதாகப் பரவிவிடும். சில புற்றுகள் தோலில் மட்டும் பரவும், சில வகை எலும்புகளில் மட்டும் தாக்கும். சில கட்டிகள் நரம்புகள், தசைகள் என ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்ப பரவும்.
இப்படிப் பரவும் கட்டிகளிலும், அவற்றின் தன்மையைக் கொண்டு பலவகைகளாகப் பிரிவு உண்டு.
சாதாரண நோய்களின் போது தோன்றும் அறிகுறிகளே புற்றுநோயிலும் தோன்றும் என்றாலும், புற்றுநோய்க்கென சில பொதுவான அறிகுறிகளும் இருக்கின்றன.
பல நோய்களின் தொகுப்பாக புற்றுநோய் தோன்றும். துவக்கத்தில் சாதாரணக் கட்டிகளைப் போல எந்த விதமான துன்பத்தையும் தராமல் இருந்து, திடீரென வளர்ந்து பக்கத்திலுள்ள நரம்புகளை அழுத்த ஆரம்பிக்கும் போதுதான் வலி, உறுத்தல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
நமது உடலிலுள்ள நரம்புகள் ஒவ்வொரு முக்கிய உள்ளுறுப்புடனும் இணைக்கப்பட்டிருக்-கிறது அல்லவா? இந்த உள்ளுறுப்புகளில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நரம்புகள் இழுக்கப்படும்போது வலி அதிகமாகும்.
***
புற்றுநோய்க்கான காரணங்கள்
இதுவரை புற்றுநோய் பற்றிய சில அடிப்-படைத் தகவல்களைப் படித்தீர்கள். இனி அந்த நோய் வருவதற்கான காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு நோய்க்கும் ஒரு காரணம் இருக்கும். இந்தக் காரணம் பரம்பரையாக ஜீனில் வரக்கூடியதாகவோ அல்1லது பிற்காலத்தில் திடீரென ஜீனில் மாற்றம் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக வரக்கூடியதாகவோ இருக்கும். குரோமோசோம்களில் தோன்றும் குறைபாட்டின் காரணமாகவும் பிறவி நோய்கள் வரும்.
இந்த மாற்றத்திற்கான காரணங்கள் எல்லாம் நாம் வாழும் இடம், சூழ்நிலை, தட்பவெப்பம் செய்யும் தொழில், உண்ணும் உணவுகள், வாழும் வாழ்க்கை முறை, மேற்கொள்ளும் பழக்கங்கள், மன உணர்ச்சிகள் என ஒவ்வொன்றையும் சார்ந்தே இருக்கும்.
மேற்கண்ட காரணிகள் உடலுக்குள் ஏற்படுத்-தும் மாற்றங்களை ஒட்டியே நோய்கள் தோன்றும். இவை தவிர, ஜீன் குறைபாடுகள் இல்லாமல், குரோமோ சோம்களில் குறைபாடு-கள் ஏற்படாமல் ஆரோக் கியமாகப் பிறந்தபிறகு, வெளிப்புறக் காரணிகளாலும் நோய்கள் ஏற்படும். இந்த இரண்டு வகையான நோய்களும் வெவ்வேறு மாதிரியான தன்மை கொண்டவை.
சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்த இரண்டு தன்மைகளாலும் வரக்கூடியதுதான் புற்றுநோய்.
***
உணவுப் பழக்கம்
உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவோரின் உடம்பு செல்களில் அதிகமாக கொழுப்பு சேர்கின்றது. போதுமான ஆக்சிஜன், ஹார்-மோன்கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில்லை. இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோய் வருகிறது.
இதுவந்து உணவில் அதிகமாக கொழுப்பு சேருவதால் ஏற்படுகின்ற பாதிப்பு மட்டும். இந்த பாதிப்பால் உடலில் கொழுப்பு சேருகிற இடங்களான மார்பகங்கள், குடல், இரைப்பை, கருவுறுப்புகள் போன்ற இடங்களில் புற்றநோயை உண்டாக்கும்.
நான் கொழுப்பே சாப்பிடுவதில்லை என்கிறீர்களா? சந்தோஷம், கொழுப்பை குறைத்துக்கொள்ளுங்கள்.
சிலர் எப்போதும் டின் உணவுகளை சாப்பிடுவார்கள். சரியாகப் பதப்படுத்தப்படாத பொருட்களில் பாக்டீரியாக்களும், பூஞ்சைக் காளான்களும், வைரஸ்களும் காலனி அமைத்து குடியேறியிருக்கும். இதையெல்லாம் கவனிக்காமல் காசுகொடுத்து வாங்கி சாப்பிடும் போது அவையெல்லாம் சுலபமாக உள்ளே சென்று புற்றுநோயை உண்டாக்கிவிடுகின்றன.
***
புகைத்தால்தான் எனக்கு கற்பனை வருது, டென்ஷன் போகுது என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
புகைத்தால் டென்ஷன் போய் கற்பனை வருமா?
கொஞ்ச நாளைக்கு வரும் என்கின்றன ஆராய்ச்சிகள், அதற்குப் பிறகு புற்றுநோய்தான் வரும்.
புகையிலை மற்றும் புகைப்பழக்கம் தான் உலக அளவில் புற்றுநோய்க்கான முதல் காரணி.
ஆயுசு முழுக்க வெற்றிலைப் பாக்குப் போட்டாலும் தலைகாட்டாத புற்றுநோய் ஐந்தே ஆண்டுகளில் பான்மசாலா போட்டால் வந்து விடுகிறதே. கூடவே புகைப் பழக்கமும் இருந்தால் அதன் விரைவுத் தன்மையை சொல்லவா வேண்டும்?
நிறைய பேர் புகைக்கிறார்கள். ஆனால், அவர்களுக் கெல்லாம் புற்றுநோய் வந்துவிடு-கிறதா என்ன என்று கேட்பவர்களுக்கும் இருக்-கிறார்கள்.
புகைப்பழக்கம் ஏற்பட்ட உடனேயே அதன் விளைவுகள் வந்து விடுவதில்லை. நீங்கள் ஒரு முப்பது வயதில் புகைக்க ஆரம்பித்தால் ஐம்பது வயதுக்குப் பிறகு புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு அதிகம். அதற்கு முன்பாக சுவாசக் குழல் சார்ந்த பிரச்சினைகளான மார்ப்புச் சளி, ஆஸ்துமா, சுவாசக் குழல் அழற்சி மற்றும் விரிவடைந்து-விடுதல், சைனஸ் நோய்கள், இதயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடிப்படையான இரத்த நாளம் சுருங்குதல், இரத்த நாளச் சிதைவு, மாரடைப்பு போன்றவை வந்துவிடும்.
***
புற்று நோயைத் தடுக்கும் பாசி
கேன்சரை தடுக்க முடியுமா? இதைத்தான் எல்லா ஆராய்ச்சியாளர்களும் மனசுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு சில மூலிகைகள் உபயோகமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. பலவகையான மூலிகைகளில் பாசிகளும் அடக்கம். பல வகை பாசிகளில் முக்கியமானது நான் சொல்லப்-போகும் இந்தப் பாசி.
பாசி என்ன கலர் என்று கேட்டால், இது கூட தெரியாதா? பச்சை கலர் தான் என்று சொல்லிவிடுவீர்கள்.
சரி, இப்போ நான் சொல்வது தெரியுமா என்று பாருங்கள்.
-நீலப்பச்சைப்பாசி!
அது என்ன சார், இரண்டு கலர்ல பாசியா? என்று ஆச்சர்யப்படுகிறீர்களா?
உண்மைதான். அதற்குப் பெயர் ஸ்பைரூலினா!
இந்தப் பாசியை எடுத்து மைக்ராஸ்கோப் மூலமாகப் பார்த்தால் வளைய வளையமாக, அதாகப்பட்டது ஸ்பைரல் ஸ்பைரலாக தெரியும் என்பதால் இதற்கு ஸ்பைரூலினா என்று பெயர் சூட்டிவிட்டார்கள்.
இந்தப் பாசியில் நிறைய நல்ல சத்துக்கள் உள்ளன. 70 சதவீதம் வரை புரோட்டீன் உள்ளது. மினரல் டிரெஸ் எலிமென்ட்ஸ், பைகோசி-யானின்.. இப்படி எல்லா நன்மைகளும் உண்டு.
நம் உடம்பில் சேர்ந்த குசநந சுயனஉயடள என்னும் கெடுதியை இந்தப் பாசியில் உள்ள ஹவே டீஒனையவே வெளியேற்றிவிடும். இந்த குசநந சுயனஉயடள பற்றி அகத்தியர் தனது ஓலைச் சுவடியில் தெரிவித்து இருக்கிறார். இதுதான் கேன்சருக்கு ஒரு காரணம் என்றும், இதை வெளியேற்றிவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
குசநந சுயனஉயடள பல காரணங்களால் நம் உடம்பில் உருவாகலாம். நாம் சாப்பிடும் மருந்துகள், உபயோகிக்கும் ஸ்ப்ரேக்கள், அதாவது வாசனை திராவியங்கள், வாகனப் புகை, ஏன் டென்ஷனால் கூட நம் உடம்பில் தோன்றாம். வெளியேற்ற நாம் நிறையவே ஹ டீஒனையவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இவை நிரம்பவே ஸ்பைரூலினா பாசியில் உள்ளதால் இதை சாப்பிட்டால் கேன்சர் வராமல் தடுக்க முயற்சி பண்ணலாம். ரொம்ப ஒண்ணும் சாப்பிட வேண்டாம். ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்துகிராம் சாப்பிட்டால் போதுமானது. ஒரு கேப்சூலில் 500 மில்லி கிராம் தான் கொள்கிறது. எனவே, பத்து முதல் இருபது கேப்சூல்கள் நாளொன்றுக்கு சாப்பிட வேண்டியிருக்கும்.
அதெல்லாம் இருக்கட்டும். அது என்னவோ நீலம்னீங்க. அதைப் பத்தி ஒண்ணுமே சொல்ல-லையே என்றுதானே கேட்கிறீர்கள்?
இதோ சொல்லிவிடுகிறேன்.
இந்த பாசியும் மற்ற எல்லாப் பாசியைப் போலவே பச்சைக் கலராகத்தான் இருக்கும். இதை கொஞ்சம் எடுத்து ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரில் போடுங்கள். தண்ணீர் முழுக்க பச்சை பசேலென மாறிவிடும். சரி, மாறினால் மாறட்டும் என அப்படியே விட்டுவிடுங்கள்.
மறுநாள் போய் அதைப் பாருங்கள். அப்படியே கொஞ்சம் நீலமாக மாறியிருக்கும். ஸ்பைரூலினா-வின் உள்ளுறைந்து இருக்கும் நீலக்கலர் தான் அது! அதற்குப் பெயர் தான் பைகோசியானின்.
இது வாய்ப்புற்று நோய்க்கு சிறப்பான மருந்து. அவ்வளவு தாம்பா, இது போயிட்ட கேஸ் என்று சொல்லப்பட்ட லிவர் கேன்சர் நோயாளிகளை நிறையநாள் வாழவைக்கக் கூடியது.
இந்த பைக்கோசியானின் ஸ்பைரூலினாவில் இருப்பதால், இதைச் சாப்பிட்டே புற்றுநோய் வரவிடாமல் தடுக்க முயற்சிக்கலாம்.
நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் மூன்று வேளை ஸ்பைரூலினா சாப்பிடு-வது நல்லது.
பெண்ணாக இருந்தால் மாதவிலக்கான ஐந்தாவது நாள் அக்குள் மற்றும் மார்பகப் பரிசோதனையை நீங்களாகவே செய்யுங்கள். கட்டி ஏதேனும் தெரிந்தால் மருத்துவரிடம் போய் காண்பித்து, அதைப்பற்றிய விவரங்களை விளக்கமாக அறிந்து கொள்ளுங்கள். ஆணோ, பெண்ணோ மாதத்தில் மூன்று முறை தொடர்ந்து பேதியானால் மலப்பரி-சோதனை செய்யவேண்டும். அக்கல்ட்ப்ளட் செக்-அப் என்ற பரிசோதனை இருக்கிறது. அதை மேற்-கொள்ளலாம்.
பான் மசாலா சாப்பிடுவோர் தங்கள் வாயில் கோடு இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். அது கேன்சரின் முன்னோடியாக இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
முப்பத்தைந்து வயதுக்கு மேலுள்ளவர்கள் கண்டிப்பாக மாஸ்டர் செக்-அப் செய்துகொள்ள வேண்டும்.
புற்றுநோயாளிகளுக்கு நம் இஷ்டத்திற்கு பழச்சாறு கொடுக்கக்கூடாது. அதுவே சளிக்கட்டி உயிருக்கு ஆபத்தாகும். பழங்களைக் கொடுத்தால் நிறைய ஊட்டச்-சத்து கிடைக்கும் என நினைத்து மருந்து சாப்பிடும்-போது சிட்ரிக் ஆசிட் உள்ள பாழச்-சாறுகளை நோயாளி சாப்பிடக் கொடுக்கக்-கூடாது. அது சளிக்கட்டி மேலும் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். அதைவிட ரசம் சாதத்தை நன்றாகக் கரைத்துக் கொடுப்பது நல்லது.
சின்ன வெங்காய சாதம் கொடுத்தால் நல்ல முன்னேற்றம் வருவதைக் காணலாம். ஓமத்தை வெந்நீரில் போட்டு இரண்டு நாளைக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். அது கெட்ட நீரையெல்லாம் வெளியே எடுத்துவிடும்.
தினசரி சீரகத்தை வெந்நீரில் போட்டுக் குடிக்கவும்.
வாய்ப்புண் இருந்தால் வெந்தயக் கஞ்சி கொடுக்கலாம். சளி இருந்தால் கொடுக்க வேண்டாம். சிறிதளவு கிராம்பு சேர்த்துவந்தால் நோயைக் குறைக்கலாம்.
இவையெல்லாம் புற்றுநோயை தடுக்கவும். குறைக்கவும் கடைப்பிடிக்க வேண்டிய சாதாரண வழிமுறைகள். இவற்றைமேற்கொண்டு செல-வில்லா-மல் நோயை நீங்களாகவே விரட்டி-யடிக்கலாம். |